Motivational Stories In Tamil For Opportunities
நமக்கான வாய்ப்புகள் கிடைக்கும் போது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் எப்போதும் தயாராக இருத்தல் வேண்டும். அது தான் வெற்றி பெறுவதற்கான ரகசியம். நமக்குக் கிடைத்தது ஓர் அரிய வாய்ப்பு என்பதைப் புரிந்து கொள்ளாமல் கிடைத்த வாய்ப்பை தவற விடுபவர்கள், அவர்களின் வெற்றியையும் நழுவ விட்டுவிடுகிறார்கள் என்றே சொல்லலாம்.நாம் செய்யும் ஒர்க் ஆக இருந்தாலும் சரி, Life ஆக இருந்தாலும் சரி, வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு (Chance) என்பது மிக முக்கியத் தேவையாக இருக்கிறது. Chance-ஐ சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கும், Success-க்கும் இடையே நிறைய தொடர்பு இருக்கிறது.
நாராயணமூர்த்தி, அசிம் பிரேம்ஜி, ரத்தன் டாட்டா, திருபாய் அம்பானி, ஷிவ் நாடார் போன்ற வெற்றி பெற்ற தொழில் அதிபர்கள் எல்லாம் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே ஆவார்கள். தன்னம்பிக்கை உள்ளவர்களே வருகின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தன்னம்பிக்கை உள்ள மனிதர்கள் கடினமான சமயங்களில் கூட வாய்ப்புகளை கண்டு அறிவார்கள். தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் தான் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் கூட கஷ்டத்தையே உணர்வார்கள்.
ஒரு ஊரில் ஒரு வைர வியாபாரி இருந்தார். அவர் வருங்காலத்தில் பெரிய Businessman ஆக வர வேண்டும் என்று ஆசைப்பட்டு உழைத்தார். But without planning காரணத்தால் அவர் ஒரு Big Lost-ஐ சந்திக்க நேரிட்டது. அவர் மிகுந்த கவலையுடன் இருந்தார். அவர் மிகவும் கவலையுடன் இருந்ததால் வீட்டுக்கு போக மனமில்லை. ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் ஒரு ஆற்றங்கரைக்கு சென்றார். Few Time தனியாக இருந்துவிட்டு வரலாம் என்று Think பண்ணிக்கொண்டு அங்கே சென்றார்.
அங்கே அப்படியே மெல்லியதாக நிலாவின் வெளிச்சம் வந்து பரவிருந்தது. அப்படியே அந்த ஆற்றங்கரை அருகே உள்ள மணலில் உட்கார்ந்தார். அங்கே அமர்ந்து கொண்டு என்ன நடந்தது என்று அவரின் பழைய நினைவுகளை நினைத்து பார்த்தார். ஏன் இப்படி நடந்தது?. இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று Think பண்ணினார். எதற்காக வியாபாரத்தில் தோல்வி அடைந்தோம். இப்படி தோல்வி தந்த விஷயத்தை நினைக்கிற போது அவரது மனம் மிகுந்த வேதனைப் பட்டது. ஏன் என்னுடைய பார்ட்னர் அனைவரும் எனக்கு வந்து துரோகம் செய்தார்கள். என்னை நம்ப வைத்து Cheating செய்து விட்டார்களே என்று கண்கலங்கி போனார்.
நான் தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப் போகிறேன். என் குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறேன். எதிர்கால கவலையெல்லாம் சேர்ந்து அவரின் மனதை ரொம்பவே கலங்கடித்தது. மனதில் இதெல்லாம் நினைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்தார். இந்த Think பண்ணி கொண்டே இருந்தார். அவரின் Right Hand அறியாமலேயே ஆற்று மணலில் இருந்த Small Stones எடுத்தார். அதை ஒவ்வொன்றாக ஆற்று நீரில் தூக்கி போட்டார். இதேபோல் அவரிடம் இருந்த அனைத்து கற்களையும் River வாட்டர்க்குள்ள வீசி எறிந்தார். இப்படியே அந்த இரவு முடிந்து விடியல் ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சூரிய வெளிச்சம் பரவ தொடங்கியது. இப்படியே அங்கே இருந்த கற்களை எல்லாம் தூக்கி எறிந்தார். கடைசியாக இருந்த ஒரு கல்லை எடுத்து தண்ணீருக்குள் வீசலாம் என்று நினைத்து அந்த கல்லை பார்த்தார். அப்பொழுதுதான் அந்த கல்லை பார்த்து பிரமித்துப் போய்விட்டார். ஏனென்றால் அந்த கல் சாதாரண கூழாங்கல் கிடையாது.
அந்த வைர வியாபாரி கையில் விலைமதிப்பு மிக்க Diamond இருந்தது. யாரோ திருடர்கள் Diamond-ஐ கொள்ளையடித்துக் கொண்டு வந்து அந்த River-ல் தவறவிட்டு சென்று விட்டார்கள். அது Diamond என்றே தெரியாமல் வெறும் கல் தான் என்று நினைத்துக் கொண்டார். So அந்த ஒவ்வொரு Diamond-யும் ஆற்றங்கரையில் உள்ள வாட்டர்க்குள் தூக்கி எறிந்தார். அந்த வைர வியாபாரி நல்ல விடிந்து சூரிய ஒளி வீசிய பிறகு தான் புரிந்துக் கொண்டார். அவர் தூக்கி போட்ட ஒவ்வொரு கல்லும் Diamond என்று தெரிந்துக் கொண்டார். அவர் தூக்கி எறிந்த அந்த Diamond-ஐ தேடிப் பார்க்கலாம் என்று அங்கே சென்றார். பெரும்முயற்சி செய்து அந்த River வாட்டர்க்குள்ளேயே இறங்கி சென்று அவரது கால்படுகின்ற இடமெல்லாம் எல்லாம் Search பண்ணி பார்த்தார். அவரின் கையில் சிக்கியது எல்லாம் கூழாங்கல் மட்டும் தான். அவர் எறிந்த எந்தொரு வைரக்கல்லும் அவரின் கையில் சிக்கவே இல்லை.
பல பேர் அந்த Diamond Salesman போல தான் Past and Future நினைவுகளில் மிதந்துக் கொண்டு நிகழ்காலம் Present என்கிற வைரக் கற்களை வீணடித்துக் கொண்டு இருக்கின்றோம். இறைவன் நமக்கு ஒவ்வொரு முறையும் வைரக்கல் (Diamond) மாதிரி வாய்ப்பினை கொடுத்திருந்தும், அதை சரியாக பயன்படுத்தாமல் வீணடித்து விட்டு கடைசியில் அதனையே தேடிக் கொண்டிருக்கின்றோம். நமக்கு கிடைக்கின்ற Chance-ஐ சரியான முறையில் Use பண்ணினால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும். இந்த Motivational Story உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் குடும்ப உறுப்பினர்கள் (Family Members), உறவினர்கள் (Relatives), மற்றும் சக நண்பர்களிடம் (Friends) இந்த பதிவை பகிர்ந்து (Share) கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நன்றி வணக்கம்!
Related Tags
Business Motivational Story In Tamil | Business Motivation Tamil | Secret of Business Success In Tamil | Successful Entrepreneur | Business Videos Tamil | Business Success Stories In Tamil | Success Stories In Tamil | Motivational Success Stories In Tamil | Startup Stories In Tamil | Leader Story In Tamil | Share Market News In Tamil | Inspiring Founder Stories | Motivational Person Video In Tamil | Women Entrepreneur Success Stories | Small Business Success Stories | Business Ideas for Students.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.