இலவசங்கள் இல்லாத பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை!

இலவசங்கள் இல்லாத பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல, ஓவொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன், தேர்தலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சக்தியாக அது கருதப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சியும் தேர்தல் அறிக்கையில், அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திட்டங்களை வகுத்து செயல்படுவார்கள். அந்தவகையில், நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுவிட்ட நிலையில், பா.ஜனதா மட்டும் வெளியிடாமல் பலத்த எதிர்பார்ப்புகளை மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது.

Read Also: வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள்
இவ்வளவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பா.ஜனதா தேர்தல் அறிக்கையை தயாரிக்க பொதுமக்களிடம், பலதரப்பட்ட தொழில் அமைப்புகளிடம் கருத்து கேட்டிருந்தது. ஏறத்தாழ 15 லட்சம் பேரின் கருத்துகள், ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திரமோடி பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

'மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் 76 பக்கங்களைக்கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில், ஏற்கனவே நிறைவேற்றி வரும் இலவச உணவு தானிய திட்டம் தவிர, புதிய இலவசங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, மிக துணிச்சலான, ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை மட்டும் மையமாகக் கொண்ட இலவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கை என்றே சொல்லலாம்.

Read Also: வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை
பா.ஜனதாவின் கொள்கையான பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படும், பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் என்பது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக மாற்றுவதற்குரிய முயற்சிகளாக அபரிமிதமான வளர்ச்சி, குறைவான பணவீக்கம், நிதி மேலாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைக்கப்படும், உலகிலேயே பழமையான மொழியான தமிழ்மொழியின் பெருமையை பரப்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

Read Also: How To Get Rid of Stress and Succeed?, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடைவது எப்படி?
இலவசங்கள் இல்லாத பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை!
மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல சிறப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறு தொழில்களுக்கு வழங்கப்படும் முத்ரா கடன் திட்டத்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும். 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்தகுடிமக்களுக்கும் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு எந்தவித வருமான வரம்புமின்றி அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

ஆனால், 'ஆயுஷ்மான் பாரத் 'என்று அழைக்கப்படும் இந்த மருத்துவ காப்பீட்டுதிட்டத்தில், ஒவ்வொரு சிகிச்சையையும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் அளிக்க மிக சிறி மருத்துவமனையால்கூட முடியாது.

Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற முடியும். எனவே, இந்த கட்டண விகிதத்தை உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையையும் பரிசீலிக்கவேண்டும். மற்றபடி, பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசப்பட்டு வரும் கச்சத்தீவு விவகாரம், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி சலுகை போன்ற எந்த சலுகைகளும் இல்லை என்பது ஒரு குறைவாகும்.

மொத்தத்தில் மோடியின் உத்தரவாதம் என்ற இந்த தேர்தல் அறிக்கை எந்த அளவு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் போடும் வாக்குகளின் எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி காட்டிவிடும்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook