Kerala Coolie Cracks IAS Exam Uses Free Wi-Fi at Railway | IAS கனவை நனவாக்கிய போர்ட்டர்

மொபைல் போன்கள் பயன்பாடு

ஆரம்பத்தில் மொபைல் போன்கள் தகவல்களை பரிமாற்றத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இன்று மொபைல் போன்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்து விஷயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மொபைல் இல்லாமல் எந்த ஒரு வேலையும் நடப்பதில்லை என்று சொல்கிற அளவிற்கு அதன் பயன்பாடுகள் அமைந்திருக்கின்றன. இன்று உலக அளவில் அனைத்து நாடுகளிலும், மொபைல் போன்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன்கள் (Mobile Phones) பயன்படுத்துவதால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் மற்றும் இளைஞர்களை மொபைல் போன்கள் தவறான பாதைகளுக்கு அழைத்து செல்லக்கூடியது என்கிற குற்றச்சாட்டை பலரும் முன்வைக்கிறார்கள். ஆனால் அதனை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்பவர்கள் தங்களின் தனித்திறன்களையும், ஆளுமைத் திறன்களையும் மேம்படுத்திக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கும் செல்கிறார்கள். அதனை நிரூபித்துக் காட்டியவர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் இந்த மனிதர்.

ஆம், ரெயில்வேயில் போர்ட்டராக (Railway Porter) வேலை பார்த்த ஸ்ரீநாத் என்பவர் தான். இவர் ரெயில் நிலையத்தில் கிடைக்கும் இலவச வை-பை (Wi-Fi) இணைப்பை பயன்படுத்தியே சிவில் சர்வீசஸ் (Civil Service) தேர்வுக்கு படித்து, அதில் தேர்ச்சி பெற்றும் அசத்தி இருக்கிறார்.
Kerala Coolie Cracks IAS Exam Uses Free Wi-Fi at Railway, IAS கனவை நனவாக்கிய போர்ட்டர் Sreenath, ThaenMittai Stories

Free Wi-Fi மூலம் படித்து IAS கனவினை நனவாக்கிய போர்ட்டர்

ரெயில்வேயில் போர்ட்டராக (Porter) வேலை பார்த்துக் கொண்டே சிவில் சர்வீசஸ் Exam-க்கு படித்து ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரி அந்தஸ்துக்கு தன்னை உயர்த்தி இருக்கும் ஸ்ரீநாத். இவரின் பூர்வீகம் கேரள மாநிலத்திலுள்ள மூணாறு ஆகும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் பள்ளி படிப்பை முடித்ததும் ரெயில் நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட போர்ட்டராக பணியை தொடங்கி இருக்கிறார். திருமணமாகி குழந்தை பிறந்த பின் குடும்ப செலவுகள் அதிகரித்து இருக்கிறது. போர்ட்டராக (Porter) வேலை பார்த்துக் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. அது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அந்த வருமானம் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்தார்.
அதற்கான மாற்று வழியை குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். ரெயில்வேயில் போர்ட்டராக (Railway Porter) வேலை பார்த்த ஸ்ரீநாத் தன் குழந்தையின் எதிர்கால தேவைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடாத வகையில் தன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானித்தார். மிக கடுமையாக உழைத்தார். ஆனாலும் அவரின் வருமானம் உயரவில்லை.

வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இரவு நேர பணியையும் தொடர்ந்திருக்கிறார். ஆனாலும் ஒரு நாள் வருவாய் 500 ரூபாயை தாண்டவில்லை. அது ஈடும்ப தேவைகளுக்கு போதுமானதாக இல்லாததால் கல்வி மூம் வாழ்க்கை தரத்தை மேலும் வலுப்படுத்த தீர்மானித்திருக்கிறார். சிவில் சர்வீசஸ் தேர்வில் (Civil Service Exam) வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உருவாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வேரூன்றி இருக்கிறது.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்துவதற்காக பயிற்சி மையம் சென்று படிக்க வேண்டும். Civil Service Coaching Centre சென்று படிப்பதற்கு போதிய வருமானமும் இல்லை. மேலும் குடும்ப சூழலும் ஒத்துழைக்கவில்லை. தன்னிடம் இருந்த மொபைல் போனில் (Mobile Phone) Civil Service Exam போட்டி தேர்வு குறித்த தகவல்களை தேடித் தேடி படித்தார். அந்த சமயத்தில் தான் ரெயில் நிலையங்களில் இலவச வை-பை (Free Wi-Fi) வசதி செயல்பாட்டுக்கு வந்தது.

பணி நிமிர்த்தமாக மும்பை ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. மும்பை ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. மும்பை ரெயில் நிலையத்தில் கிடைத்த இலவச வை-பை (Free Wi-Fi) வசதியை பயன்படுத்தி Civil Service Exam போட்டி தேர்வுக்கான படிப்பை தொடங்கினார்.
Civil Service போட்டித் தேர்வுக்காக எந்தவொரு புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கவில்லை. ஹெட்போன் (Headphone), சிம்கார்டு (SIM Card), மெமரிகார்டு (Memory Card) வாங்குவதற்கு மட்டுமே பணத்தை செலவிட்டிருக்கிறார். முதல்கட்டமாக ஸ்ரீநாத் அவர்கள் கேரள அரசு பணிக்கான போட்டித் தேர்வை எழுதினார். அதில் வெற்றி பெற்று அசத்திவிட்டார். ஆனாலும் அவருக்குள் Indian Administrative Service (IAS) கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அணையா ஜோதியாக சுடர் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

ஆகையால் சிவில் சர்வீசஸ் தேர்வை (Civil Service Exam) எழுத தொடங்கிவிட்டார். ஆனாலும் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற முடியவில்லை. மூன்று முறை தோல்வியையே தழுவி இருக்கிறார். இருந்தாலும் மனம் தளராமல் தேர்வை எதிர்கொண்ட அவர் 4-வது முறையாக Civil Service Exam எழுதினார். அவரின் 4-வது முயற்சியில் Civil Service Exam தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டார்.
ரெயில்வே ஸ்டேஷனில் போர்ட்டராக இருந்து, நாட்டின் முன் வரிசை அரசு அதிகாரியாக தேர்வாகி இருக்கும் அவரது அசாத்திய பயணம் போட்டித் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. சமூக ஊடகங்கள் (Social Media), இணைய (Internet) வசதியை இன்றைய இளம் தலை முறையினர் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் தங்கள் இலக்குகளையும், கனவுகளையும் அடைய முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.

தொழில்நுட்பத்தின் நன்மை மற்றும் தீமை

தொழில்நுட்பம் (Technology) என்பது மனிதனின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது ஒன்றாகும். தொழில் நுட்பவியல் நம் அன்றாட வாழ்வில் செய்யப்படுகின்ற வேலையை எளிமை படுத்துவதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் அன்றாட நடவடிக்கைகளில் நமக்கு உதவுகின்ற சிறந்த நண்பன் என்றே சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்து உள்ளது. ஒரு எளிய Nail Cutter முதல் அதிநவீன ஸ்மார்ட்போன் (Smartphone) வரை, தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.
அதே தொழில்நுட்பத்தால் பல தீமைகளும் நடக்கின்றன. நாம் வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் படம் பிடித்து காட்டுகின்றன என்று பெருமை கொள்வதைவிட நம்முடைய தரவுகள் திருடப்படுகின்றன என்றே சொல்லலாம். கத்தியை கொண்டு கனியை நறுக்கலாம்; அதே நேரத்தில் கவனமில்லாமல் அதனை பயன்படுத்தினால் நம் கைவிரல்களை நறுக்கிவிடக்கூடும். அதேபோல தான் தொழில்நுட்பமும் நம் அதனை சரியாக வழியில் பயன்படுத்தினால் நம்மை பயக்கும்!.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook