பாண்டியராக மாறிய சோழ மன்னர்
பண்டைய காலத்தில், பல காரணங்களுக்காக அடிக்கடி போர்கள் நடைபெற்றன. ஒரு மன்னர், தனது நாட்டைத் தாக்குவதற்கு எதிரி நாட்டு அரசர் வந்தால், அதனை எதிர்கொள்ள அவருடன் போர் தொடுப்பார். அப்படிப்பட்ட தாக்குதல் இல்லாத காலத்தில், தனது நாட்டை விரிவுபடுத்த விரும்பி, அண்டை நாட்டுடன் போர் செய்வார்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
தன்னை எதிர்க்க யாரும் இல்லை. அதே சமயம் பல நாடுகளையும் வெற்றி கொண்டாகிவிட்டது என்றால், அந்த மன்னர் தனது பராக் கிரமத்தை வெளிப்படுத்த 'திக்விஜயம்' என்ற பெயரில் தனது படைகளுடன் மற்ற நாடுகளுக்கு விஜயம் செய்வது உண்டு. இவ்வாறு ஒரு மன்னர் திக்விஜயம் செய்கிறார் என்றால், அவரை எதிர்க்கத் திராணி இல்லாத அரசர்கள், அவருக்குக் கப்பம் செலுத்திவிட்டு அவரது தலைமையை ஏற்றுக் கொள்வார்கள்.
படைபலம் கொண்ட ஒரு சில அரசர்கள், திக்விஜயம் வரும் மன்னருடன் போர் புரிந்து, வெற்றி அல்லது தோல்வியைச் சந்திப்பார்கள். மன்னர் ராஜேந்திரன், ஏற்கனவே சேர நாட்டையும், இலங்கையையும் வெற்றி கொண்டுவிட்டார். மாலத்தீவு, லட்சத்தீவு ஆகியவற்றையும் கைப்பற்றி விட்டார். சாளுக்கிய தேசத்தையும் வென்றாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து பாண்டிய நாட்டையும் முழுமையாகக் கைப்பற்ற நினைத்த அவர், திக்விஜயமாக மதுரையை நோக்கிப் புறப்பட்டார்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
பாண்டியர்களுக்கும், சோழர்களுக்கும் நீண்ட காலமாகப் பகை இருந்தது. இதன் காரணமாக சோழர்கள் பல முறை பாண்டிய நாடு மீது போர் தொடுத்தார்கள். ஒவ்வொரு முறை போரின்போதும் தோல்வி அடைந்து தப்பி ஓடும் பாண்டிய மன்னர், சேர நாட்டில் உள்ள காடுகளுக்குள் தஞ்சம் புகுந்து கொள்வார். அங்கு சில காலம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் நாடு திரும்பி, சோழப் படைகளுக்குத் தொல்லை கொடுப்பது உண்டு.
அதே சமயம், பாண்டியர்களின் ஆட்சி மீது மதுரை மக்களுக்கு வெறுப்பு இருந்ததும் தெரிய வந்தது. இவை இரண்டிற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று மன்னர் ராஜேந்திரன் நினைத்தார். போரில் பாண்டிய நாட்டை வெல்வதோடு, அங்கே நிரந்தரமாகத் தனது பிரதிநிதியை வைத்து நல்லாட்சி நடத்த வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். பாண்டிய நாட்டை ஆளும் பிரதிநிதியாக நியமிப்பதற்குத் தனது மகன்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
இந்த இடத்தில் மன்னர் ராஜேந்திரனின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். மன்னர் ராஜேந்திரன் 5 பெண்களை திருமணம் செய்து இருந்தார். அவர்கள் மூலம் அவருக்கு 2 பெண் குழந்தைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் இருந்ததாக பல வரலாற்று ஆவணங்களில் பதிவாகி இருக்கிறது. மகள்களில் மூத்தவர் ‘பிரானார்' என்ற அருள்மொழி மங்கை, இளையவர் பெயர் அம்மங்கைதேவி ஆவார்கள்.
மகன்களில் மூத்தவர் முதலாம் ராஜாதிராஜன். அவரை அடுத்து, ராஜேந்திரன் மற்றும் வீரராஜேந்திரன் ஆகிய மகன்கள் இருந்தனர். வேள்வித் தீயில் இருந்து தோன்றும் முத்தீயைப் போல, ராஜேந்திரனுக்கு மூன்று மகன்கள் இருந்ததாகக் கன்னியாகுமரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. ஆனால் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியீட்டில், ராஜேந்திரனுக்கு இந்த மூன்று தவிர சுந்திர சோழ பாண்டியன், விக்கிரம சோழ பாண்டியன், பராக்கிரம சோழ பாண்டியன், மும்முடிச் சோழன், வீர சோழன், மதுராந்தகன், பராந்தக தேவன் ஆகிய மேலும் 7 மகன்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
இவ்வாறு குறிப்பிடப்படும் மொத்தம் உள்ள 10 மகன்களில், முதலில் கூறப்பட்ட மூன்று மகன்கள் கங்கை கொண்ட சோழபுரத்தில் அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் என்பதால், அவர்கள் மட்டுமே ராஜேந்திரனின் மகன்கள் என்று வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறார்கள்.
மன்னர் ராஜேந்திரன் திக்விஜயமாக பாண்டிய நாட்டை நோக்கிச் செல்லும் முன்பாக, தான் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதி, தலைநகரில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டுப் புறப்பட்டார். சோழப் படைகள் மதுரையை நோக்கி வருகின்றன என்ற தகவல் கிடைத்த உடனேயே, பாண்டிய மன்னர் வழக்கம் போல மதுரையில் இருந்து தப்பி ஒடி சேர நாட்டின் காடுகளில் தஞ்சம் புகுந்தார்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
இதன் காரணமாக, பாண்டிய நாட்டையும் அந்த நாட்டில் இருந்த ஏராளமான வெண் முத்துக்களையும் ராஜேந்திரன் எளிதாகக் கைப்பற்றிக் கொண்டார். ராஜேந்திரனுக்குக் கிடைத்த இந்த வெற்றி, என்ன காரணத்தாலோ அவரது மெய்க்கீர்த்திப் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால், திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் இந்த வெற்றி பற்றிய செய்தியைப் பார்க்க முடிகிறது.
புதுச்சேரியைச் சார்ந்த திருவாண்டார் கோவிலில் உள்ள கல்வெட்டிலும் இந்த வெற்றிச் செய்தி பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. “பாரது நிகழப் பாண்டி மண்டலத்து மதுரையில் மாளிகை எடுப்பித்துத் தன் மகன் சோழ பாண்டியன் என்ற பிஷேகஞ் செய்து தண்டாற்சாலைக் கலமறுத்த கோப்பரகேசரி” என்று அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டு இருக்கிறது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
போருக்குப் பிறகு, தனது மகன்களில் ஒருவரை மதுரையின் நிரந்தர ஆட்சிப்பிரதிநிதியாக ராஜேந்திரன் நியமித்தார். சில நாட்களில் பாண்டிய நாட்டை ஆளும் பொறுப்பையும் அவரிடம் ராஜேந்திரன் வழங்கினார். அந்த மன்னருக்காக ராஜேந்திரன் மதுரையில் மிகப் பெரிய அரண்மனையைக் கட்டினார். அந்த அரண்மனையின் எடையால் பாரே அதிர்ந்தது என்று கல்வெட்டுகளில் புகழ்ந்து கூறப்பட்டு இருக்கிறது.
பாண்டிய நாட்டு மக்களின் அபிமானத்தைப் பெற வேண்டும் என்பதற்காக, அங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தனது மகனின் பெயருடன் பாண்டியன் என்பதைச் சேர்த்து, சோழ பாண்டியன் என்ற பெயருடன் அவருக்கு முடிசூட்டினார். சோழ மன்னர்கள் மாறிமாறிப் பரகேசரி, ராஜகேசரி என்ற பெயருடன் தொடர்ச்சியாகப் பட்டம் சூட்டிக் கொண்டதுபோல பாண்டியர்களும் மாறவர்மன், சடையவர்மன் என்று மாறிமாறி பட்டம் சூட்டிக் கொண்டனர்.
அந்த வழக்கத்தின்படி தனது மகனுக்கு ‘சடையவர்மன்” என்ற பட்டத்தை ராஜேந்திரன் வழங்கினார். எனவே அந்த சோழ மன்னர், சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்ற பெயரில், மதுரையில் கி.பி.1018-ம் ஆண்டு முதல் கி.பி.1042-ம் ஆண்டு வரை ஆட்சி செய்து வந்தார். இவ்வாறு பாண்டிய நாட்டில், சோழர் பரம்பரை ஆட்சியை ஏற்படுத்திய பெருமை ராஜேந்திரனுக்குக் கிடைத்தது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7
தனது மகனை பாண்டிய நாட்டின் மன்னராக ஆக்கி மகிழ்ந்த ராஜேந்திரனுக்கு, அதன் பிறகும் போர்களில் இருந்து ஓய்வு கிடைத்தபாடில்லை. ராஜேந்திரன் ஏற்கனவே மேலைச்சாளுக்கியத்தின் இரட்டைபாடி உள்பட பல பகுதிகளைக் கைப்பற்றி இருந்தார். ஆனால் அங்கு அவர் தனது ஆட்சிப் பிரதிநிதியாக யாரையும் அமர்த்தவில்லை. மேலைச்சாளுக்கிய மன்னர் ஐந்தாம் விக்ரமாதித்தனுக்குப் பிறகு அவரது சகோதார் ஜெயசிம்மன் ஆட்சிக்கு வந்தார்.
அவர் தனது முன்னோர்கள் சோழர்களிடம் இழந்த பகுதிகளை மீட்பதில் தீவிரம் காட்டினார். முதல் நடவடிக்கையாக இரட்டைபாடி ஏழரைஇலக்கத்திற்கு அருகே உள்ள வடமேற்கு மைசூர், பெல்லாரி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார். இதனை அறிந்த ராஜேந்திரன் மதுரைப் படையெடுப்பு முடிந்த கையோடு, ஜெயசிம்மனின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக காஞ்சியில் இருந்து மேலைச்சாளுக்கியத்திற்குப் படைகளுடன் புறப்பட்டுச் சென்றார்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-8
கர்நாடக மாநிலம் தாவன்கிரி மாவட்டம் ஹர்பனஹள்ளி வட்டத்தில் உள்ள உச்சங்கி துருகம், அந்தக் காலத்தில் முசங்கி என்று அழைக்கப்பட்டது. அந்த ஊரில் ராஜேந்திரன் படைக்கும் மற்றும் ஜெயசிம்மன் படைக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இந்தப் போரில் ஜெயசிம்மன் தோற்று ஓடினார். அந்தக் காட்சியை திருவாலங்காட்டுச் செப்பேடு கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறது.
“ராஜேந்திரனின் கோபத்திற்குப் பயந்தவனான இரட்ட அரசன், சோழப் படையினரின் பாதத்தூளி பறப்பதைப்போல காடுகளுக்கும், மலைகளின் குகைகளுக்கும் (ஒளிந்துகொள்வதற்காக) விரைந்து சென்றான். சோழப் படை வீரர்களால் கலங்கடிக்கப்பட்ட இரட்ட அரசனின் படை, காற்றின் வேகத்தால் அலைக்கழிக்கப்பட்ட மேகத் தொடர்போல நாசம் அடைந்தது. ராஜராஜனின் மகனான ராஜேந்திரன், துணிவு, வீரம், வெற்றி போன்ற தன்னுடைய குணங்களால் போற்றப்பட்டவனாய் தன் நகரத்தை அடைந்தான்". இவ்வாறு முசங்கி வெற்றியை திருவாலங்காட்டுச் செப்பேடு பதிவு செய்து இருக்கிறது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-9
இரட்டபாடியைக் கைப்பற்றிய சோழப் படைகள், துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்துள்ள கம்பிலித் தோட்டம் என்ற இடத்தை முற்றாக அழித்தனர் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் போரில் ஜெயசிம்மனை வென்ற ராஜேந்திரன், ஜெயசிம்ஹ சாபன்' என்ற விருதினைப் பெற்றதாகக் கரந்தைச் செப்பேடு தகவல் கூறுகிறது.
முசங்கிப்போர் முடிந்து தஞ்சை திரும்பிய ராஜேந்திரனுக்கு, சவால்கள் நிறைந்த, மிகப் பெரிய மூன்று செயல்கள் காத்து இருந்தன. அந்த மகத்தான மூன்று செயல்களும், மன்னர் ராஜேந்திரன் வாழ்விலும், தமிழக வரலாற்றிலும் போற்றப்படும் தாக்கத்தையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தின.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-10
வியப்பான வினோதம்
மன்னர் ராஜேந்திர சோழன், தான் உருவாக்கிய புதிய தலைநகரில் (கங்கை கொண்ட சோழபுரம்) ஆகம விதிகளுடன் சிவனுக்குப் பிரமாண்ட கோவிலைக் கட்டினார். அப்போது நந்தி சிலைக்குப் பின்புறம், சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட பீடத்தில் கொடிமரம் வைக்கப்பட்டது. பிற்காலத்தில் சோழர்களின் அழிவைத் தொடர்ந்து, அந்தக் கொடிமரம் எப்படியோ அங்கு இருந்து அகற்றப்பட்டுவிட்டது.
'சமீபகாலம் வரை பல ஆண்டுகளாக கொடிமரம் இல்லாமல், அந்தக் கோவில் சோபை இழந்து காணப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு, கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவர் பொறியாளர் இரா. கோமகன், தொல்பொருள் இலாகா பொறுப்பு அதிகாரியாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அனுமதியுடன் புதிய கொடிமரம் அமைக்க முயற்சி மேற்கொண்டார். கொடிமரத்துக்கான மரம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-11
இறுதியில் தூத்துக்குடியில் உள்ள மரக்கடை ஒன்றில் தகுந்த மரம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தக்கடையின் உரிமையாளர் இஸ்லாமியர். கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து சென்றவர்கள், அந்த இஸ்லாமியருடன் பேசிக் கொண்டு இருந்தபோது, ராஜேந்திரனின் ஆட்சி நிர்வாகத்திலும், படையிலும் இஸ்லாமியர்கள் இருந்தனர் என்ற தகவலைத் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த மரக்கடை உரிமையாளரான அந்த இஸ்லாமியர்.
“நீங்கள் தேர்வு செய்த மரத்தின் விலை ரூ.10 லட்சம். போக்குவரத்து வாகனச் செலவு ரூ. 3 லட்சம். ஆனால் கோவிலுக்கான கொடிமரம் எனது நன்கொடையாக இருக்கட்டும். வாகனச் செலவு ரூ.3 லட்சம் மட்டும் கொடுத்து கொடிமரத்தை எடுத்துச் செல்லுங்கள்” என்று கூறிவிட்டார். தூத்துக்குடி இஸ்லாமியர் அன்புடன் கொடுத்த கொடிமரம் தான், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகக் கோவிலின் முன்புறம் இப்போது கம்பீரமாக நின்று கொண்டு இருப்பது வினோதம் அல்லவா?.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-12
Related Tags About Chola Nadu
Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.