Contact Us | ThaenMittai Stories | மனம் தளராமல் போராடினால் வாழ்வில் வெற்றி பெறலாம்!

ஒரு செயல் செய்யும் போது அதைப் பற்றிய அனுபவம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்து துவண்டுபோய் இருப்பவராக இருந்தால் கவலை கொள்ள வேண்டாம். மனிதன் வாழ்வில் தான் சந்திக்கின்ற தோல்விகள், ஏமாற்றங்கள், நிராகரிப்புகள், அவமானங்கள், தடைகள், தடங்கல்கள், சூழ்ச்சிகள் என பல கஷ்டங்களையும், இன்னல்களையும், இடையூறுகளையும் சந்தித்து அவற்றையெல்லாம் தன்னுடைய தளராத தன்னம்பிக்கையினாலும், இடைவிடா முயற்சியினாலும் வெற்றி கொள்பவனே வரலாற்றில் சாதனையாளனாக மாறுகின்றான்.
வாழ்க்கையில் எண்ணற்ற தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்தார். இவரின் உருவத்தை பலரும் ஏளனம் செய்த காரணத்தால் இவருக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. பார்ப்பதற்கு ஒல்லியான தேகம் உடையவராகவும், பலவீனமான தோற்றம் உடையவராகவும் இருந்ததால் பலரது கேலி, கிண்டலுக்கு ஆளானார். இருந்தாலும் சிறுவயதில் இருந்தே அதிகளவு நேர்மறை சிந்தனை கொண்டவராகவும், தனது இலட்சியத்தை அடைய எத்தகைய செயலையும் துணிந்து செய்யக் கூடியவராகவும் காணப்பட்டார். அதேபோல் தான் நினைத்த விஷயத்தில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்கிற ஊக்கம் அவருக்குள் வேரூன்றி காணப்பட்டது.
மனிதர்களின் வாழ்வில் நிராகரிப்பு என்பது நிச்சயமாக ஏதோ ஒரு விஷயத்தில் நடந்தே தீரும். அதனை ஒரு அனுபவ படமாக எடுத்துக்கொண்டு முன்னேறுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள். தோல்வியாக கருதுபவர்கள் காலத்தின் ஓட்டத்தில் கரைந்து போகின்றார்கள். தன்னுடைய 30 வயது வரை எந்த ஒரு வெற்றியையும் சுவைக்காமல் தொடர் தோல்விகளால் நிரப்பப்பட்டு, நிராகரிப்புகளின் தாயகமாகவே திகழ்ந்தார். காலம் எப்போது என்ன நிகழ்த்தும் என்பது யாருக்கு தான் தெரியும்!. இன்று உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா என்ற இணையவழி வணிக நிறுவனத்தை சீனாவில் கட்டியெழுப்பினார் ஜாக் மா. The Most Inspiring Life Story of Jack Ma பற்றி தான் இப்பதிவில் பார்ப்போம்.

ஜாக் மாவின் பிறப்பு:

ஜாக் மா செப்டம்பர் 10, 1964ம் ஆண்டு சீனாவில் உள்ள ஹாங்சோ (Hangzhou) நகரில் பிறந்தார். இவரை ஜாக் மா அல்லது மா யூன் என்று அழைப்பார்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஒரு சகோதரனும், சகோதரியும் உண்டு. இவர் தனது சிறு வயதில் இருந்தே புதிய திறமைகளை வளர்த்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். ஜாக் மா இளம் வயதிலேயே ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டினார். 1972-ம் ஆண்டு முதல் அவரது ஊரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வர தொடங்கியது. ஜாக் மா அவர்கள் இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கட்டணமில்லாமல் சுற்றுலா பயணிகளுக்கு ஓர் வழிகாட்டியாக செயல்பட்டார். இதன் மூலம் தனது ஆங்கிலத்தில் பேசுவதற்கு கற்றுக் கொண்டார்.

ஜாக் மாவின் கல்வி:

ஜாக் மா தனது பள்ளி பருவத்தில் ஒரு சிறந்த மாணவராக படிக்கவில்லை என்றே சொல்லலாம். இவர் ஆரம்பப் பள்ளியில் நடந்த தேர்வில் 2 முறை தோல்வியடைந்தார். அதேபோல் நடுநிலைப் பள்ளியில் நடந்த தேர்வில் 3 முறை தோல்வி அடைந்தார். கல்லூரி செல்வதற்கு வைத்த நுழைவு தேர்வில் 2 முறை தோல்வி அடைந்தார். சற்றும் மனம் தளராமல் முயற்சி செய்து மூன்றாவது முறை விண்ணப்பம் செய்தார். 1980 இல் Hangzhou Normal எனும் பல்கலைக்கழகத்தில் B.A ஆங்கிலத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். அதன் பிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் (Harvard University) சேருவதற்காக விண்ணப்பித்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தால் அவருடைய விண்ணப்பம் 10 முறை நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு சாத்தியமற்ற ஒரு செயலை செய்வதில் ஜாக் மா மிகவும் ஆர்வமாக இருந்தார் என்றே சொல்லலாம். பிறகு அதே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்போது அவர் பேசிய போது தான் நிராகரிக்கப்பட்ட கதையை பற்றி சொன்னார்.

பல வேலைக்கு விண்ணப்பித்தல்:

ஜாக் மா அவர்கள் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றதன் பின்னர் அதே கல்லூரியில் விரிவுரையாளராகவும் வேலையில் சேர்த்தார். அப்போது ஜாக் மாவின் மாத சம்பளம் வெறும் $10 டாலர் மட்டும் தான். பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே தான் காதலித்து வந்த Cathy Zhang ஐ திருமணம் செய்துக் கொண்டார். குடும்பம் ஒன்று வந்ததால் தான் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சம்பாதிக்கும் பத்து டாலர்கள் போதுமானதாக இல்லை. ஆகையால் ஜாக் மா வேறு வழியின்றி வெவ்வேறு வகையான 30க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்தார். அவ்வாறு விண்ணப்பித்த எல்லா வேலைகளிலும் நிராகரிக்கப்பட்டு மிகப்பெரும் தோல்வியை சந்தித்தார்.
ஒருமுறை அவர் போலீஸ் வேலைக்கு சேர்வதற்காக விண்ணப்பித்த போது அவரது தோற்றத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டார். இந்நிலையில் ஜாக் மாவின் ஊரில் கேஎப்சி (KFC) நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுத்தார்கள். அந்த வேலைக்கு விண்ணப்பித்த 24 பேரில் ஜாக் மா மட்டுமே நிராகரிக்கப்பட்டார். இருப்பினும் அவரது தன்னம்பிக்கையும், மன உறுதியும் ஒருபோதும் குறையவில்லை. இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட நிராகரிக்கப்புகள் அல்லது புறக்கணிப்புகள் எல்லாம் இவரை வெற்றி படிகளில் தான் ஏற்றி விட்டது என்றே சொல்லலாம். 1995-ம் ஆண்டு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். இவ்வாறு எந்த நிறுவனமும் தனக்கு வேலை தராத காரணத்தால், தானே சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கலாம் என்று அதற்கான நிதியை திரட்டினார். ஒரு நிறுவனத்தை தொடங்கினர். ஆனால் அதில் மிகப் பெரும் நஷ்டத்தை சந்தித்தார் ஜாக் மா.

இணையதளம் (Internet) பற்றி கற்றுக் கொள்ளுதல்:

1994-ம் ஆண்டு ஜாக் மா அவர்களுக்கு இண்டெர்நெட் பற்றிய அறிமுகம் கிடைத்தது. இண்டெர்நெட் தான் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என அன்றே கணித்த இன்றைய ஜாம்பவான்களில் ஒருவர் ஆவார். ஆம் அவர் இணையதளம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறது என நம்பினார். நம்பியதோடு மட்டுமில்லாமல் அது பற்றி கற்றுக் கொள்ளவும் செய்தார். நண்பர்களின் உதவியோடு அமெரிக்காவிற்குச் சென்று கற்றுக் கொண்டார். ஜாக் மா சீனா பற்றிய தகவல்களை இன்டர்நெட்டில் தேடி பார்க்கிறார். ஒரு தகவலும் கிடைக்கவில்லை, காரணம் எவரும் அது பற்றிய தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவைக்க வில்லை. ஜாக் மா அவர்கள் முதலில் தேடியது சீன பீர் பற்றித் தான் என சொல்லுவார்கள்.

China Yellow Page:

ஜாக் மா அவர்கள் இணையத்தை பற்றி அறிந்த கொண்ட பிறகு, சீனா எல்லோ Page என்ற சீனாவின் முதல் ஆன்லைன் Telephone Directory-ஐ தொடங்கினார். இதன் மூலம் பல இடங்களில் இருந்து கூட்டாண்மை ஒப்பந்தம் என்ற பார்ட்னர்ஷிப்பிற்கான email பல இடங்களில் இருந்து வந்தது. இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது என்று கூட சொல்லலாம். பின் நிதி பற்றாக்குறையின் காரணமாக இதனையும் கைவிட்டார்.

அலிபாபாவின் உதயம்:

ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தை Online Shopping Website ஆக ஆரம்பிக்கவில்லை. மாறாக வணிகர்களுக்கு Website Create செய்து கொடுக்கும் Website Development கம்பெனியாகவே ஆரம்பித்தார். ஜாக் மாவிற்கு இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு தேவைப்பட்டது. அதற்கான நிதியினை அமெரிக்காவின் Silicon Valley இல் உள்ள நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொண்டார். இந்த முறை அவருக்கு வெற்றி என்று சொன்னாலும் முதல் மூன்று ஆண்டுகளில் அலிபாபா எந்தவித லாபத்தையும் ஈட்டவில்லை. ஆனாலும் தன் முயற்சியை கைவிடாத ஜாக் மா தொடர்ந்து முயற்சி செய்தார். அதன் விளைவாக அலிபாபா நிறுவனத்தை தொடங்கி அடுத்த 20 வருடங்களில் சீனாவின் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்தார். இவர் Alipay எனும் பணப்பரிவர்த்தனை இணையத்தை தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் அதிகளவான ஆன்லைன் பண பரிவர்த்தனை Alipay மூலம் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக் மாவின் ஐடியா:

ஜாக் மாவிற்கு கம்ப்யூட்டரில் தெரிந்ததெல்லாம் Browsing, Email Sending, Watching Videos மட்டுமே. இதைத் தவிர அவருக்கு வேறு எதுவும் கணினியில் தெரியாது. ஆனால் Coding-ஐ மையப்படுத்தி இயங்கும் E- commerce வர்த்தகத்தில் முதன்மை நிறுவனமாக அலிபாபாவை கொண்டு வந்துள்ளார். இதற்கு காரணம் ஜாக் மாவின் Idea மற்றும் தன்னோடு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வைத்துக் கொண்டு, அவர்களை சரியான முறையில் ஊக்கப்படுத்தி செயல்பட்டதே காரணமாகும். எவ்வளவு தோல்விகள், சோதனைகள் வந்தாலும் மனம் தளராமல் போராடினால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதற்கு ஜாக் மா மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஆகும். இன்று ஆன்லைன் ராஜாவாக வளம் வருகிறார்.

Dream. You must first believe in yourself and then have a dream big enough to motivate you.

ThaenMittai Stories offers Motivational Videos In Tamil, Motivational Stories In Tamil, Kutty Stories, Inspirational Stories, and Phoenix Pengal. Our videos will inspire you to keep reaching for your dreams! NEVER GIVE UP!!

Enjoy, and always stay positive!!!

If you have a suggestion about video, please comment us at: thaenmittai.stories@gmail.com

ThaenMittai Stories, 
Marungapuri TK, 
Trichy, 
Tamil Nadu, India
PIN 621310
Post a Comment (0)