Why ThaenMittai Stories?
யானையின் பலம் அதன் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் என்ற கூற்றை மனதில் கொண்டு, தோல்வியை கண்டு துவளாது நாம் சாதிக்க பிறந்தவர்கள் என்ற நம்பிக்கையுடன் துணிந்து நின்று வெற்றியை பெற உழைக்க வேண்டும். வீரத்துறவி விவேகானந்தர் சொன்னார்: ‘உலக வரலாறு என்பது கடைசி வரைக்கும் தன்னம்பிக்கையோடு இருந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டு சாதித்துக் காட்டுகிற சாதனையாளர்களின் வரலாறு தான் உலக வரலாறு’. பல அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால் தான்.
தன்னம்பிக்கையும், உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம். சிந்தனையைவிடச் செயல் தான் சிறந்தது அது எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும் தன்மை வாய்ந்தது. எந்த செயலையும் ஆழ்ந்து கற்றுக் கொள்ளும் போது நம்மால் எதையும் சாதிக்க செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கிறது. ஆகையால் வாழ்க்கையில் எப்போதும் ஆழ்ந்து கற்றுக் கொள்வதை நிறுத்திக்கொள்ள கூடாது. ஏனெனில் வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தாது.
‘தேன்மிட்டாய் கதைகள்’ என்ற YouTube சேனல் ஆரம்பித்தற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் நாம் நிறைய தன்னம்பிக்கை தரும் விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே!. தன்னம்பிக்கை நிறைந்த மனிதன் சாதனைமிக்க செயல்களை செய்கிறான். தன்னம்பிக்கை நிறைந்த மனிதன் மற்றவர்களின் மனதிலும் ‘தன்னம்பிக்கையை’ விதைக்கிறான். விதைக்கப்படும் விதைகள் ஒவ்வொன்றிலும் விருட்சம் பொதிந்திருக்கிறது. அந்த விதைக்கப்படுகிற விதைகள் ஒவ்வொன்றும் விருட்சமாக உருமாற சில காலம் தேவைப்படும்.
அதுபோல தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எண்ணற்ற ஆற்றல் மறைந்திருக்கிறது. அந்த ஆற்றலை வெளிக்கொணர சில காலம் தேவைப்படுகிறது. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிந்து தீர்மானித்து செயல்பட வேண்டும். பின்வரும் பழமொழியை நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். "காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது". ஆகையால் நாம் எப்போதும் காலத்தின் அருமையை உணர்ந்து நாம் செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்திடல் வேண்டும்.
இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நேரமும், காலமும் எப்போதும் ஓடிக்கொண்டே தான் இருக்கும். அது யாருக்காகவும்; எதற்காகவும் நிற்பதில்லை. நேரத்தினை நாம் தான் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தையும், நேரத்தையும் ஒருபோதும் நாம் திரும்ப பெற இயலாது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட பணியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்கிற பழக்கத்தை வளா்த்து கொள்ள வேண்டும். நாம் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும். கால விரயத்தைத் தடுக்கலாம். காலத்தை மிகச் சாியாகப் பயன்படுத்த தெரிந்து இருந்தால் போதும், நாம் வெற்றியின் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர முடியும்.
இந்தியாவின் 'ஏவுகணை நாயகன்' ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
இந்தியாவின் முன்னாள் 11 ஆவது குடியரசுத் தலைவர், தமிழ்நாட்டை சேர்ந்த ஏவுகணை நாயகன், அணு விஞ்ஞானி, பாரத ரத்னா Dr. APJ அப்துல் கலாம் அவர்கள் உலக இளைஞர்களுக்கு உத்வேகமூட்டும் தலைவராகவும், நல்வழிகாட்டும் ஆசிரியராகவும் திகழ்ந்தார். அன்று தாய்மொழியான நம் தமிழ் வழியில் கல்வி பயின்று, இன்று உலகமே கண்டு வியக்கும் வகையில் அறிவியல் துறையில் ராக்கெட் சயின்ஸ் உலக சாதனைகளை செய்துள்ளார். மாணவர்களிடம் மாணவர்களே 'கனவு காணுங்கள்' என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் பெரும்புரட்சியை விதைத்தார். மிகச் சிறந்த பேச்சாளராக திகழ்ந்த அவரின் கருத்துக்களை படிக்கும் போதும் மற்றும் பேச்சுக்களை கேட்கும் போது நாம் அனைவருக்கும் தன்னம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும் என்பதில் ஐயம்மில்லை!.
அந்த வகையில் எனக்குள் தோன்றிய தன்னம்பிக்கையால் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் தோன்றியது. ஆகையால் உத்வேகம் தரும் கதைகளை படித்து தன்னம்பிக்கையுடன் செயல்படலாம் என்ற எண்ணம் உருவானது. படித்ததில் பிடித்த கதைகளை வீடியோவாக உருவாக்கி பகிர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கின்ற காரணத்தால் ‘ThaenMittai Stories’ என்ற YouTube சேனலை உருவாக்கியுள்ளேன். மேலும் என் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான ஒரு குட்டி கதையினை சொல்ல விரும்புகிறேன். ஒருமுறை நான் படித்த பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி என்று பல போட்டிகள் நடத்தினார்கள். அதில் பேச்சுப் போட்டியில் நான் பங்கேற்று பேசினேன். ஆசிரியர் தின வரலாறு குறித்து பேசினேன் அதிலிருந்து சில வரிகள்.
“ஆற்றல் மிகுந்தது அணுகுண்டு, அணுகுண்டின் உருவாக்கம் அப்துல்கலாம்! அந்த அப்துல்கலாமேயே உருவாக்கியவர் ஓர் ஆசிரியர்தான்”.
ஒரு மருத்துவர் நினைத்தால் ஒரு மருத்துவரையோ, ஒரு பொறியாளர் நினைத்தால் ஒரு பொறியாளரையோ உருவாக்க முடியாது. ஆனால் ஒரு ஆசிரியரால் பல டாக்டர்களையும், பல என்ஜினீயர்களையும், ஏன் பல ஆசிரியர்களையும் உருவாக்க முடியும் என்று பேசினேன். அன்று நடந்த போட்டியில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.
மேலும் பல குட்டி மோட்டிவேஷனல் கதைகளை படிக்க மற்றும் பார்க்க!
‘தேன்மிட்டாய் கதைகள்’ மூலம் நம் வாழ்க்கை சிந்தனையை மாற்றும் கதைகள், வாழ்வில் வெற்றி பெற்ற மாமனிதர்களின் கதைகள், நம் வாழ்க்கை தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் கதைகள், வாழ்க்கைக்கு வண்ணம் சேர்க்க உதவும் கதைகள், இலக்கைச் சரியாகத் தீர்மானித்து அடையும் யுக்திகளை அறிந்துக்கொள்ள உதவும் கதைகள், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள உதவும் கதைகள், வாழ்வில் வெற்றி பாதையை அடைய தன்னம்பிக்கையூட்டும் கதைகள், வாழ்க்கை தத்துவ கதைகள், சாதிக்க தூண்டும் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், குட்டி மோட்டிவேஷனல் கதைகள், வேலைவாய்ப்பு செய்திகள், பீனிக்ஸ் பெண்கள் பற்றிய கதைகள், மற்றும் இன்னும் பல கதைகள் பதிவிடுகிறோம். உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். நன்றி!
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.