மனைவிக்கு மரியாதை /கடவுள் போல் மனைவி காலில் விழும் பெரியவர்

மனைவிக்கு மரியாதை

'தாய்,க்கு பின் தாரம் என்பார்கள். தாய் தன் பிள்ளைகளை எப்படியெல்லாம் அன்பு செலுத்தி அரவணைப்பாரோ அதனை கணவன் தன்னுடைய மனைவி, தம் குழந்தைகளை வழிநடத்தும் விதத்தில் பார்க்கிறான். அதனால் தாய்க்கு கொடுக்கும் மரியாதையையும், முக்கியத்துவத்தையும் மனைவிக்கும் கொடுக்க வேண்டும். தன்னலம் பாராமல் குடும்பத்துக்காக உழைக்கும் அவரின் உழைப்பையும், தியாகத்தையும் போற்றி வணங்க வேண்டும்" என்கிறார், தாமோதரன்.

80 வயதாகும் இவர் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி ராதா, குடும்பத் தலைவி. தாமோதரன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். பொருள் கொள்முதல் மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் மேலாண்மை சார்ந்த படிப்பையும் படித்து அது சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
மனைவிக்கு மரியாதை
ஓய்வு காலத்திற்கு பிறகும் வீட்டில் முடங்கி கிடக்காமல் இளைஞர்களுக்கு திறன் மேலாண்மை பயிற்சி அளித்து வருகிறார். காலையில் எழுந்ததும் மனைவியை வணங்கும் வழக்கத்தை பின்பற்றி வருகிறார். வெளியிடங்களுக்கு செல்லும்போதோ, முக்கியமான நாட்களின்போதோ மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறவும் செய்கிறார். அதற்கான காரணத்தை விளக்குகிறார்.

Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
“காலையில் நாம் கண் விழிப்பதற்கு முன் பாகவே எழுந்து அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து முடித்து, குடும்பத்தினர் ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவேற்றி வைப்பதில் மனைவிக்கு நிகர் யாருமில்லை. சில சமயங்களில் நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் தலை தூக்கும்.

எண்ண ஓட்டம் நன்றாக இல்லை என்றால் மனம் அலைபாயும். தேவையற்ற சிந்தனைகள் எழும். அதற்கு இடம் கொடுக்காமல் குடும்பத்தினரை நல்வழிப்படுத்தும் அசாத்திய சக்தி பெண்களிடம் இருக்கிறது குடும்பத்திற்காக என் மனைவி செய்த தியாகங்கள் எண்ணற்றவை.

அதற்கு உரிய மரியாதை கொடுக்கும் நோக்கத்தில் தினமும் மனைவியை வணங்கும் வழக்கத்தை பின்பற்றி வருகிறேன்” என்கிறார். தாமோதரன் சிறு வயதில் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவர். இன்று கூட்டு குடும்பங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது என்றாலும் உறவு வட்டங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தன்மை குடும்பத்தலைவியிடம் இருப்பதாக சொல்கிறார். அவரது செயல்பாடுகளை ஊக்குவித்தால் குடும்ப உறவை மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் வலுவாக கட்டமைத்து விடலாம் என்றும் சொல்கிறார். "இன்றைய வாழ்க்கை சூழல் கூட்டுக் குடும்பங்களை பிரித்துவிட்டது. உறவினர்கள் தனித்தனியாக வாழ்ந்தாலும் அவர்களுடன் தொடர்பில் இருந்து உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
அதற்கு குடும்பத்தலைவி அந்த அனுபவத்தை கொண்டு அவர்களிடம் என்னென்ன திறன்கள் இருக்கிறது என்பதை கண்டறிந்து பொருட்கள் உற்பத்தியை பெருக்குவது, சந்தைப்படுத்துவது போன்ற செயல்முறைமை கற்றுக்கொடுக்கிறேன். அதன் மூலம் சுய சார்பை வலுப்படுத்தும் சமூக கட்டமைப்பு உருவாக வேண்டும். அதற்கான முன்னெடுப்பை நான் மேற்கொள்கிறேன்" என்கிறார்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook