மென்திறன் அறிவும், அவசியமும்
கல்லூரிகளில் வெறும் கல்விப் பாடமாக மட்டுமே இருந்த Soft Skills
இன்று பெரும்பாலான அலுவலங்களில் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஏன்..? இளைஞர்களின் வேலைவாய்ப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய மென்திறன் அறிவு பற்றியும், அதன் அவசியம் பற்றியும் விளக்கமாக தெரிந்துகொள்வோம்.
சாஃப்ட் ஸ்கில் (Soft Skills) என்றால் என்ன?
நம்மை மென்மையாக, மேன்மையாக வெளிக்காட்டக் கூடிய திறன்கள் தான், சாஃப்ட் ஸ்கில்ஸ் என்று சொல்லலாம்.
மென் திறன் எப்படி வெளிப்படும்?
புன்னகை, முகபாவனை, உடை நாகரிகம், உடல் மொழி, பேசும்மொழி, குரல் ஒலியின் ஏற்ற இறக்கம்... இப்படி பலவற்றிலும் சாஃப்ட் ஸ்கில் (Soft Skills) வெளிப்படும். அது தானாக வெளிப்படும் என்பதை விட, நாம் தான் நம்முடைய மென் திறனை வெளிப்படுத்துகிறோம் என்பதால் தான் மென் திறனை வளர்த்துக் கொள்ள பயிற்சி அவசியமாகிறது.
எவையெல்லாம் மென் திறனாக கருதப்படும்?
அலுவலக மேலாளர் ஒருவர் தன்னுடைய சக பணியாளர்களுடனும், மேலதிகாரிகளிடமும் அலுவலக ரீதியாக ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். அதுதான் மரியாதையும் கூட. ஆனால் அதே ஆங்கில தோரணையை, தன்னுடைய பியூன் (Peon) மற்றும் டிரைவரிடம் காட்டும் போது தான் அவருடைய மென் திறன் அறிவு காணாமல் போகிறது.
எதை யாரிடம் பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், எந்த மொழியில் பேச வேண்டும், யார் முன்னிலையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும், எப்படி உடை அணிய வேண்டும், எத்தகைய முகபாவனை செய்ய வேண்டும். இப்படி உங்களை முன்னிலைப்படுத்தும் எல்லா விஷயங்களும் (All Matters), அது சார்ந்த முடிவுகளும் மென் திறனாக (Soft Skills) கருதப்படும்.
மென் திறன் ஏன் அவசியமாகிறது?
ஒரு பணியிடத்தில் அலுவலக பொறுப்புகளை தாண்டி, உறவுகளை வளர்க்கவும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் மென் திறன் அறிவு அவசியமாகிறது. இப்போது பெரும்பாலான நேர்காணல்களில் (Interview) தொழில்நுட்ப அறிவு, மொழி அறிவோடு (Language Skills) சேர்த்து மென் திறன் அறிவு (Soft Skills) குறித்த கேள்விகளும் (Questions) கேட்கப்படுகின்றன. இவையே வேலைவாய்ப்பையும், பதவி உயர்வையும் தீர்மானிக்கின்றன.
Soft SKills பற்றிய புரிதல் இளைஞர்களுக்கு இருக்கிறதா?
முழுமையான புரிதல் இல்லை. மாறாக, ஆங்கில மொழி அறிவும், சரளமான ஆங்கில பேச்சுத்திறனும் தான் சாஃப்ட் ஸ்கில் (Soft Skill) என்ற தவறான புரிதலை நிறைய மாணவர்கள் வளர்த்து கொண்டுள்ளனர். உண்மையில், ஆங்கில மொழி அறிவு (Spoken English / Communication ஸ்கில்ஸ்) என்பது மென் திறன் (Soft Skills) அறிவின் மிகச்சிறிய பகுதி மட்டுமே.
ஆங்கிலம் (English), தமிழ் (Tamil), இந்தி (Hindi), பிரெஞ்ச் (French)... இப்படி எந்த மொழியாக இருப்பினும், சரளமாக, நிதானமாக, மரியாதையோடு பேசினால் நீங்களும் சாஃப்ட் ஸ்கில் எக்ஸ்பெர்ட் தான். கூடவே, பிறர் முன்னிலையில் மரியாதையோடு நடந்து கொள்ளும் பழக்கத்தையும் சேர்த்து கொண்டால், புரோபெஷனல் சாஃப்ட் ஸ்கில் பெர்சனாக (Professional Soft Skill Person) மாறிவிடலாம்.
எப்படி வளர்த்து கொள்வது?
நிறைய செமினார்களில் (Seminar) கலந்து கொள்ளுங்கள். அலுவலக மீட்டிங், கல்லூரி பிரசெண்டேஷன் (College Presentation), உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு.. இதுபோன்ற தருணங்களில் தான், பிறரது மென்திறன் அறிவை பார்த்து, வளர்த்து கொள்ள முடியும்.
மென் திறனின் முக்கியத்துவம் என்ன?
அதிகாரம் (Authority), அலுவலக பொறுப்பு (Office responsibility), சம்பளம் (Salary), மேலதிகாரி (Superintendent), உதவியாளர் (Assistant) என பல்வேறு கட்டமைப்புகள் உள்ளன... இவ்வளவு பாகுபாடுகளுக்கு மத்தியில், கொஞ்சமாவது மனிதத்தை வளர்ப்பதற்கு, சாஃப்ட் ஸ்கில் (Soft Skills) அவசியமாகின்றது.
நமக்கான இடத்தை நிரப்புதல்
நம்மை என்ன நோக்கத்திற்காக எடுத்தார்களோ அதை சிறந்த முறையில் செய்து முடித்து கொடுப்பது ஆகும். சிறு துளிதான் பெரு வெள்ளமாகும். ஒவ்வெருவரும் தனக்கான வேலையை (Work) சரியாக செய்யும் பட்சத்தில் நிர்வாகம் (Management) சரியான முறையில் முன்னேற்றப் பாதையில் இயங்கும்.
விதிகளை பின்பற்றுதல்
நமக்கு நிர்வாகத்தின் மூலம் என்ன பொறுப்புகள் (Responsibilites) வேண்டுமானலும் கொடுக்கலாம். நாம் உயர் அதிகாரி என்பதற்காக 5 நிமிடம் (Minutes) தாமதமாக போனால் பரவாயில்லை என்று எண்ணம் கொண்டிருப்பது மிகத் தவறானது. ஊழியர்களுக்கு என்ன விதி என வகுக்கப்பட்டுள்ளதோ? அதைச் சரியாக பின்பற்றுவது. நாம் எப்போதும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
அளவீடு செய்யும் திறமை
அது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். 100 பேர் அல்லது 200 பேர் அல்லது அதற்கு மேல் கலந்து கொள்ளும் கூட்டமாக இருந்தால் அதை எப்படி கையாள்வது? அதற்கான தயாரிப்பு என்ன? என்பதில் தொடங்கி, இதே வேகத்தில் (Speed) நகர்ந்தால் நிர்வாகம் இந்தாண்டு இவ்வளவு லாபம் (Profit) ஈட்டும் என்பது வரை தெளிவாக அளவீடு (Measurement) செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
ஆவணப்படுத்தும் திறமை
பணி குறித்து ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தால், அதைப் பற்றி முழுமையாக உள்வாங்கி கொள்ள வேண்டும். பின் அதை சரியான முறையில் பின்பற்றுதல், மற்றும் ஆவணப்படுத்துதல் போன்ற திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். ஆவணப்படுத்தும் திறமை இங்கு மட்டுமல்ல வேறு எங்கு பணியாற்றினாலும் தேவைப்படும்.
இக்கட்டான சூழ்நிலைகளை கையாளும் திறன்
நிர்வாகம் (Management) எப்போதுமே சரியான பாதையில் தான் பயணிக்கும் என்பதை யாரலும் கணிக்க முடியாது. எனவே (So) எப்போதும் எதையும், எதிர்கொள்ள தயாராக இருப்பதோடு, அதை யாருக்கும் பாதகமில்லாமல் எடுத்து கூறும் திறமை (ability) பெற்றிருக்க வேண்டும்.
மாற்றங்களை ஏற்படுத்துபவராகத் திகழுதல்
'வீடு எப்படியோ அப்படித்தான் நாடும்' என்பது போல் மாற்றங்களை நம்மில் இருந்து கொண்டுவர வேண்டும். இது தான் ஒரு சரியான முன் மாதிரிக்கான அடையாளம். குறிப்பிட்ட வேலைகளை திட்டமிட்டு (Plan) சரியாக முடிக்கும் பட்சத்தில் எவ்வித பிரச்னைகளும் எழ வாய்ப்பில்லை. மாற்றத்திற்கான அடையாளமாக திகழ முற்படுங்கள்.
ஒத்துப்போகும் திறன்
எப்போதும் தனியாக தெரிய வேண்டும் என ஆசைப்படுவது தவறில்லை. அதற்காக காலரை தூக்கிவிட்டுக் கொண்டே சுற்றக்கூடாது. எல்லா விஷயங்களில் இல்லாவிட்டாலும் கூட, நிர்வாகத்தின் நலன் கருதி எடுக்கும் முடிவுகளில் மட்டுமாவது ஒத்துப்போகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் "யானைக்கும் அடி சறுக்கும்" என்பது போல விழ நேரிடும் பட்சத்தில் அல்லது வீழ்ந்தால் தூக்கிவிட கூட யாரும் வரமாட்டார்கள்.
அலசி ஆராய்ந்து சிந்திக்கும் திறன்
ஒரு வேலை நம்மிடம் ஒப்படைக்கப்பட்டால் எதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவம் (Importance) என்ன போன்ற காரணிகளை அலசி ஆராய்ந்து அதற்கேற்றார் போல் செயல்பட வேண்டும். நிர்வாகத்தின் சிக்கல் (Issue) என்ன, ஊழியர்களின் (Employee) சிக்கல் என்ன போன்ற விடயங்களை ஆராய்ந்து செயல்படும் போது வெற்றிக்கான காற்று நம் பக்கம் மட்டுமே வீசும்.
வளைந்து கொடுக்கும் தன்மை
ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமல் வேலையில் தாமதம் (Delay) ஏற்படவே, அல்லது தொய்வு ஏற்படவே வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் எங்கு நம் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து (Explore) அதை நிவர்த்தி செய்வதை விட்டுவிட்டு, ஊழியர்களிடம் (Employee) கரராக இருந்து ஒரு புரோஜனமும் இல்லை. நெழிவுசுழிவாக பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும்.
குழு நிர்வாகத் திறன்
இன்று உங்கள் Team Leader விடுமுறையில் சென்றிருந்து நீங்கள் டீமை லீட் பண்ணுங்கள் என்று ஒரு கட்டளை வந்தால், அதை செயல்படுத்தும் பக்குவம் (Handle) பெற்றிருக்க வேண்டும். எப்போதும் தலைமைப் பண்பிற்காக (Leadership) தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். எதையும் அணுகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.