தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நகரங்கள் /water problems in cities in India- ThaenMittai Stories

தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நகரங்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூரு கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இருக்கும் முக்கிய நகரங்கள் பலவும் இதே நிலைமையை எதிர்காலத்தில் எதிர்கொள்ளஇருக்கின்றன. அவற்றுள் 6 நகரங்கள் குறித்து பார்ப்போம்.

மும்பை:

அதிகரித்து வரும் தண்ணீர் தேவை, சீரற்ற மழைப்பொழிவு, நீர் ஆதாரங்களின் பரப்பளவுகுறைந்து வருதல் போன்ற பிரச்சினைகளால் மும்பை நகரம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. விரைவான நகரமயமாக்கல், போதிய உள் கட்டமைப்பு இன்மை, முறையற்ற நீர் மேலாண்மை நடைமுறைகள் ஆகியவையும் நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்துள்ளன. மும்பை நகருக்கு தண்ணீர் வழங்கும் 7 ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருவதாலும், மாற்று நீர் ஆதாரங்கள் இல்லாததாலும் மாநகராட்சி சார்பில் அங்கு வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் அளவு குறைந்து கொண்டிருக்கிறது.
Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்

ஜெய்ப்பூர்:

நகர் பகுதியில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் தொழில்மயமாக்கல் ஆகியவை தண்ணீர் தேவையை அதிகரிக்க செய்துள்ளன. ஜெய்ப்பூர் நகரம் முதன்மையான நீர் ஆதாரமாக ராம்நகர் அணையை நம்பி இருந்தது. ஆனால் அணை நீரைவிட மிதமிஞ்சிய அளவில் தண்ணீர் தேவை அதிகரித்துக் கொண்டிருப்பதால் நிலத்தடி நீரை முழுமையாக நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நகரின் நீர் நிலைகளும் விரைவாக வறண்டு விடுவதால் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை கோடை காலங்களில் எட்டிப்பார்க்கிறது. எதிர்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பட்டிண்டா (பஞ்சாப்)

இந்த நகர் பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் விளங்குகிறது. அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் நிலத்தடி நீர் இருப்புதிற்கு நிலத்தடி நீரையே குறைந்து வருகிறது. பாசனதிற்கு நிலத்தடி நீரையே அதிகமாக நம்பி இருப்பதும், நீர் பயன்பாட்டை முறையாக கையாளாததும் நீர் வளம் குறைவதற்கு வழிவகுக்கிறது.
Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை

லக்னோ:

பக்ரா நங்கல் அணையின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமான நிலத்தடி நீரை லக்னோவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஆண்டு தோறும் உறிஞ்சுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப 750-க்கும் மேற்பட்ட அரசு ஆழ்குழாய் கிணறுகளும், 550-க்கும் மேற்பட்ட தனியார் ஆழ்துளை கிணறுகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. அதனால் நாள்தோறும் மில்லியன் கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. சீரற்ற மழைப்பொழிவு, கோமதி நதி மற்றும் அதன் கிளை நதிகள் வறண்டு கிடக்கும் நிலை, நகரமயமாக்கல் போன்றவை நீர் ஆதாரங்கள் வழங்கும் நீரை விட அதிக தேவைக்கு வித்திடுகின்றன. இதனால் விரைவில் லக்னோவில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளனர்.

சென்னை:

ஆண்டுதோறும் சென்னையின் சராசரி மழைப்பொழிவு 1,400 மி.மீ. என்ற அளவில்இருந்தபோதிலும் 2019-ம் ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர் கொண்டது. உலகளவில் தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் பெரிய நகரங்களில் ஒன்றாக உருவெடுத்தது. சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருந்தாலும் தண்ணீர் தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது. விரைவான தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், வானிலையில் ஏற்படும் மாற்றம் போன்றவை நீர் நெருக்கடிக்கு ஆளாக்குகின்றன.
Read Also: How To Get Rid of Stress and Succeed?, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?

டெல்லி:

ஒவ்வொரு கோடை காலத்திலும், டெல்லியின் சில பகுதிகள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கின்றன. யமுனை நதிமாசுபடுவதாலும், நிலத்தடி நீர் குறைவதாலும் தண்ணீர் பிரச்சினை அதிகரிக்கிறது. டெல்லி குடிநீர் வாரியம் வழங்கும் நீரில் அறுபது சதவிகிதம் மாசுபட்ட யமுனை நதியில் இருந்து பெறப்படுவதாக கூறப்படுகிறது.டெல்லி நகரம் நிலத்தடி நீரைத் தான் பெரிதும் நம்பி இருக்கிறது.நிலத்தடி நீர் குறைபாட்டை தடுப்பதும்.நீரின் தரத்தை மேம்படுத்துவதும் டெல்லியின் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் முக்கிய அங்கம் வகிக்கக் கூடியவை.
தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நகரங்கள்
இவ்வாறு தண்ணீர் பிரச்சனை தொடர்ந்து அடுத்து வரும் நகரங்களை பாதிக்க நிறைய வாய்ப்பு இருக்கின்றது. எனவே தண்ணீரின் தேவையை மனதில் கொண்டு சிக்கனத்தை கடைபிடித்தால் மட்டுமே நாம் அனைவரும் இனி வரும் தண்ணீர் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.தண்ணீரை வீணடிக்காமல் சிக்கனமாக பயன்படுத்தி நிலதடி நீரை காப்போம் நாமாகவும், நாம் வரும்காலத்திற்கும்.
Read Also: தொழில் முனைவோர்க்கான தகவல்கள்
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook