2021-ல் இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 நபர்கள்

2021-ம் வருடத்தில் இந்திய அளவில் கூகுளில் (Google The Top Search Engine in the world) அதிகம் தேடப்பட்ட டாப் 10 நபர்களின் பட்டியலை கூகுள் (Google) வெளியிட்டு இருந்தது. இதில் சினிமா, அரசியல், வணிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளிலும் சாதித்து பலரின் கவனத்தை ஈர்த்து பிரபலமாகி உள்ளார்கள்.
இந்தியர்களால் 2021-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 மனிதர்கள் | ThaenMittai Stories
1. Neeraj Chopra:
நீரஜ் சோப்ரா நம் இந்திய ராணுவத்தில் இளநிலை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர் பல போட்டிகளில் பங்கேற்று ஆவார் பல பதக்கங்களை வென்று இருந்தார். இருப்பினும் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் வென்ற தங்கம் இந்திய இளைஞர்கள் மத்தியில் அவரை ஒரு ஹீரோவாகவே மாற்றியது. இவர் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58M வீசி தங்கப்பதக்கத்தை வென்றார். 23 வயதான நீரஜ் சோப்ரா, தன் கலந்துக் கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியில் நம் இந்தியாவிற்காக தடகள போட்டியில் தனது முதல் தங்க பதக்கத்தை வென்று அசத்தினார். இவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள 'யார் இந்த நீரஜ்' என்று நம் நாட்டு மக்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளார்கள்.

2. Aryan Khan:
மும்பை பெருநகரத்திற்கு வந்து கொண்டிருந்த சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அந்த சொகுசு கப்பலில் சோதனை நடத்தியது. அதன் பின்னர் அந்த கப்பலில் இருந்து 13 கிராம் அளவுக்கு கஞ்சா மற்றும் 1.33 லட்சம் பணம் ஆகியவற்றை கைப்பற்றியதாக கூறினார்கள். அத்துடன் பாலிவுட் திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் உள்பட மொத்தம் இருபது பேரை இந்த வழக்கு சம்மந்தமாக மும்பை காவல்துறையினர் கைது செய்தார்கள். இந்த குற்ற வழக்கில் ஆர்யான் கானிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

3. Shehnaaz Gill:
மறைந்த பாலிவுட் நடிகரும், 13-வது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா அவர்கள் நடிகை ஷெனாஸ் கில்லின் காதலனாக இருந்தார். இவர் மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் காலமானார். அவருக்கு வயது 40. மும்பையில் உள்ள கூப்பர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரின் காதலி எனக் கூறப்பட்ட ஷெனாஸ் கில்லை பற்றி தெரிந்துக் கொள்ள இந்திய மக்கள் அதிகம் தேடியுள்ளார்கள். இவர் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. Raj Kundra:
வெப் சீரியஸ் (Web Serious) என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்களை எடுத்ததாகவும், இதற்கென்று தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்வதாக ஒரு பெண் அளித்த புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டி-யின் கணவரான ராஜ்குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

5. Elon Musk:
சமூக வலைத்தளங்களில் ரொம்பவே சுறுசுறுப்பாக இருப்பவர். இந்த இளம் தொழிலதிபர் எலன் மஸ்க். இவர் உலக டாப் 10 கோடீஸ்வரர்களில் நம்பர் ஒன் கோடீஸ்வரராக இருந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ட்விட்டரில், உலகத்தில் என்ன நடந்தாலும் அது தொடர்பாக ட்வீட் செய்து அதனை ஒரு பேசுப்பொருள் வைரல் ஆக்குவது எலன் மஸ்க்-ன் ஸ்டைல் ஆகும். இந்த இளம் தொழிலதிபரை இந்தியாவில் உள்ள மக்கள் அதிகம் பேர் தேடி உள்ளார்கள்.

6. Vicky Kaushal:
பாலிவுட்டின் முன்னணி நடிகை, நடிகராக இருந்தவர்கள் கத்ரீனா கைப் - விக்கி கெளசலின் திருமணம். பாலிவுட்டின் காதல் ஜோடியான விக்கி கவுசால் - கத்ரீனா கைப் அமைதியாக இருந்த இவர்கள் திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டார்கள். இதை அடுத்து விக்கி கவுசால் பற்றி தெரிந்துக் கொள்ள இந்திய மக்கள் அதிகம் தேடியுள்ளார்.

7. P.V. Sindhu:
பி.வி சிந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைப்பெற்ற ஒலிம்பிக் 2020 பேட்மிண்டன் போட்டியில் கலந்துக் கொண்டார். அவர் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் கலந்துக் கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். அந்த போட்டியில் அபாரமாக ஆடியபி.வி.சிந்து உலக பேட்மிண்டன் தரவரிசையில் 9ஆம் இடத்தில் இருந்த சீன வீராங்கனை ஹீ பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார். ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி என்பதால் இரண்டு நாட்டு வீராங்கனைகளும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதில் பி.வி சிந்து நம் நாட்டிற்கு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். இந்திய வரலாற்றிலேயே ஒலிம்பிக் மகளிருக்கான போட்டியில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பேட்மிண்டன் (Badminton) வீராங்கனை பி.வி.சிந்து பெற்றுள்ளார். இந்திய மக்கள் பி.வி.சிந்து அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக கூகுளில் அதிகம் தேடியுள்ளார்கள்.

8. Bajrang Punia:
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார் பஜ்ரங். கஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நியாஸ்பெகோவை எதிர்த்து களம் கண்டார். இதில் முதல் ஆட்டத்திலேயே நன்றாக விளையாடிய பஜ்ரங் புனியா 2-0 என முன்னிலை வகித்தார். அதன் பின்னர் 2-ஆவது ரவுண்டிலும் பஜ்ரங் புனியா சிறப்பாக செயல்பட்டார். சிறப்பாக விளையாடிய பஜ்ரங் புனியா ஜெயித்து இந்தியாவிற்கு 4-ஆவது வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

9. Sushil Kumar:
சக வீரரை அடித்துக்கொன்றதாக மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது புகாரளிக்கபட்டது. இதனை அடுத்து அவர் தலைமறைவானார். பின்னர் 2021-ம் ஆண்டு மே மாதம் சுஷில்குமாரை டெல்லி காவல் துறையால் கைது செய்தனர்.

10. Natasha Dalal:
இந்திய பாலிவுட்டின் திரைப்பட நட்சத்திரம் வருண் தவான் ஆவார். இவரின் துணைவியான நடாஷாவை பற்றி தெரிந்துக் கொள்ள கூகுளில் இந்திய மக்கள் அதிகம் தேடி இருந்தார்கள். இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார்.

Most Searched Person on Google in India 2021 | Most Searched Indian Actress | Famous Sports Personalities in India 2021 | 2020 Tokyo Olympics | Most searched sports personalities in India 2021
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook