கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-14

முன்னோர்களால் முடியாததை சாதித்த மன்னர் இராஜேந்திரன்

பாட்டனுக்குப் பாட்டன் காலத்திலிருந்து மீட்க முடியாமல் இருந்த பாண்டிய மன்னரின் குலச் சின்னங்களை மன்னர் ராஜேந்திரன் மீட்டார். இது அவரின் வரலாற்றில் அரும்பெரும் சாதனையாகப் போற்றப்பட்டது. கிங் இராஜராஜன் எந்தப் போரிலும் தோல்வியே காணாதவர் என்ற போதிலும், மேலைச்சாளுக்கிய தேசத்தின் தலைநகர் மாண்யகேடத்தைக் கைப்பற்ற முடியவில்லை என்பதும், Srilanka மன்னரிடம் பாண்டிய மன்னர் அடைக்கலமாகக் கொடுத்த பாண்டிய மன்னரின் குலச் சின்னங்களை மீட்க முடியவில்லை என்பதும் அவருக்கு கவலைகளாக இருந்தன.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
கடந்து சென்ற 70 ஆண்டுகளில் தன்னுடைய முன்னோர்களால் மீட்க முடியாத பாண்டிய மன்னரின் குலச் சின்னங்களை எப்படியும் கைப்பற்றியே தீர வேண்டும் என்று கிங் இராஜராஜன் விரும்பினார். இதைத் தொடர்ந்து இராஜராஜன், கி.பி.991-ம் வருடம் ஸ்ரீலங்கா மீது படையெடுத்துச் சென்று போர் செய்து அந்த நாட்டை சோழ மன்னர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
பொலன்னருவ என்ற இடத்தில் சிவன் கோவில் ஒன்றையும் கட்டினார். அப்போது அரசனாக இருந்த 5-ம் மகிந்தன், போரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, இராஜராஜனுக்குப் பயந்து தென் பகுதியில் உள்ள ரோகணா என்ற அடர்த்த காட்டுப் பகுதிக்குச் சென்று தலைமறைவு வாழ்க்கையை நடத்தினார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
அவருடன் அவரின் ஆதரவாளர்களும் தங்கி இருந்தார்கள். சில காலம் அமைதியாக இருந்த அவர்கள், இரகசியமாகப் படையை திரட்டி, சோழர்களை எதிர்ப்பதற்கான காலத்திற்காகக் காத்து இருந்தார்கள். கி.பி.1014-ம் வருடம் மன்னர் இராஜராஜன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இளவரசராக அறிவிக்கப்பட்டு இருந்த இராஜேந்திரன், சோழப் பேரரசின் மன்னராக (King) முடிசூட்டிக் கொண்டார்.
மன்னர் இராஜேந்திரனின் திறமையை குறைவாக மதிப்பிட்டான் மகிந்தன். So, சோழர்களைத் தாக்க இதுதான் சரியான தருணம் என்று கருதினான். இதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்காவின் வடபகுதியில் சோழப் படைக்குச் சொந்தமாக இருந்த பல பகுதிகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றத் தொடங்கினான். இதை அறிந்த மன்னர் இராஜேந்திரன், ஸ்ரீலங்காவில் இருக்கும் மகிந்தனின் கொட்டத்தை முழுமையாக அடக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
இதற்காக கி.பி.1017-ம் வருடம், சோழர்களின் கடற்படை (Navy) மீண்டும் ஸ்ரீலங்காவிற்குப் பயணமானது. இந்த யுத்தத்திற்கு இராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஸ்ரீலங்காவிற்குச் சென்ற சோழப் படைகள், காடுகளில் ஒளிந்து இருந்த மகிந்தனையும் மற்றும் அவரது படைகளையும் வேட்டையாடித் தாக்கத் தொடங்கினார்கள். இந்தப் போரில் மகிந்தனின் படை வீரர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள். உயிர் பிழைத்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
மகிந்தனின் படைகள் தப்பி ஓடியதைத் தொடர்ந்து, அந்த அரசரின் அரண்மனையை (Palace) சோழப் படைகள் சூறையாடினார்கள். "ஸ்ரீலங்கா மன்னர்கள் பரம்பரையாக அணியும் தங்கக் கிரீடம் (Gold Crown), ஸ்ரீலங்கா மன்னருக்கு கடவுள் வழங்கியதாகக் கருதப்படும் வைரம் (Diamond) பதித்த கைக்காப்பு, அரண்மனை பொக்கிஷ சாலையில் இருந்த ஏராளமான நகைகள் (Jewels), யாராலும் உடைக்க முடியாதது என்ற சிறப்புப் பெற்ற வாள் (ஆயுதம்) உள்பட அரண்மனையில் (Palace) இருந்த அனைத்தையும் இராஜேந்திரன் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றார் என்று" ஸ்ரீலங்காவின் வரலாற்று நூலான 'மகாவம்சம்' தெரிவிக்கின்றது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
புத்தரின் புனிதச் சின்னங்கள் (Symbols) வைக்கப்பட்டு இருந்த இடங்களை சோழ Army நாசப்படுத்தியதாகவும், அங்கு இருந்த தங்க (Gold) சிலைகள், விலை உயர்ந்த (Precious) பொருட்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்துக் கொண்டதாகவும், அவர்களது செயல், இரத்தத்தை உறிஞ்சும் யக்ஷர்கள் நடவடிக்கை போல இருந்தது என்றும் மகாவம்சம் சொல்லி இருக்கின்றது. இந்தப் போரில் தோல்வியுற்ற மகிந்தன், மீண்டும் தப்பி ஓடி காடுகளுக்குள் தஞ்சம் அடைந்து கொண்டார்.
கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History In Tamil, Part-14
இவரை இப்படியே விட்டால் மீண்டும், மீண்டும் தொல்லை தருவார் என்று கருதிய இராஜேந்திரன், தந்திரமான ஓர் ஏற்பாட்டைச் செய்தார். மகிந்தனுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, அவருடன் ஓர் உடன்பாடு செய்துகொள்ள விரும்புவதாகத் தூது அனுப்பினார். ஒளிந்து இருந்த மகிந்தன், இந்த அழைப்பு உண்மையானது என்று நம்பினார். ஆகையால் காடுகளில் இருந்து வெளியே வந்தார். மன்னர் இராஜேந்திரனைச் சந்திக்க ஆவலுடன் விரைந்தார்.
மன்னர் இராஜேந்திரன் முன்பு கொண்டு வரப்பட்ட மகிந்தன், உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவரோடு அவரின் மனைவிகள், மகள் ஆகியோரும் சிறைப் பிடிக்கப்பட்டார். மகிந்தனின் படையில் இருந்த குதிரைகள், யானைகள், மற்றும் அவரது அனைத்து வாகனங்களும் கைப்பற்றப்பட்டன. 'தன்னுடைய மனைவிகளும், மகளும் சிறைப் பிடிக்கப்பட்டதாலும், செல்வங்கள் எல்லாத்தையும் இழந்ததாலும் பயந்து போன மகிந்தன், மன்னர் இராஜேந்திரனின் பாதங்களில் சரண் அடைந்தார்' என்று கரந்தைச் செப்பேடு, இந்த நிகழ்வைப் பதிவு செய்து இருக்கின்றது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
80 வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீலங்கா மன்னரிடம் பாண்டிய மன்னர் கொடுத்து வைத்திருந்த பாண்டியர்களின் குலச் சின்னங்களான இந்திர ஆரம், மணிமகுடம், ஆகியவற்றை மகிந்தன் இரகசிய இடத்தில் பதுக்கி வைத்து இருந்தார். அவற்றையும் இராஜேந்திரன் கைப்பற்றினார். தனது பாட்டனுக்குப் பாட்டன் காலத்தில் இருந்து மீட்க முடியாமல் இருந்த பாண்டிய மன்னரின் குலச் சின்னங்களை King இராஜேந்திரன் மீட்டது, அவரின் வரலாற்றில் அரும்பெரும் சாதனையாகப் போற்றப்பட்டது.
இந்த யுத்தத்தின் இறுதியில், ஸ்ரீலங்கா முழுவதும் சோழப் படை வசம் ஆனது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பொலன்னருவ என்ற இடத்தில் தன்னுடைய தாயார் வானவன்மாதேவி பெயரில் ஒரு கோவிலை (Temple) இராஜேந்திரன் கட்டினார். திரிகோண மலையில், சாதாரண நிலையில் இருந்த பத்திரகாளி கோவிலை (Temple) பெரிய அளவில் கட்டினார். அந்தக் கோயிலில் மன்னர் இராஜேந்திரனின் போர் வெற்றிகள் (Victory) கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டன.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
பொலன்னருவ பொலன்னருவ என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டுகளிலும், கொழும்பு நகர அருங்காட்சியகத்தில் (In the museum) உள்ள கல்வெட்டிலும் (Inscription), 'திருமன்னி வளர' என்று தொடங்கும் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி வாசகங்கள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் (Inscription) சேதம் அடைந்த நிலையில் இருந்தாலும், ஸ்ரீலங்காவில் இராஜேந்திரன் முழு வெற்றி பெற்றதற்கு அடையாளங்களாகத் திகழ்கின்றன. பொலன்னருவ நகரின் அருகே இருக்கும் சிவன் and விஷ்ணு ஆலயங்கள், இராஜேந்திரன் காலத்தில் விரிவுபடுத்திக் கட்டப்பட்டவை என்பதை அவற்றின் கட்டுமானங்கள் எடுத்துக் காட்டுகிறது.
யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா மன்னர் மகிந்தன், அங்கிருந்து தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டார். தமிழகத்தில் 12 வருடங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, மகிந்தன் தமிழ் மண்ணிலே மரணம் அடைந்தார். மன்னர் மகிந்தன், அவரின் மனைவிகள், மகள் ஆகியோர் சோழப் படைகளால் கைது செய்யப்பட்ட போதிலும், King மகிந்தனின் மகன் கஸ்ஸப்பா எப்படியோ சோழப் படையினரின் கண்ணில் சிக்காமல் தப்பிவிட்டார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7
மகிந்தனின் விசுவாசிகள், சிறுவனாக இருந்த நேரத்தில் கஸ்ஸப்பாவை காட்டுக்குள் கடத்திச் சென்று இரகசியமாக வளர்த்தார்கள். அங்கே படை பலத்தையும் உருவாக்கி பயிற்சி செய்து வந்தார்கள். இராஜேந்திரன் யுத்தம் நடத்திய 12 ஆண்டுகளுக்குப் பிறகு, காட்டுக்குள் ஒளிந்திருந்த மகிந்தனின் தனயனும், அவரின் ஆதரவாளர்களும், காட்டைவிட்டு வெளியே வந்து, தாங்கள் இழந்த பகுதிகளை மீட்க சோழப் படைகளுடன் (Army) யுத்தம் நடத்தினார்கள்.
கொரில்லா தாக்குதல் என்ற முறையில் நடைபெற்ற இந்தப் போர், ஆறு மாதங்ககளுக்கு நீடித்தது. இதில் சோழப் படையினர் (Soldiers) ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதாகவும், கடைசியில் ரோகணா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளை சிங்களப் படைகள் கைப்பற்றிக் கொண்டன என்றும், ரோகணாவைத் தலைநகரமாகக் கொண்டு, முதலாம் விக்கிரமபாகு என்கிற பெயரில் கஸ்ஸப்பா அங்கே சில ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் ஸ்ரீலங்கா வரலாறு சொல்கிறது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-8
ஸ்ரீலங்காவின் மற்ற பகுதிகளையும் மீட்க வேண்டும் என்று விக்ரமபாகு தொடர்ந்து முயற்சி செய்தபோது, அவர் உடல்நலம் குன்றி மரணம் அடைந்தார். விக்ரமபாகுவுக்கு நேரடி வாரிசு எவரும் இல்லாததால், ரோகணாவில் ஆட்சியைக் கைப்பற்ற பலருக்கு இடையே போட்டி நடைபெற்றது. 10 வருட காலம் இந்தக் குழப்பம் நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பல இளவரசர்கள் சோழப் படைகளால் கொல்லப்பட்டார்கள்.
இதற்கிடையே தமிழகத்தில் சோழப் படைக்கு சேரர்களும், பாண்டியர்களும் நெருக்கடி கொடுத்ததால், சோழர்களால் ஸ்ரீலங்கா மீது அதிக கவனம் செலுத்த முடியவில்லை. இறுதியாக 1055-ம் வருடம் விஜயபாகு என்பவர் ரோகணாவில் ஆட்சிக்கு வந்து, சோழர்களுடன் யுத்தம் செய்து இலங்கை முழுவதையும் தன்னுடைய ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்து 17 வருடங்கள் ஆட்சி செய்தார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-9
பாண்டிய மன்னர் குலச் சின்னங்களை மீட்க வேண்டும் என்பதுதான் ஸ்ரீலங்காவில் இராஜேந்திரன் நடத்திய போருக்குக் காரணமாக இருந்தது என்பது போல, சேர மன்னர்கள் வழி வழியாகப் பயன்படுத்திய குலச் சின்னங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பது, King இராஜேந்திரன் நடத்திய மேலும் ஒரு முக்கியமான கடற்போருக்கு அதாவது கடல் கடந்து போர் புரிய காரணமாக அமைந்துவிட்டது.

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook