நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களும் விளக்கங்களும்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களும் விளக்கங்களும்

சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் காணப்படுகிறது. வயது வித்தியாசமின்றி இந்த நோய் தாக்குதல் ஆபத்து உள்ளது. வரும்முன் காப்போம் என்பதை கருத்தில் கொண்டு உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளில் கட்டுப்பாடு போன்றவற்றை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் வராமல் பாதுகாக்க இயலும். ஒரு வேளை நோய் தாக்குதல் இருந்தாலும் அதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். நீரிழிவு நோய் குறித்த பல்வேறு சந்தேகங்களும், நம்பிக்கைகளும் மக்களிடம் உள்ளது. அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் உதவும் மருத்துவ தகவல்களை காண்போம்.

Read Also: Vinayaka Chaturthi Story In Tamil, ஏன் விநாயகர் சிலையை நீரில் கரைக்கிறார்கள்?
டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய்
டைப் 1 நீரிழிவு நோய் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே காணப்படும் நோயாகும்.டைப் 1 நீரிழிவு நோய் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே காணப்படும் நோயாகும். நமது கணையத்தில் இருக்கும் பீட்டா செல்களை உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் அளிக்க செய்கிறது.

இது ஒரு தன்னியக்க நோய் எதிர்ப்புநிலையாகும்.இது மரபணு காரணங்கள் மற்றும் சுற்றுச் சூழல் காரணங்களால் ஏற்படலாம். டைப் 1 நீரிழிவு நோயில், இன்சுலின் உற்பத்தி முற்றிலும் நடைபெற முடியாமல் போகிறது.அம்மாவிற்கு டைப் 1 சர்க்கரைநோய் இருந்தால் குழந்தை வாய்ப்பு 3 %, அப்பாவிற்கு டைப் 1 சர்க்கரைநோய் இருந்தால் இந்த சமயத்தில் குழந்தைக்கு 5 % இந்தநோய் வர வாய்ப்பு உள்ளது. டைப் 2 நீரிழிவு நோய் அனைத்து வயதினரையும், குறிப்பாக 30 வயதை கடந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு வளர்சிதை மாற்ற நோயாகும். இந்நோயில், உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவாக இருப்பதாலும், இப்படி சுரக்கப்படும் இன்சுலின் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு நிலையால் (இன்சுலின் சிஸ்டன்ஸ்) திறம்பட செயல்பட முடியாமல் போகிறது. இதனால் ரத்த சர்க்கரை அதிகமாகிறது. உடல் பருமன், தவறான உணவு பழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் இதை ஏற்படுத்துகிறது.


'பரிசோதனைகள்
டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயினை உறுதிப்படுத்த ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது. இதில் உணவுக்கு முன் ரத்த சர்க்கரை அளவு, உணவு உண்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு, குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனை (ஜி.டி.டி), எச்.பி.ஏசி, இன்சுலின் அளவு, சீ-பெப்டைட் டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறது. டைப் 1 நீரிழிவு நோயை டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து வேறுபடுத்துவதற்கு சில குறிப்பிட்ட பரிசோதனைகள் இருக்கிறது. இதற்கு ஆன்ட்டி பாடி டெஸ்ட் என்று (பிற பொருள் எதிரி) பெயர். இந்த பரிசோதனையில் ஜி. ஏ.டி ஆன்டிபாடீஸ் (குளுடாமிக் ஆசிட் டிகார்பாக்சிலேஸ்), இன்சுலினோமா அசோசியேட்டடு 2ஆட்டோ ஆன்ட்டி பாடிஸ் IA-2A, இன்சுலின் ஆட்டோ ஆன்ட்டி பாடிஸ் (IAA), ஐலட் செல் சைடோபிலாஸ்மிக் ஆட்டோ ஆன்டிபாடிஸ் (ICA) போன்ற பிறப்பொருள் எதிரி பரிசோதனைகள் செய்து டைப் 1 நீரிழிவு நோயை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயை ஆரம்ப கட்டத்திலேயே எப்படி கண்டறிவது?
ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கு ஓரல் குளுக்கோஸ்டாலரன்ஸ் டெஸ்ட் (ஓ.ஜி. டி.டி) பரிசோதனை செய்ய வேண்டும். இப்பரிசோதனையில் முதலில் வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை பரிசோதனை (பாஸ்டிங் பிளட் சுகர்) செய்யப்படுகிறது. பின்னர் தண்ணீரில் 75 கிராம் குளுக்கோஸ் கலந்து குடித்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ரத்தச் சர்க்கரை அளவு சோதனை செய்து பார்க்கப்படுகிறது. வெறும் வயிற்றில் 100 மி.கி/டெசி லிட்டருக்கு குறைவாகவும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 140 மி.கி/டெசி லிட்டருக்கு குறைவாகவும் இருந்தால் அவர்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்று அர்த்தம்.

ஏதும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் 101 மி.கி/டெசி லிட்டர் முதல் 125 மி.கி/டெசி லிட்டர் வரைக்கும் சர்க்கரை நம் உடம்பில் இருக்கும்போது ,அதற்கு பெயர் இம்பேர்டு பாஸ்டிங் குளுக்கோஸ் என்றும் . இது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையாகும். இதை ப்ரீடயாபட்டீஸ் என்றும் அழைப்பார்கள். சாப்பிட்ட பின் ரத்தச் சர்க்கரை அளவு 141 மி.கி/டெசிலிட்டர் முதல் 199 மி.கி/டெசிலிட்டர் வரை இருந்தால் இம்பேர்டு குளுக்கோஸ் டாலரன்ஸ் என்று பெயர். இதுவும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையாகும். வெறும் வயிற்றில் 126 மி.கி/டெசி லிட்டருக்கு மேல் இருந்தாலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்த சர்க்கரை அளவு 200 மி.கி/ டெசிலிட்டருக்கு மேலிருந்தாலும் அவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று அர்த்தம்.


நீரிழிவு நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கும் இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட்டை, 40 வயதை கடந்தவர்கள், நீரிழிவு நோய் உள்ள குடும்ப பாரம்பரியத்தில் பிறந்தவர்கள், உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உயர் ரத்த கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்பவர்கள், கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், அதிக எடை உள்ள குழந்தை பெற்றெடுத்தவர்கள் கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும்.

அதிகமாக வியர்ப்பது ஏன்? ஹைபர்ஹைட்ரோசிஸ்:
இதில் காரணம் இல்லாமல் அதிகமாக வியர்க்கும் நிலையை பிரைமரி ஹைபர்ஹைட்ரோசிஸ் எனவும், ஏதேனும் காரணத்தோடு ஏற்படும் அதிகமான வியர்வையை செகண்டரி ஹைப்ரோ ஹைட்ராசிஸ் அல்லது டயாப் ரோசிஸ் என்றும் கூறுவார்கள்.

கஸ்டேட்டரி ஸ்வெட்டிங்:
இது உணவை உண்ணும்போதோ அல்லது நுகரும் போதோ முகம் மற்றும் கழுத்து பகுதியில் அதிகமான வியர்வை ஏற்படும். இது பெரும்பாலும் அட்டானமிக் நரம்புகள் (தன்னிச்சை நரம்புகள்) பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும்.

இரவு நேர வியர்த்தல்:
இது பெரும்பாலும் ரத்த சர்க்கரை தாழ்நிலையால் ஏற்படலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இதுபோன்று அதிகமான வியர்க்கும் நிலையான ஹைட்ரோஹைட்ராலிஸ்க்கு முக்கிய காரணம், டயாபட்டிக் அட்டான நரம்பியல் பாதிப்பு, உடல் பருமன் அல்லது மாத்திரைகளின் பக்க விளைவுதளால் கடி ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்கு உடல் எடையை குறைக்க வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் ரத்த சர்க்கரை அளவை அடிக் சரிபார்த்து மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து இன்சுலின் மற்றும் சர்க்கரை மாத்திரைகளின் டோசை மாற்றி அமைத்து சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகமான வியர்வைஏற்படுதல் தொற்றுக்கும், உடலில் இருந்து துர் நாற்றம் வீசவும் வழி வகுக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களும் விளக்கங்களும்
மாத்திரை உட்கொள்ள மறந்து விட்டால்.....
நீரிழிவு நோயாளிகள் பொதுவாக மாத்திரைகளை ஞாபகமறதி காரணமாக சில நேரம் உட்கொள்ள மறந்து விடுகிறார்கள். சில சமயம் மறந்து போனதற்கும் சேர்த்து நிறைய மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொள்கிறார்கள். சிலர் மாத்திரைகள் வாங்க முடியாத சூழ்நிலையில் மாத்திரைகளை உட்கொள்ள தவறலாம். எப்போதாவது ஒருமுறை மாத்திரையை தவறுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அடிக்கடி நீரிழிவு மாத்திரைகளை உட்கொள்ள தவறும்போது ரத்தச் சர்க்கரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நீங்கள் மாத்திரையை தவறவிட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் அதை உணரும் போது உடனே மாத்திரையை உட்கொள்ளுங்கள். ஆனால் மாத்திரை உட்கொள்ள தவறியதை மிகத் தாமதமாக அடுத்த டோஸ் மாத்திரையை போட வேண்டிய நேரத்தில் உணர நேர்ந்தால், நீங்கள் தவற விட்ட மாத்திரை டோசை தவிர்த்து வழக்கமாக போட வேண்டிய மாத்திரை டோசை உட்கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் தவற விட்ட மாத்திரையையும் வழக்கமாக உட்கொள்ள வேண்டிய மாத்திரையையும் சேர்த்து இரண்டு மாத்திரைகளாக போடக்கூடாது.


சர்க்கரை நோயாளிகள் கோதுமை ரவையை சாப்பிடலாமா?
100 கிராம் கோதுமை ரவையில் 152 கலோரிகள், 28 கிராம் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், 5 கிராம் புரதம் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் பி1, பி2, பி6, பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்து ஆகியவையும் இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு 41 ஆகும். இது ஒரு மிகக் குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் ஆகும். இதில்உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் ஏற்படாமல் தடுக்கிறது.கோதுமை ரவையில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் மெக்னீசியம் இதய ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாக கருதப்படுகிறது. கோதுமை ரவையில் வைட்டமின் பி1, பி2, பி6, புரதம், நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும், கொழுப்பு மற்றும் கிளைசிமிக் இண்டெக்ஸ் மிகக்குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் தாராளமாக கோதுமை ரவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் மாத்திரை உட்கொள்ள தவறியதை மிகத் தாமதமாக அடுத்த டோஸ் மாத்திரையை போட வேண்டிய நேரத்தில் உணர நேர்ந்தால், நீங்கள் தவற விட்ட மாத்திரை டோசை தவிர்த்து வழக்கமாக போட வேண்டிய மாத்திரை டோசை உட்கொள்ளுங்கள்.எக்காரணம் கொண்டும் தவற விட்ட மாத்திரையையும் வழக்கமாக உட்கொள்ள வேண்டிய மாத்திரையையும் சேர்த்து இரண்டு மாத்திரைகளாக போடக்கூடாது.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook