Untold Story of Thomas Alva Edison | பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்!

Untold Story of Thomas Alva Edison

இந்த உலகத்தையே ஒளிமயம் ஆக்கிய மின்சார விளக்கு அதாவது பல்பு. அதனை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் அந்த கண்டுபிடிப்பிற்கு தூண்டுதலாக இருந்தவர் யார் தெரியுமா? ஆம், ஒரு பெண் நினைத்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தாமஸ் ஆல்வா எடிசனை ஒரு பெண், அவள் நினைத்ததை எப்படி சாதனையாக மாற்றியுள்ளார். சரித்திரத்தில் நடந்த உண்மை கதையைப் பற்றி பார்ப்போம்.

Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
தாமஸ் ஆல்வா எடிசன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவர் படித்த பள்ளியின் ஆசிரியர் அவரிடம் ஒரு கடிதத்தை கொடுத்து இதை உன்னுடைய அம்மாவிடம் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவரும் அதை எடுத்துக்கொண்டு போய் அவருடைய அம்மாவிடம் அதனை கொடுத்தார். அதை வாங்கிப் படித்த அந்தத் தாய் கதறி கதறி அழுகிறார். அதை பார்த்த எடிசன் அந்த கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது ஏன் அழுகிறாய் என்று கேட்டார். ஒரு நிமிடம் நின்று நிதானித்து அந்தத் தாய் சொன்னார் இந்த உலகத்திலேயே நீ தான் புத்திசாலியாம். உனக்கு பாடம் சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்களால் முடியவில்லையாம். அதனால் நிறைய புத்தகங்கள் இருக்கிற நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு போய் பாடம் சொல்லிக்கொடுக்க சொன்னார்கள் என்று கூறினார்.
அதைத் தான் நினைத்து அழுகிறேன் என்று அந்த தாய் சொன்னார். அந்த தாய் சொன்னதை அப்படியே நம்புகிறார் எதுவும் கேட்கவில்லை. அடுத்தநாள் இவரை அழைத்துக் கொண்டு அந்த பள்ளிக்கு போகிறார்கள். எடிசனை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே போய் அந்த ஆசிரியரை பார்த்தார். அந்த ஆசிரியர் சொன்னார், உங்க மகனுக்கு மூளை இருக்க வேண்டிய இடத்தில் முட்டை இருக்கு, அதுவும் அழுகின முட்டை இருக்கிறது. இந்த அமெரிக்காவில் எந்த பள்ளியிலும் அவனால் படிக்க முடியாது. இந்த TC அவனை அழைத்துக் கொண்டு போய் விடுங்கள் என்று சொன்னார்கள். அந்த தாய் ஆசிரியரை பார்த்து சொன்னார் என்னுடைய பிள்ளை இந்த அமெரிக்க பள்ளிகளில் படிக்க முடியாதுன்னு சொல்றீங்க என்றைக்காவது ஒருநாள் இந்த அமெரிக்க மட்டும் இல்ல ஏன், இந்த உலகமே என்னுடைய பிள்ளையின் கண்டுபிடிப்பை படிக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள். இது இந்தத் தாயின் மேல் சத்தியம் என்று கோபமாக சொல்லிக் கொண்டு போனாள்.

அமெரிக்காவில் எடிஷன் தங்கியிருந்த இடத்திற்கு பக்கத்தில் மெலனா பார்க் உள்ளது. முதன் முதலாக அந்த மெலனா பார்க்கில் இருந்து புதுசு புதுசா அற்புதங்கள் நடந்தது. எல்லாருமே ஆச்சர்யமாக பார்த்தார்கள். இன்டர்நேஷனல் எக்ஸ்போர்ட்ஸ் அதாவது உலகத்தில் உள்ள கண்டுபிடிப்பாளர்கள் எல்லாரும் தங்களுடைய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்து எக்ஸ்பிஷனில் வைத்தார்கள். அவர்களின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வாங்கி கொள்ள அந்த எக்ஸ்பிஷன் நடந்தது. எடிசன் தான் தயாரித்த கிராமபோனை அங்கே கொண்டு போய் வைத்தார். தான் தயாரித்த கிராமபோனில் ஒரு ஒலியை பதிவு செய்து அந்த ஒலியை மற்றவர்களுக்கும் போட்டு காட்ட முடியும் என்பதை நிரூபித்து அந்த எக்ஸ்பிஷனில் வைத்தார். அங்கிருந்த எல்லா கூட்டமும் எடிசனை நோக்கி வந்தார்கள். அங்கே அவர் தயாரித்த கிராமபோனை பார்த்து அதிசயமாக பேசினார்கள். மற்ற நாடுகளில் இருந்து தனது தயாரிப்புகளை கொண்டு வந்தவர்களும் எடிசன் கண்டுபிடிப்பை வந்து பார்த்தார்கள். எடிசன் கண்டுபிடிப்பை பார்த்து அவர்கள் சொன்னார்கள், இவர் ஒரு மேஜிக்மேன்.
இவர் ஏதோ வித்தை காட்டுக்கிறார், அமெரிக்கா ஒரு மெஷினை வைத்து எங்களை மாதிரி மற்ற நாட்டு அறிஞர்கள் எல்லாம் கூப்பிட்டு இழிவுபடுத்திக்கிறார்கள். எடிசனின் கண்டுபிடிப்பை இதனை நாங்கள் நம்பமுடியாது இதுமாதிரி ஒருத்தனால் கண்டுபிடிக்கவே முடியாது, இவனை முதலில் வெளியேற்றுங்கள் அப்பொழுது தான் நாங்கள் எங்களுடைய தயாரிப்புகளை கொண்டு வந்து வைப்போம். இல்லையென்றால் நாங்கள் புறக்கணிப்போம் என்று சொல்கிறார்கள். ஒரு ஆங்கிலேய அதிகாரி இது உண்மையா? பொய்யா? என்று கூட பார்க்காமல் எடிசனின் கையை பிடித்து தர தரவென்று இழுத்துக்கொண்டுப் போய் வெளியில் அனுப்பி நீ உள்ளே வர கூடாது என்று சொல்லி வெளியில் கொண்டுபோய் விட்டார்.

அப்பொழுது அமெரிக்க நாட்டில் பார்லிமென்ட் நடந்துக் கொண்டிருந்த நேரம். அமெரிக்க நபர் ஒருத்தர் இப்படி அசிங்கப்படுத்த படுகிறார் என்று வருத்தப்படுகிறார்கள். எனவே அவருடைய கண்டுபிடிப்பு உண்மையானதா? பொய்யானதா? என்பதை நிரூபிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைத்து அதை போய் பார்த்துட்டு வர சொன்னார்கள். அந்த மூன்று பேர் கொண்ட குழு போய் தீவிரமாக விசாரித்து எல்லாத்தையும் சோதனை செய்து பார்த்த பின்பு உண்மையான கண்டுபிடிப்பு என்று சொல்லி அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அடுத்தநாள் புத்திசாலியான எடிசன் என்ன செய்தார் என்றால், வெளியில் சென்ற பின் அந்த எக்ஸ்பிஷன் பக்கத்திலேயே இருக்கும் இடத்தில் கொண்டுப் போய் அவர் ஒரு கண்டுபிடிப்பை வைத்தார். அங்கே இருந்த அதாவது பொருட்காட்சியில் இருந்த அத்தனை கூட்டமும் எக்ஸ்பிஷனில் இருந்து வெளியே வந்தார்கள் ஒரு ஆள் கூட உள்ளே இல்லை.
இதை பார்த்துட்டு திரும்ப வந்து அதே எக்ஸ்பிஷனிலிருந்து அழைத்தார்கள். உங்களுடைய கண்டுபிடிப்பை கொண்டு வந்து வையுங்கள், உங்களுடைய கண்டுபிடிப்பு உண்மைதான் என்று சொல்கிறார்கள். ஆனால் எடிசன் உள்ளே போக மறுக்கிறார். உள்ளே போகவில்லை. அவரை பார்லிமென்ட் அனுப்பிய மூன்று பேர் கொண்ட குழு அழைத்தார்கள், அங்கேயும் வர மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். அப்பொழுது “குரோவர்” என்ற அமெரிக்கா ஜனாதிபதி அவரின் சபாநாயகருக்கு இணையான ஒரு நாற்காலி அமைத்து, எடிசனுக்காக பரிந்து பேசிய அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனுப்பி எடிசனை இங்கே அழைத்து வாருங்கள் என்று சொல்கிறார்.


அமெரிக்கா பார்லிமென்ட் உங்களுடைய கண்டுபிடிப்பை உண்மை என்று ஒத்துக் கொண்டு உங்களுக்காக ஒரு பாராட்டு விழா நடத்தப்படும்; உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அந்த பாராட்டு விழாவுக்கு நீங்கள் நிச்சயமாக வர வேண்டும் என்று சொல்லி பார்லிமென்டுக்கு எடிசனை அழைத்து சென்றார்கள். அவருடைய கண்டுபிடிப்பைப் பாராட்டி அங்குள்ள அத்தனை பேரும் எடிசனை புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் எடிசன் அப்படியே குனிந்த தலை நிமிர்ந்து பார்க்காமல் உட்கார்ந்து இருக்கிறார். எல்லாருமே கேட்கிறார்கள் எல்லாருமே கேட்டதும் எடிசன் சொல்கிறார் (யாரையும் பழிவாங்கும் நோக்கத்தோடு இல்லை). “சில அவமானங்கள் இல்லாமல் வெகுமானங்கள் இல்லை!” அதனால்தான் அத்தனை கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடிந்தது.
அருகில் இருக்கும் சபாநாயகர் கேட்கிறார் அப்புறம் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள், உங்களை எல்லாரும் பாராட்டும் போது என்று கேட்கிறார். சபாநாயகர் கேட்டதும் எடிஷன் சொல்கிறார் எல்லாருமே கேட்கிறார்கள் என்பதால் மெதுவாக எழுந்து நின்று சொல்கிறார். என்னை ஏன் இந்த அமெரிக்கா பார்லிமென்ட் பாராட்டுகிறது என்று நான் வியந்து போய் நிற்கிறேன். காரணம் என்னவென்றால் நான் இந்த பாராட்டுக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவன். ஏனென்றால் நீங்கள் ஏன் என்னை பாராட்டக்கிறீர்கள்? இந்த அமெரிக்க பள்ளி என்னை உருவாக்கவில்லை என்று சொல்கிறார். என்னை உருவாக்கினது என்னுடைய ஏழைத்தாய் அவள் வந்து இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்து பார்லிமென்ட் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள்.

அதை பார்த்த எடிஷன் சொல்கிறார் நான் என் தாய் மீது வைத்திருக்கும் மிகுந்த பாசத்தினால் இதனைச் சொல்கிறேன். இதை செய்ய வேண்டியது இங்கிலாந்து பார்லிமென்ட். நான் இங்கே இருக்கும் இந்த அமெரிக்க பள்ளிகளில் படிக்கவே இல்லை என்று சொன்னதும் இதைக் கேட்டவுடனே எல்லாருமே தாய் பாசத்தை உணர்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள். அந்த காலத்தில் ஒரு சம்பவம் அமெரிக்க பார்லிமென்டில் நடந்தது என்றால் அது இங்கிலாந்துக்கு போய்ச் சேர 10 நாட்கள் ஆகும். அப்படி இருந்த காலத்தில் இங்கிலாந்து நாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதியே கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள். எங்கள் விமானம் உங்கள் நாட்டில் இறங்க அனுமதி வேண்டும் என்று சொல்லி கேட்டார். இங்கிலாந்திலிருந்து உடனே அனுமதி கொடுத்தார்கள் ஒரு தனி விமானம் மூலம் உலகத்தையே ஒளிமய மாக்கிய எடிசனும், அவரைப் பெற்றெடுத்த அந்தத் தாயையும் அழைத்து சென்று இங்கிலாந்து பார்லிமென்டில் கௌரவிக்கப்பட்டார். ஒரு பெண்ணின் பெருமை இந்த உலகத்தில் எவ்வளவு பெரியது என்பதை நாம் உணர்ந்து செயல் பட வேண்டும். “பெண்மையை போற்றுவோம்!”

Related Tags

Untold Story of Thomas Alva Edison | Inspirational Real Life Stories | Motivational Story of Woman | Positive Energy Story In Tamil | Motivational Story By Thaenmittai Stories In Tamil | Motivational Short Stories In Tamil | History of Thomas Alva Edison | Motivational Story of Thomas Alva Edison | Motivational Story In English | Information of Thomas Alva Edison | Interesting Facts About Thomas Edison | Life of Thomas Alva Edison | Thomas Alva Edison Biography | True Motivational Stories With Moral | Life Success Stories | Success Inspirational Stories | Inspiring Real-Life Stories | Self Confidence Quotes In Tamil.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.



Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook