கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-20

நீர்மூழ்கித் தாக்குதலின் முன்னோடி?

சோழர்களின் ஆட்சிக்காலத்தில், தமிழக வணிகர்கள் கடல் பயணம் மேற்கொண்டது மிக அதிக அளவில் நடைபெற்றது. அப்போது கடற்கொள்ளையர்களிடம் இருந்து வணிகர்களைக் காப்பாற்றவும், கடல் சூழ்ந்த நாடுகளுக்குச் சென்று போர் தொடுப்பதற்கு வசதியாகவும் கப்பல் படையை உருவாக்க, வேண்டிய அவசியம் மன்னர் ராஜாஜனுக்கு ஏற்பட்டது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழக மன்னர்கள் கப்பல்களில் சென்று இலங்கை மீது போர் நடத்தி இருந்தபோதிலும், மன்னர் ராஜராஜன்தான் முதன் முதலாகத் தனியாகக் கப்பல்படை ஒன்றை உருவாக்கினார் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சோழர்கள் பயன்படுத்திய போர்க் கப்பல்கள் எவ்வாறு இருந்தன?. அவற்றில் இருந்த ஆயுதங்கள் என்ன? யானைகளையும், குதிரைகளையும் கப்பல்களில் எப்படிக் கொண்டு சென்றார்கள்?.
கப்பல் படை செயல்பட்ட விதம் என்ன?, என்பவை பற்றிய அரிய தகவல்கள், தூரதிருஷ்டவசமாகக் கல்வெட்டுகளிலோ, செப்பேடுகளிலோ, இலக்கியங்களிலோ பதிவு செய்யப்படாமல் மறைந்துவிட்டன. தஞ்சைப் பெரிய கோவிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு மட்டுமே மன்னர் ராஜேந்திரனின் கப்பல் படை, கீழ்த்திசை நாடுகளுக்குச் சென்று போரிட்டு வெற்றி பெற்றதைப் பறை சாற்றுகின்றது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
"அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி... என்று தொடங்கும் ராஜேந்திரனின் அந்த மெய்கீர்த்திக் கல்வெட்டு ஒன்றின் மூலம்தான், சோழர்கள் பயன்படுத்திய கப்பல்கள், ‘கலம்’ என்று அழைக்கப்பட்டன என்பது தெரிகிறது. சீர்காழியில் கிடைத்த 1187-ஆம் ஆண்டு கல்வெட்டு, சோழர்களின் கடற்படை வீரரான அரையன் என்பவரைப் பற்றிச் சொல்கிறது. இவர், "கரைப்படையிலார்' என்ற பிரிவைச் சேர்ந்தவர் என்றும், 'தண்டல்நாயகன்' என்ற பதவியில் இருந்தார் என்றும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது.
அதே சமயம், சோழர்களின் கடற்படை எவ்வாறு இருந்தது?, எந்த மாதிரியான கப்பல்களைப் பயன்படுத்தினார்கள்? என்பவை தொடர்பாக ஏராளமான செய்திகள் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன. இணையதளங்களிலும், யூடியூப் (YouTube) சேனல்களிலும், ஆய்வுக் கட்டுரை என்ற பெயரில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியாகி இருக்கும் ஏராளமான கட்டுரைகளிலும், சில நாவல்களிலும் சோழர்களின் கப்பல் படை குறித்து வானளாவப் புகழ்ந்து கூறப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
இவ்வாறு “உலா” வரும் தகவல்கள், சோழர்களின் திறனைப் போற்றிப் பாராட்டும்படியும், தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வகையிலும் இருக்கின்றன. இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் முன்பு, அந்தச் செய்திகளில் கூறப்பட்டு இருக்கும் சிலவற்றைப் பார்க்கலாம்.
  • சோழர்கள் 7 விதமான கப்பல்களைப் பயன்படுத்தினார்கள்.
  • பாய்மரங்களையும், துடுப்புகளையும் ஒருவித கருவியால் இயக்கப்பட்ட கப்பல்கள், 'யந்திரம்' என்று அழைக்கப்பட்டன.
  • மூன்று அடுக்கு பாய்மரத்தைக் கொண்டவை 'கலம்' என்றும், உள்நாட்டுப் போக்குவரத்துக்குப் பயன்பட்டவை புனை' என்றும், சரக்கு மற்றும் ஆயுதங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தியவை ‘பற்றி’ என்றும், சிறிய படகு 'ஓடம்' என்றும், ஒரு பாய்மரத்தை மட்டும் கொண்டது "அம்பி' என்றும், பாறைகள் சூழ்ந்த பகுதிக்குச் செல்லப் பயன்பட்டவை 'தோணி' என்றும் பெயர் பெற்றன.
  • கப்பல் படையில் 'தரணி' எனப்பட்ட கப்பல், ‘நாசகாரி கப்பல்’ ஆகும்.
  • ‘லூலா’ எனப்பட்டது சிறிய ஆயுதங்களைக் கொண்ட கப்பல்.
  • அதிரடித் தாக்குதல் நடத்தும் கப்பல் 'வஜ்ரா' எனப்பட்டது.
  • ஒரே சமயம் 3 பெரிய கப்பல்களைத் தாக்கும் வல்லமை கொண்டது 'திரிசடை' என அழைக்கப்பட்டது.
  • சோழர்களின் கடற்படையில், மன்னரின் தலைமையில் செயல்பட்டது, ‘ஜலம்’ எனப்பட்டது. இதனால் மன்னர், “ஜலதளபதி” என்று அழைக்கப்பட்டார்.
  • ‘பிரிவு’ என்பது, இளவரசர் அல்லது முக்கியப் பிரமுகர் தலைமையிலான படை ஆகும்.
  • ஐந்து அல்லது ஆறு கப்பல்களுடன் தனிப்பட்ட படைப் பிரிவைக் கொண்டது ‘கணம்'. அதன் தலைவர் “கணாபதி”.
  • எதிரி நாட்டுக் கப்பல்களைத் தங்கள் பக்கம் வரவழைத்து அதனைத் தாக்கும் படை, 'கண்ணி' எனப்பட்டது.
  • அதிரடித் தாக்குதலில் ஈடுபடும் படை, ‘மண்டலம்’ என்ற பெயரைப் பெற்றது. மண்டலத்தின் தலைவர் ‘மண்டலாதிபதி'.
  • 100 முதல் 150 கப்பல்களைக் கொண்டது 'பிரிவு'
  • 300 முதல் 500 கப்பல்களைக் கொண்டது ‘அணி".
  • கப்பலில் ஆயுதங்களுக்குப் பொறுப்பானவர்கள் “காப்பு” எனப்பட்டனர்.
  • கப்பல்கள் பழுதானால் அவற்றைச் செப்பனிடுபவர்களுக்குப் பெயர் “சேவை”.
  • 'ஈட்டிமார்' எனப்படுபவர்கள், போர் வீரர்களைக் கவனித்துக் கொள்பவர்கள் ஆவார்கள்.
  • இவர்கள் தவிர, 'கள்ளரணி' என்பவர்களும் படையில் இருந்தார்கள். இவர்கள் முன்னாள் கடற்கொள்ளையர்கள் ஆவார்கள். மனம் திருந்திய இவர்கள், கடற்கொள்ளையர்களை எதிர்த்துப் போர் செய்வதற்காக, படையில் சேர்க்கப்பட்டு இருந்தனர். எதிரி நாட்டுக் கப்பல்களின் அடியில் நீந்திச் சென்று, அந்தக் கப்பல்களை வெடி வைத்துத் தகர்க்கும் நாசவேலை செய்வதற்கு முத்துக் குளிப்பவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். நீர்மூழ்கித் தாக்குதலின் முன்னோடி, சோழர்களே.
  • கடல் பயணத்தின்போது நட்சத்திரங்களைக் கணக்கிட “விரல் கணக்கு, நேரத்தைக் கணக்கிட “நாழிகை வட்டில்", அலைகளின் சீற்றத்தை அறிய "டப்புப் பலகை" ஆகியவற்றை சோழர்கள் பயன்படுத்தினார்கள்.
  • கப்பல்களின் கீழ்த்தளத்தில் தண்ணீர் புகாமல் அமைப்பதில் சோழர்கள் திறமை பெற்றவர்கள். கப்பல்களின் அடிப்பகுதி, பாறைகள் மீது மோதி சேதம் அடைந்தால், அந்தப் பகுதியைக் கழற்றிவிட்டு, பயணத்தை மேற்கொள்ளலாம் என்ற வகையில் கப்பல்கள் செய்யப்பட்டன.

சோழர்களின் கப்பல் படை தொடர்பாக மேலே காணப்படும் செய்திகள் அனைத்தும், கேட்பதற்கு வியப்பாக உள்ளன. ஆனால், சோழர்களின் கல்வெட்டுகளிலோ, செப்பேடுகளிலோ இதுபோன்ற தகவல்கள் காணப்படவில்லை. சோழர்கள் தொடர்பான பல தகவல்கள், சீனர்கள் பழங்காலத்தில் வெளியிட்ட குறிப்புகள் மூலம்தான் நமக்குக் கிடைத்து இருகின்றன. அவற்றிலும் சோழர்கள் பயன்படுத்திய கப்பல்கள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.
கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-20
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பால சுப்பிரமணியன் கூறியதாவது: “சோழர்கால கடற்படை குறித்த சான்றுகள் கிடைக்கும் வரை ஆதாரபூர்வமாக சில செய்திகளை ஏற்க இயலாது. சோழர்களில் ராஜேந்திர சோழன், கீழ்த்திசை நாடுகளை வெற்றி கண்டது, நாடு பிடித்து ஆட்சி செய்யும் நோக்கத்துடன் அன்று. குறிப்பாக கீழ்த் திசை நாடுகளில் தனது வலிமையையும், ஆளுமையையும் நிரூபணம் செய்வதற்கே!.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
அதன் பயனாய் நம் சோழ நாட்டுக் கடல் வணிகர்களுக்கு கடற்கொள்ளையர்களால் எந்தவித இடர்பாடும் ஏற்படாமல் இருந்தது. நம் வணிகர்களுக்கு கீழ்த்திசை நாட்டு மன்னர்களே பாதுகாப்பு அளித்தனர். அதனால்தான், ராஜராஜனும், ராஜேந்திர சோழனும் கீழ்த்திசை நாட்டு மன்னர்களுடன் நட்புறவுடன் இருந்தனர்”. இவ்வாறு அவர் கூறினார்.
சோழர்களின் கப்பல் படைப் பிரிவு எவ்வாறு செயல்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும், அவர்கள் கடலில் நீண்ட தூரம் பயணித்து, கீழ்த்திசை நாடுகள், மாலத்தீவு, லட்சத்தீவு, இலங்கை ஆகியவற்றை வெற்றிகொண்டனர் என்பது தொடர்பான சான்றுகள் மூலம், சோழர்களின் கப்பல் படை வியந்து பாராட்டும் வண்ணம் இருந்திருக்கும் என்பது ஐயப்பாட்டுக்கு இடமின்றி நிரூபணம் ஆகிறது. வியக்கத்தக்க கப்பல் படையைக் கொண்டு இருந்த சோழர்கள், கீழ்த்திசை நாடுகளுக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டிய விவகாரத்தில் ஆச்சரியமான பல செய்திகள் அடங்கி இருக்கின்றன.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5

திருவண்ணாமலை தீபமும் ராஜேந்திர சோழனும்

கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. திருவண்ணாமலைக் கோவில் மற்றும் திருக்கார்த்திகை ஆகியவற்றுக்கும் மன்னர் ராஜேந்திரனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. 10-ஆம் நூற்றாண்டு அளவில் கார்த்திகை தீபத் திருவிழா சிறிய அளவிலேயே நடந்தது என்று தெரிகிறது.
இந்த விழாவைத் தென்னகம் முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவர், மன்னர் ராஜேந்திரன் என்பது கல்வெட்டு மூலம் தெரியவந்து இருப்பதாக தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியிட்டுள்ள ராஜேந்திரன் செய்திக்கோவை' என்ற நூலில் சொல்லப்பட்டு இருக்கிறது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
ராஜேந்திரன் காலத்தில், 'திருக்கார்த்திகை அன்று அருணாசலேசுவரர் வீதி உலாவுக்கும், அடியார்களுக்கு உணவு வழங்கவும், 40 பேரகல் (40 பெரிய அகல்விளக்கு), 20 சிற்றகல் (20 சிறிய அகல்விளக்கு) வழங்க ஐந்து குறுணி (சுமார் அரை மூட்டை) நெல் அனுமதிக்கப்பட்டது என்ற தகவலும் அந்த நூலில் காணப்படுகிறது.
மன்னர் ராஜேந்திரன் ஈழம் உள்ளிட்ட பல நாடுகளை வென்றது பற்றிய அவரது மெய்க்கீர்த்தி வாசகங்களை கல்வெட்டாகத் தாங்கி இருக்கும் ஒரு கல் பலகை, திருவண்ணாமலைக் கோவிலின் 3-ஆம் பிரகாரத்தின் தரையில் பதிக்கப்பட்டு இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு தோண்டி எடுக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டுப் பலகை, காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு நன்றி!

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook