உலகத்தின் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆபத்தில் உள்ளதா? Facts About Amazon Rainforest | ThaenMittai Stories

உலகின் நுரையீரல்

எதைச் செய்ய கூடாது என்று சொல்கிறோமோ! அதை தான் செய்ய துடிப்பார்கள். நம்மை நோய்வாய்ப்படுத்தும் செயல்களைச் செய்யாதீர்கள் என்று சொல்வார்கள். உதாரணமாக, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்கிறோம். ஆனால் புகைபிடிப்பவர்கள், மற்றும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதா என்ன?.

Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் மனிதனின் நுரையீரலை சேதப்படுத்தும், மேலும் இது மிகவும் ஆபத்தானது. பலர் இந்த தவறை செய்கிறார்கள், ஆனால் இது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இருப்பினும், உலகின் நுரையீரல் ஆபத்தில் உள்ளது. என்னாது! உலகத்தின் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆபத்தில் உள்ளதா? உலகத்திற்கு நுரையீரலா? ஆம்... வாருங்கள் பார்ப்போம்.

உலகின் கூரை

இந்தியாவின் அருகில் உள்ள உயரமான திபெத்திய பீடபூமி உலகின் கூரை என்று அழைக்கப்படுகிறது. அமேசான் மழைக்காடு "உலகின் நுரையீரல்" என்று அழைக்கப்படுகிறது. ஒரு காடு என்பது சாதாரண காடுகளை விட அதிகம்; இது 70 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு பெரிய பகுதி. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பை விட இரண்டு மடங்கு அதிகம்.

Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை
அமேசான் மழைக்காடுகள் ஒரு பெரிய காடு. இது ஒன்பது வெவ்வேறு நாடுகளில் அமைந்துள்ளது, பெரும்பாலானவை பிரேசிலில் உள்ளன. பிரேசில், பொலிவியா, பெரு, கொலம்பியா, கயானா, பிரெஞ்ச் கயானா, வெனிசூலா, சுரினாம், ஈக்வடார் மொத்தம் 55 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமேசான் மழைக்காடுகள் உள்ளன. இது உலகில் உள்ள மொத்த காடுகளின் பரப்பளவில் 59.1 சதவீதம் இங்கே தான் உள்ளது.
பெரு நாட்டில் 12 சதவீதமும், பொலிவியா நாட்டில் 7.7 சதவீதமும், கொலம்பியா நாட்டில் 7.1 சதவீதமும், வெனிசுலா நாட்டில் 6.1 சதவீதமும், கயானா நாட்டில் 3.1 சதவீதமும், சுரினாமில் 2.5 சதவீதமும், பிரெஞ்ச் கயானா நாட்டில் 1.4 சதவீதமும், ஈக்வடாரில் 1.0 சதவீதமும் உள்ளன.

Read Also: How To Get Rid of Stress and Succeed?, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?

உலகின் மிகப்பெரிய காடு

அமேசான் மழைக்காடுகள் உலகின் மிகப்பெரிய காடு மற்றும் இது மற்ற எந்த நாட்டையும் விட அதிக மரங்களைக் கொண்டுள்ளது. மழைக்காடுகளில் 39 பில்லியன் மரங்கள் இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, அமேசானில் வேறு எங்கும் காணப்படாத பல விலங்கு மற்றும் தாவர இனங்கள் வாழ்கின்றன. 16,000 வெவ்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. இவற்றில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் மனிதர்களால் இன்னும் அறியப்படாதவைகள் ஆகும்.
இங்குள்ள காடுகளில் பல்வேறு வகையான விலங்குகள், வினோத பறவைகள், பூச்சி வகைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட கொசு வகைக்கள் உள்ளன. மேலும் இரத்தக் காட்டேரி வெளவால்கள் மற்றும் கொடிய விஷத்தைக் கொண்டுள்ள பாம்புகளும் உள்ளன. நாம் இதுவரை பார்த்திராத மேலும் சில உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. அவற்றை எப்படி பெயர் வைத்து அழைப்பது என்று கூட தெரிவதில்லை.

Read Also: தொழில் முனைவோர்க்கான தகவல்கள்
இங்குள்ள ஆறுகளில் உள்ள "ஈல்" எனப்படும் மீன்கள் தங்கள் உடலில் மின்சாரத்தை பயன்படுத்தும் சிறப்பு வாய்ந்தது. மின்சாரத்தை பாய்ச்சி மனிதர்களைக் கொல்லக்கூடிய தன்மை கொண்டது. பூமியில் உள்ள பறவைகளில் ஐந்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்றன, மேலும் அனகோண்டா பாம்புகளும் இந்த பகுதியில் காணப்படுகின்றன.
அமேசான் மழைக்காடு ஆண்டு முழுவதும் அதிக மழையைப் பெறுகிறது மற்றும் அமேசான் நதி அதன் வழியாக பாய்கிறது. ஆற்றில் ஏராளமான துணை நதிகள் உள்ளன. அதனால் எப்போதும் நிறைய தண்ணீர் இருக்கும். காடு அடர்ந்த மரங்களால் ஆனதால், பெரும்பாலான நிலங்கள் சூரியன் வெளிச்சத்தைப் பார்ப்பதில்லை. எண்ணில் அடங்காத இயற்கை வளங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன.

Read Also: சாதிக்க தூண்டும் தங்க தூண்டில் கதை

உலகின் மிகப்பெரிய பாலைவனம்

ஒவ்வொரு ஆண்டும், சஹாரா பாலைவனத்தில் இருந்து மேற்கில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கி வீசும் புழுதிக்காற்று துகள்களால் 18.2 மில்லியன் டன் பாஸ்பரஸை அமேசான் காடுகளுக்கு கொண்டு செல்கின்றன. இந்த காற்று தாவரங்கள் வளர பெரிதும் உதவி புரிகின்றன. ஒரு காலத்தில், அமேசான் பகுதி முழுவதும் மரங்களால் மூடப்பட்டிருந்த வனப் பகுதியாக இருந்தது.

Facts About Amazon River, ThaenMittai Stories
சுமார் பதின்மூன்றாயிரம் ஆண்டுகளாக இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்கள் முதலில் மத்திய அமெரிக்காவிலிருந்து வந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அமேசான் பகுதியில் 400 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடியினர் வாழ்கின்றனர், மேலும் ஒவ்வொரு குழுவும் வெவ்வேறு மொழி பேசுகிறது. சில குழுக்கள் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, மற்ற குழுக்களுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை.
மிகப் பெரிய காட்டுப் பகுதி என்பதால் இந்தப் பகுதியில் மருத்துவமனை இல்லை. அவர்களாகவே மருத்துவம் பார்த்து கொள்வார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு 40,000 பேர் மலேரியா மற்றும் பிற விசித்திரமான நோய்களால் இறந்தனர். அந்த பகுதியில் தற்போது 2.5 இலட்சம் பழங்குடியினர் வாழ்வதாக தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் ஆடை அணிவதில்லை. சிலர் ஆடைகளுக்குப் பதிலாக உடலை மறைக்க எதையாவது பயன்படுத்துவார்கள்.

Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?

அமேசான் பழங்குடியினர்

அமேசான் பழங்குடியினர் எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருப்பார்கள். எவ்வளவு வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் அல்லது காற்று அடித்தாலும் அப்படியே இருக்கிறார்கள். அவர்கள் உணவுக்காக வேட்டையாடுகிறார்கள். மேலும் அவர்கள் புல், இலைகள் மற்றும் ஓலைகளால் செய்யப்பட்ட குடிசைகளில் வாழ்கின்றனர். அமேசான் பழங்குடியினரைப் பற்றி மேலும் அறிய சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இன்னும் போதுமான வெற்றி கிடைக்கவில்லை.
வெளியாட்களை பார்த்தால் வில் அம்பு எய்து கொன்று விடுவதால் அவர்களிடம் வெளியாட்கள் யாரும் நெருங்குவதில்லை. தரை வழியாக அவர்களை நெருங்க முடியாததால் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி அவர்களின் இருப்பிடத்திற்குச் செல்ல முயன்றனர். ஆனால் அப்போதும் அவர்கள் ஹெலிகாப்டரை நோக்கி அம்புகளை எய்தனர். எனவே அதுவும் பலனளிக்கவில்லை. காட்டில் உள் பகுதி அல்லாத சில சிறிய கிராமங்கள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா மற்றும் ஆராய்ச்சிக்காக அவ்வப்போது இங்கு வந்து செல்கின்றனர்.

Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
அந்தக் குழுவினர் படகுகளில் காட்டுக்குள் ஒரு சிறு பயணம் செல்கிறார்கள். ஓரிரு நாட்கள் கூடாரங்களில் தங்கிவிட்டு திரும்புகிறார்கள். தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சிலர், சில பழங்குடியின மக்களை வனப்பகுதியில் உள்ள குடிசைகளில் இருந்து வெளியே அழைத்துச் சென்று, வெளி உலகம், மற்றும் நவீன வசதிகள் போன்றவற்றைக் காட்டினர். வெளி உலகில் வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என்பதைப் பார்த்த பிறகு, அனைவரும் தங்கள் குடிசைகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

மரங்கள் மனிதனின் நெருங்கிய நண்பன்

அவ்வளவுதான் அறிந்துகொள்ள முடிந்தது. மற்றபடி அமேசான் காடுகளை பற்றியோ, அங்கே உள்ள வளங்களை பற்றியோ, அல்லது அங்கே வசிக்கும் பழங்குடியினர் பற்றியோ நாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று முக்கியமானது, ஏனெனில் அதில் ஆக்ஸிஜன் உள்ளது. தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை (CO2) எடுத்து கொண்டு ஆக்ஸிஜனை(O2) வெளியிடுகின்றன. அதாவது, மரங்கள் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உதவுகின்றன. அந்த வகையில் மரங்கள் மனிதனின் நெருங்கிய நண்பன் என்றே சொல்லலாம்.

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
உலகிற்குத் தேவையான ஆக்ஸிஜனில் 20 சதவிகிதம் அல்லது அதில் ஐந்தில் ஒரு பங்கை அமேசான் காடு வழங்குகிறது. அதனால்தான் அமேசான் காடு "உலகின் நுரையீரல்" என்று அழைக்கப்படுகிறது. அந்த உலகின் நுரையீரலுக்கு சமீபகாலமாக ஆபத்து ஏற்பட்டு உள்ளது. உலகத்தில் உள்ள நிறைய எரிமலைகள் மூலம் ஆண்டுக்கு நான்காயிரம் பில்லியன் டன் கிரீன்ஹவுஸ் வாயுக்களை உருவாக்குகின்றன. அந்த பசுமை இல்ல வாயுக்கள் காற்றில் கலந்து விடுகிறது.

Facts About Amazon Rainforest, ThaenMittai Stories
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5% (அல்லது சுமார் 16 மில்லியன் டன்கள்) 'பசுமைக்குடில்’ வாயுக்கள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அமேசான் மழைக்காடுகளால் கிரகித்துக்கொள்கின்றன. அமேசான் மழைக்காடுகள் பெரிதும் அழிக்கப்பட்டு வருகின்றன. அவை அடுக்குமாடி குடியிருப்புகள், பண்ணைகள் மற்றும் சாலைகள் மற்றும் கட்டுமானத்திற்கான தொழில் போன்றவற்றை செய்வதற்காக அழிக்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சி என்கிற பெயரில் உலக நாடுகளால் அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன.
1985 முதல் 2016 வரையில் கடந்த 31 ஆண்டுகளில், 1.21 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, அவ்வப்போது தீ விபத்துகளும் நடக்கின்றன. பிரேசிலில், 2019 இல், அமேசான் மழைக்காடுகளில் சுமார் எழுபதாயிரம் தடவைக்கு மேல் தீ விபத்துகள் ஏற்பட்டன. சில நேரங்களில் அவை தற்செயலாக நிகழ்கின்றன. காடுகளைப் பாதுகாக்க பிரேசில் ஏற்கனவே தனிச் சட்டங்களை இயற்றியுள்ளது, எனவே இது ஒரு புதிய விஷயம் அல்ல.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்

அமேசான் காடுகளை அழித்ததால்

அமேசான் காடுகளை பாதுகாக்கும் சில சட்டங்களை தளர்த்துவதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அறிவித்துள்ளார். அமேசான் காடுகளை பாதுகாப்பது முக்கியம் என்று கூறும் அவர்கள், அமேசான் காடுகளை சிலவற்றை அழிக்காமல் நாட்டில் குடியிருப்புகளையும், தொழிற்கூடங்களையும் அமைக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். பிரேசிலில், 80% கால்நடை பண்ணைகள் காடுகளை அழிப்பதன் மூலம் உருவாக்கப்பட்டன. அதாவது, உணவுக்காக விலங்குகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் நிலம் ஆனது காடுகளை அழித்து உருவாக்கப்பட்டவை என்று சர்வே சொல்கிறது.
பிரேசில் 2018-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.49 ஆயிரத்து 200 கோடிக்கு இறைச்சி ஏற்றுமதி செய்தது. இது அமேசான் மழைக்காடுகளின் அளவு குறைவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் அமேசான் காடுகளின் பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. காடுகளை அழிப்பதை நிறுத்தாவிட்டால், புவி வெப்பமடைவதைத் தடுக்க முடியாது என்றும், பூமியின் வெப்பம் 4 டிகிரி அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
காடுகள் அழிக்கப்படுவதின் காரணமாகவும் மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றம் காரணமாகவும் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
சில நாடுகள் அமேசான் மழைக்காடுகளை பாதுகாக்க சில யோசனையை தெரிவிக்கின்றன. அமேசான் காடுகளில் புதிய குடியிருப்புகளை உருவாக்குவதை தவிர்த்தல், சுரங்க நடவடிக்கைகள், எண்ணெய் தோண்டுதல், காகித உற்பத்திக்காக மரங்களை வெட்டுதல், கால்நடை பண்ணைகள் அமைத்தல் மற்றும் இறைச்சி நுகர்வு ஆகியவற்றைத் தவிர்த்தல் மூலம் பாதுகாக்கபட வேண்டும் என்று முன்மொழிகின்றன. இது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை.

Facts About Amazon forest, ThaenMittai Stories
காடு உயர்ந்தால் நாடு உயரும் என்று சொல்வார்கள். காடு ஆரோக்கியமாக இருந்தால் நாடும் ஆரோக்கியமாக இருக்கும். காடு அழிந்தால் மழைவளம் குறைந்து நிலம் பாலைவனமாகும். மனிதர்கள் இல்லாமல் மரம், செடி, கொடிகள் வாழலாம். இருப்பினும், மரங்கள் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல; அது அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. இருப்பினும், மனிதர்களுக்கு மட்டுமே அதில் ஏகபோகம் உரிமை கொண்டாடுகிறார்கள். பகுத்தறிவு உள்ள மனிதனைத் தவிர எந்த உயிரினமும் இயற்கையை சேதப்படுத்துவதோ; அழிப்பதோ கிடையாது.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
மனிதர்கள் காடுகளை அழித்து குடியேற்றங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நீர் வழங்கல்களை உருவாக்குகிறார்கள். காடுகளை அழிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றன. மரங்களின் மேல் கிளைகளில் இருந்து அடி கிளைகளை வெட்டுவது உங்களுக்கு நீங்களே குழி தோண்டுவது போன்றது, மேலும் இது மிகவும் மோசமான செயல்.
எதிர்காலத்தில், மக்கள் தங்கள் செயல்களுக்கு வருந்துவார்கள், இயற்கை அவர்களைப் பார்த்து சிரிக்கும். ஆனால் அந்த புன்னகைக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு, கெட்ட பிறகு ஞானியாக ஆவதால் யாருக்கு லாபம்? எனவே இயற்கையை நேசிப்போம்; உலகைக் காப்போம், ஏனென்றால் எதிர்காலத்தில் நம் செயல்களுக்கு வருத்தப்படாமல் இருக்க ஒரே வழி இதுதான்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook