தமிழகமே உற்று நோக்கும் கோவை தொகுதி / அண்ணாமலையால் பரபரப்பாக மாறிய தேர்தல் களம்

தேர்தல் திருவிழா....! தேசம் எங்கும் நடக்கிறது ...!

"இந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் பல முனைப்போட்டியை எதிர்நோக்குகிறது. குறிப்பாக பா.ஜனதா சில தொகுதிகளை குறிவைத்து களப்பணியை செய்து வந்தது. இதில் சென்னைக்கு அடுத்தப்படியாக முக்கிய நகரமாக விளங்கும் கோவை என்பது கொங்கு மண்டலத்தின் தலைநகர் அந்தஸ்த்தில் உள்ளது..

Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
"தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில் நகரம். அதேநேரம் விவசாயமும் இங்கு இன்னும் கணிசமாக இருக்கிறது. தொழில்நுட்பத்துறையிலும் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இப்படிப் பல துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை கொண்ட நகரமாக கோவை இருக்கிறது. அந்த வகையில் இங்கு சுயம்புவாக தோன்றிய தொழில்கள் ஏராளம். இதனால் தென்னிந்தியா வின் மான்செஸ்டர் என்ற பெருமையுடன் கோவை விளங்குகிறது.

நட்சத்திர தொகுதி

"தொழில்துறைகள், கல்வி நிலையங்கள், விவசாயம் நிறைந்த கோவையில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. தேர்தல் காலங்களில் கோவை என்றாலே நட்சத்திர அந்தஸ்த்தை பெற்று ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

"அதுபோன்று கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டு கவனத்தை ஈர்த்தார்.

Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
"அதுபோன்றுதான் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோதாவில் குதித்து உள்ளார். இதனால் கோவை தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் அண்ணாமலை; தி.மு.க. சார்பில் முன்னாள் மாநகராட்சி மேயரான கணபதிராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி உள்பட 37 பேர் போட்டியிடுகின்றனர். அதில் குறிப்பாக கோவை நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் நேரடியாக களத்தில் குதித்து உள்ளதால் போட்டி கடுமையாகவே இருக்கும் என கூறுகின்றனர்.

தமிழகமே உற்று நோக்கும் கோவை தொகுதி / அண்ணாமலையால் பரபரப்பாக  மாறிய தேர்தல் களம்

ஒட்டுமொத்த பார்வை

"கோவை நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்கி உள்ள அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்த கட்சியினர் இடையே ஆதரவு பெருகி வருகிறது. அவரை எதிர்த்து தி.மு.க., அ.தி.மு.க. நேரடியாக களம் இறங்கி உள்ளதால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பார்வையும் கோவை தொகுதி பக்கமே உள்ளது.

Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
"பா.ஜனதா தலைவர்களில் இளம் தலைவராக, துடிப்பு மிக்கவராக, காவல்துறை அதிகாரத்தில் இருந்து, அரசியல் அதிகாரத்துக்கு வந்தவராக மிடுக்குடன் அவரது செயல்கள் உள்ளதால், கோவை அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. இதனால் தி.மு.க., அ.தி.மு.க.வை தாண்டி அண்ணாமலை தேர்தலில் வெல்வாரா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்து உள்ளது.

பரபரப்பான களம்

"தமிழ்நாட்டில் தொழில்வளம் மிகுந்த கோவை அ.தி.மு.க.வின் கோட்டையாகவே இருந்தது. ஆனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வசம் சென்றது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் வென்று இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அ.தி.மு.க. அதி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேவேளையில் ஆளும் கட்சியாக இருந்து பல்வேறு திட்டப்பணிகளில் கவனம் செலுத்தும் தி.மு.க., கோவை தங்களின் கோட்டைதான் என்பதை மீண்டும் நிரூபிக்க முனைப்பு காட்டி வருகிறது. அதேவேளையில் பா.ஜனதாவும் கொங்கு மண்டலமான கோவையை கைப்பற்ற துடிக்கிறது. இந்த மும்முனை போட்டியால் இங்கு தேர்தல் களம் பரபரப்பாக தினமும் நகர்ந்தது.

"பெண்களின் வயதிற்கும் பார்க்கும் வேலை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் எந்த ஒரு தடையும் தேவை இல்லை ,ஒரு பெண் எப்படி வயதை பொருட்படுத்தாமல் முன்னேறி செல்வது ?

அறிந்து கொள்வதில் ஆர்வம்

"பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் அறிந்த ஒருவராக, தனது செல்வாக்கை வளர்த்து வைத்துள்ளார். இவரது வெற்றி வாய்ப்பு, தமிழ்நாட்டில் பா.ஜனதாவின் எதிர்காலமாகப் பார்க்கப்படுவதால் அனைத்து தரப்பினரும் இந்த தொகுதியின் முடிவை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
"அதாவது மற்ற தொகுதிகளில் வசித்து வந்தாலும் கோவை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களிடம் கோவையில் அண்ணாமலையின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? அவர் வெற்றி பெற்று விடுவாரா? என விசாரித்து வந்தனர். இதுபோல் கோவை மக்களிடமும் அண்ணாமலை வெற்றி பெறுவாரா அல்லது 2-வது இடம் பிடிப்பாரா என்ற விவாதம் சூடுபிடித்து உள்ளது. இதன் மூலம் கூடுதல் பரபரப்புடன் நகர்ந்த கோவை தொகுதியில் நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்ததால் சற்று அமைதியாகி உள்ளது.

அண்ணாமலை சவால் நிறைவேறுமா?

"இங்கு பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் நான் வெற்றி பெற்று காட்டுவேன் என்று அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். ஆனால் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேதான் போட்டி, அண்ணாமலை தங்களுக்கு போட்டியே இல்லை என்று தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரம் செய்தனர், தொகுதியில் உள்ள அனைத்து பூத்களிலும் ஏஜென்டை முதலில் பா.ஜனதா நியமிக்கட்டும், பிறகு போட்டி பற்றி பேசட்டும் என்று அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்து உள்ளார்.

"இதுபோன்ற விமர்சனங்களுக்கு விடைகொடுத்து கொங்கு மண்டலமான கோவையில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணாமலை உள்ளார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் கோவையில் இருந்துதான் தொடங்கும், இந்த ஒரு வண்டிதான் டெல்லிக்கு போகும்.நான் மட்டும்தான் டிரைவர் என்று பிரசாரத்தின்போது அவர் கூறி இருந்தார்.

"'இந்த வண்டி டெல்லி எல்லையை தொடுமா. என்பது மக்கள் கையில் தான் உள்ளது. அத்துடன் வேட்பாளர்களின் வெற்றியையும் மக்கள் தான் தீர்மானிப்பார்கள். அதை ஜூன் 4-ந் தேதி வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook