How To Get Rid of Stress and Succeed? | மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?

மன அழுத்தத்திலிருந்து விடுபட

வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக கையாள்வதற்கும், தேர்ந்தெடுக்கும் வேலையை திறமையாக செய்து முடிக்கவும் மனம் தெளிந்த நிலையில் இருக்க வேண்டும். ஏதேனும் மன குழப்பங்களுக்கு ஆளானால் எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்துமுடிக்க முடியாது. எளிதில் உணர்ச்சிவசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது. உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை
கோபம், சோகம், வேதனை, மன அழுத்தம் போன்றவை உணர்வுகளை தடுமாற வைக்கும். வாழ்க்கையில் சவால்களை சமாளித்து உணர்வுகளை நிர்வகிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அது உணர்ச்சிகளை கையாள்வதற்கு உதவிகரமாக அமையும். சந்தோஷமாக இருந்தாலோ, மனக்கவலை அடைந்தாலோ உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தயங்கக் கூடாது.
உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருபோதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாதீர்கள். ஏனெனில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். ஏதாவதொரு சூழலில் மன நெருக்கடிக்கு ஆளானால் சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம். எந்த வேலையிலும் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருக்கலாம். அந்த சமயங்களில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும்எடுக்கக்கூடாது.

மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?, ThaenMittai Stories
மனதை வேறு செயல்களில் ஈடுபடுத்தலாம் அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மன அழுத்தம் தான் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. ஒருவேளை மன அழுத்தத்திற்கு ஆளானால் அதில் இருந்து மீள்வதற்குரிய வழி முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பயிற்சிகளில் ஈடுபடலாம். ஆழ்ந்த சுவாசம், தியானம், உடற்பயிற்சி போன்ற உடலை தளர்வடைய செய்யும் பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். விளையாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள் தான் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்றில்லை.
அவர்களுடன் சேர்ந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடலாம். மனதிற்கு பிடித்தமான எந்தவொரு விளையாட்டையும் தயங்காமல் மேற்கொள்ளலாம். நடனமும் ஆடலாம். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை உண்பது, போதுமான நேரம் தூங்குவது போன்றவை மன நலனை பாதுகாக்கவும், உணர்வுகளை சம நிலையில் பராமரிக்கவும் உதவும். மன நெருக்கடியில் இருக்கும் சமயங்களில் நெருக்கமானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள். அவர்களுடன் குழு விவாதங்களிலும் ஈடுபடலாம்.

வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொள்வதும் அவசியமானது. தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணி புரியலாம். தன்னார்வலர்களாக மாறி அவ்வாறு சமூக சேவைகள் புரிவது மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும். அர்த்தமுள்ள செயல்களில் நேரத்தை செலவிடுகிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும். உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களுடன் சிரித்து பேசி மகிழ்வதும் உணர்ச்சி ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.
How to get rid of stress and succeed?, ThaenMittai Stories

குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விளையாட்டு

தெருக்களில் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளை பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் உலகம் வீடியோக்கள் வடிவில் விளையாட்டுகளை வேடிக்கை பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஓரிடத்தில் முடங்கியபடியே குழந்தைகள் வீடியோ கேம்களை பார்த்து ரசிக்கிறார்கள். அதில் இருந்து மீள வைப்பதற்கு உடல் ரீதியான விளையாட்டுக்களில் குழந்தைகளை ஈடுபட வைப்பது தான் ஒரே வழி.
குழந்தை பருவத்திலேயே விளையாட்டு ஆர்வத்தை விதைப்பதன் மூலம் அவர்களின் தனித்திறன்களையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கலாம். அதற்கு விளையாட்டு எவ்வாறு உதவுகிறது என்றுபார்ப்போம்.

மன - உடல் ஆரோக்கியம்

உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதற்கு விளையாட்டு உதவும். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் சரியான பாதையில் செல்வதற்கு வழி நடத்தும். குழந்தை பருவத்தில் இருந்தே பல்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்துவது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.
உடல் பருமன் பிரச்சினையில் இருந்தும் விலக்கி வைக்கும். உடல் சம நிலையை பேணவும் உதவும். மன ரீதியாக தோல்விகளை எவ்வாறு கையாள்வது என் பதையும் கற்றுக்கொடுக்கும். மன அழுத்தத்தின் போது அமைதியாக இருப்பது எப்படி என்பதையும் சொல்லிக்கொடுக்கும்.

குழு செயல்பாடு

கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டுகளை விளையாடுவது குழுவாக ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை அறிய உதவும். ஒவ்வொரு வீரரையும் மதிக்கவும், மரியாதையுடன் நடத்தவும், அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் கற்றுக்கொடுக்கும். பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்கு பின்பு அலுவலக பணியில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வளர்க்கவும் உதவும்.

ஒழுக்கத்தை கற்றுத்தரும்

குழந்தைகள் ஒழுக்கத்துடன் செயல்படுவதற்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கும். அதிகாலையில் பயிற்சி செய்வதற்கு சீக்கிரமாக எழும் உணர்வை ஏற்படுத்திக்கொடுக்கும். சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உண்டாக்கும். உணவு விஷயத்தில் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வைக்கும். துரித உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சாப்பிடும் வழக்கம் இயல்பாகவே ஏற்படும். மனரீதியாக வலிமையாக செயல்படுவதற்கும் விளையாட்டு வழிகாட்டும்.
How to get rid of Stress and Depression and life succeed, ThaenMittai Stories

சமூக செயல்பாடு

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அது வீட்டை விட்டு வெளியேறி விளையாடும் ஆர்வத்தை குறைத்து விடுகிறது. நண்பர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மறக்கடித்துவிடுகிறது. நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து விளையாடும் போது தகவல் தொடர்பு திறன் வலுப்படும். சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் திறனும் மேம்படும். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துவதற்கும் வித்திடும்.

Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்

சுய மரியாதை

குழந்தைகளிடத்தில் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை வளர்க்க விளையாட்டு உதவும். போட்டியில் வெற்றி பெறுவது அல்லது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடிப்பது அவர்களின் தனித்திறன்கள் மீது அதிக நம்பிக்கை கொள்ளச் செய்யும். பயிற்சியாளரின் ஊக்கமும், சக வீரர்களின் பாராட்டும் சுயமரியாதையை வளர்க்க உதவும். எனவே, குழந்தைகளை அவர்களின் விருப்பப்படி விளையாட விடுங்கள். அவர்கள் வளரட்டும்!
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook