Failure Is Victory | Motivational Quotes in Tamil | தோல்வியும் வெற்றி தான்!

தோல்வியும் வெற்றி தான்

ஒரு காலத்தில் பதக்கம் (Medal), கோப்பை (Cup), கேடயம் போன்றவையெல்லாம் அரிதாகவே இருந்தன. ஆகையால், அந்த பரிசு பொருட்களுக்கு என்று தனி மரியாதையை இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் போட்டியை நடத்துபவர்கள் வசூலிக்கும் பணத்தில் கால்வாசியை அதாவது நான்கில் ஒரு பங்கினை பரிசு பொருட்கள் வாங்குவதற்கே செலவு செய்கிறார்கள். இன்றைக்கு எல்லா குழந்தைகளும் எதாவது ஒரு பரிசை வாங்கிவிடும் என்று கூறும் வகையில் போட்டிகளை ரக வாரியாக பிரித்து நடத்துகிறார்கள்.
விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும், உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இடைவிடாமல் பரிசுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெறவேண்டும் என்ற உந்துதலை / மோட்டிவேஷன் தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களின் முழு திறமையையும் காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்து விடுகின்றது என்றே சொல்லலாம். பெரியவர்கள் பாராட்டும் போது தங்களை திறமைசாலி, அறிவாளி என்று மன மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு எதிலாவது தோல்வியை தழுவினால் மனம் சோர்ந்து சோகத்தில் அமர்ந்து விடுகிறார்கள்.
தோல்வியும் வெற்றி தான், Motivational Quotes in Tamil, Failure Is Victory | ThaenMittai Stories
சமீபத்தில் ஆய்வாளர்கள் சில குழந்தைகளை அழைத்து படம் வரைய (Drawing) சொல்லி அவர்களை கண்காணித்தார்கள். நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாகச் செய்வான் என்றெல்லாம் தேவை இல்லாமல் புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவைகளை விட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே (Drawing Board) பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டும் என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்திற்கு காரணமாக இருந்தது.
ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ, கலையிலோ உண்மையாக திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும் முடிவு எப்படி இருக்குமோ என்று இனம் புரியாத மர்மமும் அவர்களை நன்றாக திறமை காட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும், பரிசுகளும் அதற்கு தேவையே இல்லை. கலந்து கொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றதிற்கு அங்கு என்ன இருக்கும்? தாண்டுவதற்கு தடைகளே இல்லை எனும் போது, எதற்காக மண்டையை போட்டு குடைந்து கொள்ள வேண்டும் என்ற மெத்தனம் வந்துவிடும்.

குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதை போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததெற்கெல்லம் தண்டித்துவிடக் கூடாது. தவறு செய்தால் சுட்டிகாட்டி திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்க கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சி வசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமாக செய்தார்களா, வெளிகாரணம் ஏதேனும் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணம், செயல்பாடு இருந்தால் சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டும்.
தவறு செய்தால் தவறு செய்தவர்களை மட்டும் தண்டித்து திருத்தும் நாம், பாராட்டும் போது எல்லோரையும் பாராட்டுவது சரியல்ல. அது அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவாது. நன்றாக செயல்பட்டார்களோ இல்லையோ எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க எல்லோர்க்கும் பரிசு தர வேண்டும் என்ற மனப்பான்மை சரியல்ல. ஒரு செயலை நாம் செய்து முடிக்கும் வரை அல்லது அதில் வெற்றி பெறும் வரை அந்த செயலை பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து செய்வதும் ஒரு வெற்றி தான். தோல்வி எங்கே ஆரம்பிக்கின்றது? நாம் ஒரு செயலை மனதில் நினைத்து வெற்றி பெறுவோம் என்று ஆரம்பித்து அதை பாதிலேயே நிறுத்திவிட்டு அந்த செயலில் வெற்றி பெற முடியவில்லை என்று குறை சொல்வது மடமை ஆகும்.
இறைவன் நாம் அனைவருக்கும் திறமையை கொடுத்திருக்கிறான். ஆனால் நிறைய பேர் நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்து அதை செய்து முடிக்க முயற்சி செய்யாமல், தன் நண்பரோ அல்லது உறவினரோ ஏதோ ஒரு செயலை செய்து அதில் வெற்றி பெற்றார் என்பதற்காக நாமும் அதை செய்ய வேண்டும் என்று முயற்சித்து நேரத்தையும், உழைப்பையும் வீணடித்து கடைசியில் தோல்வி அடைவர்.

கொஞ்சம் சிந்தியுங்கள் நம்மால் எது முடியும், நமக்குள் இருக்கும் திறமை என்ன என்பதை உணர்ந்து கொண்டு அதை முயற்சி செய்தால் தானே வெற்றி அடைய முடியும். மேலும் நமக்கு தெரிந்த வேலையையோ அல்லது செயலையோ செய்து முடிக்க காலம் எவ்வளவு ஆனாலும் அதை பொறுமையுடன் செய்ய பழக்க படுத்த வேண்டும். நாம் காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் குறிக்கோள் மீது கவனம் செலுத்தி வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். நாம் இலக்கை அடைய சிறிது காலம் தாமதம் ஆனாலும் முயற்சியை கைவிடாமல், இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். வெற்றி என்பது இன்று வந்தால் என்ன, ஒரு மாதம் கழித்து வந்தால் என்ன வெற்றி என்பது வெற்றி தான்.
நாம் குறிக்கோள் நோக்கி பயணம் செய்து அதில் சிறிய முன்னேற்றத்தை பார்க்கும்போது நமக்கு வரும் அந்த மகிழ்ச்சி தருணம் தான் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று நம்மை இன்னும் சுறுசுறுப்புடன் ஓட வைக்கும். எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் போதே திட்டமிட வேண்டும். அதில் நேர மேலாண்மைக்கு அதிக பங்கு இருக்கிறது. சரியான நேரத்தில் சரியான உழைப்பை சரியான திசையில் நாம் கொடுக்கும் போது அது வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்!. நன்றி! வணக்கம்!!

Related Tags

Motivation Story Tamil | Success Story in Tamil | Tamil Motivational Stories | Motivational Story in Tamil for Students | Short Motivational Story In Tamil | Tamil Motivational Story | 1 Minute Motivational Story In Tamil | Life Story In Tamil | Motivation Story In Tamil | Motivational Kutty Story In Tamil | One Minute Story In Tamil With Moral | Motivational Tamil Story | Motivational Short Stories In Tamil | Motivational Story Tamil | Best Motivational Story In Tamil.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook