வெற்றியை தக்கவைக்க போராடும் நாயகர்கள்

வெற்றியை தக்கவைக்க போராடும் நாயகர்கள்

சினிமாவை பொறுத்தவரை ஒரு நாயகனுக்கு, வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரும். கதையும், காட்சி அமைப்புகளும் சிறப்பாக அமைந்திருந்தாலும் கூட, ஏதோ ஒரு வகையில் ரசிகர்களின் மனதைக் கவரத் தவறியதால் தோல்வியைத் தழுவிய பல திரைப்படங்கள் இங்கே உண்டு முன்பெல்லாம் நடிகர்களின் வருகை குறைவு. அதனால் நான்கு, ஐந்து படங்கள் தோல்வி அடைந்தாலும், அடுத்த படத்தை வெற்றிபடமாக்கி தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவாய்ப்பிருந்தது.

Read Also: Information For Entrepreneurs In Tamil, தொழில் முனைவோர்க்கான தகவல்கள்
ஆனால் இன்று புதிது புதியநாக நாயகர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நடிப்பிலும் திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். அதனால் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள், ஓரிரு படங்களை தோல்விப் படமாக கொடுத்தாலும் கூட, அவர்களின் வாய்ப்பு மற்றொரு புதுமுக நடிகருக்குச் சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. அப்படியே தொடர் தோல்விக்கு பிறகு முன்னணி நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும், முந்தைய படங்களை விட குறைந்த சம்பளத்திற்கு புதிய படங்களை ஒப்புக்கொள்ளும் நிலை உருவாகி விடும். 'பாகுபலி' படத்தின் மூலமாக பான் இந்தியா நடிகராக மாறியவர்,நடிகர் பிரபாஸ். அந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பாலிவுட்டில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன் காரணமாக 'சாஹோ', 'ராதேஷ்யாம்', 'ஆதிபுருஷ்' என்று தொடர்ச்சியாக நடித்த பான் இந்தியா திரைப்படங்கள் பெரும் தோல்விகளையே சந்தித்தன.

'பாகுபலி' படத்திற்குப் பின்னர் பன்மடங்கு அதிகரித்திருந்த அவளது சம்பளத்தொகை, தொடர் தோல்விகளின் காரணமாக, சரிவை சந்தித்ததோடு, வாங்கிய சம்பளத்தில் பாதியை திருப்பிக் கொடுக்கும் நிலையும் கூட ஏற்பட்டது. நடிகர் பிரபாஸ்க்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், சில நடிகர்கள் எச்சரிக்கையாக செயல்படுகிறார்கள். பிரபாஸைப் போலவே, இந்த நடிகர்களும் தென்னிந்தியாவில் இருந்து பான் இந்தியா திரைப்படம் வாயிலாக மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றவர்கள்தான். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.திரைப்படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண், சுகுமார் இயக்கத்தில் வெளியான 'புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜூன், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கே.ஜி.எப்.' படத்தில் நடித்த யாஷ் ஆகியோர்தான் அந்த நடிகர்கள்.

Read Also: Information For Entrepreneurs In Tamil, தொழில் முனைவோர்க்கான தகவல்கள்
தெலுங்கு, கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட இந்த நான்கு நடிகர்களும் கிட்டத்தட்ட சமகாலத்தைச் சேர்ந்த நடிகர்கள்தான். இதில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் வெற்றிக்குப் பின், ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் புகழ்பெற்றவர்களாக மாறினர்.

அந்தத் திரைப்படத்தில் இடம்பிடித்த 'நாட்டு நாட்டு..'பாடல் உலக அரங்கில் இசைக்கும், நடனத்திற்கும் பெயர்பெற் றதாக மாறிப்போனது.படமும் ரூ.1,400 கோடியை வசூலித்திருந்தது. இந்தப் பிரமாண்ட தங்களின் வெற்றியால், அடுத்த அடியை எடுத்து வைக்க ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உருவானது.

தற்போது ஜூனியர் என்.டி.ஆர். 'தேவரா' என்ற படத்திலும், ராம்சரண் 'கேம் சேஞ்சர்' என்ற படத்திலும் நடித்து வருகின்றனர்.'தேவரா' படத்தை தெலுங்கில் படங்களை இயக்கிய கொரட்டால் சிவா இயக்குகிறார். இந்தப் படம் இரண்டு பாகமாக உருவாகிறது. அதோடு இந்தப் படத்தின் மூலமாக ஜான்வி கபூர், பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய திரைப்படத்திற்குள் நுழைகிறார்.

Read Also: டேட்டா சயின்ஸ் படிப்பும் மற்றும் வேலைவாய்ப்பும்
2021 மார்ச் மாதத்திலேயே இந்தப் படத்தை ஜூனியர் என்.டி.ஆர். ஒ.கே. செய்து விட்டார். ஆனால் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றி, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை மேலும் வலுப்படுத்துவதற்கு தாமதத்தை உருவாக்கியது. அதனால் இந்தப் படம் உருவாக 21/2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ரூ.400 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தேவரா' திரைப்படத்தின் முதல் பாகம், இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர்) வெளியாக இருக்கிறது.

வெற்றியை தக்கவைக்க போராடும் நாயகர்கள்
அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் 'கேம். சேஞ்சர்' திரைப்படம். இந்தப் படத்தை பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான சங்கர் இயக்குகிறார். 2021-ம் ஆண்டே இந்தப் படத்தை ராம்சரண் ஒப்புக் கொண்டு விட்டார். ஆனால் ஆர்.ஆர்.ஆர். என்ற பிரமாண்ட வெற்றிக்குப் பின், தன் தந்தை சிரஞ்சீவியின் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'ஆச்சாரியா' திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததன் காரணமாக, “கேம் சேஞ்சர்' மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ராம் சரணுக்கு உண்டானது.

அதோடு பல்வேறு காரணங்களாலும் 'கேம் சேஞ்சர்' படம் தாமதமாகிக் கொண்டே சென்றது. ரூ.500 கோடியில் உருவாயிருக்கும் இந்தத் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கின் மற்றொரு நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம், 'புஷ்பா'. ரூ.250 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.400 கோடி வரை வசூலித்தது. மேலும் இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக் கான தேசிய விருதும், அல்லு அர்ஜூனுக்கு கிடைத்தது. தெலுங்கு சினிமாவின் நூறாண்டு கால வரலாற்றில், தேசிய விருதைப் பெற்ற ஒரே நடிகராக அல்லு அர்ஜூன் உள்ளார்.

Read Also: தாழ்வு மனப்பான்மை நீங்க நடிகர் சூர்யாவின் நிஜ வாழ்க்கை பதிவு
'புஷ்பா' படத்தின் முதல் பாகம் அடைந்த பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டிய நிலை, படக்குழுவினருக்கு ஏற்பட்டது. இதனால் புஷ்பா-2' படத்தின் பட்ஜெட்டும் அதிகரித்தது. ரூ.500 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம்,வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக மூன்றாண்டு கால உழைப்பை, அல்லு அர்ஜூன் வழங்கியிருக்கிறார்.

'இந்த வரிசையில் 'கே.ஜி.எப். படத்தின்வெற்றியின் மூலம் இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்த யாஷூம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான கே.ஜி. எப்-2' 2022 ஏப்ரல் மாதம் வெளியானது. ரூ.100 கோடியில் தயாரிக்கப்பட்டுரூ.1,250 கோடி வரை வசூலித்த இந்த திரைப்படத்தால், யாஷ் சற்று நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.எந்த அளவுக்கு என்றால் 11/2 ஆண்டு காலமாக அவர் எந்த ஒரு படத்தையும் ஒப்புக் கொள்ளாமலே இருந்து வந்தார். அதற்குக் காரணம், 'கே.ஜி.எப்.' என்ற பிரமாண்ட வெற்றிக்கு கொஞ்சமாவது ஈடுகொடுக்கும் வகையிலான கதை கிடைக்காததுதான்.கடந்த சில மாதங் களுக்கு முன்புதான் அவர் 'டாக் ஷிக்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம்தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Also: மென்திறன் அறிவும், அவசியமும்
இப்படி இந்த நடிகர்கள் நால்வரும் ஒரு படத்திற்குப் பின்னர் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளாவது இடைவெளி விடுவதற்கு சில காரணங்களும் உள்ளன. ஒரு பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரு படத்தை தேர்வு செய்ய முடியாதது ஒரு காரணம். ஏற்கனவே கொடுத்த பிரமாண்ட வெற்றியால், இப்போது பன் மடங்கு எகிறி இருக்கும் அவர்களின் சம்பளத் தொகை, அடுத்த படத்தின் வெற்றியைப் பொறுத்தே ஏறும், சமநிலையில் இருக்கும், இறங்கும் என்பது ஒரு காரணம். மிகப்பெரிய வெற்றிக்குப்பின் வெளியாகும் படம் அதே அளவுக்கு வெற்றியைப் பெறாவிட்டாலும், ஒரு போதும் தோல்வியை சந்தித்து விடக்கூடாது என்பது இன்னுமொரு காரணம்.

எனவே ஒவ்வொரு நகர்வையும் சரியாக வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த நாயகர்கள் இருக்கிறார்கள். அதுதான், அவர்களின் அடுத்த படத்தின் தேர்வையும், படம் வெளியாகும் தேதியையும் இவ்வளவு நாட்கள் தள்ளிப்போடுவதற்கான முக்கிய காரணம். இந்த நிலையில்தான், ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன், ராம்சரண் ஆகியோரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. அதில் யாருடைய திரைப்படம் வெற்றியைப் பெற்று, அவர்களின் சினிமா அளவுகோலை அப்படியே வைத்திருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook