Motivational Success Stories In Tamil | தடை அதை உடை | விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!

தடை அதை உடை

நாம் ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள் பல கனவுகள் உண்டு. கனவுகளை துரத்திச் செல்லும் வேளையில் பல கவலைகள் வருவதும் உண்டு. வெற்றி எனும் சிகரத்தை அடைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது, தோல்வி எனும் பள்ளத்தில் வீழ்ந்து நம் மனதைக் ரொம்பவே கலங்கடித்து கொண்டிருக்கும். பல கவலைகளின் கலவையால் தான் மனிதன் மனச்சோர்வு அடைகிறான். இதுபோன்ற மனச்சோர்வுக்கு தீர்வு தான் விடாமுயற்சி. வீண்முயற்சி என நினைத்து செய்பவன் தோல்வியால் துவண்டு விடுகிறான். விடாமுயற்சியுடன் துணிந்து செய்பவன் தோல்வியை தோற்கடிக்கின்றான்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை

வயதான கழுதையின் தன்னம்பிக்கை கதை

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த விவசாயி ஒருவன் கழுதை ஒன்று வளர்த்து வந்தான். பொதி சுமக்கும் வேலைகளுக்கு அந்த கழுதையை பயன்படுத்தி வந்தான். அந்த கழுதைக்கு ரொம்ப வயதாகி விட்டதால் அது நடந்து செல்வதற்கே மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தது. அந்த வயதான கழுதையானது பொதி சுமந்து கொண்டு செல்லும் நேரத்தில் தெரியாமல் கால் இடறி அந்த விவசாயின் தோட்டத்தின் அருகிலுள்ள தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றில் விழுந்து விட்டது.

தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றுக்குள் உள்ளே விழுந்த வயதான கழுதை கத்திக் கொண்டே இருந்தது. அந்த வயதான கழுதையை எப்படி அந்த நீர் இல்லாத வறண்ட கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றுவது என்று அவன் விடிகின்ற வரைக்கும் யோசித்து பார்த்தான். அந்த விவசாயின் மண்டையில் எந்த ஒரு யோசனையும் தோன்றவில்லை.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
அந்த வயதான கழுதையை காப்பாற்ற எடுக்கும் எல்லா முயற்சிகளும், அந்த கழுதையை விற்கும் விலையை விட அதிகம் செலவு செய்ய வேண்டியதாக இருந்தது. எப்படியும் தண்ணீர் இல்லாத அந்த வறண்ட கிணறு மூடப்பட வேண்டிய ஒன்று தான். அது மட்டுமல்லாமல் Old Donkey என்பதால் அதை காப்பாற்றுவது என்பது தேவையில்லாத Work என்று முடிவு செய்து கொண்டான் அந்த விவசாயி.
ஆதலால் வயதான கழுதையுடன் அப்படியே தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றிலேயே மண்ணை போட்டு மூடிவிடலாம் என்று முடிவு செய்தான். அருகில் உள்ள அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட்டான். அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சற்று அருகிலிருந்த ஒரு மண் மேட்டில் இருந்த மண்ணை மண்வெட்டியால் வெட்டி அள்ளிக் கொண்டு வந்து அந்த தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றில் கொட்ட ஆரம்பித்தார்கள்.
Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
அந்த வறண்ட கிணற்றுக்குள் உள்ளே இடறி விழுந்த அந்த வயதான கழுதை மேலே நடப்பதை உணர்ந்து கொண்டு மரண பயத்தில் ரொம்பவே கத்தியது. ஆனால் அந்த கழுதையின் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. அவர்கள் அனைவரும் அந்த கிணற்றின் அருகிலிருந்த மண்மேட்டில் இருந்து மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து அந்த வறண்ட கிணற்றுக்குள் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தார்கள். இவ்வாறே தொடர்ந்து மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்டே இருந்தார்கள்.

தடை அதை உடை, கழுத்தை கதை, Tamil Motivational Stories, ThaenMittai Stories
இப்படி மண்ணை அள்ளி கிணற்றுக்குள் கொட்ட கொட்ட சிறிது நேரம் சென்ற பிறகு அந்த கழுதையின் அலறல் சத்தம் நின்று விட்டது. Although அவர்கள் தொடர்ந்து மண்ணை/Soil அள்ளிக் கொட்டிக் கொண்டே இருந்தார்கள். இப்படி மண்ணை அள்ளிக் கொட்டிய பிறகு ஒரு பத்து நிமிடம் கழித்து அந்த விவசாயி கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தார். அப்போது அந்த விவசாயி பார்த்த காட்சியானது அவனை ரொம்பவே வியப்பில் ஆழ்த்தியது.
அவர்கள் ஒவ்வொரு தடவையும் அந்த வறண்ட கிணற்றுக்குள் மண்ணை கொட்டும் போது அந்த வயதான கழுதையானது தனது உடலை ஒவ்வொரு முறையும் உதறிவிட்டு அந்த மண்ணை கீழே தள்ளியது. அவர்கள் கொட்டிய மண்ணின் மீதே ஏறி நின்று வந்தது. இப்படியே அந்த வயதான கழுதையானது கிணற்றின் கிழே இருந்து பல அடிகள் மேலே வந்து இருந்தது. இது போல மேலும் மேலும் மண்ணை கொட்ட கொட்ட கழுதையானது தனது முயற்சியை கைவிடாது உடலை உதறிக் கொண்டே இருந்தது.

Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
தன் மீது கொட்டிய மண்ணை ஒவ்வொரு முறையும் கீழே தள்ளிவிட்டு தள்ளிவிட்டு அந்த கொட்டிய மண்ணின் மீது ஏறி நின்று வந்தது. அந்த வயதான கழுதையின் நின்றுவிடாத முயற்சியால் எல்லோரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது. அந்த வயதான கழுதையானது கிணற்றின் விளிம்பை எட்டியது. உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் திளைத்த கழுதையானது ஒரே ஓட்டமாக அருகிலிருந்த வனத்திற்குள் ஓடிச் சென்று மறைந்து கொண்டது.
நம் வாழ்க்கையும் இப்படித் தான் பல நேரங்களில்/சந்தர்ப்பங்களில் நம்மை படுகுழியில் தள்ளிவிடலாம். துன்பங்கள், துயரங்கள் எல்லாம் நம்மை ஆட்கொண்டு நாம் மீது சமாதி கட்டப் பார்க்கலாம். ஆனால் நாம் தான் இந்த கழுதையை போல விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை கொண்டு அவமானம், சோம்பேறி போன்றவற்றை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு மேலே எழுந்து வர வேண்டும். நம்மை நோக்கி வீசப்படுகின்ற ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து நம் முன்னேற்றத்திற்கான படிக்கற்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
Read Also: Success Stories for Life, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும், "இதோடு நாம் வாழ்க்கையே முடிந்துவிட்டது" என்று கருதக் கூடாது. விடாமுயற்சி என்ற ஒன்றை கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே எழுந்து வர வேண்டும். நீங்கள் எதுக்கு உள்ளே விழுந்தால் என்ன?, உங்களின் மீது எது விழுந்தால் என்ன? அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். வெற்றி என்பது யாருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. வெற்றி பெறுவதற்கு பல படிகளை நாம் கடந்து வர வேண்டியது இருக்கும். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நன்றி!.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook