ஒருவருக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வார்த்தைகளால் கொடுக்கும் போது அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்கிற "தன்னம்பிக்கை" உருவாகிறது!. குட்டி மோட்டிவேஷனல் கதைகள் மூலமாக கொடுக்கும் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தையும் கொண்டு எதையும் சாதிக்கலாம். மேலும் பல குட்டிக் கதைகளை படிப்பதும் மற்றும் பார்ப்பதும் மூலம் தன்னம்பிக்கையுடன் செயல்பட வைக்கிறது!.
- வாழ்வில் வெற்றி பெற்ற மாமனிதர்களின் கதைகள்
- நம் வாழ்க்கை சிந்தனையை மாற்றும் கதைகள்
- நம் வாழ்க்கை தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் கதைகள்
- வாழ்க்கைக்கு வண்ணம் சேர்க்க உதவும் கதைகள்
- இலக்கினைச் சரியாகத் தீர்மானித்து அடையும் யுக்திகளைக் கற்று கொள்ள உதவும் கதைகள்.
- வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள உதவும் கதைகள்
- வாழ்வில் வெற்றி பாதையை அடைய தூண்டும் கதைகள்
- சாதிக்க தூண்டும் கதைகள்
- வாழ்க்கை தத்துவ கதைகள்
- குட்டி மோட்டிவேஷனல் கதைகள்.
"முடியாது எதுவும் இல்லை, முயன்றால் முடியாது எதுவும் இல்லை!". காலம் தான் சிறந்த மருந்து. அனைத்து செயல்களையும் காலம் தான் தீர்மானிக்கிறது. காலம் கருதி செயல்பட வேண்டும். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். நாம் செய்ய வேண்டிய செயல்களை மனதில் ஓடவிட வேண்டும். புதிய புதிய முயற்சிகளை பயிற்சியின் மூலம் செய்திடல் வேண்டும். தொடர்ந்த பயிற்சியின் மூலம் எதையும் சாதிக்க முடியும்.
மிகச்சிறந்த ஆளுமை என்பது நன்றாக பேசுவதன் மூலமும், எழுதுவதின் மூலமும், நன்றாக சிந்தித்து செயலாற்றுவதின் மூலமும், விரைந்து செயல்களை செய்து முடிப்பதின் மூலமும், ஆழ்ந்து கற்றுக் கொள்வதின் மூலமும் வெளிப்படுகின்றன. தொடர்ந்து பயிற்சிகளை செய்வதின் மூலம் சிறப்பான செயல்களை செய்திட முடியும். முயற்சி செய்யுங்கள் "வெற்றி" கிடைக்கும். முயற்சி செய்யுங்கள் "தோல்வியும்" கிடைக்கும். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் உங்களுடைய "தோல்வியும் வெற்றியாக மாறும்!"...
அலெக்சாண்டரின் பிறப்பு:
கிரேக்க நாட்டின் மாசிடோனியா என்ற மாநகரத்தில் வாழ்ந்து வந்த மன்னன் பிலிப் - ஒலிம்பியாஸ் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவன் தான் மாவீரன் அலெக்சாண்டர் ஆவார். அலெக்சாண்டரின் தந்தை பிலிப் மன்னன் சிறந்த மதிநுட்பமும், வீரமும், மற்றும் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர் ஆவார். ஆகையால், அவர் தன் மகனை மெய் ஞானத்திலும், கல்வியிலும், வீரத்திலும், போர்க்கலைகளிலும், மற்றும் தன்னம்பிக்கையிலும் மிகச் சிறந்த ஒரு துடிப்புமிக்க இளைஞனாக வளர்க்க விரும்பினார். அலெக்சாண்டர் சிறு வயதிலேயே படிப்பதிலும், யாழிசை மீட்டுவதிலும், வேட்டையாடுவதிலும், போர்க்கலையிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
ஒரு பெரிய மரத்தின் அடியில் நின்ற சிறுவன் அலெக்சாண்டர் Flute வாசித்துக் கொண்டிருந்த போது சில கைதிகளை மாசிடோனியா நாட்டு வீரர்கள் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அச்சமயத்தில் அலெக்சாண்டரின் தந்தை பிலிப் மன்னன் சிலிரியா நாட்டில் படையெடுத்து போர் புரிந்து கொண்டியிருந்தார். சிறுவனாக இருந்த அலெக்சாண்டர் நீதி மன்றத்துக்குள் உள்ளே நுழைந்தார், உள்ளே சென்று அங்கே நடப்பதை கூர்ந்து கவனித்தார். நீதிபதி அவர்கள் அந்த கைதிகள் புரட்சியில் ஈடுபட்ட காரணத்தால் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அலெக்சாண்டரின் மதிநுட்பம்:
சிறுவனாக இருந்த அலெக்சாண்டர் நீதியரசரைப் பார்த்து நான் ஒரு விஷயம் சொல்லலாமா என்று கேட்டார். நீதிபதி சொல்லுங்கள் என்றார். அலெக்சாண்டர் சொன்னார் அந்த கைதிகளின் கைகளில் போர் வாளைக் கொடுத்து சிலிரியாவில் அரசர் போர் புரிந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அனைவரும் அந்த போரில் பங்கெடுத்தால் உங்களுக்கு விடுதலை என்று சொன்னான். சிறை கைதிகள் அனைவரும் மகிழ்ச்சியில் யுத்தத்திற்கு புறப்பட்டனர். அலெக்சாண்டார் நீதியரசரைப் பார்த்து உயிர் விலை மதிப்பற்றது, அப்படி இழந்தால் நம் நாட்டிற்காக மட்டுமே இழக்க வேண்டும் என்று கூறினான், அப்போது அலெக்சாண்டருக்கு வெறும் வயது 7 தான் ஆகும். சிறுவனாக இருந்த அலெக்சாண்டரின் இந்த அறிவைக் கண்டு அவரது பெற்றோர்கள் மிரண்டு போனார்கள்.
சிறுவனாக இருந்த அலெக்சாண்டர் மூன்று ஆசான்களிடம் கல்வியை கற்றான். முதலில் அலெக்சாண்டர் கல்வியை கற்க தொடங்கியது அவனுடைய தாய்வழி உறவினர் லியோனிதாஸிடம் அவர்களிடம் தான் . இரண்டாவது கல்வி பயின்றது "லிசி மாகாஸ்" என்பவரிடம் கற்றார். இவர் கவிதை, இசை, கலையை கற்றார். மூன்றாவதாக உலக ஞானியான அரிஸ்டாட்டிலிடம் கல்வியை கற்றார். அப்போது அவனுடைய வயது 13 ஆகும். அரிஸ்டாட்டில் அலெச்சாண்டரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம், அது என்னவென்றால் "என்னிடம் மாணவனாக இருக்கும் தகுதி உனக்கு இருக்கிறதா?" என்று கேட்டாராம். அதற்கு அலெக்சாண்டர் அளித்த பதில் "எனக்கு ஆசிரியராக இருக்கும் தகுதி உங்களுக்கு இருந்தால், மாணவனாக இருக்கும் தகுதி எனக்கு இருக்கிறது" என்று கூறினான். அலெச்சாண்டரின் கண்களில் உலகத்தையே ஆளும் கர்வம் இருப்பதை அன்றே கணித்தார் அரிஸ்டாட்டில்.
அலெக்சாண்டரின் கல்வி:
சாக்ரடீஸின் சீடர் பிளேட்டோ. பிளேட்டோவின் சீடர் அரிஸ்டாட்டில். அரிஸ்டாட்டிலின் சீடர் மாவீரன் அலெக்சாண்டர். மாபெரும் ஞானியான அரிஸ்டாட்டில் தன் மாணவனாக இருந்த அலெச்சாண்டரை ஒரு அறிவின் கூர்வாளாகவே மற்றினார். அவனுக்கு அனைத்து வகையான நுணுக்கங்களையும் தெள்ளத்தெளிவாக கற்றுக் கொடுத்தார். அலெக்சாண்டார் தன்னை மாபெரும் அரசனாகவே மகுடம் சூட்டிக் கொண்டான். ஒரு பெரிய திடலில் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. அங்கே ஒரு குதிரை மட்டும் அடங்காமல் அலைந்து திரிந்து கொண்டு இருந்தது. அந்த குதிரையை அடக்க பல குதிரை வீரர்கள் சென்று தோல்வி அடைந்தார்கள். அரசருக்கு ஒரு குதிரையை அடக்க முடியவில்லையே என்ற கோபம் உண்டானது. அப்போது அலெக்சாண்டார் அந்த மாபெரும் திடலில் இறங்கினான். உடனே அதனை பார்த்த மன்னர் பிலிப்ஸ் உன்னால் முடியாது மகனே திரும்பி வந்துவிடு என்று பதறிபோய் கூறினார். அதற்கு அவனோ முடியாது என்று அந்த குதிரையை அடக்கி காட்டுகிறேன் என்றான்.
அலெக்சாண்டரின் குதிரை புகிபேல்ஸ்:
அலெக்சாண்டார் குதிரையின் பக்கத்தில் சென்று குதிரை ஏன் மிரள்கிறது என்று யோசித்தான். அப்போது தான் அவனுக்கு புரிந்தது. அலெக்சாண்டார் குதிரையின் பக்கத்தில் போய் அதனை பாசமாய் தடவிக் கொடுத்தான். அந்த குதிரையை ஒரு மரத்திற்கு அழைத்துச் சென்றான். அந்த குதிரை தனது நிழலையேப் பார்த்து மிரண்டு போனது என்பதை அறிந்தான். அந்த குதிரை பயம் தெளிந்து இயல்பு நிலைக்கு மாறியது. அலெக்சாண்டார்க்கு அந்த குதிரையை ரொம்பவே பிடித்துப் போக அதற்கு புகிபேல்ஸ் என்று பெயரிட்டு அழைத்தான்.
அலெக்சாண்டரின் முதல் வெற்றி:
அலெக்சாண்டரின் முதல் படையெடுப்பிலேயே வெற்றியை பெற்றான். அலெக்சாண்டார் முதன் முதலில் கைப்பற்றிய நகரத்திற்கு அலெக்சாண்ரோபோலிஸ் என்று பெயர் வைத்தான். அலெக்சாண்டரின் தந்தை பிலிப் மன்னன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் மாசிடோனியாவில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருமண விருந்து வெகு விமர்சையாக நடந்தது. அதில் அவன் நண்பன் செலுக்கியஸூம் மற்றும் அலெச்சாண்டரும் உட்கார்ந்து இருந்தனர். அப்போது பிலிப்ஸ் மன்னன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மனைவின் பெயர் கிளியோபாட்ரா. அவளின் தந்தை இந்த நிகழ்ச்சிக்கு பின் மாசிடோனியா நாட்டையே ஆளப்போகிறவன் பிறக்கப் போகிறான் என்று சொன்னார். இந்த பேச்சு அலெக்சாண்டரை அசிங்கப்படுத்தும் விதமாக இருந்தது. அப்போது அலெக்சாண்டரின் தன் கையிலிருந்த சூடான சூப் கிளாஸை எடுத்து அவன் முகத்தை நோக்கி குறி வைத்து எறிந்தான். அப்போது அந்த அரங்கமே அதிர்ந்து போனது.
அலெக்சாண்டரின் திட்டம்:
இவ்வாறு நடந்த காரணத்தால் அலெக்சாண்டர் அன்று இரவே மூன்று வகையான திட்டங்களை தீட்டினான்.
1). தன் தந்தையை கொலை செய்வது.
2). மாசிடோனியாவின் மன்னர் ஆவது.
3). உலகில் உள்ள மொத்த நிலப்பரப்பை கைப்பற்றுவது ஆகும். அலெக்சாண்டரின் முதல் இரண்டு திட்டங்கள் முறைப்படி நடந்து முடிந்தன.
தான் வகுத்த மூன்றாவது திட்டத்தை நிறைவேற்ற ஒரு இரும்பு கவசத்தை அணிந்தக் கொண்டு ரொம்பவே கம்பீரமாக இலட்சக்கணக்கான இராணுவ வீரர்களைப் பார்த்து வாளை எடுத்து உயர்த்தி காட்டினான். அலெக்சாண்டர் தி கிரெட் (Alexander the Great) என்ற பட்டத்தை பெற்றான். கிட்டத்தக்க எட்டு இலட்ச போர்வீரர்களுடன் புகிபேல்ஸ் குதிரையில் ஏறி அமர்ந்து துருக்கி நாடுகளை தரைமட்டம் ஆக்கினான். அலெக்சாண்டரின் அடுத்த கட்ட இலக்கு எகிப்து நாடாக இருந்தது. அலெக்சாண்டரின் படைகள் சூறாவளி போல் புகுந்து எகிப்தை நாசமாக்கியது. அவன் இப்படி வெற்றி பெற்றதற்கு ஒரு யுக்தியை கையாண்டான். அவன் எதிரி நாட்டு படைவீரர்கள் எவரையும் கொன்றுவிடவில்லை. அதற்கு நேர்மாறாக அவர்களை தன் படையுடன் சேர்த்துக் கொண்டார். இந்த அணுகுமுறை அவருக்கு பலமாகவும் இருந்தது, அதே சமயம் பலவீனமாகவும் இருந்தது. ஒரு படைவீரனின் மரணம் என்பது ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் போது மட்டுமே போக வேண்டும் என்று சொன்னார்.
அலெக்சாண்டரும் மற்றும் பால்க் நாட்டின் படையெடுப்பும்:
எகிப்து நாட்டிற்கு அடுத்து அலெக்சாண்டர் படையெடுத்த நாட்டின் பெயர் பால்க் நாடு ஆகும். தற்போது இந்த பகுதி ஆப்கானிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. அவர் பால்க் நாட்டின் அரண்மனையில் இருந்த படிக்கட்டுகளில் புகிபேல்ஸ் குதிரையை ஏற்றி பால்க் மன்னன் இருந்த இடத்தில் நிறுத்தினான். அடுத்த கணமே பால்க் மன்னனான சாம்சோலனின் தலையை வெட்டி வீழ்த்தினான். வெற்றி வெற்றி, பால்க் மன்னன் வீழ்ந்து விட்டான் என்று அலெக்சாண்டர் குரல் ஒலி எழுப்பி கொண்டிருந்த போது, அவனது இரும்பு மார்பில் ஒரு நீண்ட வாள் ஒன்று வைக்கப்பட்டது. ஒரு இரும்பு கவச ஆடையை அணிந்து இருந்த சற்று ஒல்லியான வாலிபனுடன், அலெக்சாண்டர் தன் குதிரையில் இருந்து இறங்கி அவனுடன் போர்புரிந்தார்கள். ஒரு சில நிமிடங்களில் அவனை தூக்கி அவனின் இரும்பு கவச ஆடையை கழட்டிய போது ஆச்சரியப்பட்டான், அங்கே இருந்தது பருவ வயதுடைய பெண்.
அலெக்சாண்டரின் காதல்:
அந்த பெண் ரொம்பவே கர்ஜித்தாள். அலெக்சாண்டரோ, அந்த நாள் வரை எந்த ஒரு பெண்னின் வாசத்தை நுகராதவனாக இருந்தான். அந்த பெண் உடலின் வாசமோ இவனை வசீகரிக்க வைத்தது. முதலில் திமிறிய அந்த பெண்ணை, தன்னுடைய வசீகர கண்களால் விழச் செய்தான் அலெக்சாண்டர். அந்த பெண்ணின் பெயர் ரொக்ஷானா ஆவார். இவள் தான் அந்த பால்க் மன்னரின் புதல்வி ஆவாள். அலெக்சாண்டர் என்ற மாபெரும் வீரனை தன் புருவத்தின் மையத்திள் நிறுத்தி வைத்தாள் ரொக்ஷானா. அலெக்சாண்டர் அவளுக்கு துணையாக இருந்தான். ரொக்ஷானா என்ற புரட்சிப் புயல் அலெக்சாண்டரின் மார்பில் சரணடைந்தது. இருவரும் கலவியில் ஈடுப்பட்டார்கள். ஆதலால் அலெக்சாண்டரின் படைகளுக்கு சிறிது காலம் ஓய்வு அளிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் கொஞ்சி விளையாடினார்கள். அப்போது அலெக்சாண்டரின் முகத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு குட்டி அலெக்சாண்டர் பிறந்தான். அந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ரொஷானா பெற்றுயெடுத்த தன் குழந்தையை அனைவரிடமும் காட்டினார் அலெக்சாண்டர், தன் நண்பனான புகிபேல்ஸ் குதிரையிடமும் காட்டினார் அலெக்சாண்டர். அடுத்து ஒரு சில நாட்களிலேயே அவரின் இரும்பு கவச உடையை அணிந்து கொண்டு யுத்தத்திற்கு செல்வதற்கு தயாரானார். அலெக்சாண்டரின் நண்பன் செலுக்கியஸ் கேட்டான் அடுத்து நமது இலக்கு எந்த நாடு என்று கேட்டான்?. அதற்கு அலெக்சாண்டர் இந்தியா என்றான். இந்தியாவை நோக்கி தன் படைகளை செலுத்தினான்.
அலெக்சாண்டரின் போர் திறமை:
அலெக்சாண்டர் இந்திய வந்தடைந்தார். அலெக்சாண்டரிடம் ஓம்பிஸ் என்ற மன்னன் சரணடைந்தான். பின் அலெக்சாண்டரின் இலக்கு பவுரவா தேசம் ஆகும். அது இடமானது தற்போது உள்ள பஞ்சாப் மாநிலம் ஆகும். அந்த பகுதியினை ஆட்சி செய்த மன்னன் போரஸ் ஆவான். போரஸ் மன்னன் எதற்கும் துணிந்தவனாக இருந்தான், மேலும் போரஸ்-னிடம் மாபெரும் யானைப்படைகள் இருந்தது. அந்த யானைப் படைகளை கண்டு அலெக்சாண்டரே சற்று யோசித்தார். அலெக்சாண்டர் பல வியூகங்கள் அமைத்து போரஸ் படையில் பாதியை அழித்தார்.
ஒரு நாள் இரவு அலெக்சாண்டர் கண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு விஷப் பாம்பு அவனை தீண்டி விட்டது. ஆகையால் அவர்க்கு சிகிச்சை அளிக்க ஆள் தேடிப்பார்த்தார்கள் யாரும் கிடைக்கவில்லை. ஆனால் கடைசியில் ஒரு முதியவர் முன் வந்து அவரின் காலில் இருந்த விஷத்தை கத்தியால் கிழித்து அந்த விஷத்தை வெளியேற்றினார். சிறிது நேரத்தில் மாவீரன் அலெக்சாண்டர் கண்விழித்து பார்த்தான். அப்போது அந்த முதியவரைப் பார்த்து நீங்கள் இந்த ஊரினைச் சேர்ந்தவரா என்று அலெக்சாண்டரின் நண்பன் செலூக்கியஸ் கேட்டான். அதற்கு ஆமாம் என்று பதில் அளித்தார் அந்த முதியவர். உடனே தங்களின் பெயர் என்னவென்று கேட்டார். அதற்கு முதிய மருத்துவர் பதில் சொல்லாத அந்த நிமிடத்தில் நீங்கள் போரஸ் மன்னன் என்றார் அலெக்சாண்டர். இதனை கேட்டயுடனே அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
போரஸின் போர்திறம்:
மருத்துவராக வந்து என் உயிரை காப்பாற்றியதற்கு மிக்க நன்றி மன்னர் போரஸ். நாளை மீண்டும் யுத்த களத்தில் சந்திப்போம் என்று புன்னகையுடன் கூறினான் மாவீரன் அலெக்சாண்டர். போரஸின் யானைப் படைகள் மிக வலுவாக இருந்தது. ஒரு யானையைக் கொல்வதற்கு ஆகும் நேரத்தில் 30 யானை பாகன்களைக் கொல்லலாம் என்று அறிந்தான். ஆகையால் யானைப் பாகன்களின் தலைகளை வெட்டி வீழ்த்தினான். இருந்தாலும் பாகன்கள் இல்லாமலேயே யானைகள் நடைபழகிக் கொண்டிருந்தது. போரஸின் போர்திறத்தைப் பார்த்து அலெக்சாண்டரே வியந்து போனான். போரஸின் தலைமையில் மகதநாடுகளையும் வீழ்த்தி போரஸை ஆட்சி செய்ய வைத்துவிட்டு வெளியேறினான் மாவீரன் அலெக்சாண்டர். இந்த காலகட்டத்தில் தன்னுடன் 17 ஆண்டுகள் இருந்த புகிபேல்ஸின் மரணம் தாங்க முடியாமல் அலெக்சாண்டர் உண்ணாமலும், உறங்காமலும் தவித்தார்.
அலெக்சாண்டரின் அடுத்த கட்ட இலக்காக கங்கை சமவெளி, பின்பு இண்டஸ் நதி. அதன்பிறகு கெட்ரொசின் பாலைவனம் பகுதி என்று அவரின் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு காலகட்டத்தில் அலெக்சாண்டரின் மாபெரும் படைகள் முன்னேற மறுத்தார்கள். அலெக்சாண்டர் யோசித்தார், ஏனென்றால் எதிரியே இல்லாமல் இருப்பதும் நல்லதல்ல, அதேபோல் எதிரிகள் உடன் இருப்பதும் நல்லதல்ல என்று யோசித்து தனது படைகளை பாபிலோன் நகருக்கு அனுப்பினார். அங்கு முக்கியமான நபர்களுக்கு மட்டும் மதுபான விருந்து நடந்தது. அந்த மதுபான விருந்தில் அலெக்சாண்டர் தன் செல்ல மகனோடும், மனைவியோடும் சென்றிருந்தார்.
மாவீரன் அலெக்சாண்டரின் மறைவு:
அந்த மதுபான விருந்தில் அலெக்சாண்டர் ஒயின் (பழச்சாறு) பருகினார். பழச்சாறு உள்ளே போக போக அலெக்சாண்டர் மெதுவாக சிரித்தார். நான் இந்தியாவில் இருந்த போது எனக்கு விஷம் ஏறியது ஒரு அந்நிய நாட்டுக்காரன் (இந்தியன்) காப்பாற்றினான். நான் சொந்த நாட்டில் இருக்கும் பொழுது விஷம் கலந்து கொடுத்தார்கள் என்பதை அறிந்து கொண்டான். அலெக்சாண்டரின் வாயில் இரத்தம் வழிந்து அப்படியே நாற்காலியில் சாய்ந்தான். தன்னுடன் கூட இருந்தவர்களே விஷம் கலந்து கொடுத்த காரணத்தால் மூன்று நாட்கள் உயிருடன் போராடி ஜூன் 10 இறந்து போனான் மாவீரன். அதன் பிறகு அந்த கூலிப்படைகள் அலெக்சாண்டரின் செல்ல மகனையும், மனைவி ரொக்ஷானாவையும் துரத்திச் சென்று கொலை செய்தார்கள் . உலகம் முழுவதையுமே கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த மாவீரன் அலெக்சாண்டர், தன்னுடைய 33 வயதில் அதே கனவுகளுடன் இறந்து விட்டார். அன்றைய காலக்கட்டத்தில் உலகமே கண்டு நடுங்கிய ஒரு மாவீரன் அலெக்சாண்டர் என்றால் மிகையாகாது!.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.