கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-10

சோழர் படையில் 9 லட்சம் வீரர்கள் என்பது கட்டுக்கதையா?

கற்பனையில்கூட நினைத்து பார்க்க முடியாத அசாத்தியமான செயல்களை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியவர்கள், மன்னர் இராஜராஜனும் மற்றும் அவரது மகன் இராஜேந்திரனும் ஆவார்கள். மேலைச்சாளுக்கிய மன்னன் சத்யாச்சரியனுடன் யுத்தம் செய்வதற்கு அவர்கள் செய்த முன்னேற்பாடுகள் மலைக்க வைக்கின்றன. சத்யாச்சரியனின் தலைநகரம் 'மண்ணைக்கடக்கம்’ என்கிற மான்யகேடம், தஞ்சை மண்ணில் இருந்து 900 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
தஞ்சையிலிருந்து கால்நடையாக நடந்துச் சென்றால், அந்த நகரைச் அடைவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்கள் (15 Days) ஆகிவிடும். அதேபோல் போர் முடிந்து திரும்பி வருவதற்கு அதே காலம் ஆகும். அத்தனை நாட்களுக்கும், படை வீரர்களுக்குத் தேவையான அனைத்தும் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் தயார் செய்யப்பட வேண்டும். 9 இலட்சம் காலாட்படை வீரர்கள், 60 ஆயிரம் குதிரைச் சேவகர்கள், நூற்றுக்கணக்கான யானைகள், மன்னரைக் கவனித்துக் கொள்ளும் விஷேச பரிவாரங்கள்.
போர் படை வீரர்களுக்கும், யானைகள் மற்றும் குதிரைகளுக்கும் ஒரு மாதத்திற்கும் Month மேலான காலத்திற்குத் தேவையான உணவுகள். இந்த உணவுகளைத் தயார் செய்து வழங்கும் பரிசாரகர்கள் Chef. பரிசாரகர்களையும், உணவுப் பொருள்களையும் ஏற்றிச்செல்ல நூற்றுக்கணக்கான கூண்டு வண்டிகள்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
காயம் அடையும் போர் வீரர்களுக்குத் தேவையான முதல் உதவி செய்ய மருத்துவர்கள். பிற மருத்துவ வசதிகளைச் செய்து தரும் மருத்துவர்கள் என்று பலர் இருந்தனர். இப்படிப்பட்ட ஒரு மகத்தான பட்டாளத்தை ஒருங்கிணைத்து, வெகு தூரம் (Long Distance) சென்று எதிரியை சந்திப்பதற்குத் தேவையான திட்டமிடலில் இராஜராஜனும், இராஜேந்திரனும் கைதேர்ந்தவர்கள்.
மேலைச்சாளுக்கிய நாட்டின் மீதான படையெடுப்பில் 9 இலட்சம் போர்வீரர்கள் கலந்து கொண்டார்கள் என்ற எண்ணிக்கை கற்பனையான தகவலாக (டேட்டா) இருக்குமோ? என்று சிலர் நினைப்பது உண்டு. மன்னர் இராஜராஜன் காலத்தில் மக்கள் தொகையே குறைவாகத் தான் இருந்து இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் 9 இலட்சம் வீரர்களுடன் சென்றார் என்பதை எவ்வாறு நம்புவது என்று அவர்கள் கேள்வி எழுப்பலாம்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் மவுரிய பேரரசன் அசோகர் நடத்திய கலிங்கப் போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டார்கள். 1/2 இலட்சம் பேர் சிறைப் பிடிக்கப்பட்டார்கள் எனக் கூறப்படுவதை நம்புவார்கள். கிங் இராஜராஜன் 9 இலட்சம் வீரர்களுடன் சென்றார் என்பதை ஏற்க மறுப்பது ஆச்சரியம் தான். கிங் இராஜராஜன் 9 இலட்சம் வீரர்களுடன் சென்றார் என்ற எண்ணிக்கையை சோழ (Chozha) மன்னர்களோ அல்லது அவர்களின் செப்பேடுகளோ சொல்லவில்லை.
சாளுக்கிய அரசன் சத்யாச்சரியன் காலத்தில், அந்த நாட்டில் வைக்கப்பட்ட கல்வெட்டு (Inscription) இந்தத் தகவலைக் கூறி இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டம், பங்காபூர் வட்டத்தில் இருக்கும் ஹொட்டூர் என்கிற இடத்தில், மாண்டவீரன் ஒருவனுக்கு நடுகல் வைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த நடுகல் சாசனத்தில், “பிலவங்க வருடம் சகம் 929 (கி.பி.1007) இராஜராஜ நித்யவிநோத இராஜேந்தர வித்யாதர சோழகுல திலகமுமான நூர்மடிச் சோழன் என்பவன் ஒன்பது நூறாயிரம் (ஒன்பது லட்சம்) போர் படைவீரர்களுடன் தோனவூர் என்னும் இடத்தில் முகாமிட்டு அந்நாட்டினைச் சூறையாடினார்கள்.

குழந்தைகள், பெண்கள், பிராமணர்கள் ஆகியோரைக் கொன்றார்கள். சாதி நெறிமுறைகளுக்கு அப்பால் பல பெண்களைக் கவர்ந்து சென்றான். சாளுக்கிய குலத்திற்கு அணிகலனாகவும், தமிழக வீரர்களைக் கொல்பவனாகவும் விளங்குகின்ற பேரரசன் சத்யாச்சரியன், சோழனை ஓடச் செய்து அவன் கவர்ந்து சென்ற பொருட்பொதிகளைக் கைப்பற்றியதோடு தென்திசை நோக்கி வெற்றிப் பயணம் மேற்கொண்டான் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
இந்தச் சாசனம் Chozha மன்னரை இழித்தும், மன்னன் சத்யாச்சரியனை உயர்த்தியும் காட்டுவதற்காக எழுதப்பட்டது என்ற போதிலும், கிங் இராஜராஜன் 9 இலட்சம் வீரர்களுடன் வந்தார் என்பதை உறுதியாகக் கூறுகின்றது. அந்தக் காலத்தில் அரசர்கள், தங்களின் காவலுக்கும், தலைநகரத்தின் பாதுகாப்புக்கும் சிறிய அளவில் நிரந்தரமான படையை வைத்து இருப்பார்கள்.
போர் நடைபெறும் நேரத்தில், படையில் வந்து கலந்து கொள்ளும்படி மக்களுக்கு மன்னர் அழைப்பு விடுப்பார். அதனை ஏற்று ஒவ்வொரு பகுதியில் இருந்தும் நிறைய பேர் வந்து படையில் இணைந்து கொள்வார்கள். அந்நேரத்தில் விவசாயம் Farmingதவிர வேறு முக்கிய தொழில் கிடையாது. யுத்தத்தின் போது எதிரி நாட்டில் கொள்ளையடிக்கும் 'உரிமையும்' போர் வீரர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தன. எனவே, சண்டை நடைபெறும் சமயத்தில், உடல் தகுதியுள்ள அனைவரும் ஆர்வத்துடன் போர்படையில் சேர்ந்து பணியாற்றுவார்கள்.

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History In Tamil | Part-10
இதனாலேயே பேரரசர்களின் படையில் லட்சக்கணக்கானவர்கள் இடம் பெறுவது உண்டு. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ராஷ்டிரகூட அரசர்கள் ஆட்சிக் காலத்தில் சாளுக்கிய தேசம் என்பது ஒரே நாடாக இருந்தது. பின்னர் மேலைச்சாளுக்கியம், கீழைச்சாளுக்கியம் என்று இரு பகுதிகளாகப் பிரிந்தது. வேங்கியைத் தலைநகராகக் கொண்ட கீழைச்சாளுக்கியத்துக்கு சோழர்களின் ஆதரவு இருந்தது. அத்துடன் மேலைச்சாளுக்கியத்தின் சில பகுதிகளை ராஜராஜன் கைப்பற்றி இருந்தார்.

தாங்கள் இழந்த பகுதிகளை (Places) மீட்க சத்யாச்சரியன் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். சேரநாடு, பாண்டியநாடு, இலங்கை ஆகியவற்றைக் கைப்பற்றுவதில் இராஜராஜன் தீவிரமாக இருந்த நேரத்தை (Time) தேர்ந்து எடுத்த சத்யாச்சரியன், சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தான். அவரைத் தடுத்து நிறுத்துவதற்காக 9 லட்சம் போர் வீரர்களுடன் இராஜராஜன் அங்கு புறப்பட்டுச் சென்றார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
வழக்கம் போலவே இந்தப் படைக்கும் இராஜேந்திரன் தலைமை தாங்கினார். தோனவூர் என்கிற இடத்தில் இரண்டு படைகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. (தோனவூர் என்ற நகரம் தற்போது பீஜப்பூர் மாவட்டம் பேஜ்வாடி தாலுகாவில் தோனூர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது). பல நாட்களாக நீடித்த இந்தப் யுத்தத்தின் போது ஒரு நாள், யாரும் எதிர்பாராத நேரத்தில் அதிசய சம்பவம் நிகழ்ந்தது.
போர்க்களத்தில் இருந்த கிங் இராஜராஜன், திடீரென்று தனது குதிரை (Horse) மீது ஏறி, கையில் போர்வாளை ஏந்திக் கொண்டு மேலை சாளுக்கியர்களின் படைகளுக்கு நடுவே ஆவேசமாகப் பாய்ந்து சென்றார். யாருடைய துணையும் இன்றி, எதிரிப் படைகளுக்கு நடுவே அவர் துணிந்து சென்றது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தன. போர்க் களத்தில் சத்யாச்சரியன் படை, சோழப் படை வீரர்களைத் தாக்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்த இராஜராஜன் ஆத்திரம் அடைந்து, சத்யாச்சரியனை நேருக்கு நேர் சந்திக்க விரைந்து சென்றார்.

தன் குதிரையில் அமர்ந்தபடி ஓங்கிய போர்வாளுடன் சென்ற இராஜராஜன், சத்யாச்சரியனை நெருங்கி அவரை நோக்கிப் பாய்ந்தார். தன்னுடன் மோதுவதற்காக இராஜராஜனே நேரடியாக வந்துவிட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மன்னன் சத்யாச்சரியன் நிலைகுலைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட சத்யாச்சரியன் போர்வாளை ஏந்தி, இராஜராஜனுடன் மோதினார். இருவருக்கும் இடையே மிக கடுமையான வாள் சண்டை நடைபெற்றன.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
இராஜராஜனின் துணிச்சலைக் கண்டு அதிர்ந்து இருந்த மன்னன் சத்யாச்சரியன், அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல், யானையின் மீது ஏறி போர்க் களத்தில் இருந்து பின்வாங்கி ஓடினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற போரின் போது, சாளுக்கியர்களின் தளபதி கேசவன், சோழப் படை வீரர்களால் கைது செய்யப்பட்டார். மன்னரும், தளபதியும் இல்லாத சாளுக்கியப் படைகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் பின்வாங்கின.
இராஜராஜனும் அவரின் படையினரும் அந்தப் படைகளை துங்கபத்திரா (River) நதிக்கரை வரை விரட்டிச் சென்று தாக்கினார்கள். பல நாட்களாக நடைபெற்ற யுத்தம் காரணமாக சோழப்படை வீரர்கள் சோர்வு அடைந்து இருந்தார்கள். ஆகையால் இனியும் போர் நடத்த வேண்டாம் என்று இராஜராஜன் கருதினார். மேலைச் சாளுக்கிய நகரங்களைச் சூறையாடிய இராஜராஜன், அங்கிருந்த ஏராளமான செல்வங்களை அள்ளி கொண்டு வந்தார். (அங்கே கிடைத்த பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவற்றைத் தஞ்சைப் பெரிய கோவில் சுட்டுமானத்திற்கு இராஜராஜன் பயன்படுத்தினார் என்பது வரலாறு).

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7
இந்தப் போரில் Chozha படைகள் வெற்றி பெற்றாலும், இராஜராஜனும் மற்றும் அவரது மகன் இராஜேந்திரனும் துங்கபத்திரா (River) நதியைக் கடந்து செல்லவில்லை. இதனால் மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரமான மண்ணைக்கடக்கம் என்ற மான்யகேடத்தை (தற்போது இந்த நகர் மால்கெட் என்று வழங்கப்படுகின்றது) சோழப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. போர் முடிந்து, கவலையுடன் தஞ்சை திரும்பிய மன்னர் இராஜராஜன், “மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரான மான்யகேடத்தைக் கைப்பற்றும் வரை கிரிகர விஹாரம் இல்லை” என்று சபதம் செய்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு இடையில் தான் இராஜேந்திரனை இளவரசராக அறிவிக்கும் விழா தஞ்சையில் தடபுடலாக நடந்தது. அந்தப் பெருவிழா நடந்து முடிந்த பிறகு மக்கள் அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்குடன் கலைந்து சென்றனர். நாட்களும், மாதங்களும் வழக்கம் போல் நகர்ந்தன. But, மான்யகேடத்தைக் கைப்பற்றியாக வேண்டும் என்பதற்காக கிங் இராஜராஜன் தெரிவித்த சூளுரை விவகாரம், இளவரசர் இராஜேந்திரன் இதயத்தில் இருந்து கலைந்து செல்ல மறுத்தது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-8
தந்தையின் (இராஜராஜன்) சபதத்தை உடனடியாக நிறைவேற்றும் வகையில், மேலைச் சாளுக்கியரின் தலைநகரன மான்யகேடத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து திட்டங்களையும் உருவாக்குவதில் இளவரசர் இராஜேந்திரன் முனைப்பு காட்டத் தொடங்கினார். இளவரசராக முடிசூட்டப்பட்ட பிறகு நடைபெற்ற அந்த முதல் யுத்தத்தில் இராஜேந்திரன் மகத்தான வெற்றியை பெற்றார். அந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றியை விவரமாகக் காணும் முன், இளம்பெண் ஒருவரின் கண்வீச்சில் தோற்று (பட்டு) அவரிடம் இராஜேந்திரன் சரண் அடைந்தது எப்படி என்ற ருசிகரமான சம்பவம் (செய்தி) பற்றிப் பார்க்கலாம். நன்றி தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு!

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook