ஆரோக்கியமான இதயத்துக்கு இதமான உணவுகள்-- ThaenMittai Stories

ஆரோக்கியமான இதயத்துக்கு இதமான உணவுகள்

கடலை எண்ணையில் விட்டமின் ஈ மற்றும் ஒலியிக் அமிலம், லினோலியிக் அமிலம் உள்ளதால் அது உடலுக்கு நன்மை தரும்.மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு இதயம் ஆகும். ரத்த நாளங்கள் மூலம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தத்தை அனுப்பும் முக்கியத்துவமான பணியை செய்யும் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எளிமையான பழக்கவழக்கங்கள் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். எளிமையான உடற்பயிற்சியுடன் இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.

Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food
உடற்பயற்சியில் சைக்ளிங் ,நடைப்பயிற்சி, நீச்சல், பேட்மிட்டன் ,சிலம்பம், களரி, கபடி போன்ற ஏதாவதொரு உடற்பயற்சியை 30 நிமிடம் முதல் 45 நிமிட நேரம் அவரவர் உடல் வலிமைக்கு தகுந்தபடி செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான உணவு வகைகளான சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீராக சம்பா, கொத்தமல்லி சம்பா, கைக்குத்தல் அரிசிகளை உணவில் சேர்ப்பது நல்லது. மீன்களை பொரித்து உன்ன கூடாது. மீன்களில் மத்திசாலை, டூனா, விளமீன் குழம்புகள் சிறந்தது.

காய்கறிகளில், பீன்ஸ், அவரை, வாழைத்தண்டு, வாழைப்பூ, கொத்தவரங்காய், புடலங்காய்,பாகற்காய், கோவைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், முட்டைகோஸ், ப்ராக்கோலி, நெல்லிக்காய் , அரைக்கீரை, தண்டுக்கீரை,முருககீரை, கரிசாலை கீரை, பொன்னாங்காணி கீரை, தூதுவளை , பசலைக்கீரை, போன்ற நார்ச்சத்து நிறைந்த கீரை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Read Also: உயிர் காக்கும் தாய்ப்பால்
பழங்களில் , ஆப்பிள், ஆரஞ்சு,சாத்துக்குடி, கொய்யா, அன்னாசி, பிளம்ஸ்,பீச், பேரிக்காய், பன்னீர் திராட்சை,பப்பாளி பழம், வாழைப்பழம், போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.

விதைகளில் வால்நட், பாதாம் , முளைக்கட்டிய அல்லது வேகவைத்த வேர்க்கடலை,பாசிப்பயறு, பச்சை பட்டாணி, கொள்ளு எவைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

Read Also: 20 வயதை கடந்து விட்டீர்களா! அப்போ முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!

மூன்று வெள்ளை

மூன்று வெள்ளைகளை அளவுடன் எடுத்தால் வாழ்நாள் கூடும். அவை தீட்டிய வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, உப்பு. அதே போல நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் எண்ணெய் வகைகளை அளவோடு சேர்த்து பயன்படுத்தினால் உடலுக்கு நல்லது.

எண்ணெய் வகைகள்

நம் நாட்டின் பாரம்பரிய மரம், செடி போன்றவைகளின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மரபியல் அமைப்பின்படி நமக்கு நல்ல பலனை தரும். நமது மூதாதையர்கள் பயன்படுத்திய, மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லஎண்ணெய், கடுகு எண்ணெய், வேர்கடலெண்ணெய், இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினாலே போதுமானது.

தேங்காய் எண்ணெய்

இதில் உள்ள லாரிக் அமிலம் உடலுக்கு இளமையையும், தோலுக்கு வல்லமையையும் கொடுக்கும். தலைமுடி அடர்த்தியாக வளரும்.இதில் வைட்டமின் ஈ சிறிதளவு உள்ளது.

Read Also: பேசுவதை நிறுத்திவிட்டு வேலையை செய்ய ஆரம்பியுங்கள்!

நல்லஎண்ணெய்

இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது இதய ரத்த குழாய்களின் எலாஸ்டிக் தன்மை மாறாமல் இதயத்தை பாதுகாக்கும். து கண்களுக்கு நல்லது. இதிலுள்ள லினோயிக் அமிலம் அழகை கூடும் மற்றும் ஒலியிக் அமிலம் இதய நோய்களை தடுக்கும் ஆற்றலுடையது.

கடுகு எண்ணெய்

இதில் ஒயிலிக் அமிலம், லினோலெனிக் அமிலம் அதிகமாக உள்ளது. இதில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா -3 & 6 அமினோ அமிலங்கள் உள்ளன.எவை இதயம் மற்றும் அனைத்து உடல் உறுப்புகளுக்கும் மிகவும் சிறந்தது.

கடலை எண்ணெய்

வேர்க்கடலை என்பது இந்தியாவில் சுமார் 1600 -க்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணெய் பயிராகும். இதனுடைய பிறப்பிடம் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகும். வேர்க்கடலை எண்ணெயிலும் வைட்டமின் ஈ மற்றும் ஒயிலிக் அமிலம், லீனிலியிக் அமிலம் உள்ளதால் ஏதும் உடலுக்கு நன்மையை தரும் எண்ணெய் ஆகும்.

மேலும் சூரிய காந்தி விதை எண்ணெய் மற்றும் saffloweroil இவை இரண்டுமே ஆஸ்டிரேசி குடும்ப தாவரங்களில் ஆகும்.இந்த எண்ணெய் நிறைவுறாத கொழுப்பு வகையை சிறந்தது.

Read Also: வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதையும் ஈர்க்கவும் & பெறவும் இது உங்களுக்கு உதவும்
இன்னும் பாதாம் விதை எண்ணெய், பனை எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று ஏராளம் இருந்தாலும் நல்லஎண்ணெய்,கடுகு எண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமையலுக்கு பயன்படுத்தினாலே போதுமானது.எந்த எண்ணெய்யாக இருந்தாலும் குறைந்த அளவில் உபயோகிப்பது அனைவரது இதயத்திற்கும் நலமானது.

Foods that are good for a healthy heart
பூண்டு- 5 பல், சிறிதளவு கொள்ளு, ஒரு சிட்டிகை பெருங்காயம் ஆகியவற்றை நன்றாக வேக வைத்து மாலை நேரங்களில் சாப்பிடலாம்.

Read Also: ஏன் புத்தகங்கள் படிக்க வேண்டும்? அதனால் என்ன மாற்றம் நமக்கு கிடைக்கின்றது ?
வால்நட்ஸ், அவகேடோ, சியா விதைகள்,பிளாஸ்ஸ் சீட்ஸ் , பூசணி விதை, வெள்ளரி விதை, இவைகளை தினமும் சிறிதளவு எடுத்து கொள்ள வேண்டும்.

இலவங்கபட்டை ,ஏலம்,செம்பருத்தி பூ, வெந்தயம் இவைகளை டீ-யாக போட்டு குடிக்கலாம்.

குடம் புளி சிறிதளவு எடுத்து சீரகத்துடன் தண்ணீரில் கொதிக்கவைத்து குடிக்கலாம்.

கருஞ்சேரகம்,வெந்தயம் வருது பொடித்து காலை, இரவு என இருவேளை சூடி தண்ணீரில் கலந்து குடிக்கலாம். சின்ன வெங்காயம்,பூண்டு இவை கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மையுடையதால் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.

Read Also: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய பழக்கவழக்கங்கள் 5
கொலஸ்டரோல் உற்பத்தியாகும் இடமான கல்லிரல், நல்ல நிலையில் இயங்க கல்லுரலை வலுப்படுத்தும் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி இவைகளை மூன்றையும் அரைத்து வாரம் ஒரு முறை குடித்து வந்தால் கல்லிரல் பலப்படும். கல்லிரலின் செயல்பாடுகள் ஒழுங்காக நடைபெறும்.

சீராக,பெருஞ்சீரகம்,கருஞ்சீரகம், கொத்தமல்லி இவைகளை சம அளவில் எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு அதில், சிறிதளவு எடுத்து காலை, மலையில்,டீ போல போட்டு குடிக்கலாம்.

ஏலாதி சூரணத்துடன் குங்கிலிய பற்பம் கலந்து, வெண்ணீரில், காலை இரவு என இருவேளை குடித்துப் வந்தால் கொழுப்பின் அளவு குறையும்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook