கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-12

தலைமுறைகள் பாராட்டிய அபூர்வ காதல்

அம்பிகாபதி-அமராவதி; கோவலன்-மாதவி; லைலா-மஜ்னு; ஷாஜஹான்-மும்தாஜ்; ரோமியோ-ஜூலியட் என்ற வரிசையில், உலகம் முழுவதும் பிரபலமான ஒவ்வொரு காதல் ஜோடியைப் பற்றி விவரிக்கும்போது, இந்தக் காதலர்களின் காதல்தான் அமரத்துவம் வாய்ந்தது என்று அவ்வப்போது பலரும் புகழ்ந்து கூறி இருப்பார்கள். அந்தக் காதல் கதைகள் எல்லாம், மன்னர் ராஜேந்திரன் - பரவை நங்கை காதலுக்கு ஈடாகுமா என்பது சந்தேகமே!

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
ராஜேந்திரன் - பரவை நங்கை காதல் பற்றிய தகவல்கள் வரலாற்றில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால், இவர்களது காதல் தான் உலகிலேயே உன்னதமான காதல் என்று போற்றப்பட்டு இருக்கும். ராஜேந்திரன், மாபெரும் சோழப்பேரரசின் இளவரசர் என்பதோடு அழகில் மன்மதன் போல விளங்கியதால், அவரை மணக்க பல நாடுகளின் இளவரசிகள் விரும்பி இருக்கலாம்.
ஆனால் அவர் காதலித்ததோ, தேவரடியார்கள் குலத்தைச் சேர்ந்த பரவை நங்கை என்ற ஒரு நாட்டியப் பெண்ணை. மிகச் சாதாரணமான குலத்தில் பிறந்த அந்தப் பெண், 'பரவை நாச்சியார்' என்றும் அழைக்கப்பட்டார். அரசகுல நீதி குறுக்கே நின்றதால், பரவை நங்கையை ராஜேந்திரனால் பகிரங்கமாகத் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. தனது மனதுக்கு மிக நெருக்கமானவர் பரவை நங்கை என்பதை ஊருக்கு பகிரங்கமாகச் சொல்லும் வகையில், அவரைத் தனது ‘அணுக்கி’ என்று அதிகாரபூர்வமாகக் கூறிக் கொண்டார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
ராஜேந்திரனுடன் கொண்ட காதல் காரணமாக அரசில் அதிக செல்வாக்குப் பெற்று இருந்தாலும், பரவை நங்கை, தஞ்சை அரண்மனையில் குடியேறவில்லை. திருவாரூர் கோவில் மீது பற்றுக்கொண்ட அவர், திருவாரூரில் இருந்து செல்ல மறுத்துவிட்டார். ராஜேந்திரன் அடிக்கடி திருவாரூர் வந்து பரவை நங்கையைச் சந்தித்துப் பேசிவிட்டுச் செல்வது வழக்கமாகியது.
பரவை நங்கையின் விருப்பத்தின்படி திருவாரூர் கோவில் கற்றளியாக மாற்றப்பட்டு 1030-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவையொட்டி மன்னர், நகர் முழுவதும் தேரில் ஏறி பவனியாக வரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மன்னர், நகர வீதிகளில் தேரில் வரும் சமயங்களில், அவர் அருகே அவரது பட்டத்து ராணி அமர்ந்து இருப்பது அரசகுல நடைமுறை.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
ஆனால், திருவாரூர் வீதித் தேர் பவனியின் போது மன்னர் ராஜேந்திரன் தனது அருகே பரவை நங்கையை அமரச்செய்து கவுரவப்படுத்தியது, அந்தக்கால மக்களுக்குத் தலைப்புச் செய்தியாகி, நகர் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மன்னரும், பரவை நங்கையும் ஒன்றாக அமர்ந்து தேரில் பவனி வந்ததை ஊர் மக்கள் பிரமிப்புடன் பார்த்து அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
தானும் பரவை நங்கையும் ஒரே தேரில் ஏறி பவனி வந்த செய்தி, திருவாரூர் மக்களுக்கு மட்டும் தெரிந்தால் போதாது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். எதிர்கால மக்களும் பரவை நங்கை மீது தான் கொண்டு இருக்கும் காதலின் ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த ராஜேந்திரன். அந்தத் தகவலைத் திருவாரூர் கோவில் கல்வெட்டில் பதிக்க ஆணையிட்டார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
அதன்படி, கோவில் கல்வெட்டில், “... ஸ்ரீஇராஜேந்திர சோழதேவரும், அணுக்கியார் பரவை நங்கையாரும் தேர்மேலெழுந்தருளி புகுதிக்கு...” என்ற வாசகம் பொறிக்கப்பட்டது. தேர் பவனி முடிந்து இருவரும் ஒன்றாகச் சேர்ந்து திருவாரூர் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டார்கள். அவர்கள் இருவரும் நின்று இறைவனை வழிபட்ட அந்த இடத்தை மக்கள் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்கள் சேர்ந்து நின்ற அதே இடத்தில் ஒரு குத்துவிளக்கை வைக்க வேண்டும் என்று மன்னர் ராஜேந்திரன் ஆணையிட்டார்.
கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History In Tamil, Part-12
அந்தத் தகவல், ...உடையார் இராஜேந்திர சோழதேவரும் அணுக்கியார் பரவை நங்கையாரும் நிற்குமிடந் தெரியும் குத்துவிளக்கு ஒன்றும்..." என்ற வாசகத்துடன் கோவில் கல்வெட்டில் பதிக்கப்பட்டு இருக்கிறது. ராஜேந்திரன் சாளுக்கிய தேசம் மீது படையெடுக்க காஞ்சிபுரம் வழியாகச் சென்ற போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில், பனையபுரம் என்ற கிராமத்தில் ஒரு சிவன் கோவில் பாழடைந்து கிடப்பதைப் பார்த்தார்.
திருப்புறவார் பனங்காட்டீஸ்வரர் என்ற அந்தக் கோவிலின் அறிந்த ராஜேந்திரன், அதனைப் புனர்நிர்மாணம் செய்ய உத்தரவிட்டார். குடமுழுக்குக்குப் பிறகு அந்தக் கோவில் இருக்கும் ஊர், பரவை நங்கை பெயரால் "பரவைபுரம்" என அழைக்கப்பட வேண்டும். கோவிலின் ஈசன் “பரவை ஈஸ்வரமுடையார்வர்" என குறிப்பிடப் பட வேண்டும் என்று ராஜேந்திரன் ஆணையிட்டார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
தனது அணுக்கியார் பெயர் காலாகாலத்திற்கும் நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காக மன்னர் ராஜேந்திரன் எடுத்த இது போன்ற நடவடிக்கைகள், அவர் பரவை நங்கை மீது கொண்டு இருந்த மாறர்க் காதலை வெளிப்படுத்தின. மன்னர் ராஜேந்திரன் 84-வது வயதில் மரணப்படுக்கையில் இருந்தபோது, தனது மகன்களை அழைத்து, பரவை நங்கையிடம் எப்போதும் அன்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது மகன்களும் அப்படியே நடப்பதாக உறுதி கூறினார்கள்.
புகழ் பெற்ற காதலர்களை, உலக மக்கள் கொண்டாடினாலும், அந்தக் காதலர்களின் மறைவுக்குப் பிறகு, அவர்களது சந்ததியினர் யாரும் அவர்களின் நினைவைப் போற்றியதாகச் சரித்திரம் இல்லை. ராஜேந்திரனின் மகன்கள் மட்டும் அல்ல. அவர்களுக்குப் பின் வந்த சந்ததியினர் அனைவரும், ராஜேந்திரன் - பரவை நங்கை உறவைப் போற்றி வணங்கினார்கள் என்பது வரலாற்றில் வியப்பான செய்தி.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
மன்னர் ராஜேந்திரன் கி.பி. 1044-ம் ஆண்டு, தனது 84-வது வயதில் மரணம் அடைந்தார். அந்தத் துயரச் செய்தியைக் கேட்ட பரவை நங்கை அழுது புரண்டார். நாளடைவில் திருவாரூர் கோவில் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் தனது கவலையை மறக்க முயன்றார். தனது பெயரால் பனையபுரத்தில் ஒரு கோவிலை ராஜேந்திரன் கட்டியதுபோல, தனது காதலர் நினைவாகத் தானும் ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்று பரவை நங்கை விரும்பினார்.
ராஜேந்திரனின் மறைவுக்குப் பிறகு அவரது மூத்த மகன் ராஜாதிராஜன், தஞ்சை மன்னராகப் பொறுப்பு ஏற்று இருந்தார். ராஜாதிராஜன், தனது தந்தையின் காதலியான பரவை நங்கையைப் பெற்ற தாயாகவே கருதி அன்பு பாராட்டினார். ராஜாதிராஜன் உதவியுடன் திருவாரூர் கோவிலில் "ராஜேந்திர சோழர் திருமண்டபம்” என்ற ஆலயத்தை கி.பி.1045 - ம் ஆண்டில் பரவை நங்கை கட்டினார். சில காலத்திற்குப் பிறகு பரவை நங்கை மரணத்தைத் தழுவினார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7
அப்போது திருவாரூர் கோவிலில் தனது தந்தை ராஜேந்திரன், அவரது காதலி பரவை நங்கை ஆகியோரின் உருவச் சிலைகளை ராஜாதிராஜன் செய்து வைத்து வணங்கினார். ராஜாதிராஜன் வைத்த இந்தச் சிலைகள் திருவாரூர் கோவிலில் எங்கே இருக்கின்றன என்பது பல ஆண்டுகளாகத் தெரியாமல் இருந்தது. ராஜேந்திரனும், பரவை நாச்சியாரும் கைகூப்பி வணங்கியபடி நிற்கும் அந்தச் சிற்பங்கள், சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஆய்வின் போது, திருவாரூர் கோவில் 2-ம் பிரகாரம் வட மேற்கு மூலையில் உள்ள அனந்தேசம் என்ற சன்னதி முன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முடியப்பட்ட கொண்டையுடனும், முறுக்கிய மீசையுடனும் ராஜேந்திரன், தனது காதலி பரவை நங்கையுடன் கம்பீரமாகக் காட்சி அளிப்பதை அந்தச் சிற்பத்தில் காணலாம். ராஜாதிராஜனுக்குப் பிறகு, அவரது சகோதரர் இரண்டாம் ராஜேந்திரன் தஞ்சையின் அரியணையில் ஏறினார். அவரும் பரவை நங்கை மீது பற்றுக் கொண்டு இருந்தார். அவர், பரவைபுரம் கோவிலில் ராஜேந்திரனுக்கும் பரவை நங்கைக்கும் திருமேனிகள் பிரதிஷ்டை செய்தார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-8
அவர்கள் இருவரும் பிறந்த நாட்களில் விழாக்கள் எடுப்பதற்கு நன்கொடைகளையும் வழங்கினார். முதலாம் ராஜேந்திரனின் மகன் வீரராஜேந்திரன், மற்றும் அவரது மகன் (அதாவது ராஜேந்திரனின் பேரன்) அதிராஜேந்திரன் ஆகியோரும் பரவைபுரம் கோவிலுக்குப் பல நன்கொடைகளை வழங்கினார்கள். ராஜேந்திரனின் மகள் வழிப்பேரன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆவார். அவரது 48-ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டும் பரவைபுரத்தில் காணப்படுகிறது.
இவ்வாறு ராஜேந்திரன் - பரவை நங்கை காதல், விஜயநகரப் பேரரசு காலம் வரை கொண்டாடப்பட்டு வந்தது. ராஜேந்திரன் - பரவை நங்கை காதலைத் தவிர, வேறு எவருடைய காதலும் இந்த அளவுக்கு வழி, வழியாகப் போற்றப்பட்டது இல்லை என்பதை வரலாறு தெளிவாகக் காட்டுகிறது.

மதுரை அருகே "பரவை" என்ற பெயரில் ஓர் ஊர் இருக்கிறது. இந்த ஊரின் ஏரியில் உள்ள கல்வெட்டில், ஊரின் பழம்பெயர் "பரவை நங்கை நல்லூர்" என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், எனவே இந்த ஊர், பரவை நங்கை நினைவாக அமைக்கப்பட்ட ஊராக இருக்கலாம் என்றும் தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் தெரிவித்து இருக்கிறார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-9
மன்னர் ராஜேந்திரன். காதலில் மட்டுமல்ல வீரத்திலும் தன்னை யாரும் மிஞ்ச முடியாது என்பதைப் பல போர்க்களங்களில் நிரூபித்து இருக்கிறார். மற்ற போர்க்களங்களைவிட, சாளுக்கியர்கள் மீது அவர் நடத்திய போர் மிகச் சிறப்பாகப்போற்றப்படுகிறது. காரணம், அவர் இளவரசுப் பட்டம் ஏற்ற பின்bநடைபெற்ற முதல் போர் என்பதோடு, அந்தப் போரில்தான் அவர் தனது தந்தையின் சூளுரையை நிறைவேற்றினார் என்பதால் அந்த போர் முக்கியத்துவம் பெற்றது. நன்றி தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு!

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook