மோட்டிவேஷனல் கதைகள்
மோட்டிவேஷனல் கதைகள் நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் மற்றும் நல்ல சிந்தனையை தூண்டுவதற்கும் உதவும். ஒவ்வொரு மோட்டிவேஷன் கதைகளை படிக்கும் போது நம் மனதிற்கு உத்வேகம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னையை கண்டு பயப்படாதீர்கள். 'ஒரு பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்றும் பயப்படாதீர்கள். நிச்சயம் ஏதாவது ஒரு வழி இருக்கும்.’ - இது ஒரு சீனநாட்டுப் பழமொழி. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் அப்படித் தான். எப்போதும் நிதானமான அணுகுமுறை, பொறுமை, முழு ஈடுபாடு, கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். எப்பேர்ப்பட்ட தீர்க்க முடியாத பிரச்னைகளையும் தீர்த்துவிடலாம். நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். மனதில் தன்னம்பிக்கை இருக்க வேண்டும்; செயலில் உறுதி வேண்டும். உற்சாகத்தோடு உழைத்தால் வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும்!.
தன்னம்பிக்கை எறும்பு
மடத்தில் துறவி ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை புகட்டுவதற்கு அவர்களுக்கு ஒரு சிறுகதையினை சொல்லி புரிய வைக்க நினைத்தார். ஆகையால் அந்த துறவி ஒரு எறும்பு கதையை தன்னுடைய சீடர்களுக்கு சொன்னார். அதாவது ஒரு எறும்பு ஆனது தன் வாயில் சற்று நீளமான ஒரு உணவுப் பொருலான ஓர் அரிசியை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் பாதையில் ஒரு வெடிப்பு (விரிசல்) தென்பட்டது. அதனால் அந்த எறும்பானது அந்த வெடிப்பினை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்து நின்றது.
கொஞ்ச நேரம் கழித்து, அந்த எறும்பு தன் கொண்டு வந்த அரிசியினை அந்த வெடிப்பின் மீது வைத்து அதை பாலமாக மாற்றி அதன் மீது ஏறி ஊர்ந்து சென்று வெடிப்பினை கடந்த பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார். துறவி சீடர்களைப் பார்த்து, இந்த எறும்பினைப் போல் நாமும் நம் ஏற்படும் சவால்களையும், பிரச்சனைகளையும் பாலமாக வைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார். அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எதிர்ப்படும் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும். நமக்கு வருகிற இன்னல்களும், துன்பங்களும் காணாமல் போய்விடும் என்று சொல்லிக் கொடுத்து அன்றைய பாடத்தை முடித்தார் துறவி.
அமறுநாள் காலையில் துறவி மடத்தில் இருந்த தன் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த தன்னம்பிக்கையான எறும்பு அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று அதே பாதையில் இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது. எறும்பு செல்வதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே என்றது.
அதற்கு அந்த எறும்பு சொன்னது இன்னும் சில நாட்களில் கோடை காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கப் போகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன் என்றது எறும்பு. வெட்டுக்கிளி எறும்பிடம் மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே நடனமாடி சென்றது. நாட்கள் கடந்தன.
கோடைகாலம் முடிந்து மழைக்காலமும் வந்தது. பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எறும்பு தான் சேகரித்த வைத்திருந்த உணவினை உண்டு தன் வீட்டிலே இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உண்ண உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி தொடர்மழையில் சிக்கித் தவித்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆகையால் உணவு சேகரித்து வைத்து இருந்த அந்த எறும்பிடம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது. அந்த வெட்டுக்கிளி விடாது மழையிலும் எறும்பின் வீட்டிற்கு வந்து எறும்பிடம், எனக்கு ரொம்ப பசியாக இருக்கிறது. மழையிலும் உண்ண உணவு தேடிப்பார்த்தேன் எங்கும் கிடைக்கவில்லை. ஏதாவது உண்ண உணவு கொஞ்சம் தர முடியுமா? என்று கேட்டது.
எறும்பு தான் சேகரித்து வைத்து இருந்த உணவில் இருந்து கொஞ்சம் வெட்டுக்கிளையிடம் கொடுத்தது. எறும்பு சொன்னது, அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே!. இப்போது நான் சேகரித்து வைத்து இருந்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பல் படாமல், கோடை காலத்தில் மழைக்காலத்திற்கு தேவையான உணவினை சேமித்து வைத்துக்கொள் என்றது. மழைக்காலம் வெயில் காலம் என்று கால நேரம் பாராமால் உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்து கொண்டது. உங்களுடைய கடின உழைப்பு உடனடியாகப் பலன் அளிக்கவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் அளிக்கும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார் துறவி.
அந்த துறவி சொன்ன கதையின் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளுவது என்னவென்று பார்த்தால், முதலில் அந்த எறும்பின் சுறுசுறுப்பான உழைப்பினைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. சேமிக்கும் பழக்கத்தினைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. காலம் அறிந்து செயல்படுதல் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது, கொடுத்து உதவும் பண்பினை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. வெட்டுக்கிளியின் சோம்பறித் தனத்தால் ஏற்பட்ட கஷ்டங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.