இது தான் படிப்பதற்கான வெற்றி பார்முலா! | ThaenMittai Stories

இது தான் படிப்பதற்கான வெற்றி பார்முலா!
நினைத்த நிலையை அடைய வேண்டுமானால் அதிர்ஷ்டம், ஜாதி பலம், பண பலம், அரசியல் பலம் இருக்க வேண்டும் என நினைத்தால் அவைகள் எல்லாம் இன்றைக்கு வேலைக்கு ஆகாது. முயற்சி, உழைப்பு எந்த இரண்டுடன் சேர்ந்த படிப்பு தான் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும்.

Read Also: கொசுக்கள் சிலரை மட்டும் அதிகமாக கடிப்பதற்கு காரணம் என்ன ?
உங்களது குறிக்கோளை எண்ணியே ஒவ்வொரு கணமும் முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்காக சில நிபந்தனைகளை வகுத்து கொள்ள வேண்டும். சில தியாகங்களை செய்ய வேண்டும். நினைத்த நிலையை அடைந்துவிட்டால் எவ்வாறு இருப்போம் என்பதை கனவு கண்டு அந்த கனவுகளை வெறும் எண்ணங்களிலேயே வைத்து விடாமல் அந்த நிலையை எவ்வாறு அடைவது என்பது பற்றி திட்டமிட வேண்டும்.

Read Also: ஏ.பி.சி ஜீஸ் என்னும் அமுதத்தில் இவ்வளவு நன்மைகளா?
படிப்பு என்பது வேலை பெறுவதற்கும் பணத்தை ஈட்டுவதற்கு அல்ல . படிப்பவர்கள் அனைவரும் ஞானிகளும் அல்ல. படிப்பதன் மூலம் ஒருவன் சமூக நிலையை அறிய முடிகிறது. படிப்பு என்பது பணத்தை விட சிறந்த முதலீடாகும் . பிடித்த படிப்பை ஒருவன் பயன்படுத்தினால் சமுதாயத்திற்கு எவ்வளவோ உபயோகரமானதாக இருக்கும். ஒரு சில பேர் தேர்வுக்கு நன்றாக படிக்க வேண்டும் நிறை மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைத்து கடைகளில் கிடைக்கக்கூடிய எல்லா கையேடுகளையும் வாங்கி குவிப்பார்கள். படிக்க வேண்டும் என்று நினைப்பர். ஆனால் தங்களுக்கு தெரியாமலேயே வேறொரு பிரச்சனையில் மாட்டி கொள்வர். அதனால் அவர்களது செயல்பாடுகள் தடைபடுகிறது. எனவே ஏதாவது ஒரு குறிக்கோள் கீழ் கவனம் செலுத்த வேண்டும்.

போட்டோ எடுக்கும் போது படம் சரியாக வர வேண்டும் என்பதற்காக லென்ஸை சரி செய்து எடுக்கும் முறையை போகஸ் செய்வதென்றால் ஒரு விஷயத்தை கச்சிதமாக, கவனமாக, விவரமாக பார்த்தல். அதே முறையை தான் நாம் படிக்கும் போதும் பின்பற்ற வேண்டும். புத்திசாலிகள் தமது மூளையின் ஆற்றலை 10 சதவீதம் பயன்படுத்துவதாக தெரியவருகிறது. மூலையில் உள்ள நியோ கார்டுக்ஸ் என்ற ஆலோசிக்கும் பகுதி மிகுந்த நியாபக சக்தி உடையது. ஆனால் யாரும் அதை பயன்படுத்துவது இல்லை.

Read Also: வெற்றியை கண்டு அஞ்சாதீர்கள்! குறுக்கு வழியை தேடாதீர்கள்!
தெருப்பள்ளியில் படித்தாலும் கான்வெண்டுகளில் படித்தாலும் விருப்பத்துடன் படித்தால் ஆகாயமே உங்களது எல்லை. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் ஜீனியஸ் ஆவதற்கான தகுதிகள் உள்ளன. எவ்வளவு பெரிய சமுத்திரத்தில் நீரை எடுத்து வர நினைத்தாலும் நீங்கள் எடுத்து சென்ற பாத்திரத்தின் அளவிற்கு மட்டுமே தண்ணீர் கொண்டு வர முடியும். நீங்கள் ஒரு சிறிய சொம்பை எடுத்துக்கொண்டு ஊரில் உள்ள குளத்தில் முக்கினாலும் அரபிக்கடலில் முக்கி எடுத்தாலும் சரி , அதன் அளவே தண்ணீர் கொண்டு வர முடியும். எனவே தங்கள் நினைத்து கொண்ட குறிக்கோள்களை நகரத்தில் மட்டுமே சாதிக்க முடியும் என்று எண்ணுவதை விட அதை உங்கள் ஊரிலேயே செய்யலாம் என்ற முடிவுக்கு வருவது நல்லது.

உங்களது மனதை ஒரு மாஜிக் பேப்பர் என நினைத்து கொள்ளுங்கள் அதன் மீது உங்களுக்கு தோன்றியது எழுதி எனக்கு வேண்டும்... எனக்கு வேண்டும்.... எனக்கு வேண்டும்.. என்று மூன்று முறை நினைத்து கொண்டால் அதை சாதிக்கும் வரை மனம் அதன் பின்னாலேயே தொடர்ந்து செல்லும். அதே விதமாக உங்களுக்கு நிகழ்ந்த கெட்ட அனுபவங்கள், அவமானங்கள் ,நஷ்டங்கள் போன்றவற்றை எனக்கு தேவையில்லை எனக்கு தேவையில்லை என்று மூன்று முறை நினைத்து கொண்டால் மாஜிக் போல் மயமாகி விடும். Read Also: உயிர் காக்கும் தாய்ப்பால்
இது தான் படிப்பதற்கான வெற்றி பார்முலா !--
சிறிய குறிக்கோள்களை அமைத்துக்கொள்வது வீண் என அப்துகலாம் அய்யா கூறுகிறார். அதனால் பெரிய குறிக்கோள்களை நிர்ணயித்து அதை சாதிக்க வேண்டும் என்ற முடியுவுடன் மனதில்இறுத்தி படிக்க ஆரம்பிக்கும் பொது நம்மை சுற்றியுள்ள தடைகள் அதனைத்தும் தவிடிபொடியாகும்.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook