தூக்கத்தை தவிர்க்கும் உயிரினங்கள் -ThaenMittai Stories

தூக்கத்தை தவிர்க்கும் உயிரினங்கள்

தூக்கம் மனிதர்களுக்கு மட்டுமல்ல உயிரினங்களுக்கும் இன்றியமையாதது. தூக்கத்தின் மூலமே உடலை புதுப்பித்துக்கொள்ளவும். நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவும் முடியும்.ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமான தூக்க முறைகளை கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில உயிரினங்கள் மிக குறுகிய நேரமே தூங்குகின்றன.சில உயிரினங்கள் தூக்கத்தை கூட ஓய்வான பொழுதாக கருதுகின்றன. அத்தகைய பற்றி பார்ப்போம்.

Read Also: தூங்கும் முன்பு சாப்பிடக்கூடாத 5 பழங்கள்

வால்ரஸ்கல்

இந்த கடல்யானை தந்தம் போன்ற நீண்ட பற்களை கொண்டது.குளிரும், பனிக்கட்டிகளை, நிறைந்த வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வட துருவப்பகுதிகளில் காணப்படுகிறது. இவை நீந்தும்போது 84 மணி நேரம் வரை தூங்காமல் இருக்கும். ஆனால் நீர் நிலையில் இருந்து வெளியே வந்து நிலப்பரப்பில் உலவும் போது தூக்கநேரத்தை ஈடு செய்து விடும். சில சமயங்களில் 19 மணி நேரம் வரை கூட தூங்கும்.

யானைகள்

யானைகளும் குறுகிய நேரமே தூங்கும் இயல்புடையவை. தினமும் சுமார் இரண்டு மணி நேரம் வரையே ஓய்வெடுக்கும். அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாலும், தீவனத்திற்கும் அதிக நேரம் எடுத்துகொள்வதாலும் யானைகளுக்கு குறைவான தூக்க நேரமே தேவைப்படுகிறது.

Read Also: புத்திசாலியாக உங்களை மாற்றும் பழக்கவழக்கங்கள் | புத்திசாலிகள் பின்பற்றும் பழக்கங்கள்

ஒட்டகச்சிவிங்கி

இவை தினமும் சில நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரையே தூங்குவதற்கு நேரம் ஒதுக்கும். குறுகிய நேர தூக்கமே இதற்கு போதுமானது.உயரமான கழுத்தை கொண்டிருக்கும் ஒட்டகசிவிங்கிகள் வேட்டையாடுபவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு, உடல் சம நிலையை பேணுவதற்கும் தூங்காமல் விழிப்பு நிலையை கடைபிடிக்கின்றன.

Read Also: 21 இங்கிலிஷ் பேச கஷ்டப்படுறீங்களா அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காகதான்

காளை தவளை

புல் ப்ராக் எனப்படும் இவை பல மாதங்கள் கூட உறங்காமல் விழிதிருக்கக்கூடிய அளவுக்கு உடல் தகவமைப்பை பெற்றுருக்கின்றன. ஆழ்ந்த தூக்கம் ஒரு போதும் விரும்புவதில்லை.சுற்று சூழலில் ஏற்படும் மாற்றங்கள்,அசத்திய அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காகவே தூங்குவதற்கு முயற்சிப்பதில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

சுறா மீன்

சில சுறா எங்கள் சுவாசிப்பதற்கு நகர்ந்து கொண்டே இருக்கும். அதனால் தூங்குவதற்கு விரும்பாது. அதற்க்கு பதிலாக அதன் உடல் இயக்க செயல்பாடுகளை குறைத்து கொள்ளும். முழுமையாக தூங்காது.

Read Also: 21 இங்கிலிஷ் பேச கஷ்டப்படுறீங்களா அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காகதான்

எறும்பு

சில எறும்பு இனங்கள் நம்பமுடியாத அளவிற்கு குறுகிய தூக்க சுழற்சி நேரத்தை பின்பற்றுகின்றன. அதிலும் ராணி எறும்புகள் மிகவும் குறுகிய நேரமே தூங்கும். மற்ற எறும்புகள் வேலை செய்கின்றனவா என்பதை கண்காணிப்பதற்காக நீண்ட நேரம் விழித்திருக்கும்.

ஆல்பத்தின் வீப்ட்ஸ்

இந்த பறவையால் தரையிறங்காமல் பல மாதங்கள் பறக்க முடியும். பறக்கும் போதே காற்றின் அசைவில் இறகுகளை மிதக்க விட்டபடியே குட்டி தூக்கமும் போட்டுவிடும். குறுகிய நேரமே தூங்கும். நீண்ட தோற்றம் பறந்து புலம்பெயர்ந்து வாழுவதற்கேற்ற உடலமைப்பையும், வான் பகுதிதியிலேயே பறந்தபடி தொங்குவதற்கான தகவமைப்பையும் இந்த பறவை பெற்றிருப்பது சிறப்பம்சம்.

Read Also: 21 வயதில் மருத்துவர், 57 வயதில் மாடல் அழகி | Ageless Elegance The Journey of a Mature Model

டால்பின்

டால்பின்கள் ஒருபோதும் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிப்பதில்லை. பாதி தூக்கத்தைத்தான் விரும்பும். தூங்கும்போது மூளையின் ஒரு பாதி மட்டும் ஓய்வு நிலையில் இருக்கும். தொடர்ந்து சீராக சுவாசிப்பதற்கு, எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கும் இத்தகைய விழிப்பு நிலையை பின்பற்றுகிறது.

மான்

மான்கள் தூங்கும் நேரம் குறைவாகவே இருக்கும். எப்போதும் விழிப்பு நிலையிலே தன்னை வைத்துக்கொள்ளும். வேட்டையாடுபவர்கள் மீதான பயம்தான் அதற்க்கு காரணம். எந்த நேரத்திலும் தப்பிச்செல்வதற்கு ஏதுவாக எச்சரிக்கை நிலையிலேயே உலவும். அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டும் இருக்கும்.

Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food
Creatures that avoid sleep

குதிரை

குதிரைகளால் நின்று கொண்டே தூங்க முடியும். தினமும் இரண்டு மணி நேரம் தூங்குவதே அவைகளுக்கு போதுமானது. எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக விழிப்பு நிலையிலேயே தன்னை வைத்து வைத்து கொள்வதற்கு ஏதுவாக இந்த அணுகுமுறையை கடைபிடிக்கிறது.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook