Life Changing Lessons to Learn from Lord Krishna | ThaenMittai Stories

கிருஷ்ணர் பிறந்த கதை

உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது. அதன் அருகில் மதுரா நகரம் உள்ளது. இந்த நகரத்தில் வாழ்ந்த வாசுதேவர் - தேவகி தம்பதிக்கு 8-வது புதல்வனாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தார். அந்த சிறையில் பிறந்த கிருஷ்ணரை கோகுலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த 'யசோதை' என்ற பெண் வளர்த்து எடுத்தார். இப்படி மதுரா நகரில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்தார் கண்ணன். தன் தாயின் சகோதர் ஆன கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தான்.

குருச்சேத்திரப் போர் நடந்த போது ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்கு பக்கபலமாக இருந்தார். ஸ்ரீகிருஷ்ணர் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டும் தேரோட்டியாக இருந்தார். தேரோட்டியாக வந்த கண்ணனை தான் 'பார்த்தசாரதி' என்று அழைக்கப்படுகிறார்கள். தேரோட்டியாக இருந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அர்ஜூனனுக்கு அறிவுரைகளை வழங்கினார். அது தான் பின் நாளில் இந்துக்களின் புனித நூலான “பகவத் கீதை”யாக மாறியது. கடைசியில் வேடன் ஒருவன் எய்த அம்பு கிருஷ்ணரின் காலில் தைத்தது. இந்த பூலோகத்தில் கண்ணன் எடுத்த அவதாரத்தை முடித்தார். மீண்டும் ஸ்ரீவைகுண்டம் சென்றடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

கோகுலத்தில் கண்ணன்

கோகுலத்தில் யசோதையின் மகனாக வாழ்ந்து வந்தான் கண்ணன். நல்ல உடல் அழகு, துறுதுறுப்பான விழிகள், குறும்புத்தனமான பல சாகசச் செயல்களை செய்தார். அன்பாலும், பாசத்தாலும், பக்தியாலும் எல்லோரின் மனதையும் கவர்ந்தான் கண்ணன். கண்ணனைக் பார்க்கும் பொழுதெல்லாம் நம் வீட்டுக் குழந்தைகளும் இந்த குட்டி கிருஷ்ணரைப் போல இருக்கக் கூடாதா? என்று எல்லோரின் மனதிலும் தோன்றியது. கோகுலத்தில் வாழ்ந்த வந்த பெண்களுக்கு இந்த மாதிரி ஆசை ஏற்பட்டது.


இன்னும் சிலரோ Kannan ஏன் நம் வீட்டுக் குழந்தையாக இருக்கக் கூடாதா? என ஏங்கி இருந்தார்கள். இந்த பிறவியில் தான் அந்த வாய்ப்பு கிட்டவில்லை. அடுத்த ஜென்மத்தில் ஆவது கார்முகில் கண்ணனை மகனாகப் பெற வேண்டும் என்று சிலர் வேண்டிக் கொண்டார்கள். அது மட்டுமல்ல கண்ணன் கைப்பட்ட கன்றும், பசுவும் தெய்வீகப் பொலிவுடன் திகழ்ந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். நநம் வீட்டுப் பசுவும் கூட ஏன் கிருஷ்ணன் மேய்க்கும் பசுக்களாக இருக்கக் கூடாதா? என்று எண்ணினார்கள்.

பகவான் கிருஷ்ணரின் போதனைகள்

கிருஷ்ணரின் போதனைகளில் இருந்து ஒரு குட்டிக்கதை ஒன்றினை இங்கே பார்க்கலாம். மிகவும் ஏழ்மையான ஒரு பெண் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார். ஒரு நாள் துவாரகை சென்ற அவள், கிருஷ்ணரே!, உன் ஆணைப்படி நடந்து கொள்வதை விட எனக்கு வேற எந்த மகிழ்ச்சியும் இல்லை. உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல் என்றாள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நம்மிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார். அதை செய்து கொடுக்கலாம் என்று கருதினாள். ஆனால் கிருஷ்ணர் அவளுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு அழுக்கு கோணிப்பையை தந்தார்.

நான் போகும் இடமெல்லாம் இந்த பையை தூக்கிக் கொண்டு வந்தால் போதும் என்றார் பகவான் ஸ்ரீகிருஷ்னர். இன்னொரு இரகசியம் என்னவென்றால் நம் கண்களுக்கு தவிர இந்த செயல் வேறு யார் கண்களுக்கும் தெரியாது. இந்த சாக்கு பையை பற்றிய தகவல் எதுவும் தெரியாது என கூறினார் கிருஷ்ணர். வியந்துப் போனாள் அந்த பெண். பக்தி பூர்வமாக ஏதாவது சொல்வார் என்று நினைத்தாள். ஆனால் இந்த அழுக்கு கோணிப்பையை சுமந்து கொண்டு வாருங்கள் என்று சொன்னார். எரிச்சல் உண்டானாலும் வேறு வழியின்றி அவர் செல்லும் இடமெல்லாம் அந்த கோணியை தூக்கிக்கொண்டே சென்றாள். பல முறை அவர் சலித்துக் கொண்டே தூக்கிச் சென்றார். இருப்பினும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏதுவும் சொல்லவில்லை.

வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகள், ThaenMittai Stories
ஆனால் அவள் உண்மையாகவே சுமப்பதற்கு சிரமப்பட்ட நேரங்களில் கடவுளும் ஒரு கை கொடுத்து உதவி செய்தார். ஒரு நாள் நீ சுமந்தது போதும் அந்த பையை கீழே இறக்கி வை என்று சொன்னார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அந்த கோணிப்பையில் என்ன தான் இருக்கின்றது என்று திறந்து பார்ப்போமா? என்று புன்முறுவல் செய்தார். உடனே முடிச்சு தானே அவிழ்ந்தது. கோணி மூட்டை பையும் திறந்தது.
அந்த பையில் விலைமதிப்பற்ற பொன்னும், பொருளும், முத்தும், பவளம் வைரம், மணியும் எல்லாம் குவிந்து கிடந்தது. இவ்வளவு காலம் பொறுமையுடன் இருந்த காரணத்தால் இதோ என்னுடைய பரிசு என்றார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சிரித்த முகத்துடன் வந்து எடுத்துக்கொள் அந்த பரிசினை என்று சொன்னார். திடீரென்று ஸ்ரீகிருஷ்ணரின் காலில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள் கிருஷ்ணா என்றாள். அரும்பெரும் பொக்கிஷத்தை கொடுத்திருந்தும் கூட அது என்னவென்று தெரியாமல் இவ்வளவு காலம் உன்னை தவறாக புரிந்துக் கொண்டேன் என்றாள்.


கிருஷ்ணா!, உன் மீது சந்தேகம் கொள்ளாமல் உனது நோக்கத்தை புரிந்துக் கொண்டு நடந்திருந்தால் சுகமாக இருந்திருக்கும். இந்த சுமை கூட சுமப்பதற்கு எனக்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பி வருத்தப்பட்டுக் கொண்டோ இருந்திருக்க மாட்டேன் என்று கண்ணீர் தழும்ப அழுதாள். அப்போதும் கூட அமைதியாக புன்னகை செய்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். இறைவன் ஒவ்வொரு மனிதர்க்கும் உரியவற்றை மிக கவனமாகவும், அன்புடனும் பிரத்யேகமாக உருவாக்கி அவர்களிடமே கொடுக்கிறான்.
அதை ஓர் சுமையாக நினைப்பதும் or பொக்கிஷமாக பார்ப்பதும் நம்மிடம் தான் இருக்கிறது. யார் எவ்வளவு சுமையை சுமக்க முடியும் என்று படைத்தவனுக்கு தான் தெரியும். எனவே நம்மால் சுமக்க முடிந்தளவு சுமையை மட்டுமே கடவுள் தருவார். அது மட்டுமல்ல அந்த சுமையை சுமப்பதற்கு தன் கை கொடுத்தும் உதவி செய்வார் கடவுள். இறைவனை நம்புங்கள்; சுமைகள் எல்லாம் சுகமாக தெரியும். அதுவே பொக்கிஷமாக மாறும்!.


Related Tags

Bhakthi Kathaigal | Krishna Story In Tamil | Ganesh Chaturthi | Ganesh Chaturthi Story In Tamil | Why Ganesh Chaturthi is Celebrated? | Tamil Devotional Story | God Motivational Story In Tamil | Vinayaka Chaturthi Wishes | Ganesh Chaturthi Celebration | Moral Stories In Tamil | வாழ்க்கையை மாற்றும் கிருஷ்ணரின் போதனைகள் | கண்ணன் கதை | கிருஷ்ணரின் பொன்மொழிகள் | கிருஷ்ண வழிபாடு | கிருஷ்ணர் ஜெயந்தி | பகவத் கீதை பொன்மொழிகள் | Bhagavad Gita In Tamil | Krishna Geethacharam in Tamil | ThaenMittai Stories
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook