Freedom Is Our Birthright | சுந்திரம் எங்கள் பிறப்புரிமை | ThaenMittai Stories

Freedom Is Our Birthright சுந்திரம் எங்கள் பிறப்புரிமை

குமரி முதல் இமயம் வரை, ஒற்றை சொல் 140 கோடி மக்களையும் இணைக்கும் என்றால் அந்த ஒற்றை வார்த்தை ‘இந்தியா’ எனலாம். 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்று இந்திய சுதந்திரத்தை கனவு கண்டு பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடிய பாடல் வரிகள் திக்கெட்டும் பரவி 75 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டன.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
காலை எழுந்தவுடன் கடவுள் வணக்கம் சொல்வது போன்று, எப்போது கேட்டாலும் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், என்று சொல்லித் திரிந்த கூட்டம் ஒன்று நம் இந்திய திருநாட்டில் இருந்தது. நம்முடைய வெறும் கால்களால் பூட்ஸ் அணிந்த கால்களை அதாவது ஆங்கிலேயர்களை துரத்தியடித்த பெருமைக்கு உரியவர்கள் ஆவார்கள். அடிமையாக வாழ்ந்து இறந்து போவதை விரும்பாத நம் மக்கள், தூக்குக் கயிறுகளை துச்சமாக எண்ணி முத்தமிட்டார்கள்.
சிறைக்கொட்டடிகளும், லத்திக் கம்பின் தாக்குதலும் அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட வரம். எல்லாம் வருங்கால சந்ததியான நமக்காக தான். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ், சர்தார் வல்லபாய் படேல், திலகர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, பகத் சிங் என்று போராட்டத்தின் முன்வரிசையில் நின்ற பெருந்தலைவர்களின் வார்த்தைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற உயிர்த்தியாகம் செய்தவர்கள் ஏராளம். தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டப்பொம்மன், வீரமங்கை வேலு நாச்சியார், குயிலி என்று போராட்ட களத்தில் உயிர் நீத்த பெரும் வீரர்கள், அவர்களுடன் இணைந்து ஒப்புக்கு ஒப்பாக நின்று உயிர் கொடுத்த பல தலைவர்களை வரலாறு இன்று நினைவுகூருகிறது.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது என்று பாடி, நமது சுதந்திர போராட்ட நிகழ்வு பெருமைப் படுத்தப்படுகிறது. ஆனால் கத்தி இன்றி ரத்தமின்றி கிடைத்ததல்ல இந்திய சுதந்திரம். இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் சுமார் 200 ஆண்டுகள் நடந்ததாக சொல்லப்பட்டாலும், நம் மீதான அடிமைச்சுமை சரியாக 400 ஆண்டுகளுக்கு முன்பு, கி.பி.1600-ம் ஆண்டு தொடங்குகின்றது எனலாம். அப்போது இங்கிலாந்து நாட்டு மகாராணி எலிசபெத் வழங்கிய உரிமை சாசனத்தின் அடிப்படையில் தான் ஆங்கிலேய கிழக்கு இந்திய நிறுவனம் (கம்பெனி) தொடங்கப்பட்டது.
சுந்திரம் எங்கள் பிறப்புரிமை, Freedom Is Our Birthright | ThaenMittai Stories
15 ஆண்டுகள் நம் இந்தியாவில் வியாபாரம் செய்வதற்கான அனுமதியை பெற்று லண்டன் மாநகரில் உள்ள வியாபாரிகள் சிலர் நம் இந்தியாவுக்குள் நுழைந்தனர். இன்று பெரு நிறுவனங்களுக்கு நமது நாட்டின் பெருஞ்சொத்துகளை விற்பனை செய்வது போன்று, அன்று ஆங்கிலேயர்கள் வணிக ரீதியாகவே இந்தியாவுக்குள் நுழைந்தனர். அவர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்கிய பகுதிகளில் தங்கள் இலாபத்துக்காக அரசியலையும் கையில் எடுத்துக் கொண்டனர். ஆனால், இது பெரும்பாலும் வெளியே தெரியாத ஒரு அரசியல் மாற்றமாகவே இருந்தது.

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
ஆனால், ஆங்கிலேயர்களின் அந்தரங்க அரசியலுக்கு ஆங்காங்கே இருந்த இந்திய சிறு மன்னர்கள், குறு நில அரசர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நெற்கட்டான் செவல் என்ற பகுதியை அரசாட்சி செய்து வந்த பூலித்தேவன் கி.பி.1751-ம் ஆண்டு ஆங்கிலேயருக்கு (British People) எதிரான முதல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். But, போராட்டத்தை அடக்கி ஆளும் திறமை பெற்ற ஆங்கிலேயர்கள் அவரையும், அவருடன் கூட இருந்த பிற போராட்டக் குழுவையும் இல்லாது செய்து போராட்ட தடயத்தை அழித்தனர்.
கி.பி.1757-ல் தளபதி இராபர்ட் கிளைவ் ஆங்கிலேய வீரர்களுடன் இந்தியாவுக்கு வந்தார். பிளாசி என்கிற இடத்தில் சிராஜ் உத்தவுலா என்ற அரசனை வீழ்த்தினார். அப்போதில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளிப்படையாக தங்கள் அரசாட்சியை இந்தியாவில் நிறுவும் வேலையை தொடங்கினார்கள். அந்த காலகட்டத்தில் மொகலாய பேரரசர்களின் வழியில் வந்த மன்னர்கள் திவானி என்ற வரிவசூல் செய்யும் சிறப்பு உரிமை பெற்று இருந்தனர்.

Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
கி.பி.1765-ம் ஆண்டு வாக்கில் ஆங்கிலேய கிழக்கு இந்திய நிறுவனம் (Company) வரிவசூல் செய்யும் உரிமையை பறித்து தனதாக்கிக் கொண்டது. வரி வசூல் செய்யும் உரிமை ஆங்கிலேயர்களின் கைகளுக்கு சென்ற பின்னர் தான் இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை கண்டது என்பதை உணரலாம். அப்போது நமது நாட்டில் சில மன்னர்கள் விழித்துக் கொண்டனர். ஐதர் அலி, திப்பு சுல்தான், அவர்களை தொடர்ந்து தீரன் சின்னமலை என்று பலரும் ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க முயன்ற போதெல்லாம், சாதுர்யமாக துரோகிகளை கையில் கொண்டு ஆங்கிலேயர்கள் வெற்றியை பெற்றனர்.
இதனால் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் துணிவு சற்று சுருங்கிப் போனது. நம்முடைய பொருளாதாரம் அவர்களின் கையில் கிடைத்த போது, அதை பாதுகாக்கவும், நம்மிடம் இருந்து மேலும் சுரண்டவும் அவர்களுக்கு கிடைத்த அனைத்து வழிகளையும் பின்பற்றினார்கள். உலகளாவிய பெரும் நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தன. வியாபார போட்டியில் சுரண்டப்பட்டது நம் நாடு.
Freedom Is Our Birthright Thilagar, ThaenMittai Stories
இந்திய வரலாற்றின் பக்கங்களில் வரி கொடுத்தே வாழ்க்கை இழப்பவர்கள் இந்திய மக்கள் என்பது நீண்ட நெடுங்காலமாக பதிவு செய்யப்பட்டு வந்து இருக்கின்றது. நம் நாட்டு மக்கள் எல்லோரும் துன்புறும் வகையில் ஆங்கிலேயர்கள் உப்புக்கு வரி போட்டார்கள். காந்தியடிகள் தலைமையில் உப்பு சத்தியாக் கிரக அழைப்பு வந்தபோது நாடு முழுவதும் வீரர்கள் திரண்டனர். 1930-ம் ஆண்டு ஏப்ரல் 6 தேதி அன்று தண்டியில் பாதயாத்திரை சென்ற காந்தியடிகள் உப்பை எடுத்து, சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அண்ணல் காந்தியின் போராட்டத்தை நம் நாடு முழுவதும் அவரது வழியில் நின்று அவரது தொண்டர்கள் நிகழ்த்தினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சாதாரண குடிமக்கள் ஆவார்கள். ஆனால் அண்ணல் காந்தியடிகள் அழைக்கிறார் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக தங்கள் வீட்டையும், குடும்பத்தையும் விட்டு விட்டு போராட்ட களத்தில் குதித்தவர்கள் ஆவார்கள். ஏனெனில் சுதந்திரம் நமது பிறப்புரிமை என் அவர்கள் உணர்ந்திருந்தனர்.

Read Also: The Role Of Tamilnadu Freedom Fighters In The India | இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு
நம் இந்தியா சுதந்திரம் அடைந்து ஆகஸ்ட் 15, 2022 உடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நம்முடைய இந்தியாவுக்கு அவ்வளவு எளிதில் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. நமது நாட்டிற்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களிடம் அடிமையாக சிக்கிக் கொண்ட இந்தியர்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தர பலரும், தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர் என்பதை நாம் மனதில் நிறுத்தி, பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பது நமது கடமை ஆகும்!.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook