ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ்
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சோதனை வருவது சகஜமான விஷயம் தான். அவர்களுக்கு வரும் அந்த சோதனையை மாற்றி சாதனை புரிபவர்கள் வெகு சிலரே!. நமக்கு வரும் சோதனையை சாதனையாக மாற்றிக் கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய விஞ்ஞானியாக இருந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைப் பொருட்படுத்தாமல் சாதனை படைத்தவர் தான் என்பதை நாம் அறிவோம். ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் அவர்களுக்கு இளமைப் பருவத்திலேயே அவரின் உடலில் உள்ள காலும், கையும், செயல் இழந்து போய்விட்டது. அவரால் இனிமேல் எந்த ஒரு செயலும் செய்ய முடியாது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தார்கள். அப்போது மருத்துவரிடம் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் கேட்ட ஒரே கேள்வி என்ன தெரியுமா? கைகளும், கால்களும் செயலிழந்த எனக்கு இதனால் பின்னாளில் "என்னுடைய மூளைக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா?" என்று கேட்டார்.
அதற்கு மருத்துவர்கள் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் பார்த்து, “இதனால் உங்களுடைய மூளைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை” என்று கூறியதை கேட்ட அவர் தனக்கு ஏற்பட்ட நோயையும் பொருட்படுத்தாமல் ரொம்பவே மகிழ்ந்தார். பின்னாளில் அவருடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து போய்விட்டது. ஆனாலும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னுடைய மூளையை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, இந்த உலகமே போற்றும் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாறி வரலாறு படைத்தார். ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்-க்கு ஏற்பட்ட சோதனையால் அவர் மனம் தளரவில்லை. அவர்க்கு ஏற்பட்ட சோதனைகளை எல்லாம் வெறும் சோதனையாக மட்டும் தான் பார்த்தார். இந்த சோதனைகள் எல்லாம் அவருடைய முன்னேற்றத்திற்கு ஒரு தடையாகவோ, பாரமாகவோ இருக்காது என்று உணர்ந்து இருந்தார். ஆகையால் தான் அவரால் சாதிக்க முடிந்தது.
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் அவர்கள் காலவெளி ஆராய்ச்சி, கருந்துளைகள், ஆகியவற்றில் நிபுணராக இருந்தார். தன்னுடைய தளராத உழைப்பினால், 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு பிறகு வந்த விஞ்ஞானிகளில் மிகவும் திறமையான, புகழ்மிக்க விஞ்ஞானியாக ஸ்டீபன் ஹாக்கிங் விளங்கினார். கருந்துளைகள் (Black Hole) பற்றிய அவரின் ஆராய்ச்சி முடிவுகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
1963-ம் ஆண்டு தனது 21 வயதில் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் போது அவருக்கு திடீரென பேச்சு குளறியது மற்றும் அவருடைய நடையும் தடுமாற ஆரம்பித்தது. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் அவர்களை பரிசோதித்த மருத்துவ வல்லுநர்கள், நரம்புகளின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரியதொரு வகையான மூளை தண்டுவட நோய் ஏற்பட்டு உள்ளதாகவும், இன்னும் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ வாய்ப்புள்ளது என்று கூறினார்கள். இன்னும் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்களால் சொல்லப்பட்ட போதிலும், அதற்கு பிறகு அவர் 55 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்தார். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 1985-ம் ஆண்டு முதல் வீல்சேர்யில் முடங்கிப்போனார்.
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பேசுவதற்கு என்று சிறப்பாக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர், அவரது கன்னத்தில் உள்ள தசைகளின் அசைவுகளை புரிந்துகொண்டு, அசைவுகளை ஒருங்கிணைத்து, அவர் பேச முற்படும் வார்த்தைகளை கணினி திரையில் குறித்து காட்டும். அவைகளை சரியானவற்றை ஸ்டீபன் ஹாக்கிங் கிளிக் செய்து தேர்ந்தெடுப்பார். இந்த மென்பொருள் கருவியின் துணையாக பயன்படுத்தி தான் தனது ஆராய்ச்சிகள் அனைத்தையும் ஸ்டீபன் ஹாக்கிங் வெற்றிகரமாக செய்து முடித்தார். 2018-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி அன்று தன்னுடைய 76-வது வயதில் கேம்ப்ரிட்ஜில் உலகப் புகழ்ப் பெற்ற விஞ்ஞானி வில்லியம் ஸ்டீபன் ஹாக்கிங் இயற்கை எய்தினார்.
சாதிக்க தூண்டும் தங்க தூண்டில் கதை
ஒரு கிராமத்தில் ரமேஷ், சுரேஷ் என்ற இரண்டு அண்ணன் தம்பிகள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இரண்டு பேரும் மீன்பிடித்து விற்று அதில் வருகிற வருமானத்தை வைத்து தான் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார்கள். ஒருநாள் மதியவேளையில் அவர்கள் இரண்டு பேரும் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தான். ஒரு பிச்சைக்காரன் அவர்களிடம் கேட்கிறார் சாப்பிட்டு நான்கு நாள் ஆகின்றன. ஏதேனும் "சாப்பிடுவதற்கு உணவு தாருங்கள்!" என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட ரமேஷ் அவனுக்கு உணவு தந்தான். அவன் சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் உணவினை எடுத்து அந்தப் பிச்சைக்காரனுக்கு கொடுக்கிறான். அதை பார்த்த சுரேஷ், “அண்ணா!, இந்த மாதிரி சோம்பேறிகளை வளர்க்காதே!” என்று எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப் பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனுக்கு ரமேஷ் உணவு தந்தான். மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று கோபம் கொண்டான் சுரேஷ்.
“சோம்பேறிப் பயலே! அடுத்த முறை உன்னை இங்கே பார்த்தால் தொலைத்து விடுவேன்!” என்று கத்தினான் சுரேஷ். மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன். கோபத்தின் காரணமாக துடித்துப் போன சுரேஷ் அங்கு இருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு, அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான். “இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே? உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இந்தத் தூண்டிலை வைத்துப் பிழைத்துக் கொள்!” என்றான். அவனுக்கு மீன் பிடிக்கும் தொழிலைக் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். அதன் பிறகு மறுபடியும் அந்தப் பிச்சைக்காரன் அவர்களின் வீட்டிற்கு வருவதே இல்லை.
காலத்தின் மாற்றத்தில் ஆண்டுகள் பல சென்றன. ஒரு பணக்கார மனிதன், அழகான குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அங்கே வந்தார். அவரின் கையில் தங்கத்தில் செய்யப்பட்ட சின்ன தூண்டில் ஒன்று இருந்தது. ரமேஷ்ம், சுரேஷ்ம் இருவரும் அவரைப் பார்த்தனர். தங்கத் தூண்டிலை சுரேஷ் இடம் தந்தார் அவர். “என் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்றார். தன் வீட்டிற்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன் என்பது ரமேஷ்க்கு தெரிந்தது.கோபத்தின் விளைவாக துடித்துப் போன அவன், “நீ இங்கே எப்படி வந்தாய்? இறந்து போகின்ற நிலைமையில் வந்தாய் என்பதை மறந்து விட்டாயா?. உனக்கு உணவு தந்துக் காப்பாற்றியவன் நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டில் உரியது. என்னிடம் தா!” என்று கத்தினான். ஆனால், அவரோ, “இது உங்கள் தம்பிக்குத்தான் உரியது!” என்று உறுதியாகச் சொன்னார். இதை ரமேஷ் ஏற்றுக் கொள்ளவில்லை.
வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றான். நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி. ரமேஷைப் பார்த்து அவர், “நீங்கள் இவருக்கு உணவு அளித்துக் காப்பாற்றியது உண்மை தான். நீங்கள் செய்த உதவியால் சுரேஷ்க்கு வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உன் தம்பியோ, இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் இந்த நிலைக்கு உயர்ந்தார். நிலையான உதவி செய்து கொடுத்த சுரேஷ்க்கு இவர் தங்க தூண்டிலைப் பரிசு அளித்தது சரியே!. இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்கே உரியது. இதுவே என் தீர்ப்பு!” என்றார்.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.