வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்-ThaenMittai Stories

வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்

எந்த ஒரு செயலை செய்ய தொடங்கினாலும் அது வெற்றி அடைவதற்கு அன்றாட பழக்க வழக்கங்களில் பின்பற்றும் விஷயங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு சில நடைமுறைகளை முறையாக பின்பற்றி வருவதன் மூலம் வெற்றியை தக்க வைக்கலாம். எந்த ஒரு வேலையையும் நெருக்கடி இல்லாமல் சுமுகமாக முடித்து விடலாம். அதற்க்கு செய்ய வேண்டிய விஷயங்கள்.

Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்

முன்கூட்டியே திட்டமிடல்

எந்த ஒரு வேலையை செய்ய தொடங்குவதாக இருந்தாலும் அதற்கான திட்டமிடுதலை முன்கொடியே வகுத்துவிட வேண்டும். முந்தைய நாள் இரவே சில மினிட்ங்கள் ஒதுக்கி சரியாக திட்டமிட வேண்டும். எது வேலைக்கு மட்டுமல்ல. ஒவொரு இரவு பொழுதிலும் சில நிமிடங்களை மறுநாளைய செயல்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டும். அப்படி முன்னோக்கி திட்டமிடுவது மறுநாள் செய்ய போகும் விஷயங்களை எந்தஒரு டென்ஷனும் இல்லாமல் செய்து முடித்து வெற்றி வாகை சூட உதவும். அப்படி முக்கியமான செய்லபாடுகளுக்காக முந்தைய நாள் இரவில் சிறிது நேரத்தை ஒதுக்குவது தெளிவான மனா நிலையுடன் நாளைய பொழுதை அணுகவும் வித்திடும்.

80 /20 விதி

5 நிமிட விதியை போலவே இந்த விதி முறையையும் பின்பற்ற வேண்டும். எந்த ஒரு செயலிலும் 80 சதவீத பலன், ஒட்டுமொத்த முயற்சியின் 20 சதவீதத்தில் இருந்து கிடைக்கும் என்பதே இந்த விதியின் தாரக மந்திரம். அதாவது நாம் செய்யும் வேலைக்கு கிடைக்கும் வெற்றியில் முயற்சிக்கு 20 சதவீதம் பங்கு இருக்கிறது. அதனால் எந்த ஒரு செயல் பாடுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி முயற்சிக்கும் பொது உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். சாதிக்கவும் செய்யலாம்.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!

காலை சடங்கு

காலையில் எழுததும் தியானம், உடற்பயிற்சி ,புத்தகம் படிப்பது என ஏதாவது ஒரு செயலில் சில நிமிடங்கள் ஈடுபட வேண்டும். அதனை ஒரு சம்பிரதாயமாகவே பின்பற்ற வேண்டும். அப்படி செயல்படுவது நேர்மறையான எண்ணங்களையும், உடலுக்கு தேவையான ஆற்றலையும், கவன சிதறலை தடுத்து செய்யும் வேலையில் கவனத்தை குவிக்கவும்தவித்திடும். ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் வழிவகை செய்யும்.

போதுமான ஓய்வு

உடல் ஆரோக்கியத்திற்கும்,மனா தெளிவுக்கும்,உடல் ஆற்றல் திறனை அதிகரிப்பதற்கும் போதுமான ஓய்வு அவசியம். அதற்கு தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அது உடலையும், மனதையும் ரேச்சர்ஜ் செய்ய உதவிடும். ஒவ்வொரு இரவும் உடலும் , மனமும் போதுமான நேரம் ஓய்வு பெறுவதை உறுதி செய்வது ஆற்றலுடனும், உற்சாகத்துடனும், நாளைய பொழுதை தொடங்குவதற்கு துணை புரியும். செய்யும் செயல்களில் வெற்றியை தக்கவைக்கவும் வழிவகை செய்யும்.

5 Simple Habits That Seed Success
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை

5 நிமிட விதி

நெருக்கடியோ, நிர்பந்தமோ அதிகரிக்கும் சூழலில் 5 நிமிடங்களோ அல்லது அதற்கும் குறைவான பொழுதிலோ முடித்துவிடும் பணிகளை உடனடியாக முடித்துவிட வேண்டும். அது வேலை அதிகமா குவிவதை தடுக்கும். நெருக்கடியான சூழலை சமாளிப்பதற்கான தைரியமதை கொடுக்கும். இந்த எளிய பழக்கம் அடுத்த வேலையையும் இதே போல் துரிதமாக முடிந்து விடலாம் என்ற என்னதை உண்டாக்கி உற்சாகதுடன் செயல்பட தோண்டும். அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக செயல்படுவதற்கும் வழிவகை செய்யும்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook