டேட்டா சயின்ஸ் படிப்பும் மற்றும் வேலைவாய்ப்பும் | ThaenMittai Stories

இன்ஜினியரிங் படிப்பு

இன்ஜினியரிங் (Engineering) படிப்பு படித்தாலும் வேலை கிடைக்கவில்லை. கலை மற்றும் அறிவியல் (Arts and Science) படிப்பு படித்தாலும் வேலை கிடைக்கவில்லை. நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை. வேறு ஏதாவது புது விதமான படிப்புகள் ஏதும் உள்ளதா? அதாவது, இப்போதைய நிலையில், என்ன படிப்பு படித்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற பல கேள்விகள் உங்களுக்குள் எழலாம்.
இன்ஜினியரிங் (Engineering) படிப்பு முடித்தவர்களுக்கு வேலை இல்லை என்று அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியாது. இன்னும் சொல்லப் போனால் படிப்பை வைத்து வேலையை நிர்ணயம் செய்து விட முடியாது. திறமைகளையும், வாய்ப்புகளையும் வளர்த்துக் கொண்டால் வேலையை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இந்த உலகத்தில் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. ஒரு நிறுவனத்தில் வேலையை பெற வேண்டுமென்றால் அதற்குரிய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
Data Science Courses in Tamil, ThaenMittai Stories
அதற்கு சரியான திட்டமிடல் வேண்டும். வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்துக் கொண்டு, அதற்கேற்ற திறமையை வளர்த்துக் கொள்பவர்களுக்கு நிச்சயம் நூறு சதவீதம் வேலையை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கு கல்லூரியில் படிக்கும் பாடத்திட்டத்தை தாண்டி படிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு புதுவிதமான படிப்புகளும் உள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால், டேட்டா சயின்ஸ் (Data Science) படிக்கலாம்.

டேட்டா சயின்ஸ் படிப்பும், கல்வித் தகுதிகளும்

சமீபத்திய இளைஞர்களின் பேசுபொருளாக மாறியிருக்கும் 'டேட்டா சயின்ஸ்' (Data Science) படிப்பு பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமா?. டேட்டா சயின்ஸ் (Data Science) - டிஜிட்டல் உலகில், இணையதளம், சமூக வலைத்தளங்களில் உற்பத்தியாகும் ஒட்டுாெத்த தரவுகளைத் தொகுத்து, அவற்றை ஒருங்கிணைத்து அவற்றிலிருந்து பயன்படக்கூடிய தேவையான தரவுகளைப் பிரித்து குறிப்பிட்ட புதிய தரவுகளை எதிர்காலச் செயல்பாட்டுக்கு தொகுப்பது, தரவு அறிவியல் எனப்படுகிறது. அதாவது டேட்டா சயின்ஸ்.

'தரவு அறிவியல்’ (டேட்டா சயின்ஸ்) என்பது எண் (Number), வெப்பநிலை (Temperature), ஒலி-ஒளி (Sound-Light), அழுத்தம் (Pressure), காலநிலை மாற்றம் (Weather), உயரம் (Height) முதலான அளவீடுகளாகவோ (Measurement), சொற்களாகவோ, மற்ற குறிப்புகளாகவோ இருக்கலாம். குறிப்பிட்ட ஒன்றை பற்றி ஆராய்ச்சி (Research) செய்ய, இதுபோன்ற தரவுகளே (Data) அடிப்படையாகின்றன. அதை சேகரிப்பதும், அதன்மூலம் பல பயனுள்ள ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதுவுமே டேட்டா சயின்ஸ் (Data Science) துறையின் மிக முக்கிய பணி ஆகும். தரவுகளை பற்றி ஆராய்பவர், டேட்டா சயின்டிஸ்ட் (Data Scientist) என அழைக்கப்படுகிறார்.
உதாரணமாக ஒரு வாரத்தில் பதிவாகியிருக்கும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை அடிப்டையாகக் கொண்டு அடுத்தடுத்த வாரங்களில் தொற்றுப்பரவலின் எண்ணிக்கையை கணிப்பது வரை என பல தளங்களில் விரியும் பயன்பாடு என இன்றைக்கு ஏறக்குறைய அனைத்து செயல்பாடுகளிலும் டேட்டா சயின்ஸின் (Data Science) தாக்கம் பிரதிபலிக்கிறது.

யாரெல்லாம் Data Science படிக்கலாம்?

எண்கள், கணக்குகளில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் டேட்டா சயின்ஸ் (Data Science) பற்றி படிக்கலாம். 12 வகுப்பில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) , புள்ளியியல் (Statistics) மற்றும் கணினி அறிவியல் (Computer Science) படித்தவர்கள், இளங்கலை படிப்புகளுக்கு (UG Degree) தகுதியானவர்கள். அதேபோல இளங்கலை படிப்பில் (UG Degree) கணிதம் (Maths), புள்ளியியல் (Statistics), அறிவியல் பயின்ற மாணவர்கள், முதுகலை படிப்பாக (PG Degree) டேட்டா சயின்ஸ் (Data Science) படிப்புகளை படிக்கலாம்.
Data Science Courses In Tamil And Educational Qualifications, ThaenMittai Stories
மற்ற Study-ல் இருந்து சற்றே மாறுபட்ட இந்தத் துறையில் Department, எண்ணற்ற அளவிலான டேட்டாகளைக் கையாள்வதற்கு மன ஆற்றலும் அவசியமாகிறது. எக்ஸெல் (Excel) குறித்த அறிவும் தேவை. ஆர் (R) ப்ரோகிராமிங் (R Programming), டாப்ளூ (Tableau), மைக்ரோசாப்ட் பி.ஐ. ( Microsoft BI), கூகுள் சார்ட்ஸ் (Google Charts), பைதன் (Python), சாஸ் (SAS) போன்ற மென்பொருள் (Software) குறித்த அறிவு இருப்பதும் அவசியமானது.

வேலைவாய்ப்புகள்

டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு, டேட்டா சயின்டிஸ்ட் (Data Scientist), டேட்டா ஆர்க்கிடெக்ட் Data Architect, டேட்டா மைனிங் என்ஜினீயர் (Data Mining Engineer), இன்டலிஜென்ஸ் அனாலிஸ்ட் (Intelligence Analyst)... என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. கூகுள் (Google), பேஸ்புக் (Facebook), யாஹூ (Yahoo), டுவிட்டர் (Twitter)... போன்ற பிரபல டிஜிட்டல் நிறுவனங்களில் டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு அதீத வரவேற்பு இருக்கிறது. பலவிதமான பணிகளில், நல்ல சம்பளத்தில் பணியமர்த்தப் படுகிறார்கள்.
தமிழகம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான வேலை வாய்ப்புகள் உள்ளதால், வரும் காலங்களில் மாணவர்களின் தவிர்க்க முடியாத தேர்வாக டேட்டா சயின்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரும் காலங்களில் கணினி துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் டேட்டா சயின்ஸ் (Data Science) படிப்பில் அதிக கவனம் செலுத்திட வேண்டும்.
டேட்டா சயின்ஸ் படிப்பு கல்வித் தகுதி வேலைவாய்ப்புகள், ThaenMittai Stories

தொழில்நுட்ப மாற்றம்

தற்போதைய தொழில்நுட்ப மாற்றத்தை கணக்கில் கொண்டு மாணவர்கள் டேட்டா சயின்ஸ் (Data Science), ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence), மெஷின் லேர்னிங் (Machine Learning), கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing), பிளாக்செயின் டெக்னாலஜி (Block Chain Technology), ரோபோடிக்ஸ் (Robotics), ஆட்டோமேஷன் (Automation) போன்ற துறைகளில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த டேட்டா சயின்ஸ் படிப்பை, தேசிய அளவிலான (National Level) தரவரிசை பட்டியில் முதல் இடத்தில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., (Madras IIT) இணைய வழியிலான (Online Class) முறையில் டேட்டா சயின்ஸ் (Data Science) படிப்பை வழங்குகின்றது. இது தவிர முன்னணி கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்பு முறை மற்றும் இணைய வழி முறையிலும் டேட்டா சயின்ஸ் படிப்பை வழங்குகின்றன.
டேட்டா சயின்ஸ் (Data Science) என்பது மிகப்பெரிய பாடப்பிரிவு ஆகும். இதை சாதரணமான கல்லூரியில் (College) படிப்பதை முடிந்த வரை தவிர்த்து, உயர் தரமான கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லூநர்களுடன் கை கோர்த்திருக்கும் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்தால், தொழில்நுட்ப நுணுக்கங்களை முழுமையாக படிப்பதோடு, துறை சார்ந்த நிபுணராக (Expert) பிரகாசமான வாய்ப்பு உண்டு என்பதில் ஐயம் இல்லை.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook