How To Make Money from Part Time Business? | வருமானம் தரும் பகுதிநேர தொழில்கள்

வருமானம் தரும் பகுதி நேர தொழில்கள்

மிகவும் இயல்பான விஷயங்களை கூட, பகுதி நேர தொழிலாக முன்னெடுக்கும் ஆர்வம் இக்கால இளைஞர்களுக்கு அதிகரித்திருக்கிறது. அதாவது பகலில் Company Work or Studies, இரவில் தங்களால் முயன்ற பகுதி நேர தொழில் (Part Time Job) என பிசியாக இயங்குகிறார்கள். சிலர் பகுதி நேர தொழிலையே, எதிர்கால தொழிலாகவும் மாற்றயிருக்கிறார்கள். அந்த வகையில் இளைஞர்களுக்கு கைகொடுக்கும் பகுதி நேர தொழில்கள் சிலவற்றை பார்ப்போம்.

கம்ப்யூட்டர் ரிப்பேர் மையம் (Computer Service Center)

இப்போது பள்ளிக்கூட மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் Laptop / கம்யூட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சாதாரணமாக ஒரு நகரத்தின் ஒரு பகுதியில் உள்ளவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் சுமார் 65 முதல் 75 % வரை கணிப்பொறியை பயன்படுத்துகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் Computer / Laptop சம்பந்தமமான ரிப்பேர் மற்றும் சர்வீஸ் செய்வதற்கு பெரிய நிறுவனங்களை அணுகுவதில்லை.

நம்பிக்கைக்கு உரிய தனிநபர்களை அல்லது அவர்களது சிறிய நிறுவனங்களை அணுகுகிறார்கள். அந்த அடிப்படையில் தொழில்நுட்பத்தை அறிந்த கல்லூரி மாணவர்கள் Or இளைஞர்கள் சுலபமாக இந்த தொழில் பிரிவை வீட்டின் ஒரு பகுதியில் செய்யலாம்.

கிராபிக்ஸ் டிசைனிங் (Graphics Designing)

வர்த்தக வாய்ப்புகள் அதிகம் கொண்ட ஒரு தொழில் பிரிவு இதுவாகும். ஹோம் மேட் பிசினஸ் (Home Made Business), பார்ட் டைம் பிசினஸ் (Part Time Business) என்ற வகையில் இளம் தொழில் முனைவோர்கள் கவனம் செலுத்த வேண்டிய பிரிவும் இதுவாகும். காரணம் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களுக்கும் விளம்பரம் அவசியம் என்ற நிலையில் அவற்றிற்கான விஷுவல் வடிவமைப்பை (Visual Design) தொழில்நுட்ப ரீதியாக செய்துவருபவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் (Company) தேடி வருகின்றன. இந்த தொழில் பிரிவில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தங்களுடைய அனுபவத்தை வளர்த்துக் கொண்டு நிறைய வர்த்தக வாய்ப்புகளை பெற முடியும்.
How To Make Money from Part Time Business?, ThaenMittai Stories

பேக்கிங் மற்றும் ரீ பேக்கிங்

Special பொருளாதார மண்டலம் and தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றிற்கு அருகாமையில் குடியிருப்பவர்களுக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பை Packing மற்றும் Repacking ஆகிய பிரிவு வழங்குகிறது. அதாவது, அந்தப் பகுதியில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களை (Company) அணுகி அவர்களுடைய தயாரிப்புகளை (Products) பெற்று அவற்றை குறிப்பிட்ட எண்ணிக்கையில் Or குறிப்பிட்ட அளவுகளில் முறையாக அடுக்கி (Arrange) பெரிய தொட்டிகளில் அடைத்து கச்சிதமாக பேக்கிங் (Packing) செய்யும் தொழில் இதுவாகும். பெரிய அளவில் முதலீடுகள் செய்ய தேவைப்படாத இந்த தொழிலை ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த தொழிலை எளிதாக மேற்கொள்ளலாம்.

நெட்வொர்க் மார்க்கெட்டிங் (Network Marketing)

அதீத (Extreme) அளவில் வளர்ச்சி பெற்றுள்ள சமீபத்திய தொழில் முயற்சிகளில் ஒன்று நெட்வொர்க் மார்க்கெட்டிங் (Network Marketing) ஆகும். உடல் நலம் அழகு சாதன பொருட்கள், சரும பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான துணை உணவுப் பொருட்கள் ஆகிய நுகர்வோர் பொருட்களை சமூக வலைத்தளங்களில் சந்தைப்படுத்தி (Social Media Marketing), விற்பனை செய்யும் நவீன முயற்சி இதுவாகும். அதனால் வீட்டில் இருந்தபடியே பேஸ்புக் (Facebook), வாட்ஸ் ஆப் (WhatsApp) மூலமாக பொருட்களை வாங்கி, விற்க முடியும்.
  • Amazon / Ecart Services (அமேசான் / பிளிப்கார்ட் இல் இருந்து பொருட்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்று விநியோகித்தல்).
  • Swiggy / Zomato / Dunzo Services (உணவகங்களில் இருந்து உணவுப் பொருள்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்று விநியோகித்தல்).
  • Rapido Bike / Ola / Uber Services (இரு சக்கர வாகன சேவைகள்).
  • Porter / லிங்க் (கொரியர் சேவை).
  • UrbanPro மற்றும் பயிற்சி வகுப்புகள் (உங்கள் துறை சார்ந்த வேலைகள்).

சொந்தமாக எதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை, கனவு, ஆகியவை வேலையில் இருக்கும் சிலருக்கு தோன்றக்கூடும். ஆனாலும் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் செய்ய பலர் தயாராக இருப்பதில்லை. சிலர் மாத சம்பளத்துக்கு பணிபுரிந்துக் கொண்டே பகுதி நேரமாக (Part Time) சொந்தத் தொழில் செய்வதுண்டு. அவ்வாறு செய்து தொழிலில் ஓரளவு வருமானம் கிடைக்கத் தொடங்கியவுடன் மாத சம்பளத்துக்கு செய்யும் வேலையை விட்டுவிடுகின்றனர்.
இன்னும் சில நபர்கள் பகுதி நேரமாக (Part-Time) சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்குரிய வழிமுறைகள் தெரியாது. இது போன்ற நபர்களுக்கு உதவும் விதமாக இங்கே சில ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. பகுதி நேரமாக சொந்த தொழில் செய்து பிறகு மாபெரும் உயரத்தை எட்டிய நிறைய தொழிலதிபர் உள்ளார்கள்.

உதாரணமாக ஒரு மனிதன் ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்துக் கொண்டு அதே பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்குரிய மாதச் சம்பளம் தான் வாங்கிக்கொண்டு இருந்திருக்க முடியும். எதாவது சொந்தமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, அதன்படி திறமையாக செயல்பட்டதால் அவர் இன்று தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக திகழ்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா - Hotel Server to Film Actor

அவர் ஒரு நடிகர் மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த இயக்குனரும் கூட ஆவார். அவர் தான் எஸ்.ஜே.சூர்யா. இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அஜித்-ன் வாலி (Vaali), விஜய்-ன் குஷி, நியூ (New), அன்பே ஆருயிரே, இசை போன்ற திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் இவர் நடித்த மாநாடு Movie இவரின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.

தமிழ் சினிமாவில் (Cinema) ஒரு நல்ல இடத்தில் இருக்கும் நடிகர் SJ சூர்யா ஆரம்ப காலத்தில் ஹோட்டல் சர்வராக (Hotel Server) பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகிற்கு அவர் காலடி எடுத்து வைக்கும் பொழுது ஒருவேளை நாம் சினிமாவில் தோற்று விட்டால் மீண்டும் ஹோட்டலில் சர்வராக பணி செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற மன உறுதியோடு தான் சினிமாவில் (Cinema) தன் முயற்சியை செய்து இருக்கிறார். அந்த மன உறுதி இன்று அவரை ஒரு வெற்றியாளராக ஆக்கி இருக்கின்றது.
இவரைப் போன்று சாதாரணமான வேலை செய்துக் கொண்டு புதிய முயற்சி செய்து வெற்றி பெற்ற பலர் இருக்கின்றனர். அவர்களது வழிமுறைகள் நமக்கு பாடமாக இருக்கும். மேலும் சில ஆலோசனைகள், உங்களுக்கு வேலை பகலில் என்றால், உங்கள் வேலையையும், Part Time பிஸினஸையும் ஒரே நேரத்தில் செய்ய முற்பட வேண்டாம். பணி முடிந்து வீட்டிற்கு வந்த பின் உங்களின் Part Time Business கவனியுங்கள்.

அந்த தொழில் குறித்த தகவல்களை Update செய்து கொள்வது அவசியம். Part Time Job சிறிய அளவில் மட்டும் வருமானம் (Income) தருகிறது என்று சொன்னால் நிரந்தர வேலையை (Permanent Job) விடுவது பற்றி சிந்திக்காதீர்கள். நிகழ்காலத்துக்கும் (Present), எதிர்காலத்துக்கும் (Future) Part Time Job வளமையை தரும் என்று நீங்கள் உறுதியாக நம்பினால், Permanent Job-ஐ விட்டு விட்டு, பகுதி நேர தொழிலை நிரந்தர தொழிலாக மாற்றிக் கொள்ளலாம். எந்த தொழில் செய்தாலும் வெற்றி பெற முடியும் என்ற மன உறுதி வேண்டும். உழைப்பே உயர்வு தரும்!
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook