Real Life Stories | போலந்து நாட்டில் நடந்த உண்மை கதை நடந்தது என்ன?

ஒருவர்க்கு நாம் அவசர காலத்தில் செய்கிற உதவியானது என்றாவது ஒருநாள் எதிர்பாராத விதத்தில் பலனாக அது வந்தடையலாம். அதற்கு ஒரு சிறு உதாரணமாய் போலந்து நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை பற்றிப் பார்க்கலாம். தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள். தர்மம் தலை மட்டுமல்ல ஒரு நாட்டையே காத்த ஓர் உண்மை சம்பவத்தைப் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!

போலந்து நாட்டில் நடந்த உண்மை கதை

1892-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள Stanford யூனிவர்சிட்டியில் படிக்கும் கல்லூரி மாணவரனான அவனுக்கு சொந்தம் பந்தம், உறவினர்கள் என்று யாரும் கிடையாது. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கூட செலுத்த வசதி இல்லை அப்படியொரு நிலைமை இருந்தது. ஆகையால் கூட இருந்த உயிர் நண்பனும் and அவனும் சேர்ந்து ஆலோசித்து ஒரு முடிவு எடுத்தார்கள். பிரபல Musician ஒருவரை அழைத்து கல்லூரியில் ஒரு மியூசிக் Concert ஒன்றை நடத்திடலாம் என்று முடிவு எடுத்தார்கள்.
Music Concert மூலமாக அவர்களின் College Study செலவுக்கு தேவையான Amount-ஐ திரட்டி கொள்ளலாம் என்று நினைத்தார்கள். அதற்காக அச்சமயத்தில் அமெரிக்காவிலும் மட்டுமல்ல ஏன் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கிய Poland நாட்டைச் சேர்ந்த பியானோ இசைக் கலைஞர் இக்னசி ஜன் படீரெவ்ஸ்கி-யை (Ignacy Jan Paderewski) சந்தித்து மியூசிக் நடத்துவதற்கான Date கேட்டார்கள்.

Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
படீரெவ்ஸ்கின் மேனேஜரைப் பார்த்து தேதியை முன்பதிவு செய்தார்கள். அதற்கு அந்த மேனேஜர் சொன்னார் சார் வருவார். ஆனால் நீங்கள் அவரின் வருகைக்காக $2000 Dollar கொடுக்க வேண்டும் என்று சொன்னார். இவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. படீரெவ்ஸ்கி வருவார் என்று சொன்னதே மிகப்பெரிய வெற்றி. அதனால் இவர்கள் அந்நிகழ்ச்சியை Super Hit ஆக நடத்திட வேண்டும் என்று முடிவு செய்து Day Night மிகுந்த சிரமப்பட்டு நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு உழைத்தார்கள். இசை நிகழ்ச்சிக்கான அந்த நாளுமே வந்துவிட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த நகரத்தில் வேறு சில முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தது. ஆகையால் அவர்கள் எதிர்பார்த்தப் படி இசை கச்சேரிக்கான Ticket விற்பனை ஆகவில்லை. கலையரங்கம் நிரம்ப வேண்டும் என்று நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் மனம் நொந்து போனார்கள். ஒரு வழியாக மனதினை திடப்படுத்திக் கொண்டு Paderewski-யை சந்தித்து நடந்ததை கூறி நிகழ்ச்சியை Cancel செய்து விடலாம் என்று முடிவு செய்து இசை கலைஞர் Paderewski-யை சந்திக்க சென்றார்கள்.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
ஆனால் இசை கலைஞரான Paderewski அவர்கள் சொல்வதை கேட்க மறுத்துவிட்டார். நாம் பிளான் படி அந்நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்று சொன்னார். ஒரு வழியாக இசை நிகழ்ச்சி முடிந்துவிட்டது. அதன் பின் அந்த மாணவர்கள் Paderewski-யை நேரில் சந்தித்து $1600 டாலரை கொடுத்து இவ்வளவு தான் மொத்தம் Collection ஆன Amount என்றார்கள். மீதமுள்ள தொகையை முன்தேதியிட்டு நாங்கள் கொடுக்கிறோம்.
கூடிய விரைவில் அனைத்து தொகையையும் தந்துவிடுகிறோம் என்று சொன்னார்கள். அப்போது அந்த காசோலையை வாங்கி கிழித்துப் போட்டார் பேட்ரெவ்ஸ்கி. நீங்கள் எனக்கு கொடுத்த தொகையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எனக்கு தர வேண்டிய Amount-ஐ தர வேண்டாம் அதை நான் Cancel செய்கிறேன் என்று கூறினார். இந்த Money-ஐ வைத்து உங்களின் College படிப்புக்கான கட்டணத்தை கட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.

Real Life Stories, ThaenMittai Stories
அந்த மாணவர்களின் கண்கள் கலங்கிய படியே அவருக்கு நன்றியை சொன்னார்கள். மியூசிக் நடைபெறும் அந்த கலையரங்கிற்கு கூட Rent கொடுக்க வசதி இல்லாமல் அந்த Students சிரமப்படுவதை தெரிந்துக் கொண்ட அவர் அந்த Amount-ஐ கட்டி விட்டு சென்றார். அவர் ஒரு பெரிய பணக்காரர் ஆவார். அவரைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரண தொகை தான். இப்படியே வருடங்கள் பல உருண்டோடின. காலப்போக்கில் Paderewski மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் POLAND நாட்டிற்கே Prime மினிஸ்டராக உயர்ந்து விட்டார்.

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
நாட்டில் மிகப்பெரிய தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக முதலாம் உலகப் போர் தொடங்கிய காலகட்டம் அது. Poland நாடானது போரின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகி சீர்குலைந்து நின்றது. போர் முடிவுக்கு வந்த நேரத்தில் மக்கள் அனைவரும் எல்லாவற்றையும் இழந்து வறுமையில் இருந்தார்கள். எங்கும் பஞ்சம் தலை விரித்தாடியது.
இது 1918-ம் ஆண்டு எப்படி நிலைமையை சமாளிக்கிறது. பசியோடு இருக்கும் இலட்சக்கணக்கான தன்னுடைய நாட்டு மக்களுக்கு யாரிடம் உதவி கேட்பது என்று கலங்கி நின்றார். கடைசி நேரத்தில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவினர்கள் வந்தார்கள். அந்த குழுவின் தலைவராக இருந்தவர் ஹெர்பர்ட் ஹூவர். அவர் தான் அமெரிக்கா நாட்டின் 31-வது அதிபராக இருந்தவர்.

Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
அவர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து America Help to Poland நாட்டிற்கு நீட்டியது. அடுத்த Some Days அமெரிக்காவிலிருந்து Poland நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன் கணக்கில் உணவு தானியங்கள் and மளிகை பொருட்கள் அனுப்பி வைத்தார்கள். இதன் மூலம் சுமார் 1.5 Million Poland நாட்டு மக்களின் பசி அடங்கியது. இதன் மூலம் ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து Poland நாட்டு மக்கள் தப்பிப் பிழைத்தார்கள்.
இதைப் பார்த்த போலந்து நாட்டின் Prime Minister நிம்மதி பெருமூச்சு விட்டார். உடனே தன் நாட்டு மக்களுக்கு Food Things டன் கணக்கில் அனுப்பி வைத்து அவர்களை Cruel பட்டினிச் சாவிலிருந்து Save செய்த Americaவின் ஆபத்துக்கால உதவி குழுவின் Leader-ஐ நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார். நேரில் சந்தித்தப் போது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடின. அவரைப் பார்த்து நன்றி சொன்னார். இல்லை No Mr. Prime Minister நீங்கள் எனக்கு நன்றி சொல்லக் கூடாது.

Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
நீங்கள் எங்களுக்கு முன்பு செய்த Help-ஐ தான், நான் உங்கள் நாட்டிற்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. கடந்த 25 வருடங்களுக்கு முன் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேருக்கு கல்விக் கட்டணம் கட்ட உங்களுடைய இசை நிகழ்ச்சியை Free ah நடத்தி கொடுத்தீர்கள். நீங்கள் Help பண்ணிய அந்த Student-ல் ஒருவர் தான் நான் என்று கண்கள் கலங்கியபடி சொன்னார்.
காலம்/Time எப்போது யாரை எங்கு வைக்கும் என்று யாராலும் கணித்து கூற முடியாது. தனிமனிதன் ஒருவருக்கு செய்த உதவி எப்படி ஒரு நாட்டிற்கே பன்மடங்காக திரும்ப கிடைத்தது என்பதை பார்க்க முடிகின்றது. விதைத்தவன் உறங்கினாலும் ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும், விதைகள் ஒருபோதும் (never) உறங்குவதில்லை!. பயன் கருதாமல் பிறருக்கு செய்த உதவி காலத்தினால் செய்த உதவி ஆயிற்றே!. காலம் அவரை குறித்து வைத்துக் கொண்டது. தர்ம சிந்தனை பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள்/Children நாம் சொல்வதையும், செய்வதையும் கேட்டும் and பார்த்தும் நடந்து கொள்வார்கள். வாழ்க தர்மம்!.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook