Motivational Moral Story In Tamil | அரசன் மற்றும் அறிவாளியான விவசாயின் கதை

அரசனும் அறிவாளியான விவசாயியும்

ஒரு நாட்டில் அரசர் ஒருவர் இருந்தார். அவர் நாட்டை சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவு செய்தார். மக்கள் எல்லாம் எப்படி இருக்குகிறார்கள், வேலையெல்லாம் எப்படி செய்கிறார்கள் என்பதை பார்க்க ஒரு பயணம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தார். பயணத்துக்கு தயாராகி சென்றுக் கொண்டிருந்தார். அவர் போகிற வழியில் எல்லாம் பச்சை பசேலென வயல்வெளிகள் காட்சியளித்தது. அந்த வயலில் உழவர் ஒருவர் பாட்டு பாடிக்கொண்டு ரொம்ப மகிழ்ச்சியாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.


அரசர் அந்த விவசாயின் மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறார். அதனால் அந்த விவசாயிடம் சென்று கேட்கலாம் என்று அவரின் அருகே சென்றார். அந்த விவசாயியை பார்த்து ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?, எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்? ஒரு நாளைக்கு உங்களுடைய சம்பளம் எவ்வளவு என்றெல்லாம் வினவினார். அதற்கு அந்த விவசாயி சொல்கிறார். அரசே! ஒரு நாளைக்கு நான் நான்கு பணம் சம்பாதிக்கிறேன் என்றார்.
Inspirational Stories In Tamil | ThaenMittai Stories
மன்னர் கேட்கிறார் உங்களுடைய புதிர் பேச்சு எனக்கு புரியவில்லை. எனக்கு புரிகிற மாதிரி தெளிவாக கூறுங்கள் என்று கேட்கிறார். அந்த விவசாயி சொன்னார் ஒரு பணத்தை நானும் மற்றும் என் மனைவியும் சாப்பிடுவதற்கும், உடைகளை உடுத்திக் கொள்ளவும் அதை பயன்படுத்துகிறேன். ஒரு பணத்தை பிற்காலத்தில் என்னையும், என் மனைவியையும் பாதுகாக்கக்கூடிய என்னுடைய பிள்ளைகளுக்காக செலவு செய்கிறேன் என்றார். மூன்றாவது பணத்தை என்ன செய்வாய்? என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி மூன்றாவது பணத்தை கடனை அடைக்கப் பயன்படுத்துகிறேன்.

என்னை பிள்ளை பருவத்தில் பாதுகாப்பாக வளர்த்தெடுக்க என் பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். அதை ஈடு செய்யும் வகையில் செலவு செய்வேன் என்று சொன்னார். அவர்கள் என்னை பார்த்து நன்றி கெட்டவன் என்று சொல்ல மாட்டார்களா? அதனால் எனக்கு எவ்வளவு செலவு செய்து இருப்பாங்களோ அந்தளவுக்கு நானும் அவர்களுக்கு செலவு செய்து அவர்களை காப்பாற்ற வேண்டாமா?. அதனால் தான் என் பெற்றோரை பாதுகாக்கும் செலவை தான் நான் கடனை அடைப்பதற்கு என்று சொன்னேன். அதற்கு அந்த அரசர் சொல்கிறார் நீ சொல்வது முற்றிலும் உண்மைதான்.
நான்காவது பணத்தை யாருக்கு கொடுக்கிற எதற்கு செலவு செய்கிறாய் என்று நீ சொல்வதை கேட்க நான் ரொம்ப ஆவலாக இருக்கிறேன். கொஞ்சம் சொல்லுங்கள் என்றார் அரசர். மன்னா! நான் நான்காவது பணத்தை ஆதரவு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக கருணையோடு செலவு செய்கிறேன். அவர்களிடம் நான் எந்த பலனையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு மன்னர் சொல்கிறார் உன்னோட புத்திசாலித்தனத்தை நான் ரொம்ப பாராட்டுகிறேன். நீ எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று கேட்டார். மன்னரே சொல்லுங்கள்!, நான் என்ன செய்ய வேண்டும் என்று விவசாயி கேட்டார். நான் சொல்வதை நீ கேட்டு நடந்தால் உனக்கு சன்மானமாக நூறு பொற்காசுகள் தருவேன் என்று சொன்னார் மன்னர்.


அரசே! நீங்கள் ஆணையிட்டால் அதனை நிறைவேற்றுகிற கடமை எனக்கு இருக்கிறது. நீங்கள் சொன்னப் படி நடந்தால் நூறு பொற்காசுகள் தருவேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். கரும்பு தின்ன யாராவது கூலி கொடுக்கிறேன் என்று சொன்னால் வேண்டாம் என்று சொல்வாங்களா? என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அரசே என்றார் விவசாயி. நீ என்னுடைய முகத்தை 100 முறை பார்க்கிற வரைக்கும் என்னிடம் சொன்ன இந்த விஷயத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்றார்.
உன்னுடைய மனைவி, மக்கள், உற்றார், உறவினர்கள் என யாரிடமும் இந்த விஷயத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சொன்னார். அதையும் மீறி சொன்னால் நான் உன்னை கடுமையாக தண்டிக்க நேரிடும். இந்த மாதிரி என்னிடம் சொன்ன விஷயத்தைப் பற்றி யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்துக்கொடு என்றார் அரசர். அரசே! உங்கள் விருப்பப்படியே நான் சத்தியம் செய்து தருகிறேன்.


நிச்சயமாக இந்த இரகசியத்தை பாதுகாப்பேன் என்று சொல்லி விவசாயி சத்தியம் செய்துக் கொடுக்கிறார். மறுபடியும் அரசர் சொன்னார் சத்தியத்தை நீ பாதுகாக்க தவறினால் கடுமையான தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள். தற்செயலாக பார்க்கலாம் தவிர நீயே வலிய தேடிவந்து என்னை பார்க்கக்கூடாது என்று சொன்னார். என்னை நீ நூறுமுறை பார்த்த அப்புறம் தான் இந்த செய்திப் பற்றி உங்களிடம் பேசுவேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் அரசர். மன்னர் அரண்மனைக்கு சென்ற உடனே அங்கு அரசவைக் கூட்டத்தை கூட்டுகிறார்.
அரசவையில் உள்ள எல்லா நபர்களையும் அழைத்து எல்லாரும் கவனமாக கேளுங்கள் நான்கு பணம் சம்பாதிக்கும் ஒருவன் அந்த நான்கு பணத்தில் ஒரு பணத்தை தனக்காக செலவு செய்கிறான். ஒரு பணத்தை கடன் கொடுக்கிறான். இன்னொரு பணத்தில் கடனை அடைக்கிறான். ஒரு பணத்தை பயன் கருதா செலவுக்கு அளிக்கிறான். இது ஏதோ ஒரு புதிர் மாதிரி இருக்கிறதா?. உண்மையில் இது ஒரு புதிர் தான் இந்த புதிருக்கு சரியான விளக்கத்தை யார் வேண்டும் என்றாலும் சொல்லலாம். இதற்கு ஒரு நாள் கால அவகாசம் கொடுக்கிறேன் சரியான விளக்கத்தை கொடுக்கிற உங்களுக்கு 100 பொற்காசுகள் பரிசாக கொடுப்பேன் என்று சொன்னார்.


அந்த புதிருக்கான விடை தெரியாமல் எல்லா அமைச்சர்களும், மற்றவர்களும் விழி பிதுங்கி கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த அமைச்சர்களில் ஒருவர் மட்டும் அரசர் போய் பார்த்த அந்த விவசாயியை தேடிப் போய் பார்க்கிறார். அந்த விவசாயியை பார்த்ததும் அவரிடம் அறிமுகம் செய்துக்கொள்கிறார். அதன் பிறகு நீ அரசரிடம் சொன்ன புதிர்க்கான விடையை என்னிடம் சொன்னால் உனக்கு ஒரு பரிசு தருகிறேன். எனக்கு கொஞ்சம் புதிர்க்கான விடையை சொல்லுங்கள் என்று கேட்டார். அந்த விவசாயி எதுவும் சொல்லமால் அமைதியாக இருந்தார். விவசாயி அமைதியாய் இருப்பதை பார்த்து அந்த அமைச்சர் சொல்கிறார் கவலைப்படாத இங்கே நீயும் நானும் மட்டும்தான் இருக்கிறோம். நான் யாரிடமும் இதைப் பற்றி சொல்லமாட்டேன் என்று சொல்கிறார் அமைச்சர்.
நான் அந்த புதிர்க்கான விடையை சொன்னால் என்னை அரசர் பாராட்டுவார் மற்றும் என்னுடைய மதிப்பு அரசவையில் உயரும். தயவுசெய்து புதிர்க்கான விடையை சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி சொல்கிறார் அரசர் வந்து உங்களுக்கு பாராட்டு கொடுப்பார்; ஆனால் எனக்கு கடுமையான தண்டனை கொடுப்பார் என்று அமைச்சரிடம் சொல்கிறார். உடனே அந்த விவசாயி சொல்கிறார் அவர் அரசர்க்கு செய்துக் கொடுத்த சத்தியத்தைப் பற்றி அமைச்சரிடம் சொன்னார். புத்திசாலியான அமைச்சர் புரிந்துக்கொண்டார். நான் பதில் சொல்ல வேண்டுமென்றால் மன்னரின் முகத்தை நூறு தடவை பார்க்க வேண்டும். அதுவும் தற்செயலாக தான் அரசனின் முகத்தை நான் நூறு தடவை பார்க்க வேண்டும். இதுதான் அரசருக்கு நான் செய்துக் கொடுத்த சத்தியமும் கூட என்று அமைச்சரிடம் சொன்னார்.
புத்திசாலியான அமைச்சர் நீ கொடுத்த வாக்கை மீறாமல் காப்பாற்றுவதற்காக மேலும் நூறு பொற்காசு உனக்கு வெகுமதியாக தருகிறேன் என்று சொல்கிறார் அமைச்சர். சொன்னது மட்டுமில்லாமல் அதற்கான ஏற்பாட்டினை செய்கிறேன் என்று அமைச்சர் சொல்கிறார். நான் அரசருடைய முகம் பதித்த நூறு பொற்காசுகளை உனக்கு தருகிறேன் அதை எல்லாத்தையும் ஒன்று ஒன்றாக எண்ணிப்பார். அப்பொழுது நீ அரசரோடு முகத்தை நூறு முறை பார்த்த தற்செயலாக பார்க்கலாம். அதன் பிறகு அந்த புதிருக்கான விடையை நீ என்னிடம் சொல்லலாம் என்று கேட்கிறார். அதே மாதிரி நூறு பொற்காசுகளை கொடுத்தார். அவரும் 100 பொற்காசுகளை எண்ணிப் பார்க்கிறார் அதன் பிறகு உடனே புதிருக்கான விடையை சொல்லிவிட்டார். புதிர்க்கான விடை கிடைத்த காரணத்தால் அமைச்சருக்கு ரொம்ப சந்தோசமாக செல்கிறார்.


மறுநாள் அரசவை கூடியது புதிருக்கான விடையை அந்த அமைச்சர் சொன்னார். ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தார் மன்னர். சத்தியம் செய்துக்கொடுத்த அந்த விவசாயி சத்தியத்தை தவறிவிட்டான் கோபத்தோடு அந்த உழவனை இழுத்து வாருங்கள் என்று கட்டளை இட்டார். அந்த உழவன் வந்த உடனே அரசரைப் பார்த்து கும்பிட்டான். அரசே! நான் செய்துக்கொடுத்த சத்தியத்தை கடைசி வரை நான் தவறவில்லை. அமைச்சர் எனக்கு அளித்த நூறு பொற்காசுகளில் உங்களுடைய முகத்தை நான் தற்செயலாக பார்த்தேன் என்றார். அதன் பிறகுதான் அமைச்சரிடம் புதிருக்கான விடையை நான் சொன்னேன்.
இந்த பாருங்கள் மன்னா எனக்கு உங்கள் முகம் பதித்த நூறு பொற்காசுகள் என்று காண்ப்பித்தார். உடனே அரசர் நீ புத்திசாலி மட்டுமல்ல தெளிவான விவசாயி கூட என்று சொல்லி அந்த காசுக்களை நீயே வைத்துக்கொள். நான் உன் புத்திசாலித்தனத்தை பாராட்டி மேலும் நூறு பொற்காசுகள் தருகிறேன் என்றார். மன்னர் பெருமானே! நான் உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன் தங்களால் எனக்கு 300 பொற்காசுகள் கிடைத்திருகிறது. என்னுடைய மனைவி, மக்கள், பெற்றோர், எல்லாரையும் நான் நல்லபடியாக பார்த்துக்கொள்வேன். மேலும் அதிகமான ஏழைகளுக்கு நான் அந்த பணத்தை செலவு செய்வேன். அதனால் ஏழைகளும் உங்களோட அன்புக்கு நன்றி சொல்வார்கள் என்று சொன்னார். அந்த விவசாயி 300 பொற்காசுகளுடன் ரொம்ப மகிழ்ச்சியோடு வீட்டுக்கு திரும்பினான்.

Related Tags

Inspirational Stories In Tamil | Stories with Moral in Tamil | King and Farmer Story In Tamil | Bedtime Stories In Tamil | Motivational Stories In Tamil | Best Motivational Video Tamil | Tamil Motivational Stories | Short Inspirational Stories | Short Success Story | Kids Stories In Tamil | Tamil Kathaigal For Kids.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.



Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook