விவசாயிகளுக்கு வெகுமதியை அளிக்கும் 'அரக்கு'

விவசாயிகளுக்கு வெகுமதியை அளிக்கும் 'அரக்கு'

'அரக்கு முத்திரை பற்றி நாம் அறிவோம். இதில் பயன்படுத்தப்படும் பழுப்பு சிறிய பூச்சி இனத்தால் உற்பத்தி செய்யப்படுவது. முத்திரை தாண்டியும் பல்வேறு பயன்பாடுகள் கொண்ட அரக்கு, விவசாயிகளுக்கும் வருவாய் வெகுமதியை அளிக்கக்கூடியது. இதுபற்றி விரிவாக விளக்குகிறார், முதுநிலை ஆராய்ச்சியாளரான முனைவர் -முத்துக்குமார்.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
‘கொம்புருக்கி’ எனப்படும் அரக்குப்பூச்சி, டக்கார்டிடே' என்ற குடும்பத்தைச் சேர்ந்த, பேன், மூட்டைப்பூச்சி போன்ற சிறிய பூச்சி இனமாகும். சில மரம், செடிகளில் உற்றுக் கவனித்தால்தான் தெரியும் இந்த அரக்குப்பூச்சி, ஓர் உருப்படியான காரியத்தைச் செய்கிறது. அதுதான், பெண் அரக்குப்பூச்சி சுரக்கும் ‘அரக்கு'.மரப்பொருட்களுக்கு பூசப்படும். 'வார்னிஷ்', சாயம், 'லிப்ஸ்டிக்' எனப்படும் உதட்டுச்சாயம், கண் கண்ணாடி, அழகுசாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மின்சாதனங்கள் தயாரிப்பு, பழங்கள், சாக்லேட்டுகளை பாதுகாக்கும் மேற்பூச்சு என அரக்கின் பயன்பாடுகள் அனேகம்.

வேத காலம் தொட்டே அரக்கு பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. பாண்டவர்களை அழிப்பதற்காக அரக்கு மாளிகையை கவுரவர்கள் கட்டியதாக மகாபாரதத்திலும் படித்திருப்போம்.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
இந்த அரக்கு உற்பத்தி, ஏற்றுமதியில் உலகின் 3 முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது இந்தியா. நாம் ஆண்டுக்கு 20 ஆயிம் டன் அரக்கை உற்பத்தி செய்கிறோம். ஆனால் அதிகமான தேவை காரணமாக, இது போதுமானதாக இல்லை. எனவேதான் நாட்டில் அரக்கு உற்பத்தியை உயர்த்துவதற்கு மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது. அதிகமான அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் இது, விவசாயிகளுக்கு வளமான வருவாய் வழங்கும் வழியாகவும்கருதப்படுகிறது.

அந்த நோக்கத்தின் அடிப்படையில், ஜார்கண்ட்மாநிலம் ராஞ்சியில் உள்ள, மத்திய வேளாண்அமைச்சகத்தின் ஐ.சி.ஏ.ஆர்.-நீசா (தேசிய இரண்டாம் நிலை வேளாண் நிறுவனம்), இது 8 அரசு நிறுவனங்களோடு சேர்ந்து இயங்கி வருகிறது என்று சொல்கிறார்.

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
அந்த நிறுவனங்களுள் ஒன்றான, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கேரள வன உயிரின ஆராய்ச்சி நிறுவனம், அரக்குப்பூச்சியை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது..விவசாயிகளிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முற்படுகிறது. அந்த வன ஆராய்ச்சி நிறுவனத்தில்தான் முத்துக்குமார் முதுநிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பாலத்தொழு கிராமம் இவரது பூர்வீகம்.

அரக்கு உற்பத்தியில் வடஇந்திய விவசாயிகள் 'பலரும் ஏற்கனவே வெற்றி ஈட்டி வருகிறார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில விவசாயிகளிடம்தான் இது பற்றிய விவரம் பரவவில்லை. அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் முத்துக்குமார் ஈடுபட்டு வருகிறார்.

Read Also: The Role Of Tamilnadu Freedom Fighters In The India | இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு
“அரக்குப்பூச்சிகள், வேங்கை, வாகை, இலந்தை போன்ற மரங்களில் இயற்கையாகவே காணப்படுகின்றன. அவற்றின் சாற்றை துளையிட்டு உறிஞ்சி உயிர் வாழ்கின்றன. அப்போது தமது எதிரிகளிடம் இருந்தும், சுற்றுப்புறச் சூழலில் இருந்தும் தம்மை கவசம் போல பாதுகாத்துக்கொள்ள பெண் அரக்குப்பூச்சிகளால் சுரக்கப்படும் திரவம்தான், அரக்கு. இது காற்றுப்பட்டதுமே உலர்ந்துவிடும். இதை சேகரித்தே தூய அரக்கு தயாரிக்கப்படுகிறது. விவசாயிகள் இந்த அரக்குப்பூச்சிகளை பயன்படுத்தி, தாமே அரக்கு உற்பத்தி செய்ய முடியும். அதற்கான செடிகளை விளைவித்து, அந்த கிளைகளில் இந்த அரக்குப்பூச்சிகளை கொண்ட சிறு தண்டுகளை கட்டிவைத்தால், அவற்றில் இப்பூச்சி பெருகும். அரக்கை உருவாக்கும்.

பொதுவாகவே அரக்குப்பூச்சி, மனிதர்களுக்கு எந்த தீங்கும் செய்யாது. தானுண்டு, தனது வேலையுண்டுஎன்று இருக்கும் ஒரு மென்மையான உயிரினம். இது எளிதில் பரவாது. எனவேதான் நாம் அரக்கு உற்பத்தி செய்ய விரும்பினால், செடிகளில் 'கட்டிவைத்து கவனமாக பராமரிக்க வேண்டியுள்ளது.

Read Also: Vinayaka Chaturthi Story In Tamil, ஏன் விநாயகர் சிலையை நீரில் கரைக்கிறார்கள்?
ஆனால் அதற்கேற்ற வெகுமதியை விவசாயிகளுக்கு அரக்கு நிச்சயம் வழங்கும். ஒரு கிலோ அரக்கு ரூ.400 முதல் ரூ.600 வரை விலை போகிறது. ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள ஒரு விவசாயி, அதில் அரக்குப்பூச்சி வளர்ப்பதற்கான 4 ஆயிரம் செடிகளை வைத்திருந்தால், சுமார் 6 மாத காலத்தில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம். பருவநிலை பாதிப்பு, நிலையான, சரியான வருவாய் கிடைக்காதது என்ற எந்தக் கவலையும் இல்லை.

நீரிலும், எண்ணெய்யிலும் கரையாது, சூடு படுத்தினால் உருகி, நீளும், ஒட்டும், சூடு படுத்துவதை நிறுத்தினால் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும் என பல சிறப்புத்தன்மைகளை கொண்ட அரக்கின் மகத்துவம் என்றும் மங்காது. இதற்கு மாற்றுப்பொருளும் கிடையாது. எனவே இதன் மதிப்பு எப்போதுமே குறையாது.


பொதுவாக, பிளெமின்சியா செமியாலாட்டா,பிளமென்சியா மேக்ரோபைலா என்ற 2 புதர்ச்செடிகள் அரக்குப்பூச்சி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை அதிக ஈரப்பதமும், அதிக வறட்சியும் கூடியவை. செம்மண் மிகவும் ஏற்றது. நமது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மத்தியப் அரக்கு உற்பத்தி செய்ய முடியும். மற்ற பகுதி பகுதிகளில் இந்த செடிகளை சிறப்பாக வளர்த்து, அரக்கு உற்பத்திகளிலும் முயன்று பார்க்கலாம்.

விவசாயிகளுக்கு வெகுமதியை அளிக்கும் அரக்கு
எட்டு ஆண்டுகள் வரை அரக்குப்பூச்சி செடிகளை பயன்படுத்த முடியும். இவற்றுக்கு இடையில் சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டை போன்றவற்றை ஊடு பயிராகவும் வளர்க்கலாம். ஆனால், அரக்கு உற்பத்தி என்பது புதுவித மானதாக இருக்கிறதே, நம்மால் முடியுமா, இதற்கான வாய்ப்பு, வழிகள் என்னவென்று தெரியவில்லையே என தயங்க வேண்டாம்.


அரக்குப்பூச்சிகள், அவை வாழும் செடிகளை கொடுத்து, வழிகாட்டல், ஆலோசனை வழங்குவதுடன், உற்பத்தியான அரக்கையும் கேரள வன ஆராய்ச்சி நிறுவனமே பெற்றுக்கொள்கிறது. விவசாயிகள் விரும்பினால், அரக்கு தொழிற்சாலைகளுக்கு நேரடியாக விற்கலாம் ஏற்றுமதியும் செய்யலாம். செடி கிளைகளில் இருந்து அரக்கை பிரித்து எடுத்தோ அல்லது கிளையுடன் அவற்றை வெட்டி எடுத்தோ அனுப்ப முடியும்.

ஏற்கனவே ஈரோடு மாவட்டம் கொளப்பலூரை சேர்ந்த மஞ்சுளா-பார்த்திபன் விவசாய தம்பதி, அரக்கு உற்பத்தியில் ஈடுபட்டு நல்ல பலன் கண்டுள்ளனர். மேலும் இதன் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நானும், முனைவர் டி.வி.சஜீவும் கிருஷி விஞ்ஞான கேந்திராவுடன் இணைந்து, அரக்கு உற்பத்தி தொடர்பாக ஈரோடு விவசாய தம்பதிக்கு உதவி, ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். பிற விவசாயிகளுக்கும் அதுபோல ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம்” என்று முத்துக்குமார் உற்சாகமாக கூறி முடித்தார்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook