Banaras Hindu University (BHU) உருவான கதை | அவமானம் என்பது ஒரு வித மூலதனமே!

அவமானம் என்பது ஒரு வித மூலதனமே

வாழ்க்கையில் எந்த துறையில் பயணித்தாலும் சில சமயங்களில் நாம் அவமானங்களை சந்தித்துத் தான் ஆக வேண்டும். இந்த உலகத்தில் அவமானங்களை சந்திக்காதவர் யார் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்? ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் இடத்திலோ, வீட்டிலோ, அல்லது பொது இடங்களிலோ நாம் அவமதிக்கப்பட்டிருக்கலாம். வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அவமானங்கள் தவிர்க்க முடியாது. ஆகையால் அதை நாம் எளிதாக கையாள கற்றுக் கொண்டு செயல்பட வேண்டும். அது தான் நல்லது. தனக்கு ஏற்பட்ட அவமானங்களால் துவண்டுபோய் விடாமல் அதில் உத்வேகமும், வைராக்கியமும் அடைந்து சாதனை படைக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி அடைந்த மனிதர்கள் முன்னேறுவதற்கு அவர்கள் கடந்து வந்த அவமானங்கள் காரணங்களாக இருந்திருக்கும்.
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
அவமானங்களால் ஏற்படும் வலியை, வெற்றியை உண்டாக்கும் வழியாக மாற்றிட வேண்டும். தோல்வி என்பது ஒரு அவமானம் அல்ல. அதேபோல் வெற்றி என்பது ஒரு மகுடமும் அல்ல. தோல்வியும் வெற்றியும் நாம் வாழ்க்கையை புரிய வைக்கும் பாடங்களே ஆகும். நாம் வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் எப்போதும் சிறு மழலை போல் இருக்க வேண்டும். அதற்கு அவமானம் எதுவும் தெரியாது; விழுந்தவுடன் அழுது முடித்தவுடன் மீண்டும் எழுந்து நடக்கும். உலக அளவில் மிகவும் மதிக்கத்தக்க கல்வியாளராகவும், மாபெரும் சிந்தனையாளராகவும் திகழ்ந்து வந்தவர் நம்முடைய சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவர் தன் வாழ்நாளில் பல்வேறு சோதனைகளையும், அவமானங்களையும் சந்தித்திருந்தாலும் அவற்றை எல்லாம் தனது அறிவாற்றலால் வென்று, பெரும் மாற்றத்திற்குரிய சிந்தனையாளராகவும், புரட்சியாளராகவும் விளங்கினார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை (life history) வரலாற்றை படிக்கும் போது, அம்பேத்கர் அவர்கள் பலமணி நேரங்கள் (ஒரு நாளில் 18 மணி நேரம்) நூலகத்தில் அமர்ந்து படித்ததும், அதனால் அவர் பெற்ற அறிவுத்திறனால் பல்வேறு ஆய்வு கட்டுரை மற்றும் அரசியல் கட்டுரைகளை எழுதியதையும் நம்மால் உணர முடியும். ஆகையால் வாழ்க்கையில் சாதிக்க விரும்பும் ஒவ்வொருவரும் தனக்கு ஏற்படும் அவமானங்களை எல்லாம் நாம் வெற்றிக்கான அஸ்திவாரமாக மாற்றி கொள்ள வேண்டும்.

Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கிற ஒவ்வொரு அவமானங்களும் நாம் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்று நினைத்துக் கொண்டே அதை கடந்து பயணித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி தான். அவமானம் என்பது ஒரு வித மூலதனமே! ஒரு பெரிய மனிதர் வாழ்க்கையில் அவர் சந்தித்த அவமானங்களை, அவர் எப்படி மூலதனமாக மாற்றி வெற்றியடைந்தார் என்பதை பற்றிய கதையை இப்பதிவில் காண்போம்.

Banaras Hindu University (BHU) உருவான கதை

காசி மாநகரத்தில் ஒருவர் ஒரு பல்கலைக் கழகத்தை அமைக்க விரும்பினார். அதற்கான பொருளைப் பெற, பல ஜமீன்தார்களையும், செல்வந்தர்களையும், நவாப்புகளையும் சென்று பார்த்தார்; பொருள்களையும் பெற்றார். ஹைதராபாத்தை அப்போது ஆண்டு கொண்டிருந்த நவாப்பின் அரண்மனைக்கு சென்ற அவர் தன் நோக்கத்தை சொல்லிப் பொருளுதவி செய்ய வேண்டினார். அப்போது யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது. நவாப் “பொருள் தர முடியாது” என்று சொல்லியதோடு தன் காலில் இருந்த காலணி ஒன்றைக் கழற்றி அவர் மீது எறிந்தார்.

Banaras Hindu University (BHU) உருவான கதை, அவமானம் என்பது ஒரு வித மூலதனமே!
அந்த செருப்பை கையில் எடுத்துக்கொண்டு "மிக்க நன்றி மன்னரே! மிக்க நன்றி மன்னரே!" எனக் கூறிக்கொண்டு மன்னரின் அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்தவர், மன்னரின் அரண்மனை வாசலில் உள்ள ஒரு மேடையின் மீது ஏறி நின்றுக் கொண்டு, "பெரியோர்களே, தாய்மார்களே! காசி மாநகரின் சீமான், சீமாட்டிகளே" இதோ காசி மாநகரத்தின் நவாப் மன்னர் அணிந்த காலனி.. அதை இப்போது ஏலத்திற்கு விடப்போகிறேன். எடுப்பவர்கள் எடுக்கலாம்" எனச் சத்தமிட்டுக் கூவினார். பொதுமக்கள் எல்லோரும் ஆச்சரியத்தோடு வந்து பார்த்தார்கள்.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
அப்போது அவர்கள் கால்ப் பணம், அரைப் பணம், ஒரு பணம் என்று கூச்சலிட்டனர். அதனை நேரில் பார்த்து கொண்டிருந்த அந்த அரண்மனையின் ஓர் அதிகாரி அவசரமாக அரண்மனையின் உள்ளே ஓடிச் சென்று "அரசரே!, உங்களின் ஒரு காலணி ஏலம் போடப்படுகிறது". ஏலம் விட்டு கொண்டிருக்கிறார் மன்னா அந்த நபர் என்று சொல்கிறார். அது மட்டுமில்லை கல்லூரி கட்ட மன்னர் தந்தது என்று சொல்லி கூவுகிறார்.
ஏலம் கால்ப் பணம், அரைப் பணம், ஒரு பணம் என்று தான் பொதுமக்கள் கேட்கிறார்கள். அவமானம், அவமானம் என்று சொல்ல, அதைக் கேட்டு திடுக்கிட்ட நவாப் தன் நிதி மந்திரியை அழைத்தார். "ஓடுங்கள் உடனே அதனை ஏலத்தில் எடுங்கள். என்ன செலவானாலும் சரி..." என ஆணையிட்டார். நிதி மந்திரி விரைந்து சென்றார். அதற்குள் ஏலம் சூடு பிடித்தது. முடிவில் நிதி மந்திரி ஒரு லட்சம் வராகனுக்கு அச்செருப்பை ஏலம் எடுத்து மன்னரிடம் கொண்டு வந்தார். கொஞ்ச நேரம் காத்திருந்து மீண்டும் மன்னரின் அரண்மனைக்கு உள்ளே சென்றார் மதன்மோகன் மாளவியா அவர்கள். உள்ளேச் சென்று "அரசே!, என் மீது தங்கள் செருப்பை வீசியதற்கு மிகுந்த நன்றி. மற்ற ஒன்றையும் வீசினாலும் பெற்றுக் கொள்வேன்" எனப் பெருமிதத்தோடு கூறினார்.
மன்னர், அப்போது தான் அந்த நபரின் சாமர்த்தியத்தையும், சகிப்புத்தன்மையும் நினைத்து அவரே முன்வந்து அந்த கல்லூரியை முழுமையாக கட்டிக் கொடுக்கிறார். அந்த கல்லூரி வேற எதுவும் இல்லை அது தான் இப்போதைக்கு இருக்கும் காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்! தனக்கு ஏற்படும் அவமானத்தை யார் ஒருவர் அவமானம் என்று நினைக்கிறார்களோ அவர்களால் ஒரு நாளும் எதையுமே ஜெயிக்க முடியாது. எப்போதுமே நமது நோக்கம் நிறைவேறுவது மட்டும் தான் முக்கியம். மான அவமானங்களை இல்லை.

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
ஒவ்வொரு அவமானமும் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்று நினைத்துக் கொண்டு பயணித்தால், எந்த ஒரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவமானம் என்பது ஒரு வித மூலதனமே!. அந்த காலனி வீசப்பட்டது திரு. மதன்மோகன் மாளவியா அவர்கள் மீது தான். அவர்தான் காசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை உருவாக்கினார். நாம் வாழ்க்கையில் பட்ட அவமானங்களை ஒவ்வொன்றையும் மூலதனமே நினைத்துக் கொண்டு உழைத்தால் வெற்றி பெறுவது நிச்சயமே!
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்

2 Comments

  1. FACT BRO
    தனக்கு ஏற்படும் அவமானத்தை யார் ஒருவர் அவமானம் என்று நினைக்கிறார்களோ அவர்களால் ஒரு நாளும் எதையுமே ஜெயிக்க முடியாது

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Recent Posts

Facebook