Life Struggle Stories In Tamil | வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை!

வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை

வாழ்க்கை தருகின்ற ஒவ்வொரு நொடியையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நாம் காலத்தை சரியான வழியில் செலவழித்து வாழ்ந்திடல் வேண்டும். வாழ்க்கையில் நிறைய மனிதர்கள் Time-ஐ சரியான திசையில்/வழியில் செலவு செய்வதை மறந்து கோல்டன் டைம் இப்படி வீணடித்து விட்டோமே என பின்னால் வருந்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கான ஒரு அருமையான கதையை பார்க்கலாம். Tamil Inspirational Stories for Life.
Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
ஒரு ஊரில் வியாபாரி ஒருவர் முதலில் ஒரு Small Grocery ஸ்டோர் ஒன்றை தொடங்கினார். அந்த மளிகை ஸ்டோர் நாளடைவில் நல்ல வளர்ச்சி அடைந்தது. அதன் பின்பு ஹோட்டல், துணிக்கடை, நகைக்கடை, , பல்பொருள் அங்காடி (Department Store) என்று அவரின் தொழில் வளர்ச்சி ரொம்பவே அசுரமாக சென்றது. இப்படி போய்க்கொண்டிருந்த டைம்ல ஒரு நாள் இரவு அவர் வீட்டுக்கு வருகின்ற போது மிட் நைட் 12 ஓ கிளாக்-ஐ தாண்டிவிட்டது. இவர் வழக்கமாக வீட்டுக்கு வருகின்ற போது அவருடைய Wife தான் கதவை திறந்து அவரை உள்ளே வர சொல்வார். அன்றைய தினம் அவருடைய மனைவி வரவில்லை.
வீட்டில் பணிச்செய்யும் வேலையாள் தான் வந்து Door-ஐ திறந்தார். வேலையாள், அந்த Businessman-னின் முக பாவனை புரிந்துக்கொண்டு சொன்னான். ஐயா, எதிர்பாராத விதமாக அம்மாவுக்கு இன்று மயக்கம் வந்து விட்டது. அதனால் மருத்துவமனைக்கு சென்று விட்டு வந்தார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் தான் பெட்ரூமிற்கு சென்று தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்று சொன்னான். அது பிளட் ப்ரெஸ்ஸர் என்று மருத்துவர் கூறி உள்ளார்கள் . ஆனால் அச்சம் கொள்ள தேவையில்லை. மருந்து மாத்திரை சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் Rest எடுத்தால் குணமாகி விடும் என்று சொன்னார்கள். அந்த வேலையாளை பார்த்து கேட்டார் "எனக்கு Phone பண்ணி சொல்ல வேண்டியதானே" என்று Businessman கேட்டார்.

Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
பல முறை உங்களுடைய First Son உங்களுக்கு போன் செய்தான். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது என்றான். அப்போது தான் அவருக்கு ஞாபகம் வந்தது. ஒரு கூட்டத்தில் Night 8 மணிக்கு கலந்து கொண்டதால் அவரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரின் Wife மிகவும் களைப்பாக ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். மனைவியின் அருகில் சென்று தலையை கொஞ்சம் வருடி கொடுத்தார்.
இவ்வளவு நாள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோமே என்கிற Sadness அவரின் மனதிற்குள் தோன்றியது. அவர்களுக்கு Marriage-ஆகி 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் பேமிலியோடு சேர்ந்து செலவு செய்த நாட்களை நினைவுக்கு கொண்டு வர முயன்று பார்த்தார். குடும்பத்திற்காக Spend செய்த நாட்கள் மிக குறைவான நாட்களே ஆகும். அவர் Wife பக்கத்தில் இது போன்று நெருக்கமாக உட்கார்ந்து பேசியே நீண்ட நாள் ஆகிவிட்டது என்பதை நினைத்து வருத்தப்பட்டார்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
அந்த அறையை விட்டு வெளியே வந்தார். அடுத்த அறையின் கதவை திறந்து பார்த்தார். அவருடைய இரண்டு மகன்களும் படுக்கையில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தார்கள். சத்தம் வராமல் அந்தக் கதவையும் மூடிவிட்டு மேலே மாடியில் இருக்கும் தன்னுடைய தனியறைக்கு சென்றார். அந்த வேலையாளை அழைத்து Food ஏதாவது சாப்பிட கொண்டு வாருங்கள் என்றார். மேலும் அவரின் தனி அறைக்குள் (Room) சென்று கதவை மூடிவிட்டார். அவர் கட்டிலில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தார். இத்தனை நாட்களாக நிறைய காசு, பணம் சம்பாதித்து என்ன பிரயோஜனம்?.
வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை, Inspirational Story In Tamil For Life, ThaenMittai Stories
நாம் யாருக்காக வாழ வேண்டும் என்று Think பண்ணி பார்த்தார். Wife, குழந்தைகள் இவர்களோடு கூட Time Spend பண்ண முடியாமல் அப்படி என்ன தொழில் செய்கிறேன் என்று நினைத்து பார்த்தார். கடைசியில் அவர் ஒரு முடிவு செய்தார். நாளையிலிருந்து இந்த தொழிலில் இருந்து விலகி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். இனிமேல் நம் ஃபேமிலி, and குழந்தைகளுக்காகவும் வாழ வேண்டும் என்று ஒரு Decision எடுத்தார். இது போல அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பார்த்தார். அவரின் கட்டிலுக்கு அருகில் இருந்த ஒரு Chair-ல் யாரோ ஒருவர் உட்கார்ந்து இருக்கின்ற மாதிரி அவருக்கு தெரிந்தது. கதவினை உள் தாழ்பாள் போட்டு தானே உள்ளே வந்தேன்!.
யார் நீங்கள்? எப்படி உள்ளே வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த உருவம் சொன்னது. நான் மரண தேவதை உன்னை அழைத்து செல்ல வந்திருக்கிறேன். இப்படி அந்த மரண தேவதை கூறியது. அவர் ரொம்பவே பயந்து போனார். நான் வாழ்க்கையை வாழ வேண்டும். இப்போது தான் முடிவு செய்து உள்ளேன். இப்போது வந்து அழைத்து போக வந்து இருக்கீங்களே. எனக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தான். நான் இவ்வளவு நாட்களாக சம்பாதித்த செல்வம் அனைத்தும் தருகிறேன் என்று சொன்னான். ஆனால் அந்த மரண தேவதை செவி சாய்க்க மறுக்கின்றது.

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
அங்கிருந்து ஒரு அடி கூட நகராமல் இருந்தது. அவரை அழைத்துக்கொண்டு செல்வதற்காகவே அப்படியே உட்கார்ந்து இருந்தது. கடைசியில் One Hour Time கொடுங்கள். நான் சென்று என்னுடைய Wife and குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய Duty-ஐ செய்து முடித்துக் கொண்டு வருகிறேன் என்று கேட்டார். அதற்கும் கூட மரண தேவதை ஒப்புக் கொள்ளவில்லை. அவர் கெஞ்சி அழுகின்ற குரலில் கேட்டார். சரி ஒரே ஒரு நிமிடமாவது கொடுப்பீர்களா?. நான் இந்த உலகத்திற்கு ஒரு குறிப்பு எழுத வேண்டும் என்றார். சரியன்று மரண தேவதை ஒப்புக் கொண்டது. அப்பொழுது அங்கிருந்த ஒரு White பேப்பரில் இப்படி எழுதினார்.
உங்களுடைய Time-ஐ சரியான வழியில் செலவழித்து விட வேண்டும். நான் அனைத்து சொத்துக்களையும் ஈடாக கொடுத்தாலும் கூட எனக்காக One Hour Time கூட வாங்க முடியவில்லை - இது ஒரு பாடம். வாழ்க்கையில் நமக்கு கிடைக்கின்ற Each and Every Minutes வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள் என்று அந்த White பேப்பரில் எழுதினார். அப்போது யாரோ கதவை தட்டுகின்ற சத்தம் கேட்டது.

Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
சத்தம் கேட்டதும் அவன் திடுக்கிட்டு கண்விழித்து பார்த்தான். அந்நேரம் பொழுது விடிந்து ரொம்ப நேரமாகி விட்டது. அவர் எழுந்து போய் கதவை திறந்து பார்த்தார். வெளியில் வேலையாள் நின்று கொண்டிருந்தார். ஐயா, ரொம்ப நேரமாக நான் கதவைத் தட்டினேன் நீங்கள் தான் திறக்கவில்லை. அதனால் தான் பயந்துக்கொண்டே கொஞ்சம் சத்தமாக தட்டினேன் என்று சொன்னார்.
உடனடியாக அவசரமாகத் திரும்பி பெட்ரூமுக்கு அருகிலிருந்த அந்த மேஜையை பார்த்தார். அங்கே அவர் எழுதின குறிப்புகள் இல்லை. எழுதப்படாத வெள்ளைத்தாளும் and பேனாவும் மட்டும் தான் அங்கே இருந்தது. அனைத்தும் கனவில் நடந்தது. மக்களே, நிஜத்தில் தயவுசெய்து வாழ்க்கையை வாழ்ந்து விடுங்கள். நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம் கொண்டாடுங்கள். ஆனந்தமாக இருங்கள்.

Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
Husband, Wife, Children, அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், Friends, மாடு, ஆடு, கோழி, Farming, பூச்செடி இப்படி எல்லாவற்றிற்கும் நிறைய Time ஒதுக்கி கொள்ள வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசனையோடு அணு அணுவாக ரசித்து ஹாப்பியாக வாழ முடிவெடுங்கள். மக்களே!, காசு பணம், பணம் என்ற Life வாழ்வதை விடுத்து வெளியே வாருங்கள். வாழ்க்கை மகிழ்வாக இருக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே!.
வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பயனுள்ள நிறைய பதிவுகள் நம் இணையப் பக்கத்தில் (வெப்சைட்) உள்ளது. அவை அனைத்தையும் படித்துப் பாருங்கள். மேலும், இந்த கதையை Video வடிவில் காணும் வகையில் ThaenMittai Stories எனும் வலையொளில்/YouTube-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வீடியோக்களைப் பார்த்து பயன்பெறுங்கள்!. நீங்கள் மகிழ்ச்சியாக வாழ எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே இருக்கும் கருத்துரை (Comment) பகுதியில், உங்கள் கருத்துக்களை பதிவு செய்திடுங்கள். உங்கள் Friends and Relatives பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook