கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-4

தந்தையின் சூளுரை நிறைவேறுமா?

பிரமாண்டமான நம்ம தஞ்சைப் பெரிய கோயிலின் சுவர் முழுவதும் கல்வெட்டுகள் (Inscription) ஆக்கிரமித்து இருக்கின்றன. அந்தக் கல்வெட்டுகள் தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தின் அரசியல் வரலாறு, நாகரிகம், சமுதாயச் சிந்தனை, மக்களின் வாழ்வியல் முறை, பல்வேறு கலைகளின் மகோன்னதம் போன்ற பலவற்றை எடுத்துக் காட்டும் ஆவணமாகத் திகழ்கின்றன.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
King இராஜராஜன், தனது காலத்தில் வெற்றி (Won) கொண்ட நாடுகளின் பட்டியலையும் (Lists) அந்தக் கல்வெட்டில் குறித்து இருக்கிறார். தஞ்சைக் கோவில் கருவறையின் வடக்குப் பக்கம் சண்டிகேசுவரர் ஆலயம் அருகே உள்ள சுவரில் அந்தக் கல்வெட்டு, அவரது மெய்க்கீர்த்தியாக மிளிர்கிறது.
"திருமகள் போலப் பெருநிலச்செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி" என்று தொடங்கி நீண்டு செல்லும் அந்தக் கல்வெட்டில் (Inscription), அவர் வெற்றி பெற்ற நாடுகளின் List பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

அதாவது அவர், காந்தளூர்ச்சாலை, வேங்கைநாடு, கங்கபாடி, தணிகைபாடி, நுளம்பபாடி, குடமலைநாடு, கொல்லம், கலிங்கம், ஈழ மண்டலம், இரட்டைபாடி ஏழரை இலக்கம், முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம் ஆகிய பகுதிகளை வென்றார் என்பதை அது பறைசாற்றுகிறது.
மன்னர் இராஜராஜன் முன்னெடுத்த அனைத்து வகையான போர்களிலும் வெற்றியை பெற்றார் என்பது மட்டுமே அவரது புகழுக்குக் காரணம் என்று சொல்லி விட முடியாது. இந்தியாவிலேயே முதன் முறையாக (First Time), நிலங்களை அளக்கும் (Land Measurement ) திட்டத்தை அறிமுகப்படுத்தி நில வரி (Tax) வசூலிப்பை எளிமையாக்கியவர்.

அடித்தட்டு மக்கள், பெரிய முதலீடு இல்லாமலேயே வருவாயைப் பெருக்கி வளமான வாழ்வு நடத்துவதற்காக, 'சாவா மூவாப் பேராடு' என்ற உன்னதமான பொருளாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும் சுலபமாகக் கடன் உதவி பெறுவதற்காகவும், கோயிலையே வங்கி (Bank) போலச் செயல்படுத்தியவர்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil Part-2
ஆட்சி நிர்வாக முறையை, ஊரவை நிர்வாகம், அரசவை நிர்வாகம், கோவில் நிர்வாகம் என்று மூன்றாக (3) பிரித்து எளிமைப்படுத்தியவர். ததரைப்படை (Army), கடற்படை (Navy) ஆகியவற்றுக்கான உட்கட்டமைப்பை (Infrastructure) விரிவுபடுத்தி, ஆட்சி நிர்வாகமும் மற்றும் ராணுவமும் நிலைபெறச் செய்தவர்.
கடலில் பல மைல் தூரம் பயணம் செய்து கடந்து, நாட்டின் மேற்கே நடுக்கடலில் உள்ள மாலத்தீவைக் Maldives கடற்படை வலிமையால் கைப்பற்றியவர். கடற்கொள்ளையர்களை (Pirates) ஒழித்ததன் மூலம், அயல்நாட்டு (Foreign) வணிகத்தில் ஈடுபடும் வர்த்தகக் குழுவினருக்கு உதவிக் (Help) கரம் நீட்டியவர்.

அனைத்துக்கும் மேலாக எத்தனை ஆண்டுகள், ஏன் பல யுகங்கள் ஆனாலும், ஆடாமல் அசையாமல் இருக்கும் படி, தஞ்சை மண்ணில் ராஜராஜீஸ்வரம் (Brihadeeswara Temple) என்ற மாபெரும் கற்கோவிலைக் கட்டியவர். இப்படி ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரரான மன்னர் ராஜராஜன மனதை, இரண்டு கவலைகள் அரித்துக் கொண்டு இருந்தன.
80 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது முன்னோரான முதலாம் பராந்தகன் என்ற Chozha King, பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றார். அந்தப் போரில் பாண்டிய மன்னர் ராஜசிம்ம பாண்டியன் தோல்வி அடைந்தார். தங்கள் குலச் சின்னங்கள் சோழர்களிடம் சிக்கிவிடக் கூடாது என்று நினைத்த பாண்டிய மன்னர் ராஜசிம்ம பாண்டியன், குலச் சின்னங்களான மணி மகுடம், இந்திர ஆரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டுத் தப்பி ஓடினார்.

நட்பு நாடான இலங்கைக்கு (Sri Lanka) சென்ற அவர், தங்களின் குலச் சின்னங்களை (Symbol) இலங்கை மன்னரிடம் அடைக்கலமாகக் கொடுத்துவிட்டு காட்டுக்குள் ஒளிந்து கொண்டார். பாண்டிய மன்னர்களின் குலச் சின்னங்கள் எங்கே இருக்கின்றன என்பது இருக்கின்றன என்பது தெரியாத காரணத்தால், அவற்றைச் சோழ மன்னர் (Chozha King) பராந்தகனால் மீட்க முடியவில்லை.
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History In Tamil | Part-4
பாண்டிய நாட்டு மன்னரின் குலச்சின்னங்கள் ஸ்ரீலங்கா மன்னரிடம் இருக்கின்றன என்பது தெரிய வந்தது. அவற்றைக் கைப்பற்ற பராந்தகனுக்குப் பிறகு அடுத்து அடுத்து ஆட்சிப் பீடம் ஏறிய Chozha மன்னர்கள், ஸ்ரீலங்கா மீது படையெடுத்தனர். ஆனால் 80 ஆண்டு காலமாக பாண்டியர்களின் (Pandiya King) குலச் சின்னங்கள் சோழர்களிடம் (Chozha) சிக்கவில்லை.
மன்னர் ராஜராஜனும், அவரது காலத்தில் இலங்கை மீது படையெடுத்துச் சென்றார். கப்பல் படை, தரைப் படை ஆகிய இரண்டு ஒன்று சேர்ந்து நடத்திய தாக்குதலில், இலங்கை முழுவதும் படைகள் கைப்பற்றப்பட்டது. அப்போது மன்னர் ராஜராஜன் (King Rajarajan), பாண்டியர்களின் குலச் சின்னங்கள் இலங்கையில் (ஸ்ரீலங்கா) எங்கே இருக்கின்றன என்று தேடினார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil Part-3
ஆனால் அவரால் அதனைக் கண்டுபிடித்துக் கைப்பற்ற முடியவில்லை. இலங்கையை முழுவதுமாக வெற்றி கொண்ட தன்னாலும் சின்னங்களை மீட்க (Recover) முடியவில்லை என்பது கிங் ராஜராஜனின் கவலைகளில் ஒன்றாக இருந்தது. தமிழகத்தின் வடமேற்குப் (North-West) பகுதியான மேலைச் சாளுக்கிய தேசத்தை சத்யாச்சரியன் மன்னர் ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.

அமரர் கல்கி (Kalki) எழுதிய சிவகாமியின் சபதம் (Novel) நாவலைப் படித்தவர்கள், அதில் வரும் இரண்டாம் புலிகேசி (Pulikesi) என்ற சத்யாச்சரியன் கதாபாத்திரத்தை Cast மறந்து இருக்க மாட்டார்கள். அவரின் வம்சத்தில் பிறந்த வந்த இந்த சத்யாச் சரியன், இரண்டாம் தைலபன் என்பவரின் மகன். இவர், மன்னர் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்தவர். சத்யாச் சரியன் அடிக்கடி எல்லையில் சோழ நாட்டு மக்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னர் இராஜராஜன் தீர்மானித்தார்.

இராஜராஜன் வெற்றி பெற்ற இடங்கள் கலிங்கம், பஞ்சப்பள்ளி, சக்கரக்கோட்டம், மகேந்திரகிரி மாணயகேடம், வேங்கிநாடு, நுளம்பாடி, கங்கபாடி, குடமலைநாடு, கொல்லம், இலங்கை.
9 இலட்சம் படை வீரர்களுடன் (Army) மேலைச் சாளுக்கியத்துக்குப் படையெடுத்துச் சென்ற மன்னர் ராஜராஜனும், அவரது மகன் ராஜேந்திரனும் (Rajendiran), துங்கபத்திரை நதியின் (Rever) தென்பகுதி வரை முன்னேறிச் சென்று பல இடங்களை (Places) கைப்பற்றினார்கள். ஆனாலும், துங்கபத்திரை நதியின் வடபகுதியில் உள்ள தலைநகரமான மான்யகேடத்தை அவர்களால் பிடிக்க முடியவில்லை. போர் நீண்ட நாட்கள் நீடித்ததால், சோர்வடைந்து இருந்த வீரர்களை அழைத்துக் கொண்டு ராஜராஜன் தஞ்சைக்குத் திரும்பி விட்டார்.

மேலைச் சாளுக்கியப் யுத்தத்தில் முழுமையான வெற்றி கிடைக்காததால் கிங் இராஜராஜன் மனம் உடைந்தார். மேலும் மேலைச் சாளுக்கிய யுத்தம் முடிந்து தஞ்சைக்கு திரும்பியதும் கிங் இராஜராஜன், யாரும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான (Shocking) ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
“அடுத்த முறை மீண்டும் மேலைச் சாளுக்கியம் மீது போர் தொடுப்பேன். சத்யாச்சரியனை அடக்கி அவனது தலைநகர் மான்யகேடத்தைக் கைப்பற்றுவேன். அதுவரை "கிரிஹர விஹாரம் இல்லை” என்று சபதம் செய்தார். ‘கிரிஹர விஹாரம் இல்லை' என்ற சொன்ன தகவல் செப்பேட்டில் சமஸ்கிருதத்தில் (Sanskrit) எழுதப்பட்டு இருக்கிறது. 'கிரிஹர விஹாரம் இல்லை' என்பது என்ன?. அது எதைக் குறிக்கிறது என்ற விவரம் செப்பேட்டில் (Copper Plate) தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

Read Also: அரசன் மற்றும் அறிவாளியான விவசாயின் கதை
'கிரிஹர விஹாரம் இல்லை' என்ன என்பதை சில ஆய்வாளர்கள், “தஞ்சை மண்ணின் அரண்மனையில் உள்ள கிரிஹர விஹாரம் என்ற இடத்திற்குள் நுழைய மாட்டேன்" என்று மன்னர் இராஜராஜன் கூறியதாக மொழி பெயர்த்துள்ளனர். வேறு சில ஆய்வாளர்கள், "மலைப் பகுதியில் நடைபெறும் வேட்டை விளையாட்டு (Game) கிரிஹா விஹாரம் எனப்படும். அந்த விளையாட்டில் இனி மேல் நான் கலந்து கொள்ள மாட்டேன்” என்பதைத் தான் இராஜராஜன் தெரிவித்ததாகக் கூறுகிறார்கள்.

தஞ்சை அரண்மனைக்கு அருகே ராஜராஜனுக்கு விருப்பமான புத்தர் விகாரை இருந்தது. ராஜராஜன் தினமும் அங்கு செல்லும் அவர், இனிமேல் அந்த விகாரைக்குச் செல்ல மாட்டேன் என்பதை இவ்வாறு சொல்லி இருக்கிறார் என்று சமஸ்கிருத பண்டிதர்கள் சிலர் கூறுகிறார்கள். கிரிஹர விஹாரம் என்பது ஹை மாளிகைக் கட்டடம் என்று சில Researcher கருத்துத் தெரிவித்து உள்ளார்கள்.
அரசவையின் சுக போகத்தை அனுபவிக்க மாட்டேன். இது தான் அதன் பொருள் என்பது வேறு சில ஆய்வாளர்களின் கருத்து. இராஜராஜனின் சபதம் எதைக் குறிக்கிறது என்பதில் இப்போது வரை குழப்பம் நீடிக்கின்ற போதிலும், அது முக்கியமான சபதம் என்பது மட்டும் தெரிகிறது. இராஜராஜனின் சபதம் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாகவே தஞ்சை அரண்மனை (Palace) சில காலமாகத் தனது சபை இழந்து காணப்பட்டது.

Read Also: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு
இளவரசராக ராஜேந்திரன் (Prince Rajendiran) பதவி ஏற்ற போதும் இந்தச் சோகத்தின் நிழல், தஞ்சை அரண்மனை வளாகம் முழுவதும் படர்ந்து இருந்ததை காண முடிந்தது. இராஜராஜனின் இந்த இரண்டு (2) கவலைகளுக்கும் தீர்வு (Solutions) காணக்கூடிய ஒருவர் உண்டு என்றால் அது அவரது மகன் (Son) இராஜேந்திரன் என்பதை அனைவரும் அறிந்து இருந்தார்கள்.
இராஜராஜன், தஞ்சை மன்னராக (Empire) முடி சூட்டிக் கொண்ட போது அவருக்கு 52 வயது. அப்போது, 25 வயதை அடைந்த ராஜேந்திரன், இளவரசருக்கு (Prince) உரிய அனைத்து பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, கிங் இராஜராஜன் மேற்கொண்ட அனைத்து யுத்தங்களிலும் ராஜேந்திரன் படைத் தளபதியாகக் கலந்து கொண்டு Chozha படைக்கு வெற்றியை தேடித் தந்தார்.

ராஜேந்திரனின் திறமைகளை நன்கு அறிந்து கொண்ட தஞ்சை மக்கள், அவர் பாண்டியர்களின் குலச் சின்னங்களை மீட்பதோடு, மேலைச் சாளுக்கிய தலைநகர் மான்யகேடத்தைக் கைப்பற்றி, ராஜாஜனின் இரண்டு கவலைகளையும் தீர்த்து வைப்பது உறுதி என்று திடமாக நம்பினார்கள். அப்படிப்பட்ட தகுதியை இளவரசர் இராஜேந்திரன் எவ்வாறு வளர்த்துக் கொண்டார் என்ற இரகசியம், அவரது இளமைக் கால வரலாற்றில் நிறைய புதைந்து காணப்படுகின்றது.

வியப்பான வினோதம்

தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய கிங் இராஜராஜன், அந்தக் கோவில் சுவர்கள் (Walls) முழுவதும் தனது கல்வெட்டை (Inscription)பதிவு செய்து இருக்கிறார். இதன் மூலம், தஞ்சைக் கோவில் பற்றிய தகவல்களையும், அப்போது நடைபெற்ற ஆட்சி நிர்வாகம், அந்தக் காலத்திய மக்களின் சமூகப் பழக்க வழக்கங்கள் வற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்ற தோற்றத்தில் கங்கை கொண்ட சோழிச்சரம் என்ற கோவிலைக் கட்டிய மன்னர் ராஜேந்திர சோழன், அந்தக் கோவிலில் தனது கல்வெட்டு எதையுமே பதிவு செய்யவில்லை. தன்னுடைய வீரப் பிரதாபங்களைக் கல்வெட்டாக (Inscription) பதிவு செய்யும் முன் அவர் மரணம் அடைந்துவிட்டரா? என்பது தெரியவில்லை. கங்கைகொண்ட சோழீச்சரம் கோவில் சுவர்களில் உள்ள ஏராளமான கல்வெட்டுகளில், ராஜேந்திரனின் கல்வெட்டு ஒன்றுகூட இல்லை என்பது வினோதம் தான். நன்றி தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு!.

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook