வெற்றியை கண்டு அஞ்சாதீர்கள் ! குறுக்கு வழியை தேடாதீர்கள் !
நாம் அனைவருமே செய்யும் வேலையிலோ, தொழிலிலோ, படிப்பிலோ வெற்றி பெற்று வாழ்வில் முன்னேறி நல்ல நிலையில் உயர வேண்டுமே என்று நினைப்போம். ஆனால் அதற்ககு வெறும் கனவு மட்டும் போதுமா?
Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food
அதற்கு கனவு மட்டும் போதாது. கடினமான உழைப்பு, வேலையை பற்றிய தெளிவு, நேர்மறையான என்னதோடு போராடுவது போன்ற சிலவற்றை உரமாக இட வேண்டும்.
எந்த ஒரு செயலையும் நாம் முழுமையாக செய்து முடிக்கும் வரை நம்பிக்கையோடும், பொறுமையோடும் வெற்றியை நோக்கி ஓட வேண்டும். பாதி போன பிறகு நம்மால் முடியுமா? என்று சந்தேகிக்க கூடாது. அதை பாதியில் நிறுத்தவும் கூடாது.
Read Also: தூக்கத்தை தவிர்க்கும் உயிரினங்கள்
ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதை செய்து முடிக்க திறமையையும், முடியும் என்ற மன பக்குவத்தையும் வளர்த்து கொள்ளுங்கள். நல்ல முயற்சியுடன் வெகு நாளாக சிரமப்பட்டு ஒரு செயலில் ஈடுபட்டு செய்து கொண்டு இருப்போம் . ஆனால் அதில் ஏதாவது சிறு பிழை ஏற்பட்டால் அதை சரியான வழியில் திருத்தி பயணத்தை தொடராமல் உடனே சந்தேகப்பட்டு அதை அப்படியே விட்டு விடுவது. ஆனால் அதை நாம் உணர்திருக்க மாட்டோம் நாம் முயற்சி செய்தது பாதியை கடந்து நல்ல முறையில் சென்றிருக்கும். இதுதான் நாம் பெரும்பாலும் செய்கின்ற தவறு. அதற்காக குறுக்கு வழியில் முயற்சி செய்வதும் கூடாது.
உழைப்பின் பலனால் கிடைத்த வெற்றியின் மதிப்பு என்றுமே அதிகம், அதன் வெற்றி சுவை அளவற்றது.
ஒரு விவசாயி கையில் ஒரு அதிசயமான விதை இருந்தது. அதிசயமான விதை என்றால் முதல் நாள் விதைக்கிற விதை அடுத்தநாள் காய் காய்த்து அதற்கு அடுத்த நாள் அது அத்தனை காய்களுமே பழங்களாக மாறிடும்னு ஒரு அதியமான விதை. ஆனால் எப்பேர்ப்பட்ட கஷ்டத்திலையும் எந்த ஒரு சூழ்நிலையிலையும் விவசாயி அந்த விதையை எடுக்கல . அந்த விவசாயி மகன் கேக்குறா அப்பா நம்மகிட்ட தான் அதிசய விதை இருக்கே நாம அதை பயன்படுத்தலாமேன்னு கேக்கும்போது அந்த விவசாயி சொன்னார்,
Read Also: வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்-
எந்த சூழ்நிலை வந்தாலும் நாம் உழைப்பை மட்டும் நம்ப வேண்டும். நாம் உழைப்பால் பெறுவது தான் உண்மையான பெற்றி .அதற்கு வேற ஏதும் ஈடாகாது. நாம் கடினமான உழைப்பை போட்டு அதற்கான அறுவடை காலம் வரை கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைத்து கிடைக்கும் அதில் கிடைக்கும் சந்தோஷம் வேறு ஏதும் கொடுக்காது. அது தான் உண்மையான வெற்றி.உழைப்புக்கேற்ற ஊதியம். குறுக்கு வழி என்பது என்றுமே பலன் தராது. குறுக்கு வழி எல்லா நேரமும் கைகொடுக்காது. எப்போதுமே உழைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
உங்களை நீங்கள் நல்ல முறையில் வழிநடத்த கற்றுக்கொள்ளுங்கள். சிறு தருமாற்றம் ஏற்படும் பொது அதை எப்படி கையாளுவது என்பதில் தெளிவாக இருங்கள். யார் உங்களிடம் நேர்மறையாக இருக்கிறார்களோ அவர்களிடம் சென்று உதவி கேளுங்கள். ஆலோசனை பெறுங்கள். உங்களின் தோல்விகளை கண்டு ஏளனம் செய்பவர்களையோ அல்லது உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருபவர்களையோ , நீங்கள் எது செய்தாலும் உங்களை எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்களை அருகில் வைக்காதீர்கள். அது உங்களை முன்னேற விடாமல் தடுக்கும்.
எதுவும் நம்மால் முடியும் என்பதை நம்புங்கள். தொடர் முயற்சி மற்றும் தெளிவான குறிக்கோள், அந்த செயலில் நிலைத்திருப்பது போன்றவை உங்களை எளிதில் அந்த காரியத்தில் வெற்றி அடைய செய்யும்.
Read Also: கவனச்சிதறலை தடுக்கும் வழிகள்
எதையும் பார்பதைக்கு முதலில் பிரமிப்பாக தெரியும். நம்மால் முடியுமா? என்று கூட தோன்றலாம். ஆனால் என்னும் எண்ணத்தை உயர்வாக எண்ணுங்கள். நான் இதை செய்து முடிப்பேன் அதற்காக முழுமூச்சுடன் போராடுவேன் அதில் வெற்றி பெரும் வரை இதிலிருந்து பின் வாங்க மாட்டேன் என சபதமிடுங்கள். அதையும் வெளியில் இருந்து பார்க்கும் பொது மிக கடினமாக தோன்றலாம். ஆனால் அதில் நுழைந்திட்ட பிறகு அதன் படிநிலைகளை ஒவ்வொன்றாக திட்டமிட்டு பயணித்தால் வெற்றி நிச்சயம். எதிலும் குறுக்கு வழி கூடாது.