பீனிக்ஸ் பெண்கள் (Phoenix Pengal) ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாறு

ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாறு

வாய் பேச முடியாத, கண் பார்க்க இயலாத, பிறர் கூறுவதை காதால் கேட்க முடியாத நிலையிலும் தன்னுடைய ஆழமான சிந்தனையை எழுத்துக்களாக மாற்றி காட்டியதின் மூலம் இந்த உலகத்தையே உற்று நோக்க செய்தார் இந்த ஃபீனிக்ஸ் பெண்!. உலக சரித்திரத்தில் இடம் பிடித்த தன்னம்பிக்கை நாயகி ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை ஃபீனிக்ஸ் பெண்கள் என்ற தலைப்பில் பார்க்கலாம். ஹெலன் கெல்லர் அவர்களின் தன்னம்பிக்கையான போராட்டங்களைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.


பிறந்து வெறும் 19 மாதங்களில் பயங்கரமான காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஹெலன் அந்த காய்ச்சல் காரணத்தினாலேயே கேட்கும் திறன், கண் பார்வை திறன், மற்றும் பேசும் திறன் அற்ற அந்த முக்கியமான மூன்று செயல்களையும் இழந்து விட்டார். 1887-ம் ஆண்டு அவரின் பெற்றோர்கள் அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் (Alexander Graham Bell) அவர்களை பார்த்து பேசி பார்வையற்றவர்களுக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் அவர்கள் 'ஆன் சல்லிவன்' என்ற ஆசிரியை ஹெலனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு கிட்டத்தக்க 49 ஆண்டுகள் கெல்லரும், சல்லிவனும் ஒன்றாகவே அவர்களுடைய கழித்தனர்.
பீனிக்ஸ் பெண்கள் (Phoenix Pengal) ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாறு
உடன் இருப்பவர்கள் பேசும் பொழுது அவர்களின் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் கலையைக் ஹெலன் கெல்லருக்கு சல்லிவன் கற்றுக் கொடுத்தார். மேலும், ஹெலன் கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதிக்காட்டி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டுத் தொட்டு உணர்ந்து கற்றுக் கொண்டார் கெல்லர். பிறகு சிறிது சிறிதாக எழுதக் கற்றுக்கொண்ட ஹெலன் கெல்லர் கண் பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்து முறையைக் கற்றுக் கொண்டார். எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. 10 வயது முடிவதற்குள் ஹெலன் கெல்லர், கண் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி (Braille) முறையில் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றார்.
1904-ம் ஆண்டு, கெல்லர், சல்லிவனுடன் சேர்ந்து நியூயார்க் நகரத்திற்கு சென்று அங்கே இருந்து காது கேளாதோருக்கான ரைட்-ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்தார். அங்கு ஹெலன் கெல்லருக்கு பேசக் கற்றுக் கொடுப்பதற்கு சாராஃபுல்லர் என்ற பெண் ஆசிரியை உதவி செய்தார். பல வருடங்கள் பயிற்சி செய்தார். இருந்தாலும் கடைசி வரை அவரால் தெளிவாகப் பேச முடியவில்லை. ஆனால் ஹெலன் கெல்லர் ஒருமுறைகூட மனம் தளரவில்லை. மகளிருக்கான கேம்பிரிட்சு பள்ளியில் இணைந்தார்.

தனியாகப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்த ஹெலன் கெல்லர் யூனிவெர்சிடிக்கு சென்று படிக்க விரும்பினார். 1900 ஆம் ஆண்டு ராட்கிளிஃப் யூனிவெர்சிடி மிகுந்த தயக்கத்துடன் ஹெலன் கெல்லரை சேர்த்துக்கொண்டது. ஆன் சல்லிவனை என்பவரை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த ஹெலன் கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்னுடைய 24-ம் அகவையில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வை இல்லாமலும் காதுகேட்கும் திறன் இல்லாமலும் யூனிவெர்சிடியில் படித்து இளங்கலைப் பட்டம் (Undergraduate Degree) பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார்.
ஹெலன் கெல்லர் அவர்கள் தன்னை சிறந்த எழுத்தாளராகவும் மற்றும் சிறந்த பேச்சாளராகவும் செதுக்கி கொண்டார் என்றால் மிகையாகாது. ஹெலன் கெல்லர் அவர்கள் கல்லூரி படிக்கும் நாட்களிலேயே 1903 ஆம் ஆண்டு 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ (The Story of My Life) என்ற தலைப்பில் தன்னுடைய வாழ்க்கையை புத்தகமாக எழுதினார். ஹெலன் கெல்லர் அவர்கள் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதி உள்ளார். இந்த 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்கிற அவருடைய சுயசரிதை புத்தகம் மராத்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ஹெலனின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக இன்று அளவிலும் போற்றப்படுகிறது.


தன்னம்பிக்கை - ஒரு கட்டுரை, ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, மாலைக்காலத்து அமைதி, என் மதம், ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், நம்பிக்கை கொள்வோம், ஆன் சல்லிவன் மேஸி - என் ஆசிரியை, திறந்த கதவு போன்றவை அவருடைய பிரசுரமான படைப்புகள் சில. இவை தவிர பார்வையின்மை, காது கேளாமை, சமூகவியல், பெண்ணுரிமை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவை தொடர்பாகப் பல கட்டுரைகளையும், ஆக்கங்களையும் தின நாளிதழ்களுக்கும், வாராந்திர, மாதாந்திரப் பத்திரிகைகளுக்கும் எழுதிப் பங்களித்து கொண்டிருந்தார்.
அறிவாற்றலிலும், நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்குச் சற்றும் சளைக்காதவரான ஹெலன் கெல்லர், சிறந்த பேச்சாளராகவும்; எழுத்தாளராகவும் தன்னை மாற்றி காட்டினார். இவர் உழைப்பாளர் உரிமைகள் பற்றியும், சோசியலிச தத்துவத்தையும் ஆதரித்துப் பல கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதினார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக இலாப நோக்கற்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்.


ஹெலன் தன் வாழ்நாளைக் கண்ணிழந்தோர் மற்றும் காதுகேளாதோர்க்காகச் செலவிட்டார். அதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்தார். ஹெலன் கெல்லர் அவர்கள் 39 நாடுகளுக்கு சென்று திரட்டிய பணத்தை சுமார் 1.5 கோடியைப் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு வழங்கினார். பார்வையற்றவர்களுக்கான ஒரு நூலகத்தை உருவாக்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு வழக்குரைஞராகவும் திகழ்ந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளைப் பெற்று கொடுத்ததில் ஹெலன் கெல்லரின் பங்களிப்புகள் மிக அதிகமானது.
1915-ம் ஆண்டு ஹெலன் கெல்லர் அவர்கள் ஜார்ஜ் கெஸ்லர் என்பவருடன் இணைந்து 'ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு' (HKI) ஒன்றைத் தோற்றுவித்தார். இந்த நிறுவனம் காது கேட்காதவர்கள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு உதவுவதற்காக தோற்றுவிக்கப்பட்டது. 1920-ம் ஆண்டு அவர் அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான ஒரு ஒன்றியம் (ACLU) ஒன்றைத் தொடங்கினார். கெல்லர் அடிக்கடி ஜப்பான் நாட்டுக்கு சென்று வந்ததால் ஜப்பான் நாட்டு மக்களின் மனங்கவர்ந்த பெண்மனியாக திகழ்ந்தார். ஹெலன் ஹெல்லர் 1961 இல் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு, ஜூன் 1 ஆம் தேதியன்று தூக்கத்திலேயே இறந்தார்.

1999-களில் ஹெலன் கெல்லர் 20-ம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறந்த பெண்மணியாக அறியப்பட்டார். 2003-ம் ஆண்டு அலபாமா மாநிலம் அவர்க்கு அந்த மாநிலத்தின் சிறப்புமிக்கக் குடிமகளாக அறிவித்தது. 2009-ம் ஆண்டு, அக்டோபர் 7-ம் தேதியன்று அலபாமா மாநிலத்தில் ஹெலன் கெல்லருடைய வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. தன் வாழ்நாளில் ஏற்பட்ட பல்வேறு தடைகளையும்; நிராகரிப்புளையும் தாண்டி தான் சாதாரண மனிதருக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல என்பதை அவருடைய தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் ஓர் சரித்திரத்தின் தன்னம்பிக்கையின் நாயகி என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை தான்!.

Related Tags

Biography of Helen Keller | Phoenix Pengal In Tamil | Phoenix Pen Helen Keller | The Story of My Life | Helen Keller Story | Anne Sullivan | Helen Keller International (HKI)| Alexander Graham Bell | Charlie Chaplin | Mark Twain | Thomson | U.S. President Grover Cleveland | Lyndon B. Johnson | True Motivational Stories | Success Inspirational Stories | Real Life Inspirational Stories Of Success | Inspirational Real Life Stories | Real Life Stories For Students | Real Life Inspirational Stories of Success | Inspirational Stories Of Famous Personalities | Motivational Real Life Stories Of Famous Personalities | Phoenix Pengal | Life History of Famous People | Thomas Alva Edison Biography In Tamil | Motivational Story of Woman | Motivational Story In Tamil for Students | Real Life Motivational Stories In Tamil.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.



Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook