பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமன இடங்கள் - ThaenMittai Stories

பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமன இடங்கள்

பகல் பொழுதில் வாட்டிி வதைக்கும் வெப்பத்தை உமிழும் சூரியன் மாலை வேளையில் அஸ்தமனமாகும்போது வசீகரிக்கும் அழகுடன் சாந்தமாக காட்சி அளிக்கும். வான் மேகங்களுக்குள் மறைத்தபடி மங்கலான ஒளியில் அஸ்தமிக்கும் காட்சியை காண சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வம் கொள்வார்கள்.
சூரிய அஸ்தமனங்கள் இயற்கையின் அன்றாட தலைசிறந்த படைப்புகள், நாள் விடைபெறும் போது ஆரஞ்சு, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா வண்ணங்களால் வானத்தை வரைகிறது. இது அமைதி மற்றும் அழகுக்கான ஒரு தருணம், அங்கு நேரம் மெதுவாகத் தெரிகிறது மற்றும் உலகம் ஒரு மாயாஜால ஒளியைப் பெறுகிறது. சூரியன் அடிவானத்திற்குக் கீழே மூழ்குவதைப் பார்ப்பது ஆழ்ந்த சிந்தனை அனுபவமாக இருக்கும், இது காலத்தின் போக்கையும் நிரந்தரமற்ற அழகையும் நமக்கு நினைவூட்டுகிறது. தனியாக மகிழ்ந்தாலும் அல்லது அன்பானவர்களுடன் பகிர்ந்து கொண்டாலும், சூரிய அஸ்தமனம் ஆன்மாவைத் தூண்டி, நமக்கு நினைவூட்டும்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
இயற்கை சூரிய அஸ்தமனத்தின் அழகு உண்மையிலேயே மனதைக் கவரும். இது வண்ணங்கள், ஒளி மற்றும் வளிமண்டலத்தின் இணக்கமான கலவையாகும், இது ஒரு மூச்சடைக்கக்கூடிய காட்சியை உருவாக்குகிறது.

அவர்களின் ரசனைக்கேற்ப சூரியன் அஸ்தமிக்கும் போது பிரமிக்க வைக்கும் காட்சியை அளிக்கும் இடங்கள் உலகில் ஏராளம் உள்ளன.அவற்றுள் இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2

தாஜ்மஹால் , ஆக்ரா :

அழகான கட்டிடக்கலை நேர்த்திக்கு புகழ்பெற்ற தாஜ்மஹால் , சூரிய அஸ்தமனத்தின்போது மேலும் அழகொளியில் மயங்க வைக்கும். யமுனை நதியில் படரும் சூரிய ஒளிக்கதிர்கள் தண்ணீரில் ஜொலித்தபடி தாஜ்மஹாலின் பின்னணியில் மிளிர்வது கண்கொள்ளா கட்சியாக அமையும்.வாழ் நாளில் மறக்க முடியாத அனுபவமாகவும் அமையும்.

வர்கலா கடற்கரை, கேரளா :

மலைகள் மற்றும் அரபிக்கடலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் வர்கலா கடைகரை சூரிய அஸ்தமனத்தின் இன்னும் கூடுதல் அழகுடன் மிளிரும். அடுக்கடுக்கான பாறைகள், அமைதி சூழ்ந்த கடற்கடைக்கு மத்தியில் சூரியன் அடிவானத்திற்கு மத்தியில் கீழே இறங்கும் காட்சி ரசனைக்குரியதாக அமையும். அங்கு நிலவும் மிதமான மயக்கும் மாலை பொழுதும் மீண்டும் ஒருமுறை அங்கு செல்ல தூண்டும்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3

முக்கடல் சந்திக்கும் இடம், கன்னியாகுமாரி:

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்திருக்கும் கன்னியாகுமரி, அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்திய பெருங்கடல் என முக்கடலும் சந்திக்கும் தனித்துவமான இடமாகும். வான் மேகங்களும், ஆழ்கடலுக்கும் மத்தியில் வெளிர் மஞ்சள் நிறத்தில் தங்கம் போன்ற ஜொலிப்புடன் ஒளிக்கதிர்களை பாய்ச்சியபடி சூரியன் அஸ்தமிக்கும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

கொச்சி துறைமுகம்:

கொச்சி துறைமுக கடற்கைரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி வேலைகளுக்கு மத்தியில் சூரியன் மறையும் காட்சி தனித்துவமான கலை அம்சத்துடன் காட்சி அளிக்கும். வான் மேகங்கள் தீப்பிழம்பில் உருகி தங்கம் போல் ஜொலிக்கும்.அந்த அளவுக்கு சூரிய கதிர்கள் வசீகரிக்கும் காட்சிகளை வழங்கும்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
Beauty

பலோலம் கடற்கரை, கோவா:

கோவாவில் ஏராளமான கடற்கரை பகுதிகள் அமைந்துள்ளதால் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்கு அது சிறந்த இடமாக விளங்குகிறது. அதிலும் பலோலம் கடற்கரை சூரிய அஸ்தமத்துக்கு பிரசித்தி பெற்றது. வான் நட்சத்திரங்கள் மறையும் சூரியனுக்கு போட்டியாக கடலுக்குள் இறங்கி வருவது போன்ற மாய தோற்றத்தை பிரதிபலிக்க வைக்கும். இரு சிறு குன்றுகளுக்கு மத்தியில் சூரியன் அஸ்தமிக்கும் காட்சி ரசிக்க வைப்பதாக அமையும்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5

வாரணாசி படிக்கட்டுகள்:

இந்தியாவின் ஆன்மீக மையமாக விளங்கும் வாரணாசியில் வேறு எங்கும் காணாத வகையில் சூரிய அஸ்தமன காட்சியை ரசிக்கலாம். கங்கை நதியின் மீது சூரிய கதிர்கள் பிரதிபலிக்கும் அழகும், படிக்கட்டுகளில் மின்னும் விளக்குகளின் பிரகாசமும், பிராத்தனைகள் போது ஒலிக்கும் மேளா, தாள முழக்கங்களும் மனதை சாந்தமாக்கும் உணர்வை தூண்டும்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6

ராதாநகர் கடற்கரை, அந்தமான் :

ஆசியாவின் சிறந்த கடற்கரைகளுல் ஒன்றாக விளங்கும் ராதாநகர் கடற்கரையும் அற்புதமான சூரிய அஸ்தமன காட்சியை வழங்கக்கூடியது. அழகிய வெள்ளை மணல், தெளிவான நீல நிற கடல் நீர், சூரியக்கதிர்கள் ஒளியில் தங்கம் போல் பளபளக்கும் வான் மேகங்கள் ஆகியவை ஒத்திசைந்து பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமனத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுக்கும்.

லே லடாக் :

இயற்கை ஆர்வலர்களுக்கு சொர்க்கபுரியாக விளங்கும் இடங்களுள்,லே லடாக்கும் ஒன்று. இங்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை காண்பது வாழ்நாளில் என்றென்றும் நினைவில் கொள்ளும் தருணமாக அமையும். அதிலும் சூரியன் விடைபெறும் வேளையில் பள்ளத்தாக்கு பகுதிகளில் சூரிய கதிர்கள் படர்ந்து பிரகாசிக்கும் காட்சி மனதை லயிக்க செய்யும். வான் மேகங்கள், மாலை முகடுகளை மத்தியில் சூரிய கதிர்கள் புரியும் மாயாஜாலமும், அப்போது பிரகாசிக்கும் வண்ணமும் இயற்கை ஆர்வலர்களுக்கு விருந்தளிப்பதாக அமையும். Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
சூரிய அஸ்தமனத்தின் போது வானில் முதலில், வண்ணங்களின் தட்டு உள்ளது. சூரியன் அடிவானத்திற்குக் கீழே மூழ்கும்போது,அது தனது சூடான ஒளியை வானத்தில் வீசுகிறது, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் சில நேரங்களில் தங்கம் அல்லது சிவப்பு நிறங்களின் துடிப்பான நிழல்களில் அதை வரைகிறது.
பின்னர், ஒளி மற்றும் நிழலின் தொடர்பு உள்ளது. அஸ்தமன சூரியன் நீண்ட நிழல்களை வீசுகிறது மற்றும் நிலப்பரப்பை ஒரு மென்மையான, தங்க ஒளியில் குளிப்பாட்டுகிறது, இது ஒவ்வொரு விளிம்பையும் அமைப்புகளையும் முன்னிலைப்படுத்துகிறது. மரங்கள், மலைகள் மற்றும் கட்டிடங்கள் வானத்தின் வண்ணமயமான பின்னணியில் நிழலாடப்படுவதால் புதிய பரிமாணத்தைப் பெறுகின்றன.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook