Success Stories In Tamil | ஆபிரகாம் லிங்கனின் கதை | ThaenMittai Stories

ஆபிரகாம் லிங்கனின் கதை

தொடர்ந்து தோல்விகளை சந்திப்பவர்கள் எப்படி வெற்றிப் பாதைக்கு முன்னேற முடியும் என்பதற்கான ஒரு சான்று தான் ஆபிரகாம் லிங்கனின் கதை.

1809-ம் ஆண்டு: பிப்ரவரி 9 ஆம் நாள் பிறந்தார்.

1816-ம் ஆண்டு: குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வீட்டின் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருபதற்காகவும் சிறுவயதிலேயே பணிக்கு சென்றார்.

1818-ம் ஆண்டு: நோய்வாய்ப்பட்டிருந்த தன் தாயை இழந்தார்.

1828-ம் ஆண்டு: தன் சகோதரியை இழந்தார்.

1831-ம் வருடம்: தான் செய்து வந்த தொழில் நிறுவனம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
1832-ம் ஆண்டு: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

1832-ம் ஆண்டு: அதே வருடத்தில் தனது வேலையையும் இழந்தார். சட்ட கல்லூரி செல்ல முயன்றார். அங்கும் தோல்வி கண்டார்.

1833-ம் ஆண்டு: புதிய தொழில் தொடங்குவதற்கான தன் நண்பனிடம் ஒரு பெரிய தொகையை கடன் வாங்கினார். அந்த ஆண்டின் இறுதியில் மிகப்பெரிய கடனாளியாக மாறினார்.

1834-ம் ஆண்டு: மறுபடியும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டார் இந்த முறை வெற்றி கண்டார்.

1835-ம் ஆண்டு: இவரின் திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக அவருக்கு நிச்சயிக்கபட்ட பெண் இறந்தார்.

1836-ம் ஆண்டு: எலும்பு முறிவு ஏற்பட்டு ஆறு மாத (Six Months) காலம் படுத்த படுக்கையிலேயே இருந்தார்..

1836-ம் ஆண்டு: சட்ட மன்றத்தில் சபாநாயகராக விரும்பினார் அதிலும் தோல்வி கண்டார்.
1842-ம் ஆண்டு: மேரி டோட் என்பவரை மணந்தார். இவருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஆவார்கள்.

1843–1848-ம் ஆண்டு: மூன்று முறை காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.

1849-ம் ஆண்டு: தன் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்று நில அதிகாரியாக விரும்பினார். ஆனால் அதிலும் நிராகரிக்க பட்டார்.

1850-ம் ஆண்டு: தன் மகன் எட்வர்ட்டை இழந்தார்.

1854-ம் ஆண்டு: அமெரிக்கா நாட்டின் மேலவை பதவிக்காக போட்டியிட்டு தோல்வி கண்டார்.

1856-ம் ஆண்டு: துணை தலைவருக்கான பதவிக்கு வாக்கு எடுப்பு நடத்திய போது 100 வாக்குக்கும் குறைவாக பெற்றார்.
1858-ம் ஆண்டு: மீண்டும் மேலவை பதவிக்காக போட்டியிட்டு தோற்றார்.

1860-ம் ஆண்டு: அமெரிக்காவின் குடியசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அமெரிக்கா நாட்டின் புகழ்பெற்ற ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் அவரின் கதையே இது.

இவ்வளவு தொடர் தோல்விகளையும் பெற்று ஒருவர், உலகத்தில் மிகப்பெரிய நாட்டின் ஜனாதிபதியாக வர முடியும் என்றால், நாம் அடையும் தோல்விகளை வைத்து நாம் துவண்டு விடுவதில் எந்த நியாயமும் இல்லை. உங்கள் மீது ஏறியும் கற்களை, படிக்கற்களாக பயன்படுத்துங்கள். உங்கள் தோல்விகளை அலசி ஆராய்ந்து, அதை மீண்டும் செய்யாதீர்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் தோற்கும் போது, பல பாடங்கள் படிக்கும் பாக்கியம் பெறுவீர்கள். நீங்கள் வெற்றி பெறும் போது, நீங்கள் ஒரு கண்ணாடி மாதிரி பார்க்க அழகாக தெரிவீர்கள்!.

ஆனால் ஒரு அடி பட்டால் நொருங்கி விடுவீர்கள். ஆனால் தோல்வியை பார்த்தவன், தங்கம் மாதிரி! தங்கம் ஆபரணமாக எத்தனை அடிகளை வாங்குகிறது தெரியுமா? ஒரு கல், சிலை ஆவதற்கு எத்தனை அடிகள் வாங்குகிறது? உங்கள் ஒவ்வொரு தோல்வியும், நீங்கள் வாங்கும் ஒவ்வொரு அடியும் உங்களை செதுக்கி கொண்டு வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். உங்களை எதிர்த்துப் போராட தயார்படுத்தும். இவ்வளவு நல்ல விஷயங்களை தோல்வி கற்று தரும். பயத்தைப் போக்கும் தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்!.
தோல்வி மீண்டும் மீண்டும் அடையும் போது, ஆபிரகாம் லிங்கனின் கதை உங்களது நினைவுக்கு வரட்டும்! அதற்காகத்தான் அவரின் கதையின் பதிவிட்டுள்ளேன். மிக சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து பார்க்க வேண்டும். முதலில் சின்ன சின்ன தவறுகளை பார்த்து சரி செய்துக் கொள்ள வேண்டும். Compound Effect என்பது நீங்கள் தினந்தோறும் செய்யும் சின்ன சின்ன மாற்றங்கள், காலப்போக்கில் அது ஒரு பெரிய மாற்றத்தினை உருவாக்க வழி செய்திடும். பல வழிகளில் பயணித்து பயணித்து பார்த்து தோல்வி அடைந்தவன். அதற்காக புதுப்பாதை ஒன்றைக் கண்டுப்பிடிப்பதில், நாம் துவண்டு விடக்கூடாது.

தன்னம்பிக்கையுடன் கூடிய கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு தகுந்த எடுத்துக்காட்டாய் திகழ்கிறார். எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த வார்த்தை உதவும் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை மனதில் வேண்டும். முயற்சி செய்வதற்கும், கற்பதற்கும், வயது ஒரு தடையாக இருப்பது கிடையாது. ஒரு மனிதனுக்கு தோல்வி கற்றுக் கொடுக்கும் பாடத்தை விட எந்த ஒரு ஆசானலும் கற்று தர இயலாது. எவன் ஒருவன் அந்த தோல்வியில் இருந்து படம் கற்றுக் கொள்ள தவறுகிறானோ அதாவது திருத்திக் கொள்ளவில்லையோ அவனே தோற்றவன் ஆவான். ஒரு சிறிய தொடக்கம் தான் பெரிய முடிவிற்கு வழிவகுக்கின்றது. ஆகையால் மீண்டும் முயற்சி செய்திடல் வேண்டும். அதுவும் இந்த முறை அதிக உத்வேகத்துடன், அதிக கவனத்துடனும். அதுவே வாழ்க்கைக்கான திறவுகோலாக அமையும்.
"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்."
நேற்று ஜெயித்தவர் இன்றைக்கும் ஜெயிக்கலாம். ஆனால், நேற்று (Yesterday)தோற்று போனவர்கள் தினந்தோறும் (Daily) தோற்று போவது இல்லை. வாழ்வில் பல துன்பங்களையும், துயரங்களையும், அவமானங்களையும் சந்தித்து கொண்டு இருக்கும் மனிதனுக்குள் பொறுமையும், நிதானமும், துணிவும் பிறக்கிறது. அதனால், அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விட முடியும் என்கிற தன்னம்பிக்கை உருவாகிறது. நமக்கு ஏற்படுகின்ற அவமானம், தோல்வி, வறுமை இவையெல்லாம் நம்மை நல்ல சிலையாக மாற்றுகின்ற சிற்பிகள் என்றே சொல்லலாம். அதனால், அவற்றை எண்ணிக்கொண்டு வருந்த வேண்டிய அவசியம் இல்லை. இது ஒவ்வொன்றும் ஒரு அனுபவ பாடம் என்றே எண்ணிக் கொள்ள வேண்டும்..
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)