Vinayaka Chaturthi Story In Tamil, ஏன் விநாயகர் சிலையை நீரில் கரைக்கிறார்கள்?

Vinayaga Chaturthi / Ganesh Chaturthi

முழுமுதற்கடவுளும், சிவனின் மூத்த மகனுமான விநாயகர் பிறந்த நாளை தான் விநாயகர் சதுர்த்தி திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. விநாயகர் சதுர்த்தி திருவிழா என்பது ஒவ்வொரு தமிழ் வருடத்தில் வருகின்ற ஆவணி திங்கள் வளர்பிறையில் வருகிற சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் வரும் ஆவணி திங்களில் சதுர்த்தி நாள் அன்று மனித உடலோடும், யானை முகத்தோடும், கூடிய அரக்கனாக இருந்த கஜமுகாசுரனை வதம் செய்து கொன்று தேவர்களை மீட்டார் என்று ஆன்மிக வரலாற்று ஆய்வு கூறுகிறது. எனவே, அன்று முதல் ஆவணி திங்களில் வரும் சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறார். இந்த தினத்தில் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை.


விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடிந்த பின்பு ஏன் விநாயகர் உருவச் சிலையை நீரில் கரைக்கிறார்கள்? எந்த ஒரு நற்காரியங்களில் ஈடுப்படும் போது முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிய பின்பு தான் வேலை செய்கிறோம். முதற்கடவுளான விநாயகர் வினை தீர்ப்பவர். எந்த ஒரு நற்காரியங்களில் ஈடுப்படும் போது அனைவராலும் போற்றப்படும் கடவுள். விநாயகர் சதுர்த்தி திருவிழா என்பது தமிழ் மாதம் ஆவணி திங்களில் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.

விநாயகர் என்பதன் காரணப் பெயர், "வி" என்றால் 'இதற்கு மேல் இல்லை' என்பது பொருள். "நாயகர்" என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாரும் இல்லை என்று பொருள்பட தான் "விநாயகர்" என்று பெயர் இடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் நமக்கு பிடித்த மாதிரி களிமண்ணாலான விநாயகர் சிலைகள் செய்து விநாயகர்க்கு பிடித்த சுண்டல், அவல், பொரி, பொங்கல், அப்பம், கரும்பு, பழங்கள், மலர்கள் கொழுக்கட்டை எல்லாமே படைத்து விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினமாக கொண்டாடுகிறார்கள். இப்படி திருவிழாவாக கொண்டாடப்படும் விநாயகர் சிலையை ஏன் மூன்றிலிருந்து 5 நாட்கள் கழித்து நீர் உள்ள இடங்களில் கரைக்கிறோம் தெரியுமா?.
ஏன் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு பின் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் உள்ள இடங்களில் கரைக்கிறார்கள்? | ThaenMittai Stories
ஒரு முக்கியமான காரணத்திற்காகத் தான் நமது முன்னோர்கள் களிமண்ணால் ஆன விநாயகரை குளம், ஆறு, ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதன் காரணம் என்னவென்று பார்த்தால் பொதுவாக ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் வரும். ஆற்றங்கரையில் வருகிற தண்ணீர் மணலை அடிச்சிட்டு போய்விடும். ஆகையால் தண்ணீர் விரைவாக வற்றி விடும். விவசாயம் செய்யும் விளைநிலங்களுக்காகவும், குடிப்பதற்காகவும் அந்த தண்ணீரை நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத சூழல் உருவாகிறது.


அந்த நேரத்தில் நாம் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை இந்த மாதிரி பூஜை செய்து 5 நாட்களுக்கு பின் கொண்டு போய் ஆற்றங்கரையில் கரைக்கும் பொழுது மணல் இருக்க பகுதியில் தண்ணீர் நிற்கும். தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருக்கும் பொழுது அந்த களிமண்ணால் ஆன சிலையை கொண்டுபோய் கரைக்கும் பொழுது அதனுடைய தன்மை அதிகமாகி ஓடவிடாமல் அந்த இடத்தில் நீரின் வேகத்தைக் குறைத்து தண்ணீர் தேங்கும் படியாக செய்யும். இதனால் நமக்கு தண்ணீர் வளம் கிடைக்கிறது.
இந்த மாதிரி நீர் நிலையிலிருந்து குடிநீருக்கும் விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைக்கிறது. அந்த மாதிரி இடத்தில் தண்ணீரை அதிகமாக ஓடவிடாமல் தண்ணீரின் ஓட்டத்தைக் குறைத்து தண்ணீர் தேங்கும் படியாக செய்கிறது. இந்த தண்ணீரை விவசாயம், குடிநீர், மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்திக்கலாம் என்று முன்னோர்கள் கருதி சொல்லி வந்தார்கள். அப்போதிலிருந்து இதனை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆகையால் தான் 3 அல்லது 5 நாட்களுக்கு கழித்து விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதைப் பார்த்திருப்போம்.

இதனை அறிவியல் ரீதியாக பார்த்தால் உடனே செய்யும் களிமண் சிலை விரைவில் கரையும் தன்மை வாய்ந்ததாக இருக்கும். ஆகையால் ஒரு நான்கு அல்லது ஐந்து நாட்கள் நன்கு காய்ந்த பின் களிமண்ணுடைய தன்மை கொஞ்சம் இறுக்கம் கொடுக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் களிமண் சிலையை எடுத்துக் கொண்டு போய் நாம் ஆற்றங்கரையில் உள்ள தண்ணீரில் கரைக்கும் பொழுது அது தண்ணீரை இன்னும் கவர்ந்து இழுத்து அந்த இடத்தில் தண்ணீரை தக்க வைத்துக்கொள்ளும். அதாவது மண்ணை இழுத்து செல்லும் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கும் படியாக செய்கிறது.
மண்ணுக்கும் மணலுக்கும் சிறு வித்தியாசம் மணல் இருக்கும் இடத்தில் தண்ணீர் வேகமாக ஓடிவிடும். களிமண் உள்ள இடத்தில் தண்ணீரை கவர்ந்து இழுத்து அந்த இடத்தில் தக்க வைத்துக்கொள்ளும். அதனால் அந்த இடத்தில் தண்ணீர் ஓட்டம் குறைவாக இருக்கும். இதனால் மண் அரிப்பைத் தடுக்கவும், குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் மாதிரி நமது முன்னோர்கள் கொண்டு வந்தார்கள். இந்த காரணத்திற்காக விநாயகர் சதுர்த்தி திருவிழா நடந்து முடிந்த பின்பு விநாயகர் உருவச் சிலையை தண்ணீர் உள்ள நீர் நிலைகளில் கரைக்கிறோம்.


தேவர்கள் விநாயகரை வணங்கினர் ஏனென்றால் ஆயுதங்களால் அழிக்க முடியாத வரம் பெற்ற கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலன் ஆக சித்தி மற்றும் புத்தி என்ற தேவ கன்னியரை விநாயகருக்கு திருமணம் முடித்து வைத்தார்கள். புகை வடிவில் தோன்றிய அசுரனை அழித்த காரணத்தால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயரும் உண்டு. இடையூறுகள், இன்னல்கள் மற்றும் தடைகளை நீக்குவதால் இவரை விக்னேஷ்வரர் என்றும் அழைப்பார்கள். ஆகையால் தான் எந்த ஒரு நல்ல செயலையும் தொடங்குவதற்கு முன்பாக பிள்ளையார் சுழிப் போட்டு தொடங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. எல்லா தெய்வங்களும் பிள்ளையாருக்குள் அடக்கம். பிள்ளையார் வணங்காமல் எந்த ஒரு பூஜையும் மற்றும் எந்த ஒரு மகா ஹோமங்களும் கூட முழுமைப் பெறாது என்பது ஐதீகம்!.

Related Tags

Bhakthi Kathaigal | Ganesh Chaturthi | Ganesh Chaturthi Story In Tamil | Why Ganesh Chaturthi is Celebrated? | Tamil Devotional Story | Krishna Story In Tamil | Vinayaka Chaturthi Wishes | Ganesh Chaturthi Celebration | Moral Stories In Tamil | வாழ்க்கையை மாற்றும் கிருஷ்ணரின் போதனைகள் | கண்ணன் கதை | கிருஷ்ணரின் பொன்மொழிகள் | கிருஷ்ண வழிபாடு.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.



Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook