ஏ.பி.சி ஜீஸ் என்னும் அமுதத்தில் இவ்வளவு நன்மைகளா? -ThaenMittai Stories

ஏ.பி.சி ஜீஸ் என்னும் அமுதத்தில் இவ்வளவு நன்மைகளா?

ஆப்பிள்,பீட்ரூட், கேரட் இவை மூன்றுமே ஊட்டச்சத்து நிறைந்தவை.அவற்றை ஒன்றாக உட்கொள்ளும்போது அதிசயத்தக்க நன்மையை அளிக்கும். அதிலும் இவை மூன்றையும் தயாரிக்கப்படும் ஜிஸ், சத்தான, ஆரோக்கியமான அமுதமாக கருதப்படுகிறது.

ஏபிசி ஜிஸ் தயாரிப்பது எப்படி

ஆப்பிள் ஒன்று மற்றும் பீட்ரூட் ஒன்று மேலும் இரண்டு கேரட் இவை மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.. பின்னர் ஜூஸரில் போட்டு விழுதாக அரைத்து வடிகட்டி கொள்ளவும் . அதனை அப்டியே பருக வேண்டியதான்.
Read Also: ஆக்கபூர்வமான சிந்தனை ஏன் அவசியமான ஒன்று ?

ஏபிசி ஜூஸ் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஏ.பி.சி  ஜீஸ் என்னும் அமுதத்தில் இவ்வளவு நன்மைகளா?

நச்சு நீக்கம்

ஏபிசி ஜிஸ் பருகுவதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி விடலாம். குறிப்பாக பீட்ரூட், இயற்கை நச்சு நீக்கியாக செயல்பட்டு கல்லுரலை சுத்தப்படுத்த உதவும்.

செரிமானம்

ஆப்பிள்களில் நார்சத்து நிறைந்துள்ளது. இது சீரான செரிமானத்துக்கு உதவும்.கேரட்,குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கும். ஏபிசி ஜிஸ் தவறாமல் உட்கொள்வது மலச்சிக்கலை தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த ஜுஸில் விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிரம்பியுள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன . ஆப்பிள் மற்றும் பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின் சி நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடி உடல் ஆற்றலை மேம்படுத்தவும் உதவி செய்யும்

சரும நலன்

ஏபிசி ஜுஸில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை சருமத்தில் பளபளப்பை தக்க வைக்க உதவி புரியும்.கேரட் -இல் உள்ள பீட்டா கரோட்டின் சரும திசுக்களை சரி செய்ய உதவும். சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு வழங்கும். அத்துடன் இந்த ஜுஸில் இருக்கும் நச்சு நீக்கும் பண்புகள் முகப்பரு மற்றும் சருமம் சார்ந்த பிற பிரச்சனைகளை குறைக்க உதவும்.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்

உடல் ஆற்றல்

பீட்ரூட் ரத்த ஊட்டதையும், தசைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தையும் துரிதப்படுத்த உதவி புரியும். உடல் செயல் திறனையும் மேம்படுத்தும். ஆப்பிள் மற்றும் கேரட்டில் உள்ள இயற்கை சர்க்கரைகளை உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும்.

இதய ஆரோக்கியம்

ஏபிசி ஜிஸ் இதய ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்களிக்கும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரைட்டுகள் ரத்த அழுத்தத்த குறைக்க உதவும். அதேவேளையில் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இதய நோய் அபாயத்தை குறைக்கும். கேரட் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்

எடை மேலாண்மை

ஏபிசி ஜுஸில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கும் , உடல் எடையை சீராக நிர்வகிப்பதற்கும் அது சரியான தேர்வாக அமையும். நொறுக்கு தீனிகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள் உண்ணும் ஆர்வத்தை குறைத்து, நீண்ட நேரம் பசி உணவின்றி வயிற்றை நிறைவாக வைத்திருக்கவும் வழிவகை செய்யும்.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook