காலை களைப்பை போக்க சிறந்த 6 வழிகள் | காலையில் வெதுவெதுப்பான நீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

காலை களைப்பை போக்க சிறந்த 6 வழிகள்

இரவில் நன்றாக தூங்கினாலும் மழைக்காலங்களில் காலையில் எழுவதற்கு சற்று சிரமமாக இருக்கும். ஒருவித சலிப்பும், உடல் சோர்வும் எட்டிப்பார்க்கும். உற்சாகம், சுறுசுறுப்பு ஏதுமின்றி களைப்பை உணர வைக்கும். இவை அலுவலகம் சென்ற பிறகும் சில சமயங்களில் பின் தொடர்ந்து கொண்டிருக்கும். சிலருக்கு காலை நேர சோர்வு சாதாரணமாக தெரியலாம். அடிக்கடி இதே நிலை நீடித்தால் சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்

1. தண்ணீர் பருகுங்கள்:

காலையில் எழுந்ததும் தண்ணீர் பருகுங்கள். அது அன்றைய நாளுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்க உதவும். பொதுவாக நீரிழப்பு ஏற்படுவது தூக்கம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். தண்ணீர் அருந்துவது உடல் உறுப்புகளை தூண்டி, விழிப்புடன் செயல்பட வைக்கும். காலை பொழுதில் வெதுவெதுப்பான நீரை பருகுவது சிறப்பானது. அதனுடன் சில துளிகள் எலுமிச்சைசாறு மற்றும் லவங்கப்பட்டை தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

2. சூரிய ஒளி

காலை பொழுதில் தூங்கும் அறைக்குள் இயற்கை ஒளியான சூரியக்கதிர்கள் ஊடுருவும்படியான சூழல் இருப்பது நல்லது. திரைச்சீலைகள் போட்டிருந்தால் அதனை விலக்கும்போது அறைக்குள் வெளிச்சம் பரவும்படியாக இருக்க வேண்டும். அந்த இயற்கை ஒளி உடலில் படும்படி சில நிமிடங்களை செலவிட வேண்டும். தியானம் மேற்கொள்ளலாம். காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடலாம். அது சூரிய ஒளி உடலில் படுவதற்கு வழிவகுக்கும். உடலை சுறுசுறுப்பாகவும் உணர வைக்கும்.

Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை

3. புரத உணவுகள்

காலை உணவை தவிர்க்காதீர்கள். முட்டை, கோழி இறைச்சி, பருப்பு வகைகள், பன்னீர் மற்றும் தயிர் போன்ற புரதங்கள் நிறைந்த பொருட்களை அன்றாட உணவில் தவறாமல் இடம் பெற செய்யுங்கள். புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் ஜீரணமாகி, ஆற்றலாக மாறுவதற்கு அதிக நேரம் தேவைப்படும். அதனால் உடல் எளிதில் சோர்வை உணராது. சுறுசுறுப்பாக செயல்படவும் தூண்டும்.

4. காபியை குறைவாக பருகுங்கள்

காபி, உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக கொடுக்கக்கூடியது. அதிலிருக்கும் காபின், உற்சாகமாக செயல்பட தூண்டும் தன்மை கொண்டது என்றாலும் அது நீண்ட நேரம் நீடிக்காது. அதனையே சார்ந்திருக்க வைத்து விடும். அதனால் அடிக்கடி காபி பருக நேரிடும். அப்படி அதிகம் காபி பருகுவது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும், தலைவலிக்கும் வித்திடும். காபியை குறைந்த அளவு பருகுவது நன்மை பயக்கும்.

காலை களைப்பை போக்க சிறந்த 6 வழிகள், ThaenMittai Stories

5. மதுப்பழக்கத்தை தவிருங்கள்

மதுப்பழக்கமும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். தூக்கமின்மைக்கு காரணமாகிவிடும். மதியம் மற்றும் மாலை வேளையில் மது அருந்துவது, ஆல்கஹாலின் வீரியத்தை அதிகரிக்கச் செய்யும். மயக்க நிலையை ஏற்படுத்தும். உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புபவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சூப், ஜூஸ், ஐஸ்கிரீம் பருகுவதற்கு பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது.

6. புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு தரும். அதனை அறிந்திருந்தும் புகைப்பழக்கதை கைவிட முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். புகைப்பிடிப்பது உடல் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். உடல் சோர்வுக்கும் வழிவகுக்கும். அதில் உள்ளடங்கி இருக்கும் நிகோடின், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும். தூக்கமின்மைக்கும் வித்திடும்.

Read Also: How To Get Rid of Stress and Succeed?, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?

காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் பருக வேண்டும்?

ஒரு Cup சூடான Tea அல்லது காபியுடன் தங்களுடைய காலைப் பொழுதை தொடங்குவதற்கு பலரும் பழகி விட்டனர். சிலர் நபர்கள் தாகத்தை தணிக்க குளிர்ந்த நீரை (Cold Water) பருகுவார்கள். உடல் நலத்தை (Health Condition) சீராக பராமரிப்பதற்கு இவற்றை வெறும் (Empty) வயிற்றில் உட்கொள்வதை தவிர்ப்பதே (Avoid) நல்லது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை (Warm Water) காலையில் (Morning) பருகுவது தான் சிறப்பானது என்று ஆய்வுகள் (Research) கூறுகின்றன. அதற்கான காரணங்கள் (Reasons) பற்றி பார்ப்போம்.

காலையில் வெதுவெதுப்பான நீர் பருகுவதால் ஏற்படும்  நன்மைகள், ThaenMittai Stories

செரிமானத்தை மேம்படுத்தும்

காலையில் வெதுவெதுப்பான நீரை பருகுவது, உணவுக் குழாயில் முந்தைய நாள் முழுவதும் உட்கொள்ளப்பட்ட உணவுகளின் அனைத்து எச்சங்களையும் அகற்ற உதவும். அத்துடன் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் வழிவகுக்கும். ஆயிலில் பொரிக்கப்படும் உணவு வகைகளை (Variety Food) சாப்பிட்டிருந்தால் செரிமான (Digest) செயல்முறையை எளிதாக்கும். செரிமானத்தையும் மேம்படுத்தும்.

எடை குறைப்புக்கு வித்திடும்

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை (Warm Water) உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வெதுவெதுப்பான நீர் (Warm Water) உடலின் வெப்பநிலையை உயர்த்தும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க செய்யும். அதிக கொழுப்பை (Fat) எரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்பை (Weight Loss) ஊக்குவிக்கவும் வழிவகுக்கும். வெதுவெதுப்பான நீருடன் (Warm Water) சில துளிகள் எலுமிச்சை சாறும் (சிட்ரிக்) கலந்து பருகலாம்.

உடலின் பி.எச்.அளவை (PH) பராமரிக்க உதவும்

உடலுக்கு தேவையான பி.எச். (PH) அளவை பராமரிக்க தொடர்ந்து வெதுவெதுப்பான நீரை (Warm Water) உட்கொள்வது அவசியமானது. செரிமான செயல்முறையின் போது சிட்ரிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் எளிதில் ஜீரணமாகிவிடும். அதனை ஈடு செய்து பி.எச் (PH) அளவை நிர்வகிக்க (Control) வெதுவெதுப்பான நீர் (Warm Water) துணைபுரியும்.

Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் (Warm வாட்டர்) எலுமிச்சை சாறு கலந்து பருகுவது, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்றவற்றின் செயல்பாட்டுக்கு நன்மை பயக்கும். இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் உதவுபவை. வெதுவெதுப்பான நீருடன் (Warm Water) எலுமிச்சை சாற்றை (Lemon Acid) கலந்து வெறும் வயிற்றில் (Empty Stomach) உட்கொள்வது உடல் (Body) அவற்றை விரைவாக உறிஞ்சுவதற்கும் உதவும்.

சரும செல்களை பாதுகாக்கும்

உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமானதாகும். வெதுவெதுப்பான நீர், உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை தக்கவைக்கக்கூடியது. உடலில் நச்சுக்கள் வெளியேறாமல் இருப்பதால்தான் விரைவில் வயதான தோற்றத்திற்கு (Old ஏஜ்) மாறுவது, எளிதில் நோய்வாய்ப்படுவது, போன்ற பிரச்சினைகள் Problemsஏற்படுகின்றன. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் (Warm வாட்டர்) நச்சுத்தன்மையை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், சரும செல்களை (ஸ்கின் செல்ஸ்) சரிசெய்யவும் உதவும்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook