கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-17

மருமகனுக்காக நடந்த மகத்தான போர்

மன்னர் ராஜேந்திரன், அவரது வாழ்வில் எத்தனையோ போர்க்களங்களைச் சந்தித்து, அவை அனைத்திலும் வெற்றி பெற்று இருந்தாலும், அவை எல்லாவற்றிலும் போற்றிக் கொண்டாடப்படுவது கங்கை படையெடுப்பும், கீழ்த்திசை நாடுகள் மீதான போரும் ஆகும். இந்த இரண்டு போர்களும், இந்திய மன்னர்களில் எவரும் செய்யாத - செய்ய முடியாத அரும்பெரும் சாதனை என்று வரலாறு இன்றளவும் பாராட்டிக் கொண்டு இருக்கிறது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
அவரது படைகள், கங்கை வரை சென்று புனித கங்கை நீரை தங்கக் குடங்களில் சோழ நாட்டுக்குக் கொண்டு வந்ததால், ராஜேந்திரனுக்குக் 'கங்கை கொண்டான்' என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது. பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடலில் பயணம் செய்து அடையக்கூடிய கீழ்த்திசை நாடுகளுக்குச் சென்று, அங்கு போர் தொடுத்து வெற்றி பெற்றதால், 'கடாரம் கொண்டான்" என்ற பட்டத்தை ராஜேந்திரன் பெற்றார்.
கீழ்த்திசை நாடுகளில் ஒன்று மலேசியா என்று தற்போது அழைக்கப்படுகிறது. அங்குள்ள ‘கெட்டா’ எனப்படும் "கடாரம்" ஒன்று முக்கியமான துறைமுக நகரத்தைக் கைப்பற்றியதால், அந்தத் துறைமுகத்தின் பெயரால் 'கடாரம் கொண்டான்' என்று ராஜேந்திரன் சிறப்பிக்கப்படுகிறார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
கங்கைப் படையெடுப்பு, கீழ்த்திசை நாடுகள் மீதான போர் ஆகிய இரண்டும் நடைபெற்றுக் கொண்டு இருந்த அதே காலகட்டத்தில், கொள்ளிடம் ஆற்றுக்கு வடக்கே, தஞ்சைக்குப் பதிலாகப் புதிய தலைநகர் ஒன்றையும், அங்கே தஞ்சைப் பெரிய கோவிலுக்கு இணையான மாபெரும் கோவிலையும், மக்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பிரமாண்டமான ஏரியையும் ராஜேந்திரன் நிறுவினார். இந்த மிகப்பெரிய மூன்று சாதனைகளையும் ராஜேந்திரன் 10 ஆண்டுகளில் செய்து முடித்தார் என்பதை அறியும்போது வியப்பு விண்ணளவு உயருகிறது.
ராஜேந்திர சோழனின் படைகள் கங்கை வரை படையெடுத்துச் சென்றதற்கு அடிப்படையாக அமைந்தது, அவரின் மருமகனுக்காக நடைபெற்ற போர் என்பது விசித்திரமான தகவலாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம், குடும்பம் சம்மந்தப்பட்டது என்பதால், சோழர்கள் மற்றும் சாளுக்கியர்களின் குடும்ப உறவு பற்றித் தெரிந்து கொள்ளலாம். சோழர்களுக்கும், அண்டை நாட்டை ஆண்ட சாளுக்கியர்களுக்கும் நீண்ட காலயாகப் பகை இருந்தது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
ராஷ்டிரகூடர்களின் ஆட்சியின்போது சாளுக்கிய தேசம் ஒரே நாடாக இருந்தது. ராஷ்டிரகூடர்களின் ஆட்சி முடிவடைந்த உடன், அந்த நாடு மான்யகேடம் (மண்ணைக்கடக்கம்) என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு மேலைச்சாளுக்கியம் என்றும், வேங்கியைத் தலைநகரமாகக் கொண்டு கீழைச் சாளுக்கியம் என்றும் இரண்டு நாடுகளாகப் பிரிந்தது. மேலைச்சாளுக்கியத்தின் மன்னராக சத்யாச்சரியன் இருந்தார்.
அவருக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக அவரது மரணத்திற்குப் பிறகு அவரது மருமகன் ஐந்தாம் விக்ரமாதித்தன், மேலைச் சாளுக்கியத்தின் மன்னர் ஆனார். அவருக்குப் பின்னர் அவரது சகோதரர் ஜெயசிம்மன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ராஜேந்திரன் சோழ மன்னராக இருந்த காலகட்டத்தில், மேலைச் சாளுக்கிய மன்னராக ஜெயசிம்மனும், கீழைச்சாளுக்கிய மன்னராக சந்திவர்மன் என்பவரும் ஆட்சியில் இருந்தனர்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
அப்போது கீழைச்சாளுக்கியத்தைத் தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டுவர வேண்டும் என்று ஜெயசிம்மன் விரும்பினார். ஆனால், கீழைச் சாளுக்கியத்துக்கு சோழர்களின் ஆதரவு இருந்ததால் ஜெயசிம்மனின் ஆசை நிறைவேறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. கீழைச்சாளுக்கிய மன்னர் சந்திவர்மன் மரணம் அடைந்த பிறகு, அவரது சகோதரர் விமலாதித்தன் மன்னராகப் பதவி ஏற்றார்.
ஆட்சியில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைச் சந்தர்ப்பமாக வைத்து, கீழைச்சாளுக்கியத்தைக் கைப்பற்ற ஜெயசிம்மன் திட்டம் தீட்டினார். அந்தக்காலத்தில், ஒரு நாட்டு மன்னர், தனது அண்டை நாட்டு மன்னருடன் சிநேகம் செய்து கொள்ள விரும்பினால், அந்த மன்னரின் குடும்பத்துடன் திருமண உறவு வைத்துக் கொள்வது வழக்கம். அதாவது, தனது மகளை அந்த நாட்டு இளவரசருக்கு மணம் செய்து கொடுத்து உறவு கொண்டாடிக் கொள்வார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
மன்னர் ராஜராஜன், கீழைச்சாளுக்கிய நாட்டை நட்பு நாடாக ஆக்கிக் கொள்ள விரும்பி, தனது மகள் குந்தவையை (ராஜேந்திரனின் தங்கை) கீழைச்சாளுக்கிய மன்னர் விமலாதித்தனுக்கு மணம் செய்து கொடுத்து இருந்தார். குந்தவைக்கும் விமலாதித்தனுக்கும் பிறந்தவர், ராஜராஜ நரேந்திரன். விமலாதித்தனுக்குப் பிறகு அவரது மகன் ராஜராஜ நரேந்திரன், கீழைச்சாளுக்கியத்தின் மன்னராக முடிசூட்டிக் கொள்ள முயன்றார்.
அப்போது மேலைச்சாளுக்கிய மன்னர் ஜெயசிம்மன், கீழைச் சாளுக்கியத்தில் உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி விட்டார். ராஜராஜ நரேந்திரன் முடிசூட்டிக் கொள்வதைத் தடுத்து நிறுத்திவிட்டார். ஜெயசிம்மனின் விருப்பம், தனது மாற்றாந்தாய் மகனான ஏழாம் விஷ்ணுவர்த்த விஜயாதித்தனை கீழைச்சாளுக்கிய மன்னராக ஆக்க வேண்டும் என்பதாக இருந்தது. இதற்காக அவர் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
தனக்கு ஆட்சி உரிமை கிடைக்காமல் பறிபோய்விடுமோ என்று பதறிய ராஜராஜ நரேந்திரன். இந்த இக்கட்டில் இருந்து விடுபட உதவி செய்யுமாறு தாய்மாமன் ராஜேந்திரனுக்கு அவசர ஓலை அனுப்பினார். இதை அறிந்த ராஜேந்திரன், தனது படைத் தளபதிகளில் மிகச் சிறந்த வீரரான அரையன் ராஜராஜன் (இவர் சோழ பல்லவரையன் ராஜராஜ மாராயன் என்றும் அழைக்கப்பட்டார்) என்பவர் தலைமையில் கீழைச்சாளுக்கியத்துக்குப் பெரும் படையை அனுப்பி வைத்தார்.
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History In Tamil, Part-17
தனது மகன்களுக்குப் போர் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களையும் இந்தப் படையுடன் செல்லும்படி மன்னர் ராஜேந்திரன் கட்டளையிட்டார். அந்தச் சமயத்தில் ராஜேந்திரன், தஞ்சைக்குப் பதிலாகக் கொள்ளிடம் ஆற்றின் வேகரையில் புதிய தலைநகர் ஒன்றை நிர்மாணிக்கும் பணியில் மும்முரமாக இருந்தார். புதிய தலைநகரை உருவாக்க அவர் தீர்மானித்ததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

புதிய தலைநகரப் பணிகள் காரணமாக அவர் நேரடியாக கீழைச்சாளுக்கியப் போர்க்களத்துக்குச் செல்லவில்லை. மன்னர் ராஜேந்திரனின் மகன்கள் மற்றும் தளபதி அரையன் ராஜராஜன் தலைமையில் சோழப் படை கீழைச்சாளுக்கியத்துக்குப் புறப்பட்டுச் சென்றது. போர்க்களத்துக்கு மாவீரரான அரையன் ராஜராஜன் வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், வேங்கி நாட்டு மன்னராகத் திட்டமிட்ட விஜயாதித்தன் போர்க்களத்தில் இருது ஓடி ஒளிந்து கொண்டார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7
இதனால் சோழப் படைகள் மிக எளிதாக வெற்றி பெற்றன. போர்க்களத்தில் தளபதி அரையன் ராஜராஜன்ற வெற்றிக்காக அவருக்கு நூல்மடி வீமன், சோழன் சக்கரன், சாமந்தா பரணன், வீர பூஷணம், எதிர்த்தவர் காவன், வயிரி நாராயணன், வீர வீமன், ஜெயசிங்க குலகாலன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டன என்று அனந்தப்பூர் மாவட்டம் கோட்ட சீவரம் என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் கூறப்பட்டு இருக்கிறது.
சோழப் படைகளுக்குக் கிடைத்த வெற்றி காரணமாக ராஜராஜ நரேந்திரன் வேங்கியின் மன்னராக முடிசூட்டிக் கொள்ளத் தடை நீங்கியது. இந்தத் தகவல், தஞ்சையில் இருந்த மன்னர் ராஜேந்திரனுக்குத் தெரியப் படுத்தப்பட்டது. உடனே அவர், தனது மருமகனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வேங்கிக்கு விரைந்து வந்தார். 1022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி, கீழைச்சாளுக்கிய மன்னராக ராஜராஜ நரேந்திரன் முடி சூட்டப்பட்டார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-8
அதே தேதியில் மன்னர் ராஜேந்திரன், தனது மகள் அம்மங்கை தேவியை ராஜராஜ நரேந்திரனுக்கு மணம் செய்து கொடுத்து, அவரைத் தனது மருமகன் ஆக்கிக் கொண்டார். (ராஜராஜ நரேந்திரன் - அம்மங்கைதேவிக்குப் பிறந்தவர்தான் முதலாம் குலோத் தூங்க சோழன் என்பது குறிப்பிடத்தக்கது). மன்னர் ராஜேந்திரன் வேங்கியில் இருந்த சமயத்தில், தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படும் தலைநகர் மீதும், அங்கு அமைக்கப்படும் ஏரியிலும், கங்கை நீரை ஊற்றி புனிதப்படுத்த வேண்டும் என்று விரும்பினார்.
இதன் மூலம் புதிய தலைநகருக்குக் கங்கைகொண்ட சோழபுரம் என்றும், அங்கே அமைக்கப்படும் கோவிலுக்குக் கங்கை கொண்ட சோழீச்சரம் என்றும், புதிய ஏரிக்குக் கங்கா சோழம் என்றும் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றும் மன்னர் ராஜேந்திரன் முடிவு செய்தார். ராஜேந்திரன் அவ்வாறு திட்டமிட்ட செய்தி, திருவாலங்காட்டுச் செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-9
“தவத்தின் வலிமையால் கங்கையைக் கொண்டுவந்த பகீரதனைத் தன் தோள்வலிமையால் நகைத்த அந்த இரவிகுலதீபம் புனிதமாக்க முயன்றார்” போன்ற அரசர் (ராஜேந்திர சோழன்) கங்கை நீரால் தன் நாட்டைப் புனிதமாக்க முயன்றார் என்பது செப்பேட்டுச் செய்தி. அவர், கங்கை நீரைக் கொண்டுவர வேண்டும் என்ற தனது விருப்பத்தை தளபதி அரையன் ராஜராஜனிடம் தெரிவித்தார். அதுபற்றிய செய்தியும் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டு இருக்கிறது.
“கங்கைக் கரையில் திகழும் பகையரசர்களை வெல்வதற்கு, வீரத்தின் உறைவிடமாகத் திகழ்பவனும், வலிமையான படையுடையவனும், அறம் அறிந்தோரில் முதல்வனுமான தன் படைத்தலைவனுக்கு ஆணையிட்டான்” என்று செப்பேட்டில் சமஸ்கிருத ஸ்லோகமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. ராஜேந்திர சோழன், கங்கை நீரைக் கொண்டுவர வேண்டும் என்று ஆசைப்பட்ட அதே சமயத்தில், சோழப்படைகள் கங்கையை நோக்கிச் செல்ல வேண்டிய வேறு ஒரு கட்டாயச் சூழலும் உருவானது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-10

வியப்பான வினோதம்

மன்னர் ராஜேந்திர சோழன் 1044-ம் ஆண்டு, தனது 84-வது வயதில் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்ம தேசம் என்ற ஊருக்குச் சென்றபோது நோய்வாய்ப்பட்டார். அவர் விரைவில் பூரண குணம் அடைய வேண்டி, படைத்தளபதி சேனாபதி மாவலி வானராயன் என்பவர், தற்போதைய புதுச்சேரியில் உள்ள திரிபுவனை வரதராஜப் பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தவும், அங்கே திருவாய்மொழி பாடவும், 12 ஆசிரியர்கள், 260 மாணவர்களைக் கொண்ட வேத பாடசாலை ஒன்றுக்கு உணவு வழங்கவும் 20 வேலி நிலத்தைத் தானமாக வழங்கினார்.
ஆனால் சில மாதங்களிலேயே ராஜேந்திரன் மறைந்து விட்டார். இந்த நிலதானம் விவரத்தை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1048-ம் ஆண்டு அந்தக் கோவிலில் ராஜேந்திரனின் மகன் முதலாம் ராஜாதிராஜன் கல்வெட்டாகப் பதிவு செய்தார். மன்னர்தான் இறந்துவிட்டாரே.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-11
இனி இந்த தானம் பற்றிய தகவல் எதற்கு என்று வீசி எறிந்துவிடாமல், ராஜேந்திர சோழன் இறந்து 4 ஆண்டுகள் ஆன பிறகும், ஏற்களவே வழங்கிய நிலதானம் விவரத்தை நேர்மை தவறாமல் கல்வெட்டில் பதிவு செய்தது வியப்பாக உள்ளது. மேலும், மன்னர் ராஜேந்திர சோழன் தனது 84-வது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்பதற்குச் சான்றாகவும் இந்தக் கல்வெட்டு கருதப்படுகிறது.

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook