Interview-ல வேலையை பெறுவதற்கான Tips
வேலையை தேடும் கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலையை போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் எந்த நிறுவனத்திலும் உடனடியாக பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். ஒரு வேலையை செய்யாத வரைக்கும், அந்த வேலையை பற்றிய அனுபவம் நமக்கு கிடைப்பதில்லை. இது போன்ற சூழ்நிலையில், வேலையை பற்றிய அனுபவம் இல்லாதவர்கள் ஒரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு சென்று கலந்துக் கொண்டு வேலை பெறுவது என்பது உண்மையில் சாதாரணமான காரியம் அல்ல. வேலையை பெற நேர்காணலுக்கு (Interview) செல்கிற போது பின்வரும் விடயங்களைப் புரிந்து கொண்டு செயல்பட்டாலே போதும் ஒரு நிறுவனத்தில் வேலையை நிச்சயம் பெற்று விடலாம்.
1. மக்களோட தொடர்பை வளர்த்துக் கொள்ளும் திறமை (Ability to Communicate). நாம் நினைக்கின்றதை அழகாக தொகுத்து வகைப்படுத்தி சொல்ல தெரியுதா என்று பார்ப்பார்கள். உங்களுடைய திட்டங்களை (Planning) ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் உங்களுக்கு வகைப்படுத்த தெரியுதா என்று சோதனை செய்வார்கள். இதற்கு நாம் பொறுப்பாக பேச வேண்டும் குழப்பம் இல்லாமல் சிந்திக்கும் வேண்டும் இது ரொம்பவே அவசியம். 2. இன்டலிஜென்ஸ் (Intelligence) என்பது புத்திசாலித்தனம் ஆகும். நாம் செய்ய போகின்ற வேலையை நல்ல விதமாக செய்ய முடியுமா அது எந்த வழியில் செய்ய முடியும் என்று தீர்மானிக்க தெரிய வேண்டும். அந்த வேலைக்கான புதுப்புது யோசனைகள் (Ideas) உங்களால் கொடுக்க முடியுமா? என்றும் பார்ப்பார்கள்.
3. தன்னம்பிக்கை (Self Confidence). எந்த சூழ்நிலையையும் எப்படிப்பட்ட மனிதர்களையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறமை. எதிர்மறையான எண்ணங்களையும் நேர்மறையாக மாற்ற கூடிய தன்னம்பிக்கை வேண்டும். இது மிக முக்கியம். 4. பொறுப்புகளை தானாக முன்வந்து ஏற்றுக் கொள்ளுதல் (Willingness to Accept Responsibility. பொறுப்புகளிலிருந்து நழுவிப் போக ஆசைப்படாமல் செய்து முடித்தல் வேண்டும் இதுவும் மிகவும் முக்கியம். 5. தொடங்கி வைத்தல் (Initiating) வேலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முன்வருதல். அது இந்த பொறுப்புகளும் ரொம்பவே முக்கியம் அதையும் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். 6. தலைமைத்துவம் (Leadership Skills) குறைந்தது நான்கு பேருக்கு தலைமை தாங்கி நின்று நல்ல விதத்தில் நடத்த தெரிகிறதா? என்பதும் மிகவும் முக்கியம். 7. கற்பனைத் திறன் (Imagination) கற்பனைத்திறன் என்பது பிரச்சினைகள் வருவதை முன்கூட்டியே அதை யோசித்து அதற்குத் தகுந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய திறமை இருக்கிறதா? என்பதை பார்ப்பார்கள்.
8. வளைந்து கொடுத்தல் (Flexibility) வளைந்து கொடுத்தல். அதாவது சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி பிரச்சனைகளுக்கு தகுந்த மாதிரி அனுசரித்து நடந்து கொள்ள தெரியுதா? என்று பார்ப்பார்கள். 9. தனிப்பட்ட திறன்கள் (Interpersonal Skills) அதாவது திறமைகளை வெளிக்கொணரும் திறமை மற்றவர்களிடம் இருக்கும் திறமையை கண்டுபிடித்து அவர்களை நல்ல விதத்தில் ஊக்கப்படுத்தி பயன்படுத்த தெரிகிறதா? என்றும் சோதனை செய்வார்கள். 10. சுய அறிவு (Self-Knowledge) மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றும், அதனை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறதா என்றும் பார்ப்பார்கள். 11. போட்டி மனப்பான்மை (Competitiveness) மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து அவர்களை விட ஒரு படி மேல வளர வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு எப்போதுமே இருக்க வேண்டும்.
12. குறிக்கோளை அடைதல் (Goal Achievement) குறிக்கோள் என்பதை சவாலாக எடுத்துக்கொண்டு அதை அடையும் வரை போராடுதல் வேண்டும் இதுவும் மிக முக்கியமான ஒன்று. இந்த திறமை நம்மிடம் இருக்கிறதா? என்று சோதனை செய்து பார்ப்பார்கள். 13. வேறுபட்ட திறமைகள் (Occasional Skills) வேறுபட்ட திறமைகள் என்பது பதவிக்கு வேண்டும் என்கிற திறமையை தவிர இன்னும் வேறு ஏதாவது திறமைகள் நம்மிடம் இருக்கிறதா? என்று சோதனை செய்து பார்ப்பார்கள். இதுவும் ரொம்பவே முக்கியமான ஒன்று தான். இவை அனைத்தும் நமக்கு வேலை கொடுப்பவர்கள் நம்மிடம் எதிர்பார்க்கிற விஷயங்கள் ஆகும். அதற்கேற்றாற் போல் நம்மை தயார்ப்படுத்திக் கொண்டு நேர்காணல் (Interview) கலந்துக் கொள்ளும் போது 100% வெற்றி (வேலை) நிச்சயம்!.
முதலில் ஒரு நிறுவனத்திற்கு பணிக்குச் செல்லும் முன்பாக, அந்த வேலையைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். மேலும், அந்த நிறுவனத்தைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நேர்காணலுக்கு (Interview) செல்லக் கூடிய நிறுவனம் சமுதாயத்தில் நல்ல இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்த நிறுவனம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது போன்ற விடயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியம் ஆகும். நீங்கள் எத்தகைய பணிக்கு விண்ணப்பித்தாலும், நேர்காணலின் போது அடிப்படையாக சில கேள்விகளை (Questions) கேட்பார்கள். உங்களை பற்றி சில வார்த்தைகளைச் சொல்லுங்கள் என்று கூறுவார்கள். இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை சொல்வதற்கு முன்னரே தயார் செய்து கொள்ள வேண்டும்.
நேர்காணல் எத்தனை மணிக்கு தொடங்குகிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே அதாவது குறைந்தப் பட்சம் ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அங்கு சென்று இருத்தல் வேண்டும். இப்படி சென்றால் கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்க முடியும். அரை மணி நேரத்திற்கு முன்பே சென்றால், சிறிது நேரம் மன அமைதி அடைய முடியும். மேலும், அந்த நேர்காணலில் (Interview)-ல் பதற்றம் இல்லாமல், மிக நிதானமாக நேர்த்தியான பதில்களை சொல்ல முடியும். எந்த ஒரு நேர்காணலிலும் பதற்றமடைய வேண்டிய அவசியமே இல்லை. நாம் புத்துணர்ச்சியுடனும், மனஉறுதியுடனும் இருத்தல் வேண்டும். நேர்காணலை கலந்துக் கொள்ளும் போது ஒரு நேர்மறையான எண்ணம் நமக்குள் தோன்றிட வேண்டும். அந்த அளவுக்கு தெளிவாக உறுதியாக பேச வேண்டும். எதற்கும் துளி அளவு பயம் இல்லாமல் துணிந்து பேச வேண்டும். பயந்து பயந்து பேசாமல், கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் சிரித்த முகத்துடன் உற்சாகமாக பதில் அளித்தல் வேண்டும்.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.