வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள் | தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள் | Motivational Story in Tamil

மகிழ்ச்சியை தக்க வையுங்கள்

மகிழ்ச்சி தான் வாழ்க்கையை வசந்தமாக்கும் திறவுகோல். எந்த வேலையாகவும், சின்ன விஷயமாகவும் இருந்தாலும் கூட அதை ரசித்து சந்தோஷமாக செய்ய தொடங்க வேண்டும். அப்போதுதான் அந்த காரியங்களில் முழு கவனத்தையும் செலுத்த முடியும். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டிருப்பவர்கள் எந்தவொரு விஷயத்தையும் சுலபமாக கையாண்டுவிடுவார்கள். பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் சாதுரியமாக சமாளித்து விடுவார்கள். சட்டென்று மன நிம்மதியை இழக்க மாட்டார்கள். மகிழ்ச்சியை தக்கவைத்துக் கொள்வார்கள்.

Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை
மகிழ்ச்சியான மன நிலையில் இருப்பவர்களிடம் மன அழுத்தம் எட்டிப்பார்க்காது. அதனால் மகிழ்ச்சியான மனநிலையை தக்க வைப்பதை அன்றாட கடமையாக்கி கொள்ள வேண்டும். எப்போதும் மன இறுக்கமாக இருப்பவர்களிடம் மகிழ்ச்சி ஒருபோதும் நிலைத்திருக்காது. அவர்களிடம் நெருங்கி பேசுவதற்கே பலரும் பயப்படுவார்கள். அதனால் அவர்களுடன் நட்புறவை பேணுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கும்.
அலுவலகங்கள், பொது இடங்கள், உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் அவர்களை தேடிச் சென்று நலம் விசாரிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். வீட்டில் கூட தனிமை சூழலுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுவிடும். அவர்களிடத்தில் குழந்தைகள் கூட சகஜமாக பேசுவதற்கு தயங்குவார்கள். பெண்களிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு குடிகொண்டிருக்கும். எப்போதும் புன்னகை மாறாமல் காட்சி அளிக்கும் பெண்களின் வீடு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும்.

அவர்களிடம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நெருங்கி பழகுவார்கள். அவர்களின் மனங்களில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். அத்தகைய சந்தோஷமான மனநிலையும், திருப்தி அடையும் மனப் பக்குவமுமே வாழ்க்கையை வசந்தமாக்கும். இத்தகைய எதார்த்தத்தை புறக்கணித்து விட்டு பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் வாழ்பவர்கள் எளிதில் மனக்குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். மனக்கவலை, மனக்குழப்பம் இல்லாமல் இருந்தாலே மகிழ்ச்சி எட்டிப்பார்க்கும்.
சந்தோஷம்தான் வாழ்வின் அடிப்படை தேவை. கவலை, துயரம், கோபம், ஆக்ரோஷம், விரக்தி இவையெல்லாம் உடல் நலனையும், மன நலனையும் பாதிக்கக்கூடியவை. வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்கு 'மகிழ்ச்சி' எனும் கடலில் மூழ்கி நிம்மதி’ எனும் முத்தெடுக்கும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

Read Also: வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?

எதில் மகிழ்ச்சி இருக்கிறது...?

நீங்கள் மென்மையான (Soft) சிவப்பு கம்பளத்தில் (Red Carpet) நடந்தாலும், உங்கள் கால்களில் முட்செருப்பு அணிந்திருந்தால் (Wear) உங்கள் பயணம் (Journey) வேதனையும், வலியும் மிக்கதாக தான் இருக்கும். இதுவே நாம் எத்தகைய முட்புதரில் நடந்தாலும், நாம் கால்களில் மிருதுவான, நல்ல உறுதியான, செருப்பு அணிந்திருந்தால், நம்முடைய நடைப்பயணம் பயம் இல்லாத, மற்றும் வலி இல்லாத இனிமையான (Happy) பயணமாக அமையும்.
அது போல் எந்த சூழ்நிலையிலும் நாம் மனதை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு எதிர்மறை நிகழ்வையும் கடக்கும்போதும் அதை பயமாக, உணர்வுப் பூர்வமான பிரச்சினையாக மட்டும் மனதில் கொள்ளாமல், அதனை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பார்த்து, பிரச்சினைக்கான தீர்வையும் சேர்த்து யோசியுங்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் பயம் இல்லாமல் அதற்கான தீர்வுகளை சிந்திக்காமல் அதில் உள்ள குறைகளை உற்றுநோக்கிப் பார்க்க வேண்டும்.

அப்போது எதெல்லாம் சரியாக இல்லை என்பதை அறியலாம். அந்த மாதிரியான விஷயங்களை தேடிப் பிடிப்பது மட்டுமல்லாமல், அதை மற்றவர்களிடம் சொல்லிக் காட்டுவதற்காக மனம் பாதுகாப்பாக சேர்த்தும் வைத்துக் கொள்ளும். இவை எல்லாம் எதிர்மறை எண்ணங்களாகும். ஒருவர் தன் மனதில் இதுபோல் எதிர்மறையான எண்ணங்களை குவிக்கும்போது, அவர் மூளையில் இருக்கும் சுரப்பிகள் தங்கள் வேலையை செய்ய தொடங்கி அதன் தாக்கத்தை உடலில் ஏற்படுத்திவிடும்.
ஒரு நாளில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் (Thoughts) நம் மனதில் எழுகின்றது. இவற்றில் பெரும்பாலும் ஒரே (Same) மாதிரியான எண்ணங்களே (Thoughts) திரும்பத் திரும்ப (Again to Again) சுழன்று வரும். அந்த எண்ணங்களை (Thoughts) கொஞ்சம் கவனத்தோடு (With Care) கையாண்டு நேர்மறை எண்ணங்களை (Positive Thoughts) மட்டும் நிலைநிறுத்திக் கொண்டால் நமக்கு எப்போதும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
Motivational Story in Tamil, Happy Life
உண்மையான மகிழ்ச்சி என்பது, நமக்கு என்ன கிடைக்கிறது என்பதில் இல்லை. கிடைத்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. ஒவ்வொரு பொழுதும் பயத்திலும், பரபரப்பிலும், இயலாமையிலும் இறுகிப்போகாமல் நம் இயல்பை தொலைக்காமல் இருப்பதில் தான்உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

மன இயல் பயிற்சி

எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்குள் ஏதாவது ஒரு சங்கடமான நிகழ்வுகளைப் பற்றிய எண்ணங்கள் Thoughts தோன்றலாம். அப்படி Thoughts ஆரம்பிக்கும் போதே “Pattern Interruption” எனும் மன இயல் முறைப்படி சட்டென்று மேலே அண்ணாந்து பார்க்கலாம். அப்படி அண்ணாந்து பார்த்துக் கொண்டே அந்த எதிர்மறை எண்ணங்களுக்கும் (நெகடிவ் Thoughts) அண்ட் உங்களுக்கும் சற்றும் சம்பந்தமே இல்லாத வேறு ஏதாவது ஒன்றை நினையுங்கள். வேறு ஏதாவது ஒரு நேர்மறை எண்ணங்களை மனதில் புகுத்த வேண்டும்.

இந்த வகையில் எதிர்மறை எண்ண (Negative Thoughts) சுழற்சி தடைபட்டு நேர்மறையான எண்ணங்கள் (Positive Thoughts) மனதில் எழும். இந்த பயிற்சியின் மூலம் உங்களுக்குள் சுழற்சியாக எழும் எந்த மாதிரி எண்ணங்களையும், உங்கள் தேவைக்கேற்ப நினைக்கவும், நிறுத்தவும், திசை திருப்பவும் கூடிய வகையில் கட்டுப்பாடோடு ஒழுங்கு செய்யலாம்.
மூளைக்கு சவால் கொடுக்கும் செயல்களில் ஈடுபடுவது நல்லது. சுடோகு, புதிர், சதுரங்கம் போன்றவை மூளைக்கு வேலை கொடுக்கும் சிறந்தனப் பயிற்சிகளாக விளங்குகின்றன. அதே நேரத்தில் மூளைக்கு போதுமான நேரம் ஓய்வு கொடுக்கவும் மறக்கக்கூடாது. தினமும் 8 மணிநேரம் தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவது மூளைக்கு புத்துணர்வு அளிக்கும். சத்தான உணவை சாப்பிடுவதோடு அதற்கு ஏற்ற உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.

வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகள் மன நல குறைப்பாட்டை தடுக்க உதவும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. தியானம் செய்வதும் வயது தொடர்பான நினைவாற்றல் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க உதவும். குறிப்பாக இளம் வயதிலேயே ஞாபக மறதியால் தடுமாறுபவர்களுக்கு தியானம் சிறந்த நிவாரணியாக அமையும். நீண்டகாலமாக ஞாபக மறதியால் அவதிப்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமானது.

வாழ்விற்கு வழிகாட்டும் சிந்தனை வரிகள்

வருடம் முடிகின்ற மாதத்தில் முதல் நாளும் உண்டு, முடிவு நாளும் உண்டு.
தொடக்கமும், முடிவும் தொடர்ந்து கொண்டே இருப்பதால் தான்
நம்மால் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க முடிகின்றது.
நீண்ட பயணத்திற்கு சின்ன சின்ன தொடக்கமும், முடிவும் தேவை!.

தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்படுங்கள், தோல்வி என்பதே இல்லை!.
தொடக்கத்திலிருந்தே விடாமல் முயற்சி செய்துக்கொண்டே
செயல்படுபவன் இறுதியில் வெற்றியை அடைகின்றான்.
ஒவ்வொரு வெற்றியும் ஒரு தொடக்கம் தான் முடிவல்ல!!
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook