கொசுக்கள் சிலரை மட்டும் அதிகமாக கடிப்பதற்கு காரணம் என்ன ?
சுற்றுசூழலின் ஒரு அங்கமாக கொசுக்கள் விளங்குகின்றன. அவை வாழ்வதற்கு சுற்று சூழலையும், மனிதர்களையும் சார்ந்திருக்கின்றன. ஆண் கொசுக்களை பொறுத்தவரை பூக்களிடம் இருந்து தேனை தங்கள் உணவு தேவையை நிவர்த்தி செய்து கொள்கின்றன. ஆனால் பெண் கொசுக்கள் உணவுக்கு மனிதர்களைத்தான் நாடுகின்றன. ஏனெனில் மனித ரத்தத்தில் இருக்கும் சில புரதங்கள் கொசுக்களுக்கு முட்டையை உற்பத்தி செய்ய தேவைப்படுகின்றன. அதற்காக மனிதர்களை கடிக்கும் பொது கொசுக்களின் உமிழ்நீர் மனித ரத்தத்தில் கலக்கிறது. அதன் மூலம், டெங்கு, மலேரியா, சிக்கன்குன்யா, ஜிகா வைரஸ் போன்ற நோய்கள் பரவுகின்றன. உலகெங்கும் நடக்கும் லட்சக்கணக்கான மரணங்களுக்கு கொசுக்கள், ஒட்டுன்னிக்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மனித ரத்தத்தை உறிஞ்சுவதால் ஏற்படும் நோய் தொற்றுக்கள் காரணமாக இருக்கின்றன.
கொசு கடிப்பதை தடுக்கவும், நோய்த் தொற்றுகளின் அபாயத்தை குறைக்கவும், கொசுக்களின் குணாதிசயங்களை புரிந்து கொள்வது அவசியம். அவை மற்றவர்களை விட ஒரு சிலரை மட்டுமே அதிகமா கடிக்கின்றன. அதற்கான காரணங்கள் குறித்தும், அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
Read Also: உங்கள் சக்தியை கண்டறிந்து அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழுங்கள் !
ஆடை
கொசுக்கள் வெளிர் ஆடைகளைவிட ஆடை நிற ஆடைகளால் அதிகம் ஈர்க்கப்படுகின்றன . அத்தகைய ஆடைகளை அணிந்திருப்பவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு கடிக்க வருகின்றன. அத்துடன் உடலை முழுவதும் மூடாமல் குட்டையான ஆடைகள் அணிவதும் கொசுக்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகின்றன .
டெங்குவை உண்டாக்கும் ADS கொசுக்கள் கைகளை கடிக்கவே விரும்பும். ஆனால் மலேரியா காய்ச்சலுக்கு காரணமான அனோபிலிஸ் வகை கொசுக்கள் கால்களைத்தான் குறி வைத்து கடிக்கும்.எனவே மழைக்காலம் மற்றும் காய்ச்சல் பரவும் சமயங்களில் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவது நல்லது. அத்துடன் வெளிர் நிற ஆடைகளை அணிவதும் கொசுக்களின் கண்களில் இருந்து தப்பிக்க உதவியாக இருக்கும்.
Read Also: ஆரோக்கியமான இதயத்துக்கு இதமான உணவுகள்
ரத்தவகை
சில ரத்த வகைகள் கொசுக்கள் விரும்பும் தன்மையை கொண்டிருக்கின்றன. அதிலும் மற்ற வகைகளை விட "ஓ" ரத்த வகை கொண்ட மனிதர்களை கொசுக்கள் அதிகம் நாடுகின்றன . அந்த ரத்த வகை கொண்டவர்கள் கொசுக்கள் அதிகம் ஈர்ப்பதற்கு அவை விரும்பு ரசாயனங்கள் அவர்களின் ரத்தத்தில் இருந்து வெளியாவது தான் காரணம்.
உடல் உஷ்ணம்
பெண் கொசுக்களிடம் இருக்கும் ஆண்டெனாக்கள் வெப்ப உணர்திறன் கொண்டவை. அவைகளால் தொலைதூரத்தில் இருந்து ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை ஏற்ற இறங்கங்களை கண்டறிய முடியும். அதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்படுபவர்களை கொசுக்கள் எளிதில் அடையாளம் கண்டு விடுகின்றன.
மனித உடலில் அதிக வெப்பம் உருவாகும் பொது கொசுக்கள் ஈர்க்கும் வாய்ப்புகள் அதிகம். உடல் பருமன் உள்ளவர்கள், வளச்சிதை மற்றம் கொண்டவர்கள், அதிக வெப்பத்தை உமிழும் தடகள வீரர்கள் பெண் கொசுக்களுக்கு எளிதில் இலக்காகி விடுவார்கள்.
Read Also: வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்-
கார்பன் டை ஆக்ஸைடு
கொசுக்களிடம் இருக்கும் ஆண்டெனாக்கள் கார்பன் டை ஆக்ஸைடின் அளவையும் உணரும் திறன் கொண்டவை. மற்றும் சுவாசிக்கும் போது வெளியேறும் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அளவை மிகுதியாக கொண்டிருப்பவர்களை கொசுக்கள் தேடி வந்துவிடும்.
வேகமான சுவாசம், அதிகம் வளர்சிதை மாற்றம், அதிகப்படியான வியர்வை இவை அனைத்தும் ஒன்றொன்று தொடர்புடையவை. அவை பெண் கொசுக்கடி ஈர்ப்பதற்கும் காரணமாக அமைகின்றன.
Read Also: தூக்கத்தை தவிர்க்கும் உயிரினங்கள்
வியர்வை
ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து வியர்வை உற்பத்தி செய்கிறான். அந்த வியர்வை விசித்திரமான வாசனை மற்றும் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளன .அதிலும் குறிப்பிட்ட சிலர் அதிகமாக வெளியேற்றும் வியர்வையில் கலந்திருக்கும் வாசனையும், ரசாயனமும் பெண் கொசுக்களை ஈர்க்கும் தன்மையை கொண்டிருக்கின்றன.அதனால் எளிதில் கொசுக்களுக்கு இலக்காகிறார்கள்.
கர்ப்பம்
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழ்க்கின்றன. கர்ப்பகால ஹார்மோன்கள் உடலில் அதிக வளர்சிதை மாற்றத்திற்கும் , அதிக வெப்ப உற்பத்திக்கும் வாழ்வாகுக்கும். அதனால் உடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் பெண் கொசுக்களை ஈர்ப்பதற்கு வழிவகுக்கின்றன. அத்துடன் கர்ப்ப காலத்தில் சுவாசிக்கும் திறன் அதிகமாகும். அது நுரையீரலில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றுவதற்கு வழிவகுக்கிறது. பெண் கொசுக்களும் எளிதில் ஈர்க்க வைத்து விடுகிறது.
Read Also: கவனச்சிதறலை தடுக்கும் வழிகள்
மது பழக்கம்
மது அருந்துவதால் உடல் சூடு அதிகரிக்கும். உடலில் வளர்சிதை மாற்றமும் அதிகரித்து வியர்வையும் அதிகமாக உற்பத்தி ஆகும்.இவை பெண் கொசுக்களை ஈர்க்க செய்துவிடுகின்றன. கொசுக்கள் கடிப்பதற்கான காரணத்தை புரிந்து கொள்வதன் மூலமும், கொசு விரட்டிகள், ஸ்பிரேக்கள் பயன்படுத்துவதன் மூலமும் கொசுக்கடியை தவிர்க்கலாம்.
எப்படி கடிக்கிறது ?
பெண் கொசுக்களின் கண்களுக்கு அருகில் ஆண்டென்னாக்கள் எனப்படும் பிரத்யேக நுண் உறுப்புகள் இருக்கின்றன. அவை வெப்ப சமிக்கைகள், கார்பன் டை ஆக்ஸைடு , ஈரப்பதம், ரசாயன வாசனைகள் மற்றும் சமிக்கைகளை கண்டறியும் திறன் கொண்டவை. அவற்றை பயன்படுத்தி குறிப்பிட்ட சிலரை மட்டும் பெண் கொசுக்கள் விரட்டிக் கடிக்கின்றன.